Tuesday, July 24, 2012

எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்வோம் வாருங்கள்


'எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்வோம் வாருங்கள்' என்ற தலைப்பு வைத்தவுடன் உங்கள் புருவங்கள் ஆச்சரியத்தில் விரியலாம். எழுத்துத் துறையில் பழுத்த அனுபவமுள்ளவர்கள் ஒய்வுபெற போகும் போது தனது அனுபவக் குறிப்புகள் இளைய தலைமுறைக்கு பயன்பட வேண்டும் எனும் நோக்கில் 'கற்றுக் கொள்ளுங்கள்' என்று பெரும்புத்தகம் எழுதுவது நடைமுறை.

நான் இந்த தொடரை ஏன் எழுதுகிறேன்? எனில், எப்படி எழுதுவது என்று கற்றுக் கொண்டு இருக்கிறேன். ஒரு விடயத்தை கற்றுக் கொள்ளும் போது, அதை கற்றுக் கொண்டே பிறருக்கு சொல்லிக் கொடுக்கும் போது இன்னும் ஆழமாக எனது மனதில் பதியும். படிப்பதை எழுதும் போது அதுவும் நல்ல பலனை கொடுக்கும்.என்னைப் போல் இணையத்தில் எழுத ஆரம்பித்திருக்கிற நண்பர்களுக்கும் பயன்படலாம்.

ஒலைச் சுவடியின் மீது எழுத்தாணியால் கீறத் தெரிந்தவர்களெல்லாம் ‘வலையேற்றம்’ செய்யும் வாய்ப்பு அன்று இல்லை, இன்று இருக்கிறது. ஒரு கணினியும் இணையவசதியும் இருந்தால் போதும் யார் வேண்டுமானலும் எழுதலாம் என்ற நிலை இருக்கிறது. முன்னொரு காலத்தில் அருந்ததி ராயும்,ஜூம்பாலகரியும் சொந்தமாய்க் கணினி வாங்கி அதில் எந்தத் திட்டமுமில்லாமல் தட்டத் தொடங்கினார்களாம். பிறகு தட்டியவைகளைச் சேர்த்துக் கட்டிபோது அது நாவலாகி விட்டதாம்.புக்கர் பரிசும் பெற்று விட்டதாம். எல்லாம் அவர்கள் சொன்னது தான்.

கையேழுத்து பத்திரிக்கை,உருட்டச்சு பத்திரிக்கை,சிறுபத்திரிக்கை அப்புறம் குமுதம்,குங்குமம்,ஆனந்தவிகடன் என்று படிப்படியாக ‘உழைத்து முன்னேறிய’ எழுத்தாளர் பெருமக்கள் பார்த்துப் பெருமூச்செறியும் வகையில் இன்று இணையத்தில் புதிதாக எழுதக் கூடியவர்கள் சிறப்பான படைப்புகளை எவ்வித பின்புலம் இல்லாமல் கொடுத்து விடுகிறார்கள்.

அதே சமயத்தில் என்ன எழுவது? எப்படி எழுவது? இணையம் எனும் பொதுவெளியில் பொறுப்போடு நடந்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறையற்று எதையாவது கிறுக்குபவர்களும் இருக்கிறார்கள். ஆயிரம் பேர் ஆடுவதற்கு இடமளிக்கும் மேடை ஆயிரம் பேரையும் நடனக் கலைஞராக்கி விடுவதில்லை.தலைவர்கள் அடிமட்டத் தொண்டன்,மேதைகள்,பாமரர்கள் என்று  பிரிந்து கிடக்கும் அவமானமான நிலை முடிவுக்கு வருவதை இணையம் சாத்தியமாக்கியிருக்கிறது. ஆனால் அது அந்த சாத்தியத்தை மட்டுமே வழங்குகிறது.

சரி பாடத்திற்கு போவோமா?

