Tuesday, November 12, 2013

அரபி பெண்களை இந்திய முஸ்லிம்கள் மணக்க முடியுமா?

பிறப்பின் அடிப்படையில் மனிதனை இழிவாக கருதுகிற பார்ப்பனியவாதிகள். உலகில் பிறந்த அனைவரும் ஒரே தாய் தந்தையிலிருந்து ஒரே ஒரு ஜோடியிலிருந்து பல்கி பெருகியவர்கள் என்று சொல்லக் கூடிய இஸ்லாமியக் கொள்கையை திரித்து இஸ்லாத்திலும் மனிதர்களை பிரித்து கூறுபோடும் பார்ப்பனீயம் இருப்பதாக போலி பரப்புரைகளை பலமுறை சந்தித்திருக்கிறேன். அதுபோலவே இணையத்தில் நீண்ட வருடங்களாக ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ வாதிகள் அரபி முஸ்லிம்பெண்களை இந்திய முஸ்லிம் ஆண்கள் மணக்க முடியுமா? என்று அடித்த வாய்ச்சவடால்களை முறியடிக்கிறது இக்கணொளி.
முஸ்லிம்கள் இதுநாள்வரை தேச எல்லை கடந்து மலாய், இந்தோனேஷியா,ஆப்பிரிக்கா ஐரோப்பிய இனகலப்பு திருமணம் முடித்திருந்தாலும். அரேபிய பெண்களை திருமணம் முடிக்க முடியுமா என்று சவடால் அடித்தவர்கள் இன்னொரு செய்தியையும் தருகிறேன்.
இந்திய ஆண் மலாய் பெண் திருமணம்
34 சவூதி பெண்கள் ஆஃப்கன் வங்காளிகளை மணந்துள்ளனர்!

ரியாத்: கடந்த ஆண்டு 34 சவூதி பெண்களில் 17 பேர் ஆஃப்கானியரையும், 17 பேர் வங்கதேசத்தவரையும் திருமணம் செய்துகொண்டுள்ளனர் என்று சவூதி அரேபிய நீதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.அதே காலக் கட்டத்தில் 55 சவூதி ஆண்கள் ஆஃப்கானியப் பெண்களையும் 27 பேர் வங்கதேசப் பெண்களையும் மணந்துள்ளனர் என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பார்க்க: செய்தி http://www.inneram.com/news/middle-east/3253-34-saudi-ladies-married-bangalis-and-pakistanis.html)

3 comments:

  1. 34 சவூதி பெண்களில் 17 பேர் ஆஃப்கானியரையும்17 பேர் வங்கதேசத்தவரையும் திருமணம் செய்துகொண்டுள்ளனர் என்பதை வைத்து இஸ்லாமில் (அரபிகளில்)மனிதர்களை பிரித்து கூறுபோடும் கொள்கை கிடையாது என்று சொல்கிறீர்களே சகோ !
    நீங்களும் ஒரு இந்தியர் தனே. இந்த தேசத்தில் இந்தியாவில் மிக கடுமையான ஜாதி இன மத வேறுபாடுகளை தாண்டி மதம் ஜாதி இவற்றை துறந்து கலப்பு மணம் செய்து இன்று எவ்வளவு பெரும் தொகை வாழ்ந்து வருகிறார்கள் என்பதை நீங்க அறிந்திருப்பீர்கள்.ஒரு 34 சவூதி பெண்களின் அந்நிய திருமணத்தால் இஸ்லாத்திலும் மனிதர்களை பிரித்து கூறுபோடுவது கிடையாது என்றால் காலம் காலமாகவே கலப்பு திருமணம் செய்து பல மக்கள் வாழும் இந்தியாவிலும் ஜாதி மதம் இனம் என்று சொல்லி யாரும் ஒரு துரும்பை கூட போட முடியாது சகோ ! அந்த உண்மையை நாம் புரிந்து கொள்வோம்.
    அரபு பன்னாடைகள் இந்தியாவுக்கு இங்கு வந்து நல்லிணக்க பாடம் கற்று கொள்ளவும்.

    ReplyDelete
  2. very very correct thiru. vedanagari

    ReplyDelete
  3. சரியான முறையில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளிர்கள் சகோ..!
    ஜஸாக்கல்லாஹ் கைரன்

    ReplyDelete