Monday, August 6, 2012

தென்கச்சியார் சிந்தனைகள்.

வானொலியில் 'இன்று ஒரு தகவல்' மூலம் தனது கிராமிய பாணிப்பேச்சு வசீகாரத்தால் தமிழ் மக்களின் மனங்களில் இடம் பிடித்தவரும் சென்னை வானொலி நிலையத்தின் உதவி நிலைய இயக்குநருமான தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இஸ்லாமிய சிந்தனைகளில் சில.


திருக்குர்ஆன் பத்தியும் நபிகள் நாயகம் பத்தியும் வானொலியில் மக்களுக்குச் சொல்றதுக்காகவே நிறைய படிச்சேன். அதனால பரீட்சைக்குப் படிக்கிற மாதிரி எனக்கு மனப்பாடம் ஆயிடுச்சு.குர்ஆன்ல 114 அத்தியாயங்கள்,6666 வசனங்கள்! அதே போல் நபிகள் நாயகம் இந்த உலகத்துல வாழ்ந்தது 22,330 நாளகளும் ஆறு மணி நேரமும். பிறை கணக்குப்படி 63 ஆண்டுகள்.


ஒன்னு குர்ஆனைப் படிச்சுட்டு அது சொல்றபடி நடக்கணும். அது ஒரு வழி. இன்னொரு வழி,குர்ஆனைப் படிச்சுட்டு நல்ல வழியில் நடக்கறவங்களைப் பாத்துக் கத்துக்கணும். இது இரண்டுதான் சாத்தியம். குர்ஆனைப் படிக்க முடிஞ்சா படிச்சுப் புரிஞ்சுக்கலாம். அதப் படிக்க முடியலன்னா, அதப் படிச்சு நல்ல வழியில் நடப்பவர்களைப் பாத்துக் கத்துக்கணும்.

நபிகள் நாயகம் அப்படி நடந்து காட்டியவர்தானே. நபிகள் நாயகத்திடம் ஒரு பணியாளர் வேலை பாத்தாரு.அனசுன்னு பேரு.அவரு சொல்றாரு. நான் நபிகள் நாயகத்துகிட்ட பத்து வருஷம் வேல பார்த்தேன். ஒரு நாள் கூட என்னக் கடிஞ்சு ஒரு வார்த்தை கூட அவர் பேசினதில்ல.கோபப்பட்டு என்னைத் திட்டியதில்லன்னு அவரு சொல்றாரு.அதெல்லாம் பாடம் நமக்கு. அனஸ் மேலும் சொல்றாரு. நபிகள் நாயகம் மக்கள்கிட்ட எப்படி நடந்துக்குவாருன்னு நான் கவனிச்சு வந்திருக்கேன். சலாம் சொல்வதில் அவர்  முந்திக் கொள்வார். அது பெரிய பண்பு இஸ்லாத்துல. யாரைப் பார்த்தாலும் சலாம் சொல்வதில் முந்திக் கொள்ளுங்கள். அந்த பண்பை நபிகள் நாயகத்துகிட்ட பாத்தேன்னு அந்தப் பணியாள் சொல்றாரு. அதே போல யாரேனும் கையைப் புடிச்சுப் பேசினா அவரு கையை விடுவிக்கறதுக்கு முந்தி நாபிகள் நாயகம் கையை விடுவிச்சுக்க மாட்டார். இதெல்லாம் மனோதத்துவ ரீதியான, உளவியல் ரீதியான மனிதப் பண்புகள்.

இப்படியேல்லாம் மனிதன் இருந்தா உலகம் ஏன் இப்படி இருக்கு? அமைதி பூங்கவாக இருக்க வேண்டிய உலகம் ஆயுத பூங்காவாக மாறிக்கிட்டிருக்கே!

முகச் சுளிப்பால் கூட அடுத்தவருக்குக் கஷ்டம் தரக்கூடாதுன்னு நபிகள் நாயகம் சொல்லியிருக்காரு. இன்னும் ஒரு படி மேலே போய் பூண்டு சாப்பிட்டுவிட்டு தொழுகைக்குப் போகாதீங்கன்னு சொல்லியிருக்காரு-பூண்டு ஒடம்புக்கு நல்லது. ஆனாலும் அதன் மூலம் வருகிற வாசனை பக்கத்தில் நின்று தொழுபவருக்கு அசெளகரியமா இருக்கலாம். அந்த அளவுக்கு நுட்பமா நபிகள் நாயகம் வழிகாட்டியிருக்காரு.

இப்படியெல்லாம் இருந்தா அந்த மனிதன்தான் இறைவனுடைய பிரதிநிதி. இப்படிப்பட்ட உயர்ந்த பன்புகளுடன் ஒவ்வொரு மனிதனும் இறைவனின் பிரதிநிதியாய் வரணும்னுதான் இஸ்லாம் விரும்புது. அப்படி வாழ்ந்தால் உலகில் சிக்கல் இருக்காது, பிரச்சனை இருக்காது. உலகம் அமைதிப் பூங்காவாக மாறும்.


(21.2.09 அன்று சென்னையில் ‘திருக்குர்ஆன் உங்களுடையதே’ சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தென்கச்சி சுவாமிநாதனின் உரையிலிருந்து சில பகுதிகள்)

17 comments:

  1. நல்லதொரு சிந்தனை

    தென்கச்சியார் மதம் சாராத ஒரு நல்லமனிதர்
    அவரின் குரல் என்றளவும் இந்த தமிழினத்தை விட்டு மறையாது...

    நபிகள் நாயகத்தின் மேன்மைகளை அவரின் வார்த்தைகளில் அறிந்தேன்...

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. ///தென்கச்சியார் மதம் சாராத ஒரு நல்லமனிதர்
      அவரின் குரல் என்றளவும் இந்த தமிழினத்தை விட்டு மறையாது...//

      சரியாகச் சொன்னீர்கள்

      //நபிகள் நாயகத்தின் மேன்மைகளை அவரின் வார்த்தைகளில் அறிந்தேன்...///

      அறிந்து கருத்திட்டமைக்கு நன்றி

      Delete
  2. நல்ல சிந்தனை பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நல்ல சிந்தனைகளை பகிர்ந்து கொள்வோம்

      வருகைக்கு நன்றி

      Delete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்....

    நல்லோதொரு சிந்தனை...அய்யா சுவாமிநாதன் அவர்கள் நல்ல சிந்தனையாளர் ....

    செய்திக்கு நன்றிகள் ...

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம்

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  4. நல்ல சிந்தனை பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. சலாம் சகோ. நானும் தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் அந்த நிகழ்ச்சியியை தவறாமல் கேட்பதுண்டு. காலையில் பள்ளிக்கு புறப்படும் அவசரத்திலும் 'இன்று ஒரு தகவல்' கேட்டால்தான் திருப்தியாக இருக்கும் :):) நல்லதொரு சிந்தனையாளர்!

    //திருக்குர்ஆன் பத்தியும் நபிகள் நாயகம் பத்தியும் வானொலியில் மக்களுக்குச் சொல்றதுக்காகவே நிறைய படிச்சேன். //

    ஓ... அதான் விஷயமா?! அவரின் தகவல்களில் பெரும்பாலும் நபி(ஸல்) அவர்களின் ஹதீஸை ஒத்து சொல்வது போலவே இருக்கும். இதுபற்றி நாங்கள் வீட்டிலும் பேசிக் கொள்வதுண்டு, 'இவர் ஹதீஸ்களைப் படித்திருப்பாரோ' என. நல்ல பகிர்வுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும்... இனிய வார்த்தைகள் மூலமாக தென்கச்சியார் கூறிய இஸ்லாமிய சிந்தனைகளை வழங்கியமைக்கு நன்றி.

    ReplyDelete
  7. salam
    sako!

    nalla pkirvukku nantri!

    ReplyDelete
  8. மிக அற்புதமான விஷயம் ....குர் ஆன்,ஹதீஸை படித்துவிட்டு பேசியுள்ளார் ...
    இறைவா தென்கட்சியாருக்கு நேர்வழி காட்டுவாயாக ....

    ReplyDelete
  9. அருமையான பகிர்வு! வலைச்சரம் மூலம் முதல் வருகை! தொடர்கிறேன்!, நன்றி!
    இன்று என் தளத்தில்
    அஷ்டமி நாயகன் பைரவர்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html

    ReplyDelete
  10. வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை…

    சிறப்பான பகிர்வு...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete