Friday, August 26, 2011

அநியாயமான மரணதண்டனைக்கு எதிராக போராடுவோம்.

பேரறிவாளனின் தாயின் பேட்டியை கணொளியில் கண்டு என்னால் கண்கலங்காமல் இருக்க முடியவில்லை. அந்த தாயின் வேதனையை அவர்களை போன்ற பாதிக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்ற முறையில் என்னை ஈன்ற தாய் அழுவது போல உணர்ந்தேன்.


தன் மகனுக்கு தவறான தீர்ப்பு வழங்கப்பட்டு கடந்த 20  வருடங்களாக தண்டனை அனுபவித்து விட்டார். அவருக்கும் ராஜீவ் கொலைக்கும் சம்பந்தமில்லை என்றும் தெளிவாக கூறுகிறார் பாருங்கள். அவரை தீவிரவாதி, கொலையாளி என்று ஊடகங்கள் எப்படி தவறான பிரச்சாரத்தை முடுக்கி விட்டார்கள் என்பதையும் விளக்குகிறார். குறிப்பாக ஊடகக் காரர்களை நோக்கி அவர் கோபமாக வைக்கும் கேள்விகளுக்கு விடை இல்லை.



இதே போல் கோயமுத்தூர் குண்டுவேடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பத்தாண்டுகளுக்கு மேலாக வாடும் அப்பாவி சிறைக்கைதிகளின் தாயின் குடும்பத்தாரின் கண்ணீரை பாருங்கள்.

ராஜீவ் காந்தியையும், பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட அப்பாவி பொதுமக்களையும் கொன்றவர்கள், கோயமுத்தூரில் பொது இடங்களில் குண்டு வைத்து அப்பாவிகளை கொன்றவர்கள் என்று இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் குற்றமற்றவர்களை தண்டித்து விடாதீர்கள்.

27 comments:

  1. மனதை பிழிகிறது....
    வீடியோ காட்சியை பார்க்கவே முடியவில்லை..

    ReplyDelete
  2. மரண த்ன்டணை என்பதே நாகரிக உலகில் ஒழிக்கப் படவேண்டும்.இந்த வழக்கை பொறுத்த வரையில் சரியாக விசாரணை இந்த 20 வருடங்களில் நடத்தவில்லை ,குற்றத்திற்கு உதவினார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு.அதுவும் சரியாக் நிரூபிக்க படவில்லை எனும் போது இவர்கள் விடுவிக்கப் படுவதே நியாயம்.

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    சகோ.ஹைதர் அலி...

    21 ஆண்டுகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், ஆகியோர் சிறைதண்டனை அனுபவித்துள்ளனர்.

    பொதுவாக, கொலைக்குற்றத்துக்கு நம் நாட்டில் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை என்றுதான் நீதி மன்றத்தில் தீர்ப்பு கொடுப்பார்கள்.

    ஒருவேளை அவர்கள் கொலையே செய்ததாகவே வைத்துக்கொண்டாலும்...

    இந்நேரம் அவர்கள் ஆயுள் தண்டனையையும் தாண்டி அனுபவித்து விட்டனரே..!

    இவ்வளவு பெரிய தண்டனையை வழங்கிய பின்னரும் மரண தண்டனை என்பது எவ்வகையில் நீதியாகும் என்றுதான் எனக்கு புரியவில்லை.

    அப்படி மரண தண்டனைதான் தர வேண்டும் என்றால்... அதை 2000க்கு முன்பே தந்திருக்க வேண்டும்.

    இனிமேல் மரணதண்டனை என்பது ஒரு கொலைக்குற்றத்துக்கு ஆயுள் + மரணதண்டனை என்பதாகிறது.

    இதற்கு சட்டத்தில் இடம் உண்டா சகோ.ஹைதர் அலி..?

    ஆக, இந்த மரணதண்டனை நீதிக்கு எதிரானது. முற்றிலும் அநீதியானது என்பதில் ஐயம் இல்லை.

    //அநியாயமாக கொடுக்கப்படும் மரணதண்டனைக்கு எதிராக போராடுவோம்.//

    ReplyDelete
    Replies
    1. போராடுவோம் , போராடுவார்கள்


      ஆனால் இதோ போல் சம்பவத்தில் நீதி கேட்டு ஒரு முஸ்லிமுக்காக போராடினால் முஸ்லிமகள் மட்டும் தான் போராடவேண்டும் வேறு எவரும் கலந்து கொள்ளமாட்டார். அப்பபடியே போராடினாலும் எதுவும் நடக்க போவதில்லை. யார் காதிலும் விழப்போவதுமில்லை.

