Wednesday, July 25, 2012

எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்வோம் வாருங்கள்.பா-2

இந்த தொடரின் முதல் பாகத்தை வாசிக்க இங்கே அழுத்துங்கள்
இனி எழுத்தாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைககளைப் பற்றிப் பார்ப்போம்.

2. பிரச்சனைகள்


எழுத்துத் துறையில் தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களை முடிந்த வரை தெரிந்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.உதாரணத்திற்கு ‘சீனாவில் சாய்லுன்’ என்பவர் முதன்முதலில் காகிதத்தை கண்டுபிடித்த பிறகு தான் அக்காலக்கட்டத்தில் சீனா பண்பாட்டுத்துறையில் மேலைநாடுகளை விட முன்னேற்றமடைய ஆரம்பித்தது. ஒரு சீனா அறிஞர் தமக்கு தேவையான மூங்கிலால் செய்யப்பட்ட  நூல்களை எடுத்துச் செல்வதாக இருந்தால் கூட அவற்றை பெரிய பார வண்டியில் ஏற்றிச் செல்ல வேண்டியிருந்தது.இந்த அடிப்படையில் ஓர் அரசின் நிர்வாகத்தை நடத்துவது எத்துணை கடினமாக இருந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.
மரநூல்
மூங்கில் கழிகளை வெட்டி கூழாக்கி ககிதம் தயாரிக்கும் ‘சாய் லுன்’ ஒவியம்.
மேலும் விபரங்கள் அறிய இந்த வீடியோவைப் பாருங்கள் 
சீனாவில் இரண்டாம் நூற்றாண்டின்போது காகிதம் பெருமளவுக்கு பயனுக்கு வந்தது. அடுத்த சில நூற்றாண்டுகளில் சீனாவிலிருந்து மற்ற ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு காகிதம் தயாரிக்கும் உத்தியைச் சீனர்கள் நீண்டகாலம் ரசசியமாகவே வைத்திருந்ததை. கி.பி.751 இல் சீனக் காகிதத் தயாரிப்பாளர்கள் சிலரை அராபியர்கள் பிடித்துச் சென்றனர்.அதன் பின் சில ஆண்டுகளிலேயே சமர்கண்டிலும்.பாக்தாதிலும் காகிதம் தயாரிக்கப்படலாயிற்று.படிப்படியாக அரபு உலகம் முழுவதும் பரவியது ஐரோப்பியர்கள் 12 ஆம் நூற்றாண்டில் இந்த கலையை அராபியர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர்.


சீனர்களின் அச்சுப்பாள அச்சுமுறை
காகிதத்தை முதலில் பயன்படுத்திய சீனர்களும், அராபியர்களும் கல்வித்துறையிலும் எழுத்துத் துறையிலும் ஐரோப்பியர்களை விட பிற்காலங்களில் பின் தாங்கியதற்கு மிக முக்கிய காரணம். ‘தொழிற்நுட்பம்’ காகிதத்தை கண்டுபிடித்த இவர்கள் அச்சிடும் முறையை அறியாதவர்களாக இருந்து கைகளால் எழுதி படியேடுத்துக் கொண்டும் அச்சுபாளமுறையை பயன்படுத்தி கொண்டும் இருந்தபோது. ஐரோப்பாவில் பதினைந்தாம் நூற்றாண்டில் ‘ஜோஹன் கூட்டன்பர்க்’ என்பவர் இயங்கக் கூடிய எழுத்துருவையும் (Movable Type) அச்சு இயந்திரத்தையும் கண்டுபிடித்தார்.இவரது முறையைக் கொண்டு எழுத்து வடிவிலான ஏராளமான நூல்களை விரைவாகவும்,துல்லியமாகவும் அச்சடிக்க முடிந்தது அதன் பின்பு ஐரோப்பிய எழுத்துத்துறை மிக விரைவாக முன்னேறியது.
கூட்டன்பர்கும் நண்பர்களும் முதலில் அச்சடிக்கப்பட்ட பக்கத்தைப் பார்க்கின்றனர்.

எனவே எழுத்துத் துறையில் தொழிற்நுட்பம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.(சரி வரலாறு அப்படியே நிற்கட்டும்) இந்த தொடரின் முக்கிய நோக்கம்  தொழிற்நுட்பத்தை பற்றி அறிந்து கொள்வது அல்ல. அதனால் இனி எழுத்தாற்றல் சார்ந்த பிரச்சனைகளை பார்ப்போம்.

வெறுமனே தாளை நிரப்புவதற்காக மட்டும் எழுதாமல்.   'CAR' எனும் சூத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும்.


Creative = ஆக்கத்திறன்
Accurate = திருத்தம்
Result oriented = மிக முக்கிய அடிப்படையை கொண்டிருக்க வேண்டும்

எழுத்தாளர்கள் பொதுவாக விடும் சில தவறுகள்

1. தேவைக்கு அதிகமாக அல்லது தேவைகளை விட குறைவாக ஆராய்தலும் தரவுகளை சேகரிப்பதும்.

2.உள்ளடக்க விடயத்தை தவறான முறையில் ஒழுங்கமைப்பது.

3. முதலாவது பிரதியை மீளாய்வு செய்ய தவறுவது.

4. மிக நீண்ட சொற்களையும் வசனங்களையும் உபயோகித்தல்.

5. எழுத்தாளர் மையக் கண்ணோட்டத்தை எடுத்துரைப்பது.

6. தவறான வாசகரை நோக்கி எழுத்தாக்கங்களைத் திசைப்படுத்துவது.

இவை தவிர இலக்கணம் மற்றும் எழுத்து நடை தொடர்பான கீழ்கண்ட தவறுகளும் ஏற்படுகின்றன.

1. அநாவசிய மிகைப்படுத்துதல்.

2. இடையறாது தொடரும் வாக்கியங்கள்.

3.அடிபட்ட சொற்றொடர்களும் அளவுக்கு மீறிப் பயன்படுத்திச் சலித்துப் போன வசனங்களும்.

4.கட்டமைப்பு இல்லாதிருத்தல்.

5.வழக்கில்லாத பண்டைய மொழிநடை.

6.குறைவுடைய முகவுரையும் முடிவுரையும்.

7.ஒரு விடயத்திலிருந்து இன்னொரு விடயத்துக்கு தாண்டும்போது காணப்படும் குறைபாடுகள்.

இலக்கணம் எழுத்து நடைகளை பற்றி அறிந்து அத்துறைச்சார்ந்த ஆக்கங்களை முடிந்தவரை படித்து பயிற்சி எடுக்க வேண்டும்.

3. எழுதுதல் செயல்முறைகள்

எழுத்தாக்கம் என்பது சிக்கலானதொரு செயல்முறையாகவே ஆரம்பத்தில் தோற்றமளிக்கும். அதற்காக ஒரு சில அடிப்படைத் திறன்களைப் பெற்றிருக்க வேண்டும். நமது எழுத்தாக்கத்தின் உள்ளடக்கம், அதன் நோக்கம்,நமது வாசகர்கள் என்பன நாம் விளங்கிக் கொண்டால், எழுத்தாக்கம் மேலும் எளிதாக்கப்பட முடியும். இவற்றுடன்,எழுதுதல் செயல்முறையை, கையாளுவதற்கு எளிதாக சிறுபடிகளாகப் பிரித்துக் கொள்வதன் மூலம் எழுத நினைக்கும்போது ஏற்படக்கூடிய விரக்தியின் அளவினைக் குறைத்துக் கொள்ளலாம். 

இப்படிகளை அடுத்த தொடரில் (இறைவன் நாடினால்) பார்ப்போம்.

7 comments:

  1. sako!
    varalaaru arumai!

    mrlum ithu nalla muyarchi vaazhthukkal!

    ReplyDelete
  2. அனைவரும் அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய
    தகவலகள் அடங்கிய அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரா அருமையான தொடர் நிச்சயமாக எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டியது. ஜெஹக்கல்லாஹ் ஹைர்.

    ReplyDelete
  4. நல்ல் தகவல்கள்.நல்ல பதிவு,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. 'CAR' எனும் சூத்திரத்தைப் பயன்படுத்தி அருமையாக கட்டுரையை தந்துள்ளீர்கள் .மகிழ்வுடன் நன்றி

    ReplyDelete
  6. இந்த தொடரின் முதல் பாகத்தை வாசிக்க இங்கே அழுத்துங்கள்
    அழுத்தி வரும் பதில்
    Sorry, the page you were looking for in this blog does not exist.

    ReplyDelete