Saturday, September 22, 2012

தமிழி(NHM Writer')ல் எவ்வாறு எழுதுவது?

தமிழி(NHM Writer')ல்  எவ்வாறு எழுதுவது?

நீங்கள் பேஸ்புக், டிவிட்டர், ஸ்கைப், ஜிமெயில் ஷாட் பண்ண மடல் எழுத அனைத்தும் தமிழிலேயே செய்யலாம். 

NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது? என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

  1. NHM Writer மென்பொருள்  Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.
  1. மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.
  1. இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன்  சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.
  1. வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.
  1. தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள்  மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.
  1. ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.
  1. ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.
  1. இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.

NHM Writer எவ்வாறு டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி?

NHM Writer என்ற மென்பொருளை கீழ் உள்ள இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.
எவ்வாறு டவுன்லோட் செய்வது திரை விளக்கப்படம்.
உங்கள் கணினியில் டவுன்லோட் செய்த கோப்புவை (File) இன்ஸ்டால் செய்ய (NHMWriterSetup1511.exe) என்ற கோப்புவை இரண்டு முறை கிளிக் செய்து ரன் செய்யவும்.
பின்னர் கீழ் தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

முதல் படி (Step 1) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

2ஆம் படி (Step 2)  இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

3ஆம் படி (Step 3) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

4ஆம் படி (Step 4)  இதில் தமிழ் மொழியை தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

5ஆம் படி (Step 5) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

6ஆம் படி (Step 6) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

பின்னர் மென்பொருள் கணினியில் இன்ஸ்டால் செய்யப்படும்.
NHM Writer பயன்படுத்த கணினியின் கீழ் பகுதியில் உள்ள Toolbar ரில் வலது மூலையில் பார்க்க கிழே உள்ளது மாதிரி

மணி போன்ற ஓர் குறியீடு (Icon) தெரிந்தால் NHM Writer தற்போது இயங்கி கொண்டுள்ளது என்று அர்த்தம்.  இதன் மூலம் NHM Writer ரை நீங்கள் பயன்படுத்த முடியும். 

தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு தேர்வு செய்வது?

நான் முன்பே கூறியது போல் நீங்கள் விரும்பும் தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்ய மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon)  உங்கள் மவுசை வைத்து இடது (Left) பட்டனை கிளிக் செய்தால், திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும். அதில் நீங்கள் விரும்பிய தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்யவும்.


தேர்வு செய்த பின்னர் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யமுடியும்.

மேலும் எளிதாக தமிழில் தட்டச்சு தேர்வு, செய்ய Alt Key மற்றும் 4 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

தங்கிலிஷ் முறையில் தட்டச்சு செய்ய Alt Key மற்றும் 2 யையும் சேர்த்து அழுத்தினால் போதும்.

தமிழ் தட்டச்சுவிலிருந்து ஆங்கில மொழி தட்டச்சு பலகைக்கு மாற்ற, Alt Key மற்றும் 0 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

செட்டிங்கை எவ்வாறு மாற்றுவது?

NHM Writer செட்டிங்கை மாற்ற மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.
அதில் செட்டிங் என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் தெரியும். அதில் நீங்கள் உங்கள் தட்டச்சு பலகைக்கு மாற்ற உதவும் Alt Key மற்றும் எண்னை மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம்.



தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு அறிந்து கொள்வது?

முதன் முதலில் தமிழில் தட்டச்சு செய்ய எந்தெந்த தமிழ் எழுத்து, தட்டச்சு பலகையில் எந்தெந்த பொத்தானில் உள்ளது? என்பதை அறிவது அவசியம்.
ஆகவே தான் உங்களுக்கு உதவியாக நீங்கள் தட்டச்சு செய்யும் போது உங்கள் கண் முன் அந்த தட்டச்சு பலகையின் விளக்கப்படம் கொண்டுவர NHM Writer உதவி புரிகின்றது. அதற்கு நீங்கள், மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் போதும். திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.
அதில் On-Screen Keyboard என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும். 



நீங்கள் இதை வைத்து தட்டச்சு செய்யும் எழுத்து எங்கு உள்ளது என்பதை எளிதில் பார்த்து தட்டச்சு செய்ய முடியும்.

யா,ய்,யூ,யி,யீ போன்ற எழுத்துக்களை எவ்வாறு தட்டச்சு செய்வது?

எனக்கு தெரிந்தவரை தமிழில் தட்டச்சு செய்பவர்கள் ஆரம்பத்தில் பிரச்சனையாக கருதுவது மேற் குறிப்பிட்ட தமிழ் எழுத்துக்களை தான். அவற்றை தட்டச்சு செய்ய NHM Writer, Key Preview என்ற எளிய வழியை ஏற்படுத்தி உள்ளது. 
Key Preview என்ற திரையை பார்க்க மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.
அதில் Key Preview என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.


உதாரணமாக நீங்கள் a என்ற ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் அதற்கு ”ய” என்ற தழிழ் எழுத்து உங்கள் திரையில் விழும். நீங்கள் அந்த ”ய” என்ற தழிழ் எழுத்தை ”ய்” என்றோ, அல்லது ”யா” என்றோ மாற்ற விரும்பினால் "a;" அல்லது ah என்று தட்டச்சு செய்ய வேண்டும். உங்களுக்கு உதவியாக கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.


நீங்கள் இதை பார்த்து, எந்த ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் என்ன தமிழ் எழுத்து வரும் என்பதை நன்றாக அறிந்து செய்ய முடியும்.

இனி நீங்கள் பேஸ்புக்,டிவிட்டர்,ஸ்கைப்,ஜிமெயில் ஷாட் பண்ண மடல் எழுத அனைத்தும் தமிழிலேயே செய்யலாம். வாழ்த்துகள்.

நன்றி: சகோதரர்  Faizal K.Mohamed 


29 comments:

  1. ம்ம்ம் பயனுள்ள தகவல் சகோ

    ReplyDelete
  2. நல்ல பயனுள்ள தகவலை "பகிர்ந்ததற்கு" நன்றி சகோ.!

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி அண்ணா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தங்கச்சி

      Delete
  4. "தங்லீஷை" தமிழில் அடிக்க தெரியாமல் ஆங்கிலத்தில் அடித்துக்கொண்டிருப்பவர்களுக்கு பயன் தரும், மிகவும் உபயோகமான தகவல்!.

    ReplyDelete
  5. என்ன சாரே சூடான பதிவு ஒன்னையும் காணோம்

    ReplyDelete
    Replies
    1. //என்ன சாரே சூடான பதிவு ஒன்னையும் காணோம்//

      உண்டு சாரே இபதிவு கழிஞ்சு பின்னே

      வருகைக்கு வலர நன்னி சாரே

      Delete
  6. பயனுள்ள தகவல் சகோ............thanks

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  7. பயனுள்ள தகவல் சகோ

    ReplyDelete
  8. ரொம்ப நாட்களாகவே நா என் எச் எம் தான் யூஸ் பன்ரேன்

    ReplyDelete
    Replies
    1. நானும் எழுத ஆரம்பித்தது முதல் இதனை தான் பயன்படுத்துகிறேன்

      நீண்ட நாள் கழித்து உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி

      Delete
  9. பயனுள்ள தகவல்.முன்பு tamil keyman-ல் type செய்துகொண்டிருந்தேன் அதன் பிறகு tamileditor.org சுலபமாக இருந்தது.அதனால் அன்று முதல் இன்று வரை அதையே continue பண்ணிகொண்டிருக்கிறேன்.NHM-யும் try செய்து பார்த்திடுவோம்.

    ReplyDelete
    Replies
    1. இதையும் முயற்சித்து பாருங்கள் என் அனுபவத்தில் மிகவும் இலகுவானதாக தெரிகிறது
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  10. ஸலாம் சகோ. பயண்யுள்ள தகவல் நான் டவுன்லோடு செய்துவிட்டேன். இப்பொழுது NHM Writer பயண்படுத்துகிறேன், OLDTypewriter முறை eKalappai விட நீங்கள் தெரியபடுத்திய NHM Writer மிகவும் பயண்யுள்ளதாக இருக்கிறாது. சகோ. ஜெஸக்கல்லா ஹைர்

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

      //பயண்யுள்ள தகவல் நான் டவுன்லோடு செய்துவிட்டேன். இப்பொழுது NHM Writer பயண்படுத்துகிறேன், OLDTypewriter முறை eKalappai விட நீங்கள் தெரியபடுத்திய NHM Writer மிகவும் பயண்யுள்ளதாக இருக்கிறாது. சகோ. ஜெஸக்கல்லா ஹைர்//

      பதிவிறக்கி பயன்படுத்தி அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சகோ

      Delete
  11. பயனுள்ள தகவல் சகோ

    ReplyDelete
  12. நன்றி சகோதரரே. சுமார் 2, 3 வருடம்களாக NHM WRITER தான் உபயோகபடுத்திக்கொண்டு இருக்கிறேன் இன்ஷா அல்லாஹ்!

    நல்ல பழகி விட்டேன் தமிழில் ஸ்பீடாக அடிக்க. எனக்கு ஒரு கேள்வி இப்பொழுது வந்துள்ளது. நிவர்த்தி செய்தால் மிக்க நன்றி யுடையவனாய் இருப்பேன். என்னுடைய சம்சுங் காலக்ஸி மொபைலில் (GALAXY MODEL NOTE GT-7000) டவுண்லோடு செய்ய முடியுமா இந்த அப்ளிகேஷனை என்பது தான் அந்த கேள்வி. காரணம் கணணியில் இதை தட்டச்சு செய்து நல்ல பழக்கம் இருப்பதால், இதேயே எனது மொபைலிலும் இருந்தால் மிக்க உதவிகரமாய் இருக்கும் தானே. அண்டிராய்ட் மொபைலில் இந்த அப்ளிகேஷனை டவுண்லோடு செய்ய முடியுமா? விவரம் தந்தால் மிக்க உதவியாய் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மொபைலில் பயன்படுத்த முடியாது சகோதரரே
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  13. தொழில் நுட்ப தகவல்கள் எப்போதுமே நல்ல வரவேற்பை பெரும். அதிலும் இது தமிழில் எழுதுபவர்களுக்கு ஒரு உபயோகமான தகவல். பகிர்வுக்கு நன்றி. அடுத்த பதிவு சூடாக இருக்கப்போகுது என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் எதிர்பார்ப்புக்கும் ஜஸாக்கல்லாஹ் சகோ

      Delete
  14. பயனுள்ள பதிவு நான் இதைப் பயன் படுத்தியதில்லை.ஆப் லைனில் பயன் படுத்த முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. ஆப் லைனில் பயன்படுத்த முடியும் மிகவும் உதவியாக இருக்கும்

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரரே

      Delete
  15. மிகவும் நல்ல பயனுள்ள தகவல்...உங்கள் பகிர்வுக்கு நன்றி....

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    ReplyDelete
  16. நல்ல பயன்னுள்ள தகவல்.....உங்கள் பகிர்வுக்கு நன்றி......

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  17. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு நல்ல பயனுள்ள தகவலை "பகிர்ந்ததற்கு" நன்றி சகோ.!

    ReplyDelete
  18. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு நல்ல பயன்னுள்ள தகவல்.....உங்கள் பகிர்வுக்கு நன்றி......

    ReplyDelete