  1. நோக்கம்
  2. பிரச்சினைகள்
  3. எழுவதின் செயல்முறைகள்
  4. திட்டமிடல் (Planning)
  5. முதல் பிரதியை எழுதுதல் (Drafting)
  6. மீள் பரிசீலனை செய்தல் (Revising)
  7. எழுதியதை சரிபார்த்தல் (Proof Reading)
  8. எழுத்தாளரின் பிரச்சனைகள் (Writer Block)
  9. உதவிக் குறிப்புகள்

கற்பதின் நோக்கங்கள்

(இவ்வத்தியாயத்தைக் கற்று முடித்த பின்னர் நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யக் கூடியவராக இருக்க வேண்டும்.

1.சிறந்த முறையில் எழுதுவதற்குரிய அடிப்படை அம்சங்களை அடையாளம் காண்பது.

2. மேலும் பயன்மிக்கதாக எழுதுதல்

3.பிறரது எழுத்தாக்கங்களை,பதிவுகளை விமர்சன ரீதியாகத் திறனாய்வு செய்தல் )

1.நோக்கம்

எழுதுதல் என்பது ஒரு பன்முகத்தனமை கொண்ட ஒரு கருவியாகும். பிறருக்கு தகவல் வழங்கவும், அவர்களை அறிவுறுத்தி இணங்கச் செய்வதற்கும்,உற்சாகமூட்டி உணர்வூட்டுவதற்கும்- ஏன் மற்றவர்களைப் பயமுறுத்துவதற்கும்கூட- நாம் எழுத்தைப் பயன்படுத்துகிறோம்.நன்றாக எழுதுவது முக்கியமானதாகும் ஏனெனில், எழுத்துக்களுக்கு பின்வரும் சிறப்பியல்புகள் உண்டு.

1. எண்ணங்களுக்கும் தகவல்களுக்கும் நிரந்தர வடிவம் தருகிறது. இதனால் அவற்றை உசாத்துணைக்காகவும் பிரதியெடுப்பதற்காகவும் எளிதில் பயன்படுத்தலாம்.

2. அதனுள் அடங்கியுள்ள செய்திக்கு ஏற்ப பிறரைச் செயலாற்ற செய்கிறது.

3. எழுத்தாளரின் சிந்தனைகளைப் பிரதியெடுக்கவும்,அதிகமானோருக்குப் பரப்பவும் முடியும் என்பதால் அவரது நேரத்தை மிச்சப்படுத்துகிறது.

4.புதிய அல்லது வித்தியாசமான சிந்தனைகளைத் திருத்தமான விதத்தில் பகிர்ந்து கொள்வதன் மூலம் கற்போரை வழிநடத்தி நெறிப்படுத்துகிறது.

5.வாசகருக்கு செவிவழிச் செய்திகளாக இல்லாமல் எழுத்தாளரை அறிமுகம் செய்வதன் மூலம் நம்பகத்தன்மையும் ஆதாரப்பூர்வத் தன்மையும் ஏற்படச் செய்கிறது.

6.தெரிவுகளை அல்லது செயற்பாட்டுக்கான வழிமுறைகளைத் தெளிவாகவும் நிரந்தரமாகவும் எடுத்துரைப்பதனால் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்கிறது.

7. ஒரு விடயத்தை பிரச்சாரம் செய்ய பயன்மிக்க வழிமுறையொன்றாக திகழ்கின்றது.

பிறருடன் தகவல் பரிமாறிக் கொள்வதற்கான கருவி என்கிற முறையில் எழுத்தாற்றலானது பயிற்சியின் மூலம் கூர்மையடைய செய்ய வேண்டும். நமது எழுத்தாக்கங்கள்,பதிவுகள் தெளிவானதாகவும் திருத்தமானவையாகவும் மட்டுமின்றி,விளங்கக் கூடியவைகளாகவும் விருப்பத்திற்குரியவைகளாகவும் அமைய வேண்டுமாயின் சரியான பொருளடக்கத்தையும், சொற்களையும் நாம் தெரிவு செய்து கொள்வது முக்கியமாகும்.

