Monday, August 13, 2012

ஆமைகள் புகுந்த வீடு விளங்கும் ஆன விளங்காது...!

ஆமவடை
ஆமைகள் புகுந்த வீடு விளங்குமா?
கல்லாமை,இல்லாமை,பொல்லாமை,இயலாமை,தீண்டாமை,பொறாமை போன்ற ஆ(மை)கள் மனங்களில் வீடுகளில் குடியிருக்கும்  வரை விளங்கவே விளங்காது.

குறிப்பாக பொறாமை புகுந்த மனதுடைவர்கள் ஒருபோதும் அமைதி அடையமாட்டார்கள். அடுத்தவர்களின் வளர்ச்சி கண்டு மனம் உடைந்து போவார்கள்.அவர்களின் வளர்ச்சியைத் தடுக்க எல்லா வகையிலும் முயல்வார்கள்.அவர்களைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்பிவிடுவார்கள். அவர்களின் உரிமைகளைப் பறிக்கவும்,உயிர்,உடமைகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தவும் முற்படுவார்கள். இவ்வாறு அடுத்தவர்களை அழிக்க முயல்கையில் தவறுக்கு மேல் தவறுகளைச் செய்துகொண்டே இருப்பார்கள். அவர்களின் நற்பெயருக்கு அவர்களே களங்கம் தேடிக் கொள்வார்கள். எனவே தான் முஹம்மது நபி (ஸல்), “நெருப்பு விறகை அழித்துவிடுவது போல் பொறாமை நற்செயல்களை அழித்து விடுகின்றது”(நூல்:அபூதாவூத்) எனக் கூறினார்கள்.

பொறாமைக்காரர்களின் தீங்கிலிருந்து இறைவனிடம் பாதுகாப்பு கோரும்படியும் (திருக்குர்ஆன் :113:5) கட்டளையிடுகிறது.

பொறாமை போன்ற கொடுமையான என்னங்கள் புகாத ஆன்மாவே வெற்றிபெறும்!

ஒரு அரபுக் கவிஞர் இப்படி பாடுகிறார்:
அவர்கள் என் இறப்பின் மீதும்
பொறமை கொள்கிறார்கள்
அடப்பாவமே!
சாகும் வரை
பொறாமையின் பிடியிலிருந்து
நான் தப்பமாட்டேன் போலும்.

மற்றொரு கவிஞர் பாடுகிறார்:
உன் அருகில் அமர்ந்திருப்பவர்களிடம்
உனது கவலையை வெளிப்படுத்தாதே
அவர்கள் பொறாமைக்காரர்கள்
உன் கண்ணீரில் குளிர்காய்பவர்கள்

இன்னும் சில ஆமைகள் இருக்கின்றன இவைகள் புகாத மனங்கள் விளங்காது.
வாய்மை,பொறுமை,நிலைகுலையாமை போன்றவை.

நல்ல காரியங்கள் செய்யும்போது அதை நோக்கி அவதூறான விமர்சனங்கள் வரும்போது பொறுமையுடன் நிலைகுலையாமல் சந்திக்காதவரை வெற்றி பெற முடியாது.

மேலை நாட்டு அறிஞர் ஒருவர் கூறுகிறார்:
“எது சரியோ அதைச் செய் பின்னர், இழிவான விமர்சனங்களுக்காக நீ திரும்பி நில்”

கவனத்தில் கொள்ளுங்கள்: உங்களைப் பற்றிய அவதூறுகளைப் படிப்பவர்களில் பாதிப் பேர் அவற்றை மறந்து விடுவார்கள். மீதிப் பேர் அவற்றை ஆர்வத்துடன் படிக்க மாட்டார்கள். மற்றவர்களைப் பொறுத்தவரை அந்த அவதூறுகளைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. காரணமும் புரியாது.

அறிஞர் ஒருவர் கூறுகிறார்:

என்னைப் பற்றியோ, உன்னை பற்றியோ நினைக்க மக்களுக்கு நேரமில்லை. அவர்கள் தமது வாழ்க்கை அத்தியாவசிய தேவைகளை தேடுவதிலேயே தீவிரமாக இருக்கிறார்கள். அவர்களில் ஒருவருக்கு தாகம் ஏற்பட்டால் போதும்; எனது இறப்பையும் மறந்து விடுவார்கள் உனது இறப்பையும் மறந்து விடுவார்கள்.