      அப்படியானால் பிரதமர் ராஜீவை கொன்றது யார் என்றெ தெரியாமல் போய்விட்டதா?

      Delete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    இந்த வழக்கு இத்தனை வருடங்கள் நீடித்ததே இந்திய நீதித் துறைக்குத் தலைக்குனிவு.

    இன்னும் செஷன்ஸ்கோர்ட்,ஹை கோர்ட்,சுப்ரீம்கோர்ட்,சுப்ரீம் கோர்ட் பெஞ்ச்,ஜனாதிபதியின் கருணை மனு,மத்திய அமைச்சரவையின் பரிந்துரை,முதல்வரின் சிறப்பு வாசல் என்று இன்னும் எத்தனையோ கதவுகளை தட்டிப் பார்த்து விட்டு கடைசியில் மக்கள் முன்பு நீதி கேட்கும் தாய் குலங்களுக்கு மக்கள் மன்ற என்னத்தை வழங்கி கிழித்திடப் போகிறது?

    இதோ இன்று மைக்கைப் பிடித்து சேதி கேட்கும் அராஜாகம் பிடித்த பத்திரிகை வர்க்கம்தானே அன்று அவர்களை நீதியின்றி நேர்மையின்றி தக்க காரணமின்றி கைது வாரண்ட் இன்றி கைது பன்னும் போது ஊடகங்களை போலியாக காண்பித்து அப்பாவிகளின் உயிர்களுக்கு உலை வைத்தது.

    அதற்குதானே அந்த தாயார் சவுக்கடி கொடுக்கிறார்.

    இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலேயாவது உண்மையை எழுதுங்கள் என்று.

    ராஜுவை கொன்றவனை கொல்லத்தான் வேண்டும் மறுப்பதற்க்கில்லை ஆனால் அதை காரணம் காட்டி அப்பாவி மக்கள்களை தகுந்த சாட்சியம் இன்றி சிறையில் தண்டிப்பதோ அல்லது மரண தண்டனை விதிப்பதோ ஜன நாயக நாட்டிற்கு அழகல்ல.

    மதுரை தினகரன் ஆபிசில் பட்டப் பகலில் மூன்று பேரை வெட்டிக் கொன்ற மூக்க அழகரியை இந்த சட்டம் என்ன செய்தது?

    சரவணபவன் அண்ணாச்சிக்கு பத்து வருடம் சிறை தண்டனை கொடுக்கப் பட்ட பின்பும் நிரந்தரமாக அவர் ஜாமீனில் வெளியே இருக்கும் மர்மம் என்ன ?

    தேவைப் படும் பொழுது தேவைப் படுபவர்களின் கேஷ்கள் மட்டும் விசாரிக்கப் பட்டு மீண்டும் மர்மமாக மறந்து போக்கடிக்கப்படும் மர்மம் என்ன ?

    இந்தியாவில் தண்டனை அப்பாவிகளுக்கும், வக்கற்றவர்களுக்கும் மட்டுமே வழங்கப்படுவது வேதனைக்குறியது.

    போப்பாலில் இருபாதியிரம் பேரை விசம் வைத்து கொன்ற அந்த அமெரிக்கனுக்கு என்ன தன்டனை கொடுத்தது இந்தியா?

    அரசியல் தலைமையின் கடைக்கண் பார்வைக்காக அப்பாவிகளை பஸ் எரிப்பின் மூலம் கொன்ற அடிவருடி அடிமைகளை தனது ஆட்சிக்காலத்தில் காப்பாற்ற முயற்சித்து தோல்வியுற்ற ஜெயலலிதாவிடம் இந்த அம்மா மனு கொடுத்திருக்க கூடாதுதான்.

    சட்டம் ஒரு இருட்டறை அதில் நாம் கவனமாகத்தான் நடக்க வேண்டும் இல்லையேல் அது நம்மையே கொன்றுவிடும்.

    கடைசி வாழ்நாள் வரை,8' x 10' என்றளவில் இருக்கும் அறையில் எட்டு பேருடன் உறங்கி -இருபத்தோராண்டு கடுங்காவல் பெற்று இன்று மரண கயிற்றோடு போராடும் நபர்களை தியாகிகள் என்று சொல்லுவதை தவிர வேரு வழியில்லை நமக்கு.

    பொருத்திருந்து பார்ப்போம்.

    இரு தரப்பு காணொளியினருக்கும் என் அனுதாபம்ங்கள்

    ReplyDelete
  5. சாரி...

    தமிழ் மணம் ஓட்டு போட மறந்துட்டேன்.

    ஓட்டும் போட்டாச்சு.

    ReplyDelete
  6. கரையில் இருந்துAugust 27, 2011 at 9:02 AM

    அன்புள்ள தாய்யே உன் உணர்வுக்கு மதிப்புகுடுக்கிறேன்......உன் கேள்விக்கு மௌனம்தை பதிலாக கொண்ட இந்தே பத்திரிகை நண்பர்களுக்கு காலம் பதில் சொல்லும் .......

    உங்களுடைய பத்திரிகை பேட்டிக்கு பிறகு உங்கள் உணர்வுக்கு மதிப்பு அளித்து இரண்டு நாளாக பத்திரிகையில் உங்களுடைய மகன் சர்பஹா இதிகள் வந்து கொண்டு இருக்கிறது ...நிச்சியமாக உங்கள் மகன் உங்களிட திரும்பி வருவர் இறவன் நடத்தால்....

    தங்களும் , மீதம் உள்ள 26 குடுப்பம்மும் 20 வருடமாக தண்டிக படுகிறோம் என்று குறிபிட்டு உள்ளீர்கள் ,அன்னால் முஸ்லிம் சமுதாயம் கடைந்தே 18 வருடகளாக தன்னுடைய அடையாளத்தையும்,கௌருவ்தையும் துளைத்துவிட்டு நடமாடி கொண்டு இருக்கிறது தாய்யே ..அப்பாவிகள் ஏத்தனையோ பெயர் கொண்டோ முஸ்லிம்கள் சிறைகளில் வடிகொண்டு இருகிறார்கள் .....உங்களின் பேட்டியை பாத்ததும் எல்ல பத்திரிகையும் உங்கள் மகன் சார்பாக எழுதுகிறார்கள் ......ஆனால் என் சமுதாயத்தில் பதிக்கப்பட்ட சஹோதரிகள் மேடையில் வந்து கஷ்டத்தை சொல்லியும் என்தே பத்திரிகையும், அரசகமும் செவிகொடுகவில்லை !!!! யன்ன நிதி தாயே ??? சொல்லுகள்!!!!

    தாங்களாவது வெளியில் வந்து சொல்லகுட உதவி செய்யுகிரர்கள்..ஆனால் என் சமுதாய மக்களுக்கு ?????

    தங்களுடை மகனுக்க நான் இறைவனிடத்தில் வேண்டுரிகிறேன் !

    ReplyDelete
  7. மனதை வலிக்க செய்ய கூடிய பதிவுகளை எனது பதிவிலும் லிங்க் கொடுத்துள்ளேன்

    ReplyDelete
  8. நாம் சகோதரர்களை காப்போம்

    ReplyDelete
  9. மரண த்ன்டணை என்பதே நாகரிக உலகில் ஒழிக்கப் படவேண்டும்.இந்த வழக்கை பொறுத்த வரையில் சரியாக விசாரணை இந்த 20 வருடங்களில் நடத்தவில்லை

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    ஒரு தவறு நடந்தவுடனே ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்வதாக இருந்தால் கூட பெரும்பாலும் அதற்கு ஓரிரு நாட்கள் தேவைப்படலாம். ஆனால் இவர்களிடம் முற்கூட்டியே சொல்லிவிட்டு செய்ததுபோல், உடனுக்குடன் சிலரை மட்டும் குறிவைத்து கைது செய்யும் போக்கு உலகிலேயே நம்ம நாட்டில்தான் நடக்கிறது. அதிலும் ஒடுக்கப்பட்ட/சிறுபான்மை சமுதாயத்தவர்களாகவும், ஆட்சியும் செல்வாக்கும் இல்லாதவர்களாகவும் இருந்தால் சொல்லவே தேவையில்லை.

    கைதுதான் செய்கிறார்கள் சரி... அதே வேகத்தில் விசாரணையை நேர்மையான முறையில் ஆரம்பித்து, குற்றவாளிக‌ளை சரியான முறையில் கண்டுபிடிக்கிறார்களா? உண்மைக் குற்றவாளிகளைத் தப்பவிட்டு, குற்றமற்ற அப்பாவிகளின் மீதுள்ள வழக்கை இழுத்தடித்து பல வருடங்கள் சிறையில் வதைப்பதும், குற்ற‌ம் நிரூபிக்கப்படாமலே அவர்கள் தண்டிக்கப்படுவதும் மனித உரிமை மீறலும், மிகவும் கொடுமையானதும் ஆகும். இப்படிப்பட்ட அநீதிகளை சாதிமத பேதமின்றி மக்கள் அனைவருமாக‌ சேர்ந்து எதிர்த்துப் போராடும் ஒரு மக்கள் புரட்சி ஏற்பட்டால் இந்த நிலை இன்ஷா அல்லாஹ் மாறலாம்.

    தன் உறவுகளை எண்ணி ஏக்கத்திலும் கவலையிலும் வாடும் அந்த தாய்மார்களுக்கு விரைவில் நீதி கிடைக்கவும், நிரபராதிகள் தண்டையை விட்டு மீட்கப்படவும் இறைவன் உதவி செய்வானாக!

    ReplyDelete
    Replies
    1. உண்மை முற்றிலும் உண்மை

      Delete
  11. @vidivelli

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  12. @~முஹம்மத் ஆஷிக்_citizen of world~

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    விரிவான அழகான கருத்திற்கு நன்றி

    ReplyDelete
  13. @அந்நியன் 2

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    //இரு தரப்பு காணொளியினருக்கும் என் அனுதாபம்ங்கள்//

    இருதரப்பாரும் பதிக்கப்பட்டுயிருக்கிறார்கள் சகோ அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்

    ReplyDelete
  14. @கரையில் இருந்து

    கரை சகோதரரே அருமை கருத்துரை ஆணித்தரமான கேள்விகள் உங்களின் உள்ளகுமுறலை பார்க்கிறேன்

    தங்களின் கருத்துரைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  15. @மாய உலகம்

    பார்த்தேன் நன்றி நண்பரே

    ReplyDelete
  16. @அஸ்மா

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    அழகான கூர்மையான கேள்விகளை தாங்கிய தங்களுடைய கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  17. http://arulgreen.blogspot.com/2011/09/3.html

    அவசரம்: 3 பேரின் தூக்கு தண்டனையை எதிர்ப்போர் கவனத்திற்கு!

    ReplyDelete
  18. பதவிகாக ரஜுவை கொலை செய்த அரசியல்வாதிகலை
    முதலில் தூகில் போடவேண்டும்...........................

    அப்பாவிகளுக்கு தண்டனை ஏன்????????????????????

    by
    kads

    ReplyDelete
  19. பதிவிற்கு பாரட்டுகளும் நன்றிகளும்.பதிவும் பின்னூட்டங்களும் பல விடயங்களை சொல்லியுள்ளது.நன்றி.

    ReplyDelete
  20. கொலை, கொள்ளை, ஊழல் இவைகளை புரிந்தவர்களாகட்டும் அல்லது சந்தேகத்தின் அடிப்படையில் கட்டம் கட்டப்பட்டவர்களாகட்டும், அவர்கள் சிறுபான்மையினத்தினரோ அல்லது பொருளாதாரத்தில் நடுத்தர அல்லது கீழ்தட்டு மக்களாக இருப்பின் கடுமையாக தண்டிக்கப்படுகின்றனர். பிக்பாட்டிற்க்காக கொண்டு சென்றவர்கள் லாக்-அப்பில் மரணம் அடைந்த வரலாறு நிறையவே உண்டு. ஆனால், ஊழலுக்கு சென்ற அரசியல்வாதிகளோ அல்லது தொழிலதிபர்களோ.. ஒருவருக்கு கூட இது வரை சிறு கீறல் விழுந்ததாக சரித்திரம் இல்லை. இது தான் நம் ஜனநாயகம்! இராஜீவ் கொலைவழக்கில் திட்டமிட்டு சதிகாரர்களை தப்பவிட அல்லது உண்மையான குற்றவாளிகளையும் அதற்கான பின்னணியில் இருந்தவர்களை அடையாளம் காண ஆர்வமற்று ஆளும் கட்சியான காங்கிரஸே இவ்வாறிருப்பதை இருப்பதை நினைத்தால்.... கொலையின் பின்னணியில் காங்கிரஸின் பங்கு என்ன என்பதை பாமரனும் அறிந்துக் கொள்வான்.

    ReplyDelete
  21. @மாலதி
    மரண த்ன்டணை என்பதே நாகரிக உலகில் ஒழிக்கப் படவேண்டும்.

    உண்மை தான் சகோதரி. புலிகள் தங்களை ஏற்று கொள்ளாதவர்களுக்கு வழங்கிய கொடிய மரண தண்டணை பற்றி அல்லது தங்களுக்கு எதிரானவர்களை போட்டு தள்ளும் அவர்கள் நடை முறை பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    ReplyDelete