(இறைவன் நாடினால் அடுத்த தொடரில் பிரச்சினைகளும், எழுதுவதின் செயல்முறைகள் இவைகளை பார்ப்போம் தொடரும் )

42 comments:

  1. சலாம்.எழுத்தார்வமிக்க ஒவ்வொருவரும் குறித்து வைத்துக்கொள்ளப்படவேண்டிய தகவல்கள்.உபயோகமான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம்
      தங்களுடைய வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  2. salaam,

    கற்பதின் நோக்கத்தை சரியாக விளக்கியுள்ளீர்கள்.நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    புதிய வரவுகள்:இந்தியன்னு சொல்லவே கேவலமா இருக்கு,குடிதண்ணீரை எப்போ குடிக்கனும்னு உங்களுக்கு தெரியுமா?-www.tvpmuslim.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம்

      வருகைக்கும் தங்களின் புதிய பதிவை பற்றிய அறிமுகத்துக்கும் நன்றி

      Delete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    அருமையான முயற்சி... தொடருங்கள் அண்ணா... இதனால் நிச்சயம் என்னை போன்றோர் பயன்பெற முடியும். இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம்

      ///நிச்சயம் என்னை போன்றோர் பயன்பெற முடியும். இன்ஷா அல்லாஹ்//

      நம்மை போன்றோர் என்பது கூட சரியாக இருக்கும் எழுவதின் மூலம் நன் பயன் பெறுகிறேன்

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    செய்திகளை எடுத்துச் சொல்லும் ஆற்றல் பலருக்கு இருந்தாலும், அதனை எழுத்தாக்கும் ஆற்றல் இல்லாத காரணத்தால் நல்ல செய்திகள் பலருக்கும் சென்றடையும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும். அத்தகைய குறையைப் போக்க நல்லதொரு சந்தர்ப்பம். எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். தங்களது சிறந்த பணிக்கு அல்லாஹ் மென்மேலும் அருள் புரியட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...

      //தங்களது சிறந்த பணிக்கு அல்லாஹ் மென்மேலும் அருள் புரியட்டும்.//
      தங்களின் பிரார்த்தனைக்கும் வருகைக்கும் நன்றி சகோதரரே

      Delete
  5. செய்திகளை எடுத்துச் சொல்லும் ஆற்றல் பலருக்கு இருந்தாலும், அதனை எழுத்தாக்கும் ஆற்றல் இல்லாத காரணத்தால் நல்ல செய்திகள் பலருக்கும் சென்றடையும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும். அத்தகைய குறையைப் போக்க நல்லதொரு சந்தர்ப்பம். எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். தங்களது சிறந்த பணிக்கு அல்லாஹ் மென்மேலும் அருள் புரியட்டும்.

    ReplyDelete
  6. maasha allah !

    nalla muyarchi!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சகோதரரே

      Delete
  7. பயனுள்ள தகவல்கள்....தொடருங்கள்..நாங்களும் தொடர்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. இணைந்துக் கொண்டமைக்கு நன்றி சகோதரரே

      Delete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    .உபயோகமான தகவல்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
      வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

      Delete
  9. பயனுள்ள பதிவு
    தொடர்ந்து எழுத வாழ்த்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்து கண்டு மகிழ்ச்சி சகோதரரே

      Delete
  10. Replies
    1. தமிழ்மண ஓட்டு இட்டதிற்கு மிக்க நன்றி

      Delete
  11. அஸ்ஸலாமு அலைக்கும் .. சரியான முயற்சி
    தொடருங்கள் ...

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம்
      உங்களின் ஆதரவுடன் தொடர்கிறேன் சகோதரரே

      Delete
  12. மிகவும் பயனுள்ள அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  13. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

    அருமையான முயற்சி தொடருங்கள் நாங்களும் தொடர்கிறோம் இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...

      உங்களின் ஆதரவுடன் தொடர்கிறேன் சகோதரரே

      Delete
  14. ஸலாம் சகோ.ஹைதர் அலி,

    ஓர் எழுத்தாளனுக்கு என்னதான் தனக்குள் எழுத்தாற்றல் இருந்தாலும் தன் எழுத்து மக்களிடம் சென்று சேர... க, க, கு, கு, ஆவி, ஜூவி, சாவி இதுபோன்ற இடைத்தரகர்களின் அங்கீகாரம் முன்காலத்தில் தேவையாக இருந்தது.

    ஆனால், அதுபோலன்றி... இன்று நேரடியாக மக்களின் கண்ணுக்கு நம் எழுத்துக்கள் மாற்றார் தணிக்கை இன்றி அப்படியே சென்று சேர, இன்று இணையதளம் கட்டுப்பாடற்ற ஏற்றத்தாழ்வற்ற- நல்லதொரு சமதளம் அமைத்துத்தந்துள்ளது. இதை நாம் சரியாக பயன்படுத்தினால் அனைவருக்கும் வெற்றியே..!

    இது, நல்லதொரு தொடராக அமைய பிரார்த்திக்கிறேன்..!

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்....

      ///க, க, கு, கு, ஆவி, ஜூவி, சாவி இதுபோன்ற இடைத்தரகர்களின் அங்கீகாரம் முன்காலத்தில் தேவையாக இருந்தது.// அதுமட்டுமா அவர்களுக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டும் அதுவுமில்லாமல் அவர்கள் வெட்டி குதறி மிச்ச மீதி இருப்பதை வெளியீடுவர்கள் அனுபவப்பட்டு இருக்கிறேன்

      தங்கள் பிரார்த்தனைக்கு நன்றி சகோதரரே

      Delete
  15. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    அருமையான முயற்சி.. இதன் மூலம் எங்களை போன்ற தொடக்கத்தில் உள்ளவர்கள் மிக்க பயன் அடைய முடியும்...

    ஜசக்கல்லாஹ் ஹைரன்...

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...

      நம்மை போன்றோர் என்பது கூட சரியாக இருக்கும் எழுவதின் மூலம் நானும் கற்றுக் கொள்கிறேன் பயன் பெறுகிறேன்

      வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி ஜஸகல்லாஹ் கைர

      Delete
  16. இப்பதிவு, ‘அக்கறையற்றுக் கிறுக்குபவர்களின்’ எண்ணிக்கையைக் குறைக்க உதவும்.

    பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோதரரே

      Delete
  17. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  18. ஸலாம் ...

    எழுதுங்கள் ... ... *****தொடர்வோம்**** ... இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம்

      தொடர்வோம் இன்ஷா அல்லாஹ்

      Delete
  19. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

    நல்லதொரு தொடர். இறைவன் நாடினால், பலருக்கு பயன்படும்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம்
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  20. ஸலாம் ..

    தொடருங்கள் .... எழுத்தாற்றலை வளர்க்கலாம் ... இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  21. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    சிறிது இடைவெளி விட்டு எழுத தொடங்கினாலும்.. அந்த வெற்றிட கணங்களை நிரப்பி விட்டது இந்த ஆக்கம்!

    மீண்டும் மீண்டும் பயனுள்ள தகவல் ஹைதர் மச்சான்!
    தொடருங்கள்...
    இறை நாடினால்..
    காத்திருக்கிறோம்!

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம் மச்சான்

      காத்திருப்புக்கு நன்றி மச்சான்

      Delete
  22. நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்லதொரு இணையத்தளத்தில் நுழைந்த ஆத்ம திருப்தி எனக்கு. தொடர்ந்து எழுதுவதைப் படிப்பேன்! புதுமை படைத்திட உங்களைப் படிப்பேன்! நல்ல பயனுள்ள கட்டுரையாக முதலாவது கட்டுரை அமைந்துள்ளது. தொடர்கிறேன். உங்கள் பணியை நீஙகளும் தொடருங்கள். -கலைமகன் பைரூஸ் www.kalaimahanfairooz.co.cc

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி சகோதரரே

      Delete
  23. Please visit
    http://nidurseasons.blogspot.in/2013/01/blog-post_1.html
    please send your mail address to nidurali@gmail.com
    wassalaam

    ReplyDelete