2002 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் இந்தியாவின் புகழுக்குத் தீராத களங்கம் விளைந்த ஆண்டு. எந்த முகத்தை வைத்துக் கொண்டு இனி வெளிநாடுகளுக்குச் செல்வேன் என பாரதப் பிரதமரே கவலைப்பட்ட ஆண்டு அது.
தொழில் ரீதியாக பார்த்தால் மாயா ஒரு மகப்பேறு மருத்துவர் ஆவார். அவர் ஒரு பெண்; பல பெண்களுக்குப் பிரசவம் பார்த்தவர் எனும் நிலையில் அவரிடமிருந்து பூவினும் மெல்லிய மென்மையை நாடு எதிர்பார்த்தது. ஆனால் பாசிச எண்ணங்களும் வகுப்புவாத வெறி உணர்வும் அவரைக் கர்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்து சிசுக்களை வெளியே தூக்கி வீசுகின்ற ஈவு இரக்கமற்ற கொடுங்கோலர்களுக்குத் தலைமை தாங்குகின்ற சூத்திரதாரியாக மாற்றி விட்டன.
இன்று இவர் தப்பிக்க முயற்சித்து நடத்திய நாடங்கங்களும், அனைத்து சட்ட ஓட்டைகளும் அடைபட "மாயா கோட்னானி"க்கு ஒட்டு மொத்தமாக 28 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பஜ்ரங்தள் அமைப்பின் தலைவன் "பாபு பஜ்ரங்கி"க்கு சாகும் வரை சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்தப் பயங்கர சூழலிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சமரசமின்றி போராடிய நடுநிலைவாதிகள், ’ஜனசஙகர்ஷ் மன்ச்’ அமைப்பினர், தீஸ்டா செடல்வாட், மல்லிகா சாராபாய், போன்ற வீரமங்கைகளும் நீதி வழங்குவதில் எச்சரிக்கை உணர்வுடன் திகழுகின்ற நீதிபரிபாலனமும் நமக்கு தருகின்ற ஆறுதலும் நிவாரணமும் சாதாரணமானதன்று.
கோத்ரா கலவரத்தைத் தொடர்ந்து நடைபெற்ற குஜராத் இனப்படுகொலையை இந்தியா ஒளிர்கிறது; VIBRANT GUJARAT என என்னதான் வளர்ச்சித் திட்டங்களைக் காட்டி, வாய்மாலம் பேசி மறைக்க முயன்றாலும் அது என்றுமே மறைந்து போகாத பாவக் கறை படிந்த சோக வரலாறு என்பது தெளிவாகிக் கொண்டே இருக்கின்றது.
இந்த இனப்படுகொலைக்குத் தலைமை தாங்கி, முன்பு தலைமறைவாகிவிட்ட முக்கியக் குற்றவாளிகளான குஜராத் அரசின் குழந்தைகள், பெண்கள் நலத்துறை அமைச்சர் மாயாபென் கோட்னானி, விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் ஜெய்தீப் பட்டேல் ஆகியோர் சிறப்பு விசாரணைக் குழுவிடம் சரணைடைந்து இதற்கான ஆதாரம். குஜராத் கலவரம் என்பது ஓர் எதிர்வினையன்று. குஜராத் அரசு திட்டமிட்டு நடத்திய இனப்படுகொலை என்பது இந்த நிகழ்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது.
இந்தியாவின் அன்மைக்கால வரலாற்றில் மிகக் கொடூரமானன் முறையில் நடத்தப்பட்ட இந்த இனப்படுகொலை அரசு பயங்கரவாதத்திற்கு ஒரு வலுவான ஆதாரம். 2002 இல் நரோதாபாட்டியா,நரோதாகாம் ஆகிய இடங்களில் நடைபெற்ற கலவரத்தில் 106 பேர்
கொல்லப்பட்டனர். இந்த இனப்படுகொலையில்,அன்று சட்டமன்ற உறுப்பினராக இருந்த மாயாபென் கோட்னானிக்கு நேரடித் தொடர்பு உள்ளது என சாட்சிகள் தெரிவித்திருந்தும்கூட மாநிலக் காவல் துறை இவர்களை வேண்டுமென்றே குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தது. மாயாவைப் பாதுகாக்க அனைத்துவிதமான உதவிகளையும் நரேந்திர மோடி அரசு செய்து கொடுத்தது. அதுமட்டுமல்ல அதற்குப் பின்னர் நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தும் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டும் மாயாவின் தண்ணிகரற்ற ’சேவைகளுக்கு’ மதிப்பளித்தார் நரேந்திர மோடி.
எந்தவிதமான விசாரணையையும் மேற்கொள்ளாமல் மாயாவுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்ற தன்னிச்சையான முடிவுக்கு வந்தது குஜராத் மாநிலக் காவல் துறை. நரோதாபாட்டியாவில் வன்முறை நடைபெற்றபோது அங்கு மாயா காரில் வந்து இறங்கினார். கூரிய வாள்கள்,தாடி போன்ற பயங்கர ஆயுதங்களை விநியோகித்தார். பெண்கள், குழந்தைகள் உள்பட சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரை நெருப்பிலிட்டுக் கொல்ல வன்முறை வெறி பிடித்த கயவர் கூட்டத்துக்குக் கட்டளை பிறப்பித்தார். இதனை நேரில் பார்த்த சாட்சிகளின் வாக்குமூலங்கள் இருந்தும் கூட காவல் துறை அதனைப் பொருட்படுத்தவே இல்லை. ஏராளமான பெண்களை மானபங்கப்படுத்திய பிறகே தீயிலிட்டுக் கொளுத்தினார்.
எந்தவிதமான விசாரணையையும் மேற்கொள்ளாமல் மாயாவுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்ற தன்னிச்சையான முடிவுக்கு வந்தது குஜராத் மாநிலக் காவல் துறை. நரோதாபாட்டியாவில் வன்முறை நடைபெற்றபோது அங்கு மாயா காரில் வந்து இறங்கினார். கூரிய வாள்கள்,தாடி போன்ற பயங்கர ஆயுதங்களை விநியோகித்தார். பெண்கள், குழந்தைகள் உள்பட சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரை நெருப்பிலிட்டுக் கொல்ல வன்முறை வெறி பிடித்த கயவர் கூட்டத்துக்குக் கட்டளை பிறப்பித்தார். இதனை நேரில் பார்த்த சாட்சிகளின் வாக்குமூலங்கள் இருந்தும் கூட காவல் துறை அதனைப் பொருட்படுத்தவே இல்லை. ஏராளமான பெண்களை மானபங்கப்படுத்திய பிறகே தீயிலிட்டுக் கொளுத்தினார்.
உச்ச நீதிமனறம் இதில் தலையிட்டு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த பிறகுதான் இந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வரத் துவங்கின. குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடும் ’ஜன சங்கர்ஷ் மன்ச்’ எனும் அமைப்பு, சிறப்பு விசாரணைக் குழுவிடம் அளித்த ஆதாரங்கள் மாயாவுக்கு எதிரான வலுவான ஆதாரமாகத் திகழ்ந்தது. முன்னாள் குற்றப் புலானாய்வுத்துறை அதிகாரி ராகுல் சர்மா சேகரித்த இரண்டு செல்பேசி நிறுவனங்களின் அறிக்கைகளை ஆதாரமாக்கி, ஜன சங்கர்ஷ் மன்ச்சின் வழக்குரைஞர் முகுல் சர்மா சிறப்பு விசாரணைக் குழுவிடம் அளித்த ஆதாரங்களின் முலம், சம்பவம் நடைபெற்றபோது நான் காந்தி நகரில் இருந்தேன் என்ற மாயாவின் வாக்குமூலம் பொய்யானது.
முன்பு மாயாபென் கோட்னானிக்கும் ஜெய்தீப் பட்டேலுக்கும் சிறப்பு விசாரணைக் குழு நேரில் வரும்படி அறிவிக்கை அனுப்பியும்கூட அவர்கள் நேரில் வராமல் தலைமறைவானார்கள். இதனை தொடர்ந்து அவர்கள் தேடப்படும் தலைமறைவுக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். நரேந்திர மோடி தலைமையிலான மாநில அரசில் அமைச்சராக உள்ள ஒருவர் மாநிலத்தில் எங்கு பதுங்கி உள்ளார் என்பது கூட ஓர் அரசுக்குத் தெரியமலா இருக்கும்? ஒரு போதும் இல்லை. அவர்கள் அரசின் பாதுகாப்பில்தான் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் முன் பிணை கேட்டு அஹமதாபத் செஷன்ஸ் நீதிமன்றத்தை அவர்கள் அணுக வேண்டிய கட்டாயம் வந்தது.
சிறப்பு விசாரணைக் குழுவின் நேர்மையான விசாரணைக்கு எந்தவிதத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடாது எனும் நிபந்தனையுடன் அஹமதாபத் செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த முன் பிணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்த காரணத்தால் வேறு எந்த வழியும் இல்லை என்ற நிலையில்தான் அவர்கள் சரணடைந்தார்கள் என்பது தெளிவு. தலைமறைவாக இருந்த காலம் முழுவதும் அவர்கள் மோடியின் அமைச்சரவையில் தொடர்ந்து இடம் பெற்று வந்தனர். தாமாகப் பதவி விலகவும் இல்லை; குற்றம் சாட்டப்பட்டவர்களை அமைச்சரவையில் இருந்து நீக்க நரேந்திர மோடியும் நடவடிக்கை எடுக்கவில்லை. செஷன்ஸ் நீதிமனறம் வழங்கிய முன் பிணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்த பின்னர்தான் அமைச்சரவையிலிருந்து அவர்கள் விலகினர்.
குஜராத் இனப்படுகொலை குறித்த விசாரணைகலை திசை திருப்பும் நடவடிக்கைகளை மட்டுமே மோடி அரசு தொடர்ந்து செய்து கொண்டிருந்தது. ஜன சங்கர்ஷ் மன்ச் சிறப்பு விசாரணைக் குழுவிடம் அளித்த அதே ஆவணங்களைத்தான் குஜராத் அரசி நியமித்த நானாவதி - கே.ஜி.ஷா - அக்ஷய் மேத்தா விசாரணை ஆணையத்திடமும் அளித்திருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஆவணங்களை கணக்கில் கொள்ளாமல் மோடி அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது நானாவதி குழு.
அக்ஷய் மேத்தா குஜராத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தபோது, நரோதாபாட்டியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு எந்தவித ஆதாரங்களையும் ஆவ்ணங்களையும் பார்க்காமலேயே பிணை வழங்கினார் என்று குற்றம் சாட்டப்பட்டவர்.இதனைத் தெஹல்கா புலனாய்வுக் குழு நடத்திய இரகசிய விசாரனையின்போது முக்கியக் குற்றவாளியான பாபு பஜ்ரங்கியே ஒப்புக் கொண்டுள்ளார். நீதிபதி ஷா மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட காலி இடத்துக்கு மாநில அரசு மேத்தாவை நியமித்தபோது இவர் அரசுக்குச் சாதகமானவர்; ஒருதலைப்பட்சமானவர்; இவரிடம் நீதி கிடைக்காது; வேறு ஒரு நடுநிலையான நீதிபதியை நியமிக்க வேண்டும் எனக்கூறி இதனை ஜனசங்கர்ஷ் மன்ச் எதிர்த்தது. ஜனசங்கர்ஷ் மன்ச் பரிந்துரைத்த ஒருவரைக்கூட நீதிபதியாக நியமிக்க மோடி அரசு ஒத்துக் கொள்ளவில்லை.
தொழில் ரீதியாக பார்த்தால் மாயா ஒரு மகப்பேறு மருத்துவர் ஆவார். அவர் ஒரு பெண்; பல பெண்களுக்குப் பிரசவம் பார்த்தவர் எனும் நிலையில் அவரிடமிருந்து பூவினும் மெல்லிய மென்மையை நாடு எதிர்பார்த்தது. ஆனால் பாசிச எண்ணங்களும் வகுப்புவாத வெறி உணர்வும் அவரைக் கர்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்து சிசுக்களை வெளியே தூக்கி வீசுகின்ற ஈவு இரக்கமற்ற கொடுங்கோலர்களுக்குத் தலைமை தாங்குகின்ற சூத்திரதாரியாக மாற்றி விட்டன.
இன்று இவர் தப்பிக்க முயற்சித்து நடத்திய நாடங்கங்களும், அனைத்து சட்ட ஓட்டைகளும் அடைபட "மாயா கோட்னானி"க்கு ஒட்டு மொத்தமாக 28 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பஜ்ரங்தள் அமைப்பின் தலைவன் "பாபு பஜ்ரங்கி"க்கு சாகும் வரை சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்தப் பயங்கர சூழலிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சமரசமின்றி போராடிய நடுநிலைவாதிகள், ’ஜனசஙகர்ஷ் மன்ச்’ அமைப்பினர், தீஸ்டா செடல்வாட், மல்லிகா சாராபாய், போன்ற வீரமங்கைகளும் நீதி வழங்குவதில் எச்சரிக்கை உணர்வுடன் திகழுகின்ற நீதிபரிபாலனமும் நமக்கு தருகின்ற ஆறுதலும் நிவாரணமும் சாதாரணமானதன்று.
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஅன்பின் சகோ ஹைதர் அலி பாய்,
இத்தகைய தீர்ப்புகளை கொடுக்க வைத்த ஏக இறைவனுக்கு நம்முடைய முதல் நன்றி. மேலும் இந்த அயோக்கியர்களுக்கு எதிராக சமரசமின்றி போராடிய
டீஸ்டா செதல்வாட், மல்லிகா சாராபாய் போன்ற தனிமனிதர்களும் ஜனசங்கர் மன்ஸ் போன்ற அமைப்புகளும் தான். எனவே இவர்களும் நமது நன்றிகளுக்கும் பாராட்டுகளுக்கும் உரியவர்கள். அதிகாரத்தில் இருந்து கொண்டு மோடியின் ஆட்சி எப்படியெல்லாம் இந்த விசாரனைக்கெதிராக செயல்பட்டது என்பதையும் சில சமயம் நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளானதையும் சில ஆங்கில ஊடகங்கள் மட்டுமே நமக்கு அறிய தந்தது. எனவே அந்த ஊடகங்களுக்கும் நமது நன்றியை தெரிவித்து கொள்வோம்.
ReplyDeleteசில ஆண்டுகள் போராடிவிட்டே அலுப்பு தட்டி விடும் நபர்கள் டீஸ்டா செதல்வாட்டை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனில் மோடியின் அரசு அவரை பாடாய் படுத்திய போதும் நீதிக்கான பயணத்தில் அவர் உறுதியாகவும், இம்மாதிரியான வழக்குகளில் பாதிக்கப்பட்ட மக்களை சாட்சி கூண்டில் ஏற்றுவதற்கு பக்கபலமாகவும் இருந்து வருகிறார். இன்னும் குஜராத் இனப்படுகொலை சம்பந்தப்பட்ட பல்வேறு வழக்குகளை கவனித்து கொண்டிருக்கிறார். அந்த வழக்குகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க பத்து வருடங்களுக்கும் மேலாக போராடி கொண்டிருக்கிறார்.
இந்த தீர்ப்பு ஆரம்பமாகவே இருக்க வேண்டும். ஏனெனில் இனப்படுகொலையின் ஏவலாளிகள் மட்டுமே இப்போது தண்டனைக்கு ஆளாகியிருக்கிறார்கள். இனப்படுகொலை செய்த நவீன ஹிட்லர் "நரேந்திர மோடி" இன்னும் பாதுகாப்பான நிலையில் தான் இருக்கிறார். அவர் தண்டனை பெரும் நாள் தான் நீதித்துறை இன்னும் செயல்படுகிறது என்பதை அறிவிக்கும் நாள். அந்த நாள் வருவதற்கு நாம் இருகரம் ஏந்தி இறைவனிடம் பிரார்த்திப்போம்.
ReplyDeleteநீதி வென்றது. இன்னும் இதன் மூலமாக செயல்பட்ட மேலும் பெரிய தலைகளுக்கும் இது போன்ற தண்டனையை கொடுக்க வேண்டும். ஆட்சியை விட்டு இறங்கியவுடன் ஒருக்கால் நிறைவேற்றப்படலாம்.
ReplyDeleteஸலாம் சகோ.ஹைதர் அலி...
ReplyDelete'கோத்ராவில் ரயில்பெட்டி எரிந்தது ஒரு விபத்து' என்று விசாணை கமிஷன் அறிக்கை கூறுகிறது. இருந்தும், கோர்ட்... 11 பேருக்கு... குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த விபத்து நடந்த அந்நேரத்தில் கோத்ராவில்தான் உயிர் வாழ்ந்தவர்கள் என்று 'சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில்' தெரிந்ததால்... தூக்குத்தண்டனை அளிக்கிறது..!
ஆனால்... மோடி உட்பட எவனும் இதுவரை 'குஜராத் இனப்படுகொலை ஒரு விபத்து' என்று கூறியது இல்லை..! கொலை செய்வதவர்கள் தாங்கள்தான் செய்தோம் என்று கூறி இருந்தும் கூட... இதுவரை எந்த ஒரு ஹிந்துத்துவா பயங்கரவாத கொலையாளிக்கும் தூக்குத்தண்டனை தரப்படவில்லை.
தங்கள் குடும்ப உறுப்பினர்களை பறிகொடுத்து பாதிக்கபட்ட குஜராத் முஸ்லிம்களின் சார்பாக நான் கேட்கும் எனது நீண்ட நாள் துவா:-
"மோடிக்கும் மற்ற குஜராத் இனப்படுகொலை மதவெறி கொலையாளிகளுக்கும்... எனது நாட்டின் நிதிமன்றத்தினரை விரைவில் தூக்குத்தண்டனை தர வைப்பாயாக, யா அல்லாஹ்.." என்பதே..!
மற்றபடி ஆயுள்தண்டனை எல்லாம் 'ஏதோ... வந்த வரை சரி' என்றுதான் மனதை தேற்றிக்கொள்கிறேன்..! :-((
சகோ.சுவனப்பிரியன்.....
ReplyDelete//நீதி வென்றது.//-----வெல்லவேல்லாம் இல்லை...சகோ..!
"சிறுபான்மையினரை கொன்ற பெரும்பாண்மை சமூகத்து கொலையாளிகள் என்ற பாச வெள்ளம் தான் இறுதியில் வென்றது"...!
'கொலையால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர் மனநிலையில் பார்த்தால்... கொலையாளிக்கு மரண தண்டனை அவசியமே... அவசியமே...' என்றுதான் மனது இன்னும் சொல்கிறது.
"பெரும்பாண்மையினக்கு ஒரு நீதி சிறுபான்மையினருக்கு ஒரு நீதி" என்று தீர்ப்புகளில் இருப்பதை நீங்கள் கவகிக்க வில்லையா சகோ..?
உதாரணம்....
'கோத்ரா ரயில் பெட்டி தீ' - ஒரு விபத்து என்று ஒரு விசாரணை கமிஷன் சொன்னாலும், 11 பேருக்கு... 'அவர்கள் கோத்ராவில் அப்போது இருந்தார்கள் எனபது நிரூபணம் ஆனதால்...' (!) தூக்குத்தண்டனை வழங்குகிறது கோர்ட்.
அப்சல் குருவுக்கு எதிராக எந்த ஒரு சாட்சியமும் ஆதாரமும் இல்லாவிட்டாலும், 'தேசத்தின் மனசாட்சியின் திருப்திக்காக' என்று சொல்லித்தான் தூக்குத்தண்டனை வழங்கியது.
இதே அளவுகோல்தான்... அதாவது 'தேசத்தின் மனசாட்சியை திருப்திப்படுத்தும் எண்ணத்தில் தான்...' குஜராத் இனப்படுகொலை கொலையாளிகளுக்கு அவர்கள் பெரும்பாண்மை சமூகத்தவர் என்பதால்... அவர்கள் கொன்றது சிறுபான்மை சமூகத்தவர்கள் என்பதால்... தூக்குத்தண்டனை அளிக்கப்படுவதில்லை..!
எனவே...
தாவூத் இபராஹிம்களுக்கும்... அப்சல்களுக்கும்... கசாபுகளுக்கும்... தூக்குத்தண்டனை தரப்படுமேயானால்... மோடிகளுக்கும்... அத்வாநிகளுக்கும்... தாக்கரேக்களுக்கும்... அதே தண்டனை தரப்பட்டே ஆகவேண்டும் என்ற பார்வையே 'நீதி'யாக இருக்க முடியும்..!
pakirvukku nantri!
ReplyDeleteசலாம் சகோ...
ReplyDeleteஇவரை போன்றவர்களுக்கு கிடைத்த இந்த தண்டனைகள் திருப்தி தராவிட்டாலும் இதாவது கிடைத்ததே என ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியதுதான்...
குஜராத் இனப்படுகொலை தொடர்பான செய்திகள் வரும் போது பெரும்பாலான ஊடகங்கள் "கோத்ரா இரயில் எரிப்பை தொடர்ந்து" என்ற ஒரு வாசகத்தை கெட்டியாக பிடித்து கொண்டிருக்கின்றன. அதாவது கோத்ரா இரயில் எரிப்பை முஸ்லிம்கள் செய்தார்கள் என்ற அரசின் வாதம் அங்கே நிலைபெற வேண்டும். அதன் எதிர்வினை தான் குஜராத் இனப்படுகொலை என்று சொல்லாமல் சொல்லுகின்றன. ஆனால் கோத்ரா இரயில் எரிப்பு தொடர்பான இரயில்வே துறை நியமித்த பானர்ஜி கமிஷன் என்ன சொல்லியது என்பதை (மத்திய அரசு நியமித்த கமிஷன் அது) ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன. அது ஒரு விபத்து என்றே பானர்ஜி கமிஷன் சொல்லுகிறது. இரயில் பெட்டியில் தீ உள்ளிருந்து தான் பரவியது என்று அறிவியல்பூர்வமாக பானர்ஜி கமிஷன் நிருபித்த பின்னரும் கோத்ரா இரயில் எரிப்பு முஸ்லிம்களால் தான் நடத்தப்பட்டது என்று கூறி தங்களுடைய இந்துத்துவ பற்றை ஊடகங்கள் காட்டுவது நடுநிலைக்கு அழகல்ல.
ReplyDeleteகோத்ரா இரயில் எரிப்பு முஸ்லிம்களால் தான் நடத்தப்பட்டது என்றால் செட்டப் சாட்சிகளை ஏற்படுத்த வேண்டிய தேவை இல்லையே. ஆனால் இரயிலை எரிக்க எங்கள் பெட்ரோல் பங்கில் தான் பெட்ரோல் வாங்கினார்கள் என்று பெட்ரோல் பங் ஊழியர்கள் ரஞ்சித் சிங் படேல் மற்றும் பிரபாத் சிங் படேல் ஆகிய இருவரை நோயல் பார்மர் என்ற அதிகாரி பொய் சாட்சியம் சொல்ல வைத்தது ஏன்? அப்படி பொய் சாட்சியம் சொன்னதற்கு 50 ஆயிரம் ரூபாய் எதற்காக ரஞ்சித் சிங்கிற்கு கொடுக்க வேண்டும். இந்த செய்தியை தெஹல்கா வீடியோவில் ரஞ்சித் சிங் சொன்னது நம் கையில் இருக்கும் போதே கோத்ரா இரயில் எரிப்பை முஸ்லிம்கள் தான் நடத்தினார்கள் என்பது எவ்வளவு அயோக்கியத்தனம்.
ReplyDeleteபாபு பஜ்ரங்கி ஒரு மனித குல விரோதி. இப்போது தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ள அஜ்மல் கசாப்புக்கு கொஞ்சம் கூட சளைத்தவனல்ல இந்த மனித மிருகம். இருவரும் அப்பாவிகளை கொன்று குவித்தவர்கள் என்ற நிலையில் சமமானவர்கள் என்றாலும் முஸ்லிம்கள் கொல்லப்படுவதை ரசித்து அனுபவித்து அவர்கள் துடிதுடித்து செத்து மடிவதை சந்தோசமாக பார்த்தது மட்டுமின்றி அதனை தெகல்கா நிருபரின் விடியோ முன் பெருமிதப்பட்டான். இவன் இப்படி முஸ்லிம்களை துடிக்க விட்டு கொல்லப்படுவதை ரசிக்குமளவிற்கு இவனை உருவாக்கியது "ஹிந்துத்துவ பயங்கரவாதம்". மனித குல விரோதிகளை பாசறைகளில் வளர்த்து வரும் இந்து வகுப்புவாத இயக்கங்களை வெளிச்சத்திற்கு எந்த ஊடகங்களும் கொண்டு வர தயாரில்லை.
ReplyDelete“அவர்களை(முஸ்லிம்களை) நாங்கள் விரட்டிச் சென்று ஒரு குழியில் தள்ளினோம். அவர்கள்அஞ்சி நடுங்கி ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டனர். முந்தையதினம் சேகரித்த பெட்ரோலையும், டீசலையும் அவர்கள் மீது ஊற்றினோம். பின்னர் டயர்களை தீவைத்து அவர்கள் மீது வீசினோம்”- இரத்தத்தை உறைய வைக்கும் இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரன் தாம் பாபு பஜ்ரங்கி.
பாபு பஜ்ரங்கியின் கொள்கைகள்??
இந்த நாட்டில் முஸ்லிம்களைக் கொல்ல மத்தியரசே உத்தரவிடவேண்டும். அவர்களை கொல்ல, உயர் ஜாதி இந்துக்கள் வீதிக்கு வர தேவையில்லை. பழங்குடி மற்றும் தாழ்த்தபட்ட மக்களிடம், முஸ்லிம்களை கொன்று அவர்களின் சொத்துக்களை சூறையாடிக்கொள்ளுங்கள் என்று சொன்னால் போதுமாம், முஸ்லிம்கள் அனைவரும் மூன்று நாட்களில் இந்தியாவிலிருந்து துடைத்தெறியப்படுவார்களாம். கவுசர் பானு என்ற கர்ப்பினியின் வயிற்றைக் கிழித்து அந்த சிசுவை சூலாயுதத்தால் குத்தி தீயிலிட்டு பொசுக்கியவn இவன் தான். இதனையும் அந்த விடியோ முன் பெருமையாக சொன்னவன் "இன்னொரு வாய்ப்பை மோடி சாப் கொடுத்தாலும் சந்தோஷமாக அவர்களை (முஸ்லிம்களை) கொல்வேன்" என்றான். இந்த காட்சியை நேரில் கண்ட, கவுசர் பானுவின் கணவர் பித்து பிடித்தவர் போலானார். கடந்த வருடங்களில் நடை பிணமாக வாழ்ந்த அவருக்கு பாபு பஜ்ரங்கிக்கு எதிரான இந்த தீர்ப்பு பெரிய சந்தோசத்தை கொடுத்திருக்க வேண்டும். அவர் அழுததை பார்த்தவர்கள் எல்லாம் தங்களது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்கள் கசிந்தனர்.
கசாப்பிற்கு எதிராக எழுதியவர்களின் அத்தனை பேனாக்களும் பாபு பஜ்ரங்கியின் மிருகதனத்தை வெளிக்காட்டாமல் நடுநிலை வேஷம் போட்டனர். இந்த தீர்ப்பு வெளிவந்த நாட்களில் தான், நரமாமிச மோடி சொன்னான், " குஜராத் முஸ்லிம் இன படுகொலைகளுக்கு மன்னிப்பு கேட்க தேவையில்லை". அவன் தவறேதும் செய்யலையாம், செய்யாத தவறுக்கு மன்னிப்பை எப்படி எதிர்ப்பார்க்க முடியும்? அப்படி தவறு செய்திருந்தால் எப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க முடியும்? என்கிறான்.
ஒரிஸ்ஸாவில் காவிமயமான பள்ளிக்கூடங்களில் கூட முஸ்லிம்களை வெறுப்பதை பாடப்புத்தகங்களில் பாடமாக வைத்திருக்கிறார்கள். அப்பட்டமான முஸ்லிம் வெறுப்பு என்பதை இந்த சங்பரிவார் பயங்கரவாதிகள் எப்படியெல்லாம் விதைக்கிறார்கள் என்று பார்ப்போம். ஒரு முஸ்லிம் தனது வாழ்நாளில் ஏழு மாடுகளை உண்கிறானாம். ஒரு முஸ்லிமை கொன்றால் எத்தனை மாடுகளை காப்பாற்ற முடியும் என்று கணிதப்பாடத்தில் கேள்வி வருகிறது. வெறுப்பை எங்கே விதைக்கிறார்கள் பாருங்கள். இங்கு முஸ்லிம்களுக்கு எதிராக பெரிய சதிவலை எல்லா வகையிலும் பின்னி வருகிறது காவி பயங்கரவாதம், அதில் வெற்றியும் பெற்று வருகிறது. இந்துத்துவ பயங்கரவாதத்தை ஊடகங்கள் வெளிக்கொணருவார்கள் என்று எதிர்பார்ப்பது அவநம்பிக்கையாக போய்விடுமோ என்ற அச்சம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. முஸ்லிம்களே... உங்கள் எழுதுகோலை உயர்த்தி இந்துத்துவ பயங்கரவாதத்தை தோலுரித்துக் காட்ட உங்களது எழுத்து திறமையை பயன்படுத்திக்கொள்ளுங்கள். தீஸ்டா வுக்கு இந்திய முஸ்லிம் சமூகம் கடமைபட்டிருக்கிறது. சகோதரி.. உங்களின் போராட்ட குணத்திற்கும் நேர்மைக்கும் நன்றி.
சகோ.உதயம்,
Delete//ஒரிஸ்ஸாவில் காவிமயமான பள்ளிக்கூடங்களில்....ஒரு முஸ்லிமை கொன்றால் எத்தனை மாடுகளை காப்பாற்ற முடியும் என்று கணிதப்பாடத்தில் கேள்வி வருகிறது.....//---எனக்காக இதற்கான ஆதார சுட்டிகள் தந்துதவ இயலுமா சகோ..? இறைநாடினால், அதை வைத்து இதை ஒரு பதிவாக போட எண்ணம் உள்ளது.
//இந்தப் பயங்கர சூழலிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சமரசமின்றி போராடிய நடுநிலைவாதிகள், ’ஜனசஙகர்ஷ் மன்ச்’ அமைப்பினர், தீஸ்டா செடல்வாட், மல்லிகா சாராபாய், போன்ற வீரமங்கைகளும் நீதி வழங்குவதில் எச்சரிக்கை உணர்வுடன் திகழுகின்ற நீதிபரிபாலனமும் நமக்கு தருகின்ற ஆறுதலும் நிவாரணமும் சாதாரணமானதன்று..// இவர்களைபோல் இன்னும் சில நல்லுள்ளங்கள் இருப்பதினால் தான் கொஞ்சம் நெஞ்ச மழை பொழிகிறாது. இவர்களுக்கு எனது பாரட்டுக்கள்.
ReplyDeleteஅரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.....என்றுதான் சொல்ல வேண்டும்.. :(
ReplyDelete//'கோத்ரா ரயில் பெட்டி தீ' - ஒரு விபத்து என்று ஒரு விசாரணை கமிஷன் சொன்னாலும், 11 பேருக்கு... 'அவர்கள் கோத்ராவில் அப்போது இருந்தார்கள் எனபது நிரூபணம் ஆனதால்...' (!) தூக்குத்தண்டனை வழங்குகிறது கோர்ட். //
ReplyDeleteஇவர் 1948ல் அரம்பித்து விட்டார்கள். கோட்ஸே என்ற திவிராவதி இஸ்மாயில் என்ற பெரை கையில் பச்சை குத்தி சுன்னாத் செய்து கொண்டு காந்தியை கொன்று முஸ்லீம்கள் மேல் மேல் பழியை சுமத்தி ஆதயாம் அடையந்தாது. இதை கண்டுபிடிப்பாதுக்குள் ஏறாலமான முஸ்லீம்களை கொன்று வீட்டார்கள்.
இதே போல் தான் கோத்தரா ரயில் எறித்து முஸ்லீம்கள் மேல் பழியை சுமத்தி 4000 பேர்களை கொன்றாது.
இதே போல் திட்டம் போட்டு செய்து மாட்டிக்கொண்டார்கள். ஆனாலும் சில ஆதாயம் அடைந்து விட்டார்கள்.
முஸ்லீம் பள்ளிவாசல்களில் குண்டு வெடிக்க செய்து முஸ்லீம்களை கைது செய்து வருஷக்கணக்கில் ஜெயிலில் அடைத்து பிறகு நிராபராதி என்று வெளியே விடுவாது. இதன் மூலம் 5 குடும்பத்தை நாசமக்குவாது மற்றும் சமூகத்தில் முஸ்லீம்களின் பெயர்களை சேதமடைந்த செய்வாது.
மங்களுரில் பாக்கிஷ்தான் கொடி ஏற்றி முஸ்லீம்கள் மேல் பழியை சுமத்தி ஆதயாம் அடைய பார்த்தாது.
மட்டுகறியை கோவில்களில் விசி முஸ்லீம்கள் மேல் பழியை சுமத்தி ஆதயாம் அடைய பார்த்தாது.
இவர்களின் பட்டியல் இப்படியே நீண்டு கொண்டே செல்லும்
//தொழில் ரீதியாக பார்த்தால் மாயா ஒரு மகப்பேறு மருத்துவர் ஆவார். அவர் ஒரு பெண்; பல பெண்களுக்குப் பிரசவம் பார்த்தவர் எனும் நிலையில் அவரிடமிருந்து பூவினும் மெல்லிய மென்மையை நாடு எதிர்பார்த்தது. ஆனால் பாசிச எண்ணங்களும் வகுப்புவாத வெறி உணர்வும் அவரைக் கர்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்து சிசுக்களை வெளியே தூக்கி வீசுகின்ற ஈவு இரக்கமற்ற கொடுங்கோலர்களுக்குத் தலைமை தாங்குகின்ற சூத்திரதாரியாக மாற்றி விட்டன..//
ReplyDeleteஅடுத்தவார் மீது பழியை சுமத்தி ஆதயாம் அடைந்தவார் கண்டிப்பாக பலன் எதிர்பார்க்க வேண்டியது காலம் நெருங்கிவிட்டாது.
குறித்து வைத்துக்கொள்ளுங்கள் (சகாஹ) என்ற பெயரில் பிஞ்சு உள்ளத்தில் நஞ்சை விதைதவர்கள் கண்டிப்பாக ஆறுவடைக்கலாம் நெருங்கிவிட்டாது. இந்த சகாஹ கலந்து கொண்ட 2 சதவீதம் பேர் இவர்களகாக திருந்தினால் தப்பித்துக்கொள்ளலாம். இல்லை என்றால் மூலை சலவை செய்யப்பட்ட அந்த குழந்தை வளர்ந்து பெரியவான ஆனாதும் அந்த நஞ்சின் மூலம் அவார்கள் ஏற்பாடும் பாதிப்புக்கள் கிழே.
எப்பொழுதும் வன்முறை என்று சிந்தித்து குடும்பத்தில் நிம்மதி இழந்தவனாவோ அல்லது
மனஅளுத்ததின் கரானமாக புத்திபேதலித்தானவோ அல்லது
அவன் கொடுரமான குணம் கொண்ட மனிதனாவோ அல்லது
நான் பார்த்தரை இந்த மேன்டாடியில் உள்ளவார்கள் கடைசிக்கு பொறமைகாரனவோ தான் இருப்பான்.
சகோ. முஹம்மத் ஆஷிக்
ReplyDelete//தாவூத் இபராஹிம்களுக்கும்... அப்சல்களுக்கும்... கசாபுகளுக்கும்... தூக்குத்தண்டனை தரப்படுமேயானால்... மோடிகளுக்கும்... அத்வாநிகளுக்கும்... தாக்கரேக்களுக்கும்... அதே தண்டனை தரப்பட்டே ஆகவேண்டும் என்ற பார்வையே 'நீதி'யாக இருக்க முடியும்..!//
நீங்கள் சொல்லுவதுபோல் நடந்தால் உலக வருசையில் நீதித்தேவதை முதல் பத்துயில் இருக்கும். இப்பொழுது இந்த தீர்ப்பினால் மீயான்மரை கடந்துள்ளது. இன்னும் அரசங்கமே இல்லத சோமலியா மற்றும் ஆப்கான்ஸ்தனையை எப்பொழு பின்னுக்கு தள்ளமோ அப்பத்தான் இந்தியவின் நீதித்தேவதையின் கண் திறக்கும். மோடி தூக்குத்தண்டனை தரபடத வரை இந்தியா நீதித்தேவதை கண்கள் இருந்தும் குருடுதான்.
சகோ.உதயம் said....
ReplyDeleteஒரிஸ்ஸாவில் காவிமயமான பள்ளிக்கூடங்களில்....////ஒரு முஸ்லிம் தனது வாழ்நாளில் ஏழு மாடுகளை உண்கிறானாம். ஒரு முஸ்லிமை கொன்றால் எத்தனை மாடுகளை காப்பாற்ற முடியும் என்று கணிதப்பாடத்தில் கேள்வி வருகிறது.///----ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்..!
அடப்பாவிகளா...!
எதிர்காலத்திலே உருப்படுமா இந்த ஒரிஸ்ஸா...? இந்தியாவை சுடுகாடா மாத்த முயற்சிக்கிற ஒரு அமைப்பு சங் பரிவார RSS என்றால் அது மிகை அல்ல..!
ஒரு கொலைகார சங் பரிவார RSS காரனுக்கு கோர்ட் தூக்கு தண்டனை விதித்தால்.... எத்தனை நூறு அப்பாவி இந்தியர்களை காப்பாற்றலாம்..?
....என்று இந்தியா முழுக்க கணித பாடத்தில் கணக்கு வைக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது...!
ஆஷிக். உங்கள் பாணியில் நெத்தியடி கேள்வி. உங்கள் ப்ளாக்கை வாசிக்க முடியவில்லை. துடியாய் துடிக்கிறது. உங்கள் ப்ளாக்குக்கு வந்து பத்து நாட்களுக்கு மேல் ஆகிறது. குறையை நிவர்த்தி செய்யவும். இதே போல் அதிரடி ஹாஜா பதிவும் வாசிக்க முடியவில்லை.
ReplyDeleteஎல்லா நாடுகளாலும் விரட்டப்பட்ட ஒரு பயங்கர மிருகம் மோடி, இந்தியாவிலே இன்னும் முதலமைச்சராக வலம்வருவது மகா கேவலம்..
ReplyDeleteபயங்கரவாத விடுதலைப்புலிகளுக்காக ஓலமிடும் "குடிகார டாஸ்மாக் புகழ் தமிழ்நாட்டின் தமிழ்பற்று வியாபாரிகள்", குஜராத் மோடியை வரவேற்பது மனித குல அவமானம்.
விடுதலைப்புலிகள் மட்டும்தான் மனிதர்கள் எனபது போல , குஜராத்தில் கொல்லப்பட்டவர்களைப்பற்றி வாயே திறக்காத தேச துரோகிகளுக்கும் தகுந்த தண்டனையை அல்லாஹ் தருவான்..
இன்ஷா அல்லாஹ்..துவா செய்வோம்.
// உதயம் September 1, 2012 7:58 AM said....
ReplyDeleteஆஷிக். உங்கள் பாணியில் நெத்தியடி கேள்வி. உங்கள் ப்ளாக்கை வாசிக்க முடியவில்லை. துடியாய் துடிக்கிறது. உங்கள் ப்ளாக்குக்கு வந்து பத்து நாட்களுக்கு மேல் ஆகிறது. குறையை நிவர்த்தி செய்யவும். இதே போல் அதிரடி ஹாஜா பதிவும் வாசிக்க முடியவில்லை. //
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பின் உதயத்திற்கு
கீழ்கண்ட எனது பதிவின் கருத்துப்பெட்டியில் உங்களுடைய இ மெயில் ஐடி யை குறிப்பிட்டு அனுப்பவும்.
http://vanjoor-vanjoor.blogspot.sg/2012/05/22.html
கருத்துப்பெட்டி மட்டுறுத்தப்படுவதால் உங்களுடைய இ மெயில் ஐடி யை நான் மட்டும் அறிந்து கொள்வேன். பிறரறிய பப்லிஷ் செய்யப்படமாட்டாது.
வாஞ்சையுடன் வாஞ்சூர்.
கோக்னானியை காப்பாற்ற முயன்றது மோடி அரசு-நரோடா பாட்டியா வழக்கை விசாரித்த நீதிபதி.
ReplyDeleteஅகமதாபாத்: நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பாஜக அமைச்சர் மாயா கோத்னானியை காப்பாற்ற முதல்வர் நரேந்திர மோடியின் அரசு தீவிரமாக முயன்றது என்று இந்த வழக்கில் மாயாவுக்கு 28 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி ஜோத்சனா யாக்னிக் தெரிவித்துள்ளார். இதனால் மோடிக்கு புது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப் பின்னர் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக பெரும் இனக் கலவரம் ஏற்பட்டது. பஜ்ரங் தளம், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் நடத்திய இந்த இனவெறிப் படுகொலை வன்முறையில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
அதில் நரோடா பாட்டியா பகுதியில்தான் மிகப் பெரிய அளவில் அதிக அளவிலானோர் படுகொலை செய்யப்பட்டனர். மொத்தம் 97 இஸ்லாமியர்கள் இங்கு நடந்த வன்முறையில் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களில் 36 பேர் குழந்தைகள், 35 பேர் பெண்கள் ஆவர்.
தனது தீர்ப்பின்போது நீதிபதி ஜோத்சனா சில முக்கிய தகவல்களையும் வெளியிட்டுள்ளார். அதாவது மாயாவைக் காக்க மோடி அரசு தீவிரமாக முயன்றதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மாயாவைக் காக்க மோடி அரசு பல வழிகளிலும் முயன்றதாக நீதிபதி தனது கருத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த படுகொலை வழக்கில் மாயாதான் வன்முறைக் கும்பலின் தலைவர் போல செயல்பட்டதாகவும் நீதிபதி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
2008ம் ஆண்டுதான் மாயா கோத்னானி அமைச்சர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். அப்போது அவர் மகளிர் நலம் மற்றும் சிறார் நலத்துறை அமைச்சராக பதவி தரப்பட்டார். நரோடா பாட்டியா சம்பவத்தில் பெண்களும், குழந்தைகளும்தான் மிகப் பெரிய அளவில் கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி ஜோத்சனா மேலும் கூறுகையில், மாயா கோத்னானிக்கு அப்போதைய விசாரணை அமைப்புகள் அனைத்தும் (அதாவது உச்சநீதிமன்றம் எஸ்ஐடியை அமைப்பதற்கு முன்பு) உதவியாக இருந்துள்ளன.
பலியானவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், பாதிப்பை ஏற்படுத்தியவரைக் காக்கும் வகையில் அரசு இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டன.
கோத்னானியின் பெயர் கூட இந்த சம்பவத்தில் வந்து விடாதபடி காக்க கடுமையாக முயன்றுள்ளனர் என்று கூறியுள்ளார் நீதிபதி.
முதலில் நரோடா பாட்டியா சம்பவம் தொடர்பாக குஜராத் மாநில காவல்துறையினர் பதிவு செய்த எப்ஐஆரில் மாயாவின் பெயரே இடம் பெறவில்லை.
இத்தனைக்கும் அவர் மீது பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் புகார் கூறியும் கூட மாயாவின் பெயரை குஜராத் போலீஸார் சேர்க்கவில்லை. அவரை கண்டு கொள்ளாமலேயே இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போதைய பிரதமர் வாஜ்பாயியை சந்தித்தும் கூட பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் புகார் கூறினர்.
போலீஸார், மாயாவைக் காக்க முயல்வதாக வாஜ்பாயிடமே அவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து வாஜ்பாய் தலையீட்டின் பேரில், மாயா தொடர்பான 27 புகார்களை குஜராத் போலீஸார் ஏற்றனர்.
அதன் அடிப்படையில் மாயாவின் பெயரைச் சேர்த்து ஒரு எப்ஐஆரை குஜராத் போலீஸார் பதிவு செய்தனர். அதன் பின்னரே விஎச்பி தலைவர் ஜெய்தீப் படேல், நரோடா போலீஸ் இன்ஸ்பெக்டர் மைசூர்வாலா ஆகியோரின் பெயர்களும் சேர்க்கப்பட்டன.
அதாவது ஒரு முதல்வராக நரேந்திர மோடி செய்யத் தவறியதை வாஜ்பாய் தலையிட்டு செய்யும் நிலையை ஏற்படுத்தி விட்டது அப்போதைய மோடி அரசு.
இருப்பினும் கூட தொடர்ந்து மாயாவுக்குச் சாதகமாகவே குஜராத் போலீஸார் நடந்து வந்தனர்.
எப்ஐஆரில் பெயரைச் சேர்த்த வேகத்திலேயே அந்த வழக்கை மூடி விட்டது குஜராத் அரசு.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த குற்றப் பிரிவு காவல்துறை அதிகாரி ராகுல் சர்மா, இந்த மூன்று பேரையும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியபோது அவரை உடனே இடமாற்றம் செய்து விட்டது மோடி அரசு. அகமதாபாத்தை விட்டே அவர் தூக்கப்பட்டார்.
இருப்பினும் நரோடா பாட்டியா வழக்கில், மாயா உள்ளிட்டோருக்கு உள்ள தொடர்புகள் அடங்கிய தகவல்களை சிடி மூலம் தன்வசப்படுத்திக் கொண்டு விட்டார் ராகுல் சர்மா.
அதன் பின்னர் தான் சேகரித்த அத்தனை தகவல்களையும் அப்படியே நானாவதி கமிஷன் முன்பும், யுசி பானர்ஜி கமிட்டி முன்பும் கொட்டினார் ராகுல் சர்மா.
இதன் மூலம் மாயாவின் அக்கிரமச் செயல்கள் அம்பலத்திற்கு வந்தன.
இதையே பின்னர் உச்சநீதிமன்றம் நியமித்த எஸ்ஐடி சிறப்பு விசாரணைக் குழுவும் முக்கியமாக கவனத்தில் கொண்டது.
இந்த சிடி ஆதாரம்தான் மாயாவையும், பஜ்ரங்கி உள்ளிட்டோரையும் சிறையில் தள்ளப் பேருதவியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
http://tamil.oneindia.in/news/2012/09/02/india-patia-judge-hinted-at-narendra-modi-govt-bid-to-shield-160671.html
கொடூர குற்றமும் புரிய ஊக்கப்படுத்தியதோடு அதற்கு மறைமுகமாக ஆதரவும் கொடுத்து தூண்டிவிட்டு , தூண்டப்பட்டவர்கள் செய்த மனித தன்மையற்ற செயல்களை மூடி மறைக்கவும் செய்த ஒரு நாயை செருப்பால் அடிக்காமல், வருங்கால பிரதமர் என்று துதி பாடும் வெறி பிடித்த கூட்டமா இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகிறது?? எவ்வளவு பெரிய ஒரு உண்மை வெளிப்பட்டிருக்கிறது ஆனால், காவிமயமான காவல்துறை இன்னமும் தீவிரவாதிகளை முஸ்லிம் சமூகத்தில் தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள். எத்தனை தடைகளை மீறி இந்த நரோடா தீர்ப்பு வந்திருக்கிறது என்று பின்னோக்கி பார்க்கும் போது தான் தெரிகிறது நியாயத்தின் குரல்வலையை நெறிக்க எத்தனை அநியாயவாதிகள் முயன்றிருக்கிறார்கள் என்று.
ReplyDelete