Monday, August 3, 2015

அவர்கள் குர்ஆனை கற்றுக் கொள்ளட்டும் : யூத அறிஞர் (ரப்பி) மெனாகம் ஃபுரோமன்

“அவர்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு குர்ஆனையும் ஹதீஸையும் படிக்கட்டும்” - இது இஸ்ரேல் நாட்டில் புகழ்பெற்ற  ஆர்த்தோடாக்ஸ் மதருகுருவான ( Rabbi Menachem Froman) ரப்பி மெனாகம் ஃபுரோமனின் அறிவுரை. அமெரிக்க வெளியுறவுத் துறையில் பணியாற்றுகின்ற அதிகாரிகளை பார்த்துதான் இந்த அறிவுரையை வழங்கியுள்ளார். இஸ்லாத்தின் ஆதார நூல்களைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாததால்தான் அந்தத் துறை இஸ்லாத்தைப் பற்றிய தவறான கருத்துக்களை வெளியீட்டு வருகிறது என்பதே ஃபுரோமனின் கருத்து.
இதற்க்கு ஒரே தீர்வுதான் உள்ளது. அந்த அதிகாரிகள் குறைந்தபட்சம் ஓராண்டாவது விடுமுறை எடுத்து குர்ஆனையும் ஹதீஸையும் படிக்கட்டும். இஸ்லாம் மாபெரும் ஆன்மீகக் கடல் என்பதையும் அதிலிருந்து நிறைய கற்க வேண்டியுள்ளது என்பதையும் அப்போது அவர்கள் விளங்கிக் கொள்வார்.

மேற்கத்தியர்களும் யூதர்களும் முஸ்லிம்களிடம் அவமரியாதையுடன் நடந்து கொள்வதே பிரச்சனைக்குக் காரணம். ஆணவத்தின் மொழியில் அவர்கள் பேசுகின்றனர். அவர்கள் அமைதியை விரும்பினால் முஸ்லிம்களை நெருங்கிச் சென்று அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் ஃபுரோமன்.
ரஷ்ய வார இதழான ‘எக்ஸ்பெர்ட்டு’க்கு அளித்த நேர்காணலில் 63 வயதான ஃபுரோமன் தனது கருத்துக்களை மனம் திறந்து வெளியிட்டுள்ளார். இவர் பலமுறை முன்பு யாசிர் அரஃபாத்தை சந்தித்து அமைதித் திட்டத்திற்காக முயன்றவர் என்பது குறிப்பிடதக்கது. அரசியல் தீர்வை விட  ஆன்மீகத் தீர்வைக் குறித்தே அவர் வலியுறுத்தி வந்தார். ஜெருசலம் யாருக்கு என்பதுதான் மோதலுக்கான முக்கியக் காரணம் என்பதால் அந்தப் புனித நகரத்தை யூத,கிறிஸ்தவ, இஸ்லாமியர் அனைவருக்கும் சொந்தமாக்கி உலகத்தின் தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்பது இவரது பரிந்துரை.

6 comments:

  1. ஃபுரோமேன் அவர்களின் மீது இறைவன் சாந்தியை பொழிவானாக
    அவர் மட்டுமல்ல இஸ்லாத்தின் மீது வெறுப்பைக் கொண்டுள்ளவர்கள் குர்ஆனையும் ஹதீஸ்களையும் படிப்பார்களானால் தங்கள் கருத்தையும் வெறுப்பையும் மாற்றிக்கொள்வார்கள்.
    தவறு இருப்பின் மன்னிக்கவும்.

    ReplyDelete
  2. ஃபுரோமேன் அவர்களின் மீது இறைவன் சாந்தியை பொழிவானாக
    அவர் மட்டுமல்ல இஸ்லாத்தின் மீது வெறுப்பைக் கொண்டுள்ளவர்கள் குர்ஆனையும் ஹதீஸ்களையும் படிப்பார்களானால் தங்கள் கருத்தையும் வெறுப்பையும் மாற்றிக்கொள்வார்கள்.
    தவறு இருப்பின் மன்னிக்கவும்.

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  5. இந்த பேட்டியின் காணொளியை தர முடியுமா ?

    ReplyDelete