அடிமைகள் எப்போதுமே நல்லப் பெயர் எடுக்க கூடுதலாக ஏதாவது செய்ய நினைப்பார்கள். கூடுதல் விசுவாசம் காட்ட நினைப்பார்கள். அவ்வகையில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகக் காட்டும் அதே வேளையில் அமெரிக்கர்களுக்கு அவர் கொடுக்கும் நற்சான்றிதழ்தான் அடிமை குணத்தின் உச்சம். ஒரு காட்சியில் அமெரிக்க இராணுவம் ஹெலிகப்டரில் இருந்தபடி தாலிபான் படையினரைச் சுடும். அதில் ஒரு குண்டு ஒரு பெண்ணின் மீது பட்டுவிட அமெரிக்க இராணுவ வீரன் மனம் நொந்து வருந்துவான். தாலிபான் படைக்கு பயிற்சியாளராக வரும் கமல், வீட்டில் இருக்கும் படை தலைவனின் மனைவியையும் குழந்தையையும் காப்பாற்ற வேண்டும் என்பான். அதற்கு தாலிபான் தலைவன் சொல்வானே ஒரு பதில்… “அமெரிக்கர்கள் குழந்தைகளையும் பெண்களையும் கொல்ல மாட்டார்கள். எனவே அவர்கள் வீட்டிலேயே இருக்கட்டும்.”
அதே சமயத்தில் இஸ்லாமியர்கள் எவ்வளவு கொடூர மனம் படைத்தவர்கள் எனக்காட்ட வேண்டாமா? நேட்டோ (NATO) படையினர் இருப்பதாகச் சொல்லப்பட்ட இடங்களை தாலிபானியர்கள் தாக்குகின்றனர். அதில் அவர்கள் மக்களே முற்றாக அழிகின்றனர். “இந்தப் பாவமெல்லாம் அமெரிக்கர்களுக்குதான்” என்கிறான் தலைவன். நாகரீக, மனித மாண்பின் உச்சத்தில் அமெரிக்கனும் அநாகரீக, பிற்போக்கின் அடிபாதாளத்தில் ஆப்கான் மக்களும் இருக்கின்றனர் என உளர கமல் 100 கோடி செலவு செய்திருக்க வேண்டாம்.
ஆனால் உண்மையிலேயே அமெரிக்கா குழந்தைகளை கொன்றதில்லையா?? அமெரிக்காவை விட வெறு யாரும் கொன்றதில்லை என்பது தான் உண்மை.
பலூஜாவின் புற்றுநோய் விகிதம் ஹிரோஷிமாவைக்காட்டிலும் படுமோசமாக உள்ளது
”ஈராக்கிய நகரம் ஃபலூஜாவின் புற்றுநோய், சிசு மரணம் மற்றும் மகப்பேறில் பாலின விகிதாச்சாரம் 2005-2009” என்ற தலைப்பிலான சமீபத்திய ஆய்வு, ”ஃபலூஜா நகர மக்கள் புற்று நோய், லூக்கிமியா- இரத்தப் புற்று நோய், சிசு மரணம், பாலின மாறாட்டம் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த பாதிப்புகளின் அளவு 1945-ம் ஆண்டு ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்க அணுகுண்டுத் தாக்குதலில் தப்பிப் பிழைத்தோரிடம் காணப்படும் அளவை விடக் கூடுதலாக இருக்கிறது” என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
ஜனவரி, பிப்ரவரி, 2010-ல் பலூஜாவின் 711 குடும்பங்களிலும், 4,843 தனி நபர்களிடமும், அல்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் உயிரணு அறிவியல் துறைப் [molecular biosciences] பேராசிரியரும், பசுமைத் தணிக்கைக்கான அறிவியல் ஆய்வுக்குழு என்ற சுயேச்சையான சூழலியல் அமைப்பின் இயக்குனருமான க்ரிஸ் பஸ்பி, மலக் ஹம்டன், எண்ட்சர் அரிஅபி மற்றும் பல ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அமெரிக்கத் தாக்குதலுக்கு முன்பு இருந்த அளவைக் காட்டிலும் புற்றுநோய் நான்கு மடங்கு அதிகரித்து இருப்பதையும், தற்போது அங்கு காணப்படும் புற்றுநோயின் தன்மை அணுக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு தப்பிப் பிழைத்த ஹிரோஷிமா, நாகசாகி மக்களிடம் காணப்பட்ட புற்றுநோயின் தன்மையுடன் ஒத்திருப்பதையும் அந்த ஆய்வுகள் வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்து தெரிவிக்கின்றனர்.
அண்டை நாடுகளான எகிப்து, ஜோர்டான், குவெய்த் ஆகியவற்றில் காணப்படுவதைப்போல இரத்தப் புற்றுநோய் [leukemia] பாதிப்பு 38 மடங்கும், சிசு மரணம் 12 மடங்கும், மார்பகப் புற்றுநோய் 10 மடங்கும் ஃபலூஜாவில் அதிகரித்து இருக்கிறது. பெரியவர்களிடையே பெரும் அளவில் மூளைப் புற்றுநோய்க் கட்டிகளும் [brain tumors] , சீழ்க் கொப்பளங்களும் [Lymphoma] காணப்படுவதாக இந்த ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.
1050 ஆண் குழந்தைகளுக்கு 1000 பெண் குழந்தைகள் என்று இருந்த விகிதம் 2005-க்குப் பின் மிகப் பெரிய மாற்றத்தைக் கண்டிருக்கிறது. அமெரிக்கத் தாக்குதலுக்குப் பிந்திய இந்த நான்கு ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளில் பிறப்பு விகிதம் 860 ஆண்களுக்கு 1000 பெண்கள் என்று தலைகீழாகி இருக்கிறது. இந்த பாலின விகித மாறுபாடும் 1945-ன் அமெரிக்க அணுகுண்டுத் தாக்குதலுக்குப் பிந்திய ஹிரோஷிமாவை ஒத்திருக்கிறது.
RAI 24 என்ற இத்தாலிய தொலைக்காட்சி செய்தி நிலையத்தில் பேசிய பேராசிரியர் பஸ்பி, “ஃபலூஜாவில் காணப்பட்ட கதிர்வீச்சு தொடர்பான இந்த ”அதீதமான” உயிர் மரபணுக்களின் மாறாட்டம் 1945-ம் ஆண்டு அமெரிக்க அணுகுண்டு வீச்சுக்குப் பின்னால் ஹிரோஷிமா, நாகசாகி மக்களிடம் காணப்பட்டதைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இது திறன் குறைந்த யுரேனியப் பிரயோகத்தால் விளைந்தது என்று நான் அனுமானிக்கிறேன். இவை தொடர்புபடுத்திப் பார்க்கப்படவேண்டியவை” என்று கூறியிருக்கிறார்.
அணுவுலை எரிபொருட் கழிவு என அறியப்படும் இந்த திறன் குறைந்த யுரேனியத்தை அமெரிக்க இராணுவம் கவசங்கள், பதுங்கு குழிகளைப் பிளக்கும் குண்டுகளிலும், தோட்டாக்களிலும் பயன்படுத்துகிறது. இதன் வெடிப்பின்போது 40 சதவீதத்துக்கும் மேலான யுரேனியம் மீசிறு அணுத்துகள்களாக வெளிப்படுகிறது. இது தாக்கப்பட்ட பகுதிவாழ் மக்களின் இரத்த ஓட்டத்தில் எளிதில் புகுந்து நிணநீர் சுரப்பிகளில் தங்கிவிடுகிறது. அது வயதுவந்தோரின் விந்தணுவிலும், கருமுட்டையிலும் உருவாகும் மரபணுக் குறியீடுகளை (DNA) தாக்கி அடுத்த தலைமுறையினருக்கு பாரிய பிறவிக் கோளாறுகளை உண்டுபண்ணுகிறது.
இத்தகைய பாதிப்பால் விகாரமான பிறப்புகள், சிசு மரணம், பிறவிக் கோளாறுகள் மற்றும் புற்றுநோய்களின் எண்ணிக்கை ஃபலூஜாவில் செங்குத்தாய் உயர்ந்து நிற்பதை உறுதிப்படுத்தும் முறைப்படியான விஞ்ஞானபூர்வமான முதல் ஆய்வு இது.
சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பற்றிய சர்வதேச ஆய்வு ஏடு (IJERPH) வெளியிட்ட கொள்ளைநோய் பற்றிய ஆய்வும் அண்டை நாடுகளைக் காட்டிலும் படுமோசமான அளவில் மேற்சொன்ன பாதிப்புகள் ஃபலூஜாவில் நிலவுவதைக் கண்டறிந்து கூறியது.
பல ஈராக்கிய மற்றும் பிரிட்டிஷ் மருத்துவர்கள் இணைந்து கதிர்வீச்சு தொடர்பான நோய்களின் வெகுவான பரவல் பற்றிய ஒரு விசாரணை நடத்தக் கோரி ஐ.நா. சபைக்கு அக்டோபர், 2009ல் கீழ்க்கண்ட விவரங்களுடன் கூடிய ஒரு கடிதம் எழுதினர்: “தலை இன்றி முண்டமாகவும், இரு தலைகளுடனும், நெற்றியில் கண்ணுடனும், கைகால்கள் அற்ற முடமாகவும், இன்னபிறவாகவும் விகாரமாகப் பிறக்கும் ஏராளமான குழந்தைகளைக் காணச் சகியாது ஃபலூஜாவின் பெண்கள் பிள்ளைப் பேற்றை நினைத்து அரண்டு போயிருக்கிறார்கள். மேலும், சின்னஞ்சிறு குழந்தைகளும் கொடூரமான புற்று நோய்க்கும், இரத்தப் புற்று நோய்க்கும் ஆளாகி இருக்கிறார்கள்….
“செப்டம்பர், 2009-ல் ஃபலூஜா பொது மருத்துவ மனையில் 170 குழந்தைகள் பிறந்தன. அவற்றில் 24% குழந்தைகள் பிறந்த ஏழு நாட்களுக்குள் இறந்துவிட்டன. அவ்வாறு இறந்த குழந்தைகளில் 75% குழந்தைகள் மேற்சொன்ன விகாரத்துடன் பிறந்தவை…
“ஃபலூஜாவில் என்றும் காணாத அளவுக்குப் பிறவிக் கோளாறுகளுடன் பிரசவம் ஆவது மட்டுமல்ல, 2003-ம் ஆண்டுக்குப் பின்னால் குறைப் பிரசவங்கள் தாருமாறாக அதிகரித்து இருக்கின்றன. அதனினும் கொடுமை என்னவென்றால், உயிர்த்திருக்கும் குழந்தைகளில் கணிசமானவை படிப்படியான பாரதூரமான உடலுறுப்புக் குறைபாடுகளுக்கு ஆளாகிறன”.
பாக்தாத் திருடன் அமெரிக்கா ஃபலூஜாவில் வீசிய அணுகுண்டு இப்படிப் பலவாறாக அம்பலப்பட்டு நிற்கிறது. ஆனால் அமெரிக்க இராணுவ நடவடிக்கையை ஒட்டி மேற்சொன்ன பாதிப்புகள் பெருகி இருப்பதை நிரூபிக்கும்படியான எந்த ஒரு ஆய்வும் இல்லை என பெண்டகன் தடாலடியாக மறுத்துரைக்கிறது. “குறிப்பான உடல்நலக் குறைபாடுகளை விளைவிக்கும்படியான எந்த ஒரு சூழலியல் பிரச்சினையும் இருப்பதாக ஒரு ஆய்வு கூட இதுநாள் வரை குறிப்பிடவில்லை” என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செய்தியாளர் மார்ச் மாதம் பி.பி.சி-க்குத் தெரிவித்தார்.
ஆராய்ச்சியாளர்களின் கண்ணோட்டத்தின்படி அதன் நுட்பமான விவரங்களை அறியும் அளவுக்கு விரிந்த அளவில் அப்படி ஒரு ஆய்வு மேற்கொள்ளப் படவில்லைதான்.. ஆனால், ஏன் இல்லை? ஏனென்றால் அமெரிக்க வல்லரசோ, அதன் ஈராக்கியத் தலையாட்டி பொம்மை அரசோ அவ்வாறான முயற்சிகளைத் தடைசெய்கின்றன என்பதே உண்மை.
ஈராக்கிய அதிகாரிகள் தங்களது ஆய்வு நடவடிக்கைகளை முடக்க முயற்சித்தனர் என்கின்றனர் இப்புதிய ஆய்வறிக்கையின் ஆசிரியர்கள். “கேள்விப்படிவத்திலான விவரத்திரட்டு அப்போதுதான் முடிந்திருந்த சமயத்தில், இந்த ஆய்வையே ஒரு பயங்கரவாதச் செயல் போல வர்ணித்து, ’பயங்கரவாதிகளால் ஒரு கேள்விப்படிவம் வினியோகிக்கப்பட்டு விவரத் திரட்டு நடைபெறுகிறது; அந்த கேள்விகளுக்கு பதிலளிப்பவர் அல்லது விவரம் திரட்டுபவர் எவரும் கைதுசெய்யப் படுவார்கள்’ என்று ஈராக்கியத் தொலைக்காட்சி மிரட்டியது” என அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
ஃபலூஜாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், நமது காலத்திய படுமோசமான போர்க் குற்றங்களில் ஒன்று. இவ்வித நடவடிக்கை “அதிர்ச்சியூட்டும் எச்சரிகை” அல்லது “கூட்டுத் தண்டனை” என அழைகப்படுகிறது. இது சட்டப்படி ஒரு போர்க் குற்றம்.
அமெரிக்க பயங்கரவாதம் உலகை மீண்டும் ஒருமுறை உலுக்கியது. ஆனால், உலகம் இன்னும் விழித்தபாடில்லையே. ஃபலூஜாவின் படுகொலைக்குத் திட்டமிட்டவர்களுள் முதன்மையானவன் ஜென்ரல் ஜேம்ஸ் “மேட்- டாக்” மேட்டிஸ். 2005-ல் ஒரு பொது நிகழ்வில் ”கூக்குரலிடும் கோட்டான்களின் நரகம் அது .. அங்கு சில நபர்களைச் சுட்டுத் தள்ளுவது ஜாலியான விசயம்” [it’s fun to shoot some people.... You know, it’s a hell of a hoot] என்று கொலை செய்வதில் தனக்குள்ள உவகையைத் தோளை உலுக்கிக்கொண்டு சர்வ அலட்சியமாக வெளிப்படுத்தியது அந்த வெறி நாய். அது இப்போது ஆஃப்கானில், அமெரிக்க இராணுவத் தலைமை பீடத்தில், பேட்ரஸின் இடத்தில் அமர்த்தப்பட்டிருக்கிறதாம். வாழ்க ‘கருப்பு ஆடு’ ஒபாமா.
கட்டுரை ஆதாரம் : டாம் எல்லி – க்ளோபல் ரிசர்ச், ஜூலை 23, 2010
அருமையான கட்டுரை பாய்!
ReplyDeleteபாரம்பரிய தமிழ் கலாச்சாரம், தமிழார்வம், தமிழிலக்கிய தொண்டு, தனித்தன்மையான வட்டார மொழி வழக்குகள், என்றெல்லாம் தமிழக முஸ்லிம்களுக்கென்று வரலாறுகள் இருந்தாலும், தமிழ் சினிமா இன்னும் " நம்பள்கி, நிம்பள்கி" என்று தமிழை தப்புத்தவறாய் பேசும் அந்நியர்களாகத்தான் முஸ்லிம்களை பதிந்து வருகிறது. ஏன் இந்த சித்தரிப்பு?
ReplyDeleteமுஸ்லிம்களை நல்லவர்களாகவும் அல்லது வில்லன்களாகவும், நண்பர்களாகவும் காட்டிய காலம் போய், தீவிரவாதிகளாகவும் காட்டினார்கள். முஸ்லிம்களில் தீவிரவாதிக்கா பஞ்சம்? பொறுத்துக்கொண்டோம். ஒரு தனிப்பட்ட மனிதனை எப்படி வேண்டுமானாலும் காட்டலாம். அதெல்லாம் கருத்துச்சுதந்திரம்.
இந்நிலையில், தொடர்ந்து ஒரே மாதிரியாக விஜயகாந்தும், அர்ஜுனும் இன்ன பிற...ரது படங்களிலும், தீவிரவாதி என்றால் முஸ்லிம்கள் என்று பொதுப்புத்தியில் ஆணி அடிப்பது போல திரும்ப திரும்ப சொல்லப்பட்டு வந்தது. சங்கடமாக இருந்தாலும் எதிர்க்கும் அளவு சூழ்நிலை இல்லை. குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்டதெல்லாம் முஸ்லிம்களே. ( நன்றாக அவதானிக்கவும் "கைது செய்யப்பட்டது" என்று தான் குறிப்பிட்டிருக்கேன்)
சமீப காலமாக, குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் எல்லாம் அப்பாவிகள் என்று நீதி மன்றத்தால் பல ஆண்டுகளை சிறையில் இழந்து விட்டு நிரபராதியாக வெளியே வருகிறார்கள். இவர்கள் நிரபராதி என்றால் யார் குற்றவாளி?? என்று ஆராயும் போது, அதே குண்டு வெடிப்புகளுக்கு "இந்துத்துவ தீவிரவாதிகள்" கைது செய்யப்பட்டு வருவதும், முன்னாள் உள்துறை அமைச்சர் "காவி தீவிரவாதம்" என்று ஒன்று இருப்பதாக நாடாளுமன்றத்திலே ஒத்துக்கொண்டதும், அதனை தொடர்ந்து தற்போதைய அமைச்சர் ஷிண்டே வும் பிஜேபியும், ஆர்.எஸ்.எஸும் பயங்கரவாத பயிற்சி முகாமே நடத்துகின்றன என்கிறார்.
இந்த சூழ்நிலையில் தான் "துப்பாக்கி" திரைப்படம் தனது வழமையான "முஸ்லிம் தீவிரவாதி" என்ற லேபிளுடன் வருகிறது. அதில் உச்சக்கட்ட அதிர்ச்சி. அதில் ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம் சமூகத்தையே சந்தேகப்படுத்தும் வகையில் "ஸ்லீப்பர் செல்" என்ற புதுவகையான உத்தி கையாளப்படுகிறது. தீவிரவாதி ஒரு சாதுவாக மக்களோடு மக்களாக கலந்தே இருப்பான், ராணுவத்திலும் உயர்பதவிகளிலும் கூட கலந்திருக்கலாம் என்ற விஷ விதையை தூவி விடுகிறார்கள். இது ஒரு அப்பட்டமான முஸ்லிம் எதிர்ப்புப்படம் என்று முஸ்லிம்கள் உணருகிறார்கள். ஏற்கனவே இந்துத்துவாவின் குண்டு வெடிப்புகளுக்கு தாங்கள் தீவிரவாத பட்டமும் பழியை சுமக்க நேரிட்டு வருகிறதே என்ற இயலாமையும், ஒவ்வொரு குண்டு வெடிப்பு வழக்குகளிலும் காவி தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையிலும், மேலும் மேலும் எங்களையே இந்த சினிமாவினர் குற்றம் சுமத்தி வருவது யாரை திருப்தி படுத்த என்று ஒரு இயல்பான கொந்தளிப்பு முஸ்லிம்களிடையே உருவாகிறது. அதனால் துப்பாக்கியை எதிர்க்க துவங்குகிறார்கள்.
