நாங்களும் சமையல் குறிப்பு பதிவு போடுவோம்லே...
ஒன்னும் இல்லைங்க சோறு ஆக்குகிற ரைஸ்குக்கர் மேல் ஒரு தட்டு இருக்கும் அதில் அளவுக்கு தகுந்த மாதிரி வெட்டி அடுக்கி விட்டு மூடி விடுங்கள் சோறு வெந்து முடித்தவுடன் கிழங்கும் சரியான பக்குவத்தில் வெந்து இருக்கும். அப்படியே எடுத்து சாப்பிட்டு விட வேண்டியதுதான்.(இப்படித்தான் நான் செய்கிறேன்)
பின்குறிப்பு:
வெளிநாட்டில் இருக்கும் தனிநபர்களுக்காக இந்த சமையல்
அப்புறம் இந்த கிழங்கில் நிறைய சத்து இருக்காம்.
சர்க்கரைவள்ளி கிழங்கு உலகின் மிக சத்தான உணவுகள் ஒன்றாகும். சர்க்கரை வள்ளி கிழங்கில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் குறிப்பிடத்தக்கது.. ஆராய்ச்சி மூலம் சர்க்கரை வள்ளி கிழங்கில் ஆக்ஸிஜனேற்ற நிறமியாகிய பூநீலம் ஏராளமாக உள்ளது என்று நிருபிக்கப்பட்டுள்ளது. இது புற்றுநோயை தடுக்கும் குணம் கொண்டது..
இது கடின உலோகங்கள் மற்றும் பிராணவாயு உறுப்புக்களில் உண்டாகும் ஆபத்தை குறைக்கிறது. ஆக்சிஜனேற்ற பண்புகள் சர்க்கரை வள்ளி கிழங்கின் சேமிப்பு நொதிகளை உற்பத்தி செய்கின்றது-.
சர்க்கரைவள்ளி கிழங்கில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்
கலோரிகள்- 90
பேட் -0 கிராம்
செறிவூட்டப்பெற்ற கொழுப்பு -0 கிராம்
கொலஸ்ட்ரால்- 0மில்லிகிராம்
கார்போஹைட்ரேட் -21 கிராம்
புரதம் -2 கிராம்
நார்ச்சத்து -3கிராம்
சோடியம் -36 மில்லிகிராம்
வைட்டமின் ஏ -19.218 சர்வதேச அலகு
ஃபோலிக் அமிலம்- 6 மைக்ரோகிராம்
பேண்டோதெனிக் அமிலம் -1 மில்லிகிராம்
வைட்டமின் பி- 61 மில்லிகிராம்
வைட்டமின் சி- 20 மில்லிகிராம்
வைட்டமின் ஈ -1 மில்லிகிராம்
கால்சியம் 3-8 மில்லிகிராம்
மாங்கனீஸ் -1 மில்லிகிராம்
கரோட்டினாய்டுகள் -11.552 மைக்ரோகிராம்
பொட்டாசியம் -475 மில்லிகிராம்
மாக்னீஷியம்- 27 மில்லிகிராம்
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளி கிழங்கை உணவில் சேர்த்து சாப்பிட்டு வாழ்வை ஆரோக்கியமாக்கிடுங்கள்.
சக்காவள்ளிக்கிழங்கு இங்கே வெந்தது எப்படி?தேவை என வருகிற போது எல்லாமுமே பெரிய விஷயமாயும்,முக்கியமானதாயும்/வாழ்த்துக்கள் சார்/
ReplyDeleteஇவ்வளவு கஷ்டமான வேலையா இது!? என்னால ஆகாதுப்பா!
ReplyDeleteநீங்கள் சக்கரை வள்ளிக் கிழங்கென்பது வத்தாளங்கிழங்கா? ஆங்கிலத்தில் sweet potato என்பர்.
ReplyDeleteமிக இலகுவான வழி ; நன்கு கழுவி ஒரு சட்டியில் கிழங்கு மூடும் வரை நீரை விட்டு நேரே சட்டியை
அடுப்பில் வைத்து மூடி விட்டு, அரை மணி நேரத்தில் வடித்து, கிழங்கை விரல் நகங்களாலே உரித்து உண்ணலாம்.
நீங்க சொன்ன முறையில் கரட் அவித்து சாப்பிட்டிருக்கோம். கண்ணுக்கு நல்லதல்லவா.இனி சர்க்கரைவள்ளி கிழங்கும் அவிக்க வேண்டியது தான்.
ReplyDelete