9 comments:

 1. ஸலாம் சகோதரா
  //உன் அருகில் அமர்ந்திருப்பவர்களிடம்
  உனது கவலையை வெளிப்படுத்தாதே
  அவர்கள் பொறாமைக்காரர்கள்
  உன் கண்ணீரில் குளிர்காய்பவர்கள்//
  முற்றிலும் உன்மையான வைர வரிகள்.

  ReplyDelete
 2. நல்ல பதிவு சகோ
  தெளிவான நல்ல கருத்துக்களோடு சொல்லபட்டு இருக்கிறது

  ReplyDelete
 3. சலாம் சிறந்த சிந்திக்க வைத்த பதிவு. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணே

  அருமையான பகிர்வுக்கு ஜசாக்கல்லாஹு க்ஹைர்

  //குறிப்பாக பொறாமை புகுந்த மனதுடைவர்கள் ஒருபோதும் அமைதி அடையமாட்டார்கள். அடுத்தவர்களின் வளர்ச்சி கண்டு மனம் உடைந்து போவார்கள்.அவர்களின் வளர்ச்சியைத் தடுக்க எல்லா வகையிலும் முயல்வார்கள்.அவர்களைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்பிவிடுவார்கள். அவர்களின் உரிமைகளைப் பறிக்கவும்,உயிர்,உடமைகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தவும் முற்படுவார்கள். இவ்வாறு அடுத்தவர்களை அழிக்க முயல்கையில் தவறுக்கு மேல் தவறுகளைச் செய்துகொண்டே இருப்பார்கள். அவர்களின் நற்பெயருக்கு அவர்களே களங்கம் தேடிக் கொள்வார்கள். ///உண்மையிலும் உண்மை அண்ணே..

  //எனவே தான் முஹம்மது நபி (ஸல்), “நெருப்பு விறகை அழித்துவிடுவது போல் பொறாமை நற்செயல்களை அழித்து விடுகின்றது”(நூல்:அபூதாவூத்) எனக் கூறினார்கள்./// . எக்காலத்துக்கும் பொருந்தும் நபி மொழிகள் ..! சுப்ஹானல்லாஹ்

  ReplyDelete
 5. அஸ்ஸலாமு அலைக்கும்.
  கல்லாமை,இல்லாமை,பொல்லாமை,இயலாமை,தீண்டாமை,பொறாமை போன்ற ஆ(மை)கள் மனங்களில் வீடுகளில் குடியிருக்கும் வரை விளங்கவே விளங்காது.
  ஆரம்ப வரிகளே அசத்தல்.

  ReplyDelete
 6. அழகாக சொல்லியிருக்கிங்க

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

  பழமொழியின் அர்த்தத்தை இப்போது தான் தெரிந்துக் கொண்டேன். அருமை.

  ஒரு சந்தேகம். மேலே உள்ள ஆமை வடை ஆமைல செஞ்சதா?

  :D :D :D

  ReplyDelete
 8. அருமை!..அருமை!..மிகச் சரியாகவும் தெளிவாகவும்
  சொன்னீர்கள் சகோ .எனக்கென்னமோ இந்த ஆக்கத்தை
  ஆழ்ந்து அனுபவித்து பலரது மனக் குமுறல் கேட்டு
  எங்கள் சார்பில் நீங்கள் எழுதியதாக எண்ணத் தோன்றுகின்றது .
  அவர்கள் என் இறப்பின் மீதும்
  பொறமை கொள்கிறார்கள்
  அடப்பாவமே!
  சாகும் வரை
  பொறாமையின் பிடியிலிருந்து
  நான் தப்பமாட்டேன் போலும்.

  நான் இல்லை நாம் தப்ப மாட்டோம் போலும்!!!!!...............
  வாழ்த்துக்கள் சகோ ஆக்கம் தொடரட்டும்.மிக்க
  நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete