Saturday, April 14, 2012

சிசுக் கொலை தீர்வு என்ன?

அண்மையில் மூன்று மாத பெண் குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை எனும் செய்தியை படித்த போது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பெண் சிசுக் கொலையை பற்றி பதிவு எழுதலாம் என்று அதற்கான கூடுதல் தகவல்களுக்காக கூகுளில் போய் தேடிப் பார்த்தால் இதுபோன்ற பாதகக் கொலைகள் இறைந்து கிடக்கின்றன.உதராணத்திற்க்கு ஒரு சில தேடல் முடிவுகளை தருகிறேன் பாருங்கள்.

1.பிறந்து 2 நாளேயான பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றதந்தை கைது. செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 10, 2012, 13:48 [IST]. போபால்: மத்திய ...

2.2 நாட்களுக்கு முன்னர் – சங்கராபுரம் அரசு பஸ்சில் பிணம்: பெண்-குழந்தையை கொன்றகொலையாளி கைரேகை சிக்கியது; தனிப்படை போலீஸ் தீவிரம்.

3.பிறந்து 4 நாட்களே ஆனபெண் குழந்தையைகிணற்றில் வீசி கொன்ற தந்தைஇரவில் தூங்க செல்வதற்கு முன்குழந்தையைஉடல் முழுவதும் ...

4. சங்குரூர்: பிறந்து 4 நாட்களே ஆனபெண் குழந்தையை கொன்றதந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து பஞ்சாப் கோர்ட் அதிரடி தீர்ப்பு ...

5.Search ஜோதிடரின் பேச்சைக்கேட்டு மாதபெண் குழந்தையை கொன்ற

6.1 மார்ச் 2012 – கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி தனக்குப் பிறந்த பச்சிளம்பெண் குழந்தையை கொன்றநிகிதா அகர்வால் என்னும் அப்பெண் இதுவரை ...

மேலேயுள்ளவைகள் குழந்தைகள் பிறந்த பிறகு கொன்றவைகளில் மீடியாக்களின் பார்வைக்கு வந்த ஒரு சில சம்பவங்கள் மட்டுமே இன்னும் எத்தனை குழந்தைகள் அன்றாடம் கொல்லப்படுகின்றனவோ? குழந்தையை பிறக்க விட்டாதானே என்பது போல் கருவிலேயே வைத்து கொல்லப் படுகின்ற சிசுக்கொலை,என்ற கருக்கலைப்பை பற்றிய புள்ளி விபரங்களை பார்த்தால் இன்னும் அதிர்ச்சியடைவீர்கள்.
உலக அளவில்ஆண்டுக்கு சுமார் 4.2 கோடி கருக்கலைப்புகள் நடைபெறுகின்றன. அவற்றில் சுமார் 2.2 கோடி மட்டுமே பாதுகாப்பான கருக்கலைப்பு ஆகும். மற்றவை பதுகாப்பற்ற கருக்கலைப்புகள் ஆகும். உலக அளவில் ஆண்டுக்கு சுமார் 70,000 கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால் இறக்கின்றனர்.



நமது நாட்டில் ஆண்டுதோறும் 1.10 கோடி கருக்கலைப்புகள் நடைபெறுகின்றன. அவற்றில் 80 இலட்சம் பெண் சிசுக்களின் மரணம் நிகழ்கிறது. இதுபோன்ற கருக்கலைப்பு பொதுவாக திருமணம் ஆகாத பெண்களின் விஷயத்தில்தான் செய்யப்படுகிறது என்பது கூடுதல் வேதனை.


பொதுவாக திரைமறைவாக நடைபெறும் கருக்கலைப்பில் அரைகுறை வைத்தியர்களும் அறிவோ அனுபவமோ இல்லாத செவிலியர்களும் ஈடுபாடுகிறார்கள். அவற்றில் வயிற்றில் வளரும் குழந்தை செத்து விடுவதுடன் தாயின் வாழ்வும் முடிந்து விடுகிறது. இது எத்தகைய கொடுமை?


இஸ்லாம் வருவதற்கு முன்பு இருந்த அன்றைய அறியாமை அரபு சமூகம் பிறந்த பெண் குழந்தைகளைஅற்பமாகக் கருதி அதைக் கொலை செய்பவர்களை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கித்தது. அறியாமைக் காலத்தில் வாழ்ந்த மக்கள் பெண் குழந்தைகள் பிறந்ததும் அதைக் கேவலமாகக் கருதி முகம் சுளித்தவர்களாக மக்களின் முகத்தில் கூடி விழிக்க திராணியற்றவர்களாக இருந்தனர்.மேலும் அந்தக் குழந்தைகளை கொன்றுவிடலாமா அல்லது இழிவுடன் இந்தக் குழந்தையை வளர்க்கலாமா என்றும் குழம்பி வந்தனர்.இதைக் கண்டிக்கும் விதமாக அகில உலக மனிதர்களுக்கும் சத்திய நேர்வழி காட்ட தன் இறுதி தீர்க்கதரிசி மூலம் இறைவன் அனுப்பிய திருவேதத்தில் கூறுகிறான்: 


பார்க்க: 16:58   وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ
அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான். (குர்ஆன்: 16 58)


16:59   يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ ۚ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ ۗ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ
எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் - அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா? (குர்ஆன் 16:59)


சரி இந்த சிசுக் கொலைகளுக்கு தீர்வுதான் என்ன?
பிரச்சனை சிக்கலானது அறிவுரை, உபதேசத்தினால் இப்பிரச்சனைக்குத் தீர்வு ஏற்பட்டுவிடாது.சரி தீர்வுஅடுத்த பதிவில் தொடரும்.

20 comments:

  1. சலாம் அண்ணா

    2 நாட்களுக்கு முன் செய்திகளில் பரபரப்பாக பேசிய விஷயம்!

    பிறந்து 3 மாதமே ஆன பெண்குழந்தையை அடித்து துன்புறுத்திய தந்தை! :'(

    தீவிரகண்காணிப்பில் அக்குழந்தை இருக்குறது :'(

    உயிர் பிழைப்பது கஷ்ட்டமாம். அப்படியே பிழைத்தாலும் மூளை வளர்ச்சி இல்லாத குழந்தையாக தான் இருக்கும் என டாக்டர் சொல்லும் போது மிகவும் வேதனையாக இருந்தது :'(

    இன்னும் நம் சமூகம் மாறவில்லை ! பெண்குழந்தைகளை இழிவாக நினைக்கும் மடத்தனம் போகவில்லை...

    :-(

    அடுத்தபதிவுக்காக காத்திருக்கிறேன் அண்ணா

    ReplyDelete
  2. இவர்கள் செய்யும் தவறுக்கு அந்த சிசு என்ன பாவம் செய்தது .


    ஈரான் மாதிரி இவர்களை பிடித்து சிக்னலில் போஸ்ட் கம்பத்தில் தூக்கில் போடவேண்டும் .


    இதுதான் சரியான தண்டனையாக இருக்கும் .

    ReplyDelete
  3. சகோதரா!

    அந்த தாயின்
    புகை படத்தை கண்டவுடன்!
    கண்கலங்கியதே மிச்சம்!

    வேதனை வேதனை!

    பெண்ணின் மானம் மரியாதை -
    இப்படியா ஆகணும்!

    மரியாதை கொடுக்கும்-
    கொள்கையவும் கேவலபடுத்தும்-
    கேவல ஜென்மங்கள் வாழும்-
    உலகம் இது!

    உங்கள் முயற்சி தொடரட்டும்!

    ReplyDelete
  4. நிஜம் முகத்தில் அறைகிறது. படமோ இதயத்தை கருக்குகிறது. என்று மாறுமோ இந்நிலை?

    ReplyDelete
  5. தமிழ்மணம் வாக்குப்பட்டை வேலை செய்யவில்லை.

    ReplyDelete
  6. இன்னமும் இந்த கொலைகள் நடக்கத்தான் செய்கின்றன.....மாற்றம் வேண்டும்...:(

    ReplyDelete
  7. அரை குரை வைத்தியர்களும்,
    அனுபவற்ற செவிலியர்களும் இது மாதிரியான கருக்கலைப்பில் ஈடுபடுகிறாஎகள் என்பது நெஞ்சை அறுக்கும் உண்மைதான் என்றபோது கூட இன்னும் பின் தங்கிய மிகவும் பின் தங்கிய கிராமங்களில் அவர்கள்தான் மக்களுக்க்கு வைத்தியம் பார்த்து க்கொண்டு இருக்கிறார்கள்.அவர்களிடம் சென்றுதான் தங்கலது நோய்களை தீர்த்துக்கொள்கிறார்கள் மக்கள்,இதுமாதிரியான செயல்கள் நான்கு மாடிகள் கொண்ட மருத்துமனைகளிலும் நடக்கிறதுதானே?நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அருமையான படைப்பு வாழ்த்துக்கள் - கவி அழகன்

    ReplyDelete
  9. @ஆமினா

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தங்கை

    ReplyDelete
  10. @ஜெய்லானி

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  11. @Seeni

    சகோதர் sseni உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  12. @துரைடேனியல்

    வாக்குப் பட்டை வேலை செய்கிறது நண்பரே நன்றி

    ReplyDelete
  13. @சிட்டுக்குருவி

    கண்டிப்பாக வருகைக்கு நன்றி

    ReplyDelete
  14. @விமலன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  15. @yathan Raj

    உங்கள் வாழ்த்துக்கு நன்றி கவிஅழகன்

    ReplyDelete
  16. இந்த கயவார்களை துக்கில் இடவேண்டும்

    ReplyDelete
  17. மனிதன் முன்னேறி விட்டான், பல பரிணாமங்களைக் கடந்து மாறிவிட்டான் என்பதெல்லாம் வெறும் பிதற்றகள் என்று இத்தகைய சம்பவங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

    படித்தவுடன் மனம் கனத்தது.

    நல்ல ஒரு விஷயத்தைப் பதிவாக்கியிருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள்! சகோ..

    ReplyDelete
  18. //நமது நாட்டில் ஆண்டுதோறும் 1.10 கோடி கருக்கலைப்புகள் நடைபெறுகின்றன. அவற்றில் 80 இலட்சம் பெண் சிசுக்களின் மரணம் நிகழ்கிறது.// இதிலும் நம்ம நாடுதான் முதல் இடமா

    ReplyDelete