பொதுவாக ஒரு சமூகத்திற்கு எதிராக இது மாதிரி ஆபத்து வரும் போது எல்லோரும் ஒன்றிணைவது இயல்பே. சண்டையிட்டு பிரிந்து கிடந்தவர்களெல்லாம் ஒரு கருத்திற்காக (துப்பாக்கியை எதிர்ப்பது) ஒன்றிணைகிறார்கள்.எதிர்ப்பு தமிழ் முஸ்லிம் சமூகம் காணாதது. அந்தக் கொதிப்பு அடங்கும் முன்னே (இதில் நீர்பறவையில் சமுத்ரகனியின் பேச்சு முஸ்லிம்களுக்கு பெரிய ஆறுதல்) விஸ்வரரூபமும் தீவிரவாதத்தை கதைக்கருவாகக் கொண்டு வரவே, சொல்ல வேண்டுமா எதிர்ப்புக்கு!!
இந்துத்துவாவினர்களின் குண்டு வெடிப்புகளுக்கும் சேர்த்தே தீவிரவாதி பட்டம் சுமந்தாகி விட்டது. இந்த சமூகத்தின் வலியையும் வேதனையும் புரிந்து கொள்ள முயலுங்கள். கமல் எங்களுக்கு எதிரியல்ல; துரதிஷ்டவசமாக விஸ்வரூபத்தின் கதைக்களம் ஆப்கனில் நடப்பதால் கமலுக்கும் வேறு வழியில்லை. இது தொடராமல் இருக்க வேண்டுமானால், எங்களுக்கும் இதற்கு வேறு வழியில்லை.
nenga solratu ellam sari but trailer vechey kadha solra alavukku nana innu valarala. afghanla muslim eppadi nadanthukarangnu neenga eppo therunjukuveenga? nama jumma annaiku tholuthuttu lunchuku mutton saputu 2 hrs rest edukartu mattum than theriudhu. anga muslimgaluku enna kodouma nadakuthunu indha ulagthuku ungalal solla mudiuma? we are educated so we only responsible for our musli community to create a knowledge to our Muslim people(ippadi oru padam varalina muslimgala pathi indha ulagathuku teriyathu. bai apo than muslimga mela oru bayam irukum ) namma heroisam kata namma priya aalu aaga indha mathir puriyama awarness create pannthinga pls go and watch the movie then u say the comment.unga 3nu peruku padam pudikalana nanga paaka koodatha? ipadi solli solli fb la namma status namaley kedukarom indha padathala avamanam na neenga ipadi panrathu romba avamanama iruku
Deleteசலாம் சகோ.ஹைதர் அலி,
ReplyDeleteவிஸ்வரூபத்தின் சுயரூபத்தை காட்டும் அருமையான பதிவு.
மக்களுக்கு உண்மையை உணர்த்தும் அவசியமான பதிவு.
இந்நிலையில் இந்த 'அமெரிக்க அடிவருடி' கமல் சொல்வதை கேளுங்கள்...!
இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு வேட்டு வைத்து சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விசுவரூபத்தை எதிர்ப்பது............. "கலாச்சார தீவிரவாதமாம்"..!
விஸ்வரூபத்தை எதிர்ப்பவர்கள்........... தேசப்பற்று இல்லாதவர்களாம்..!
ஆமாம்யா.... விஸ்வரூபத்தை எதிர்ப்பவர்களுக்கு உம்மைப்போல 'அமெரிக்க தேசப்பற்று' இல்லைதான்..!
உமக்கு ஆஸ்கார் எலும்புக்காக அது நிறைய்யா இருக்கு..!
அதனால்.... நீர் கொலைகார அமெரிக்காக்கவை ஆப்கான் தீவிரவாதிகளிடம் இருந்து புனைவில் காப்பாற்றுகிறீர்..!
ஆனால்... மெய் உலகில் கொலைகாரன் அமெரிக்காவிடம் இருந்து ஆப்கான் மக்க்களை காப்பாற்றுவார் யாருமில்லையே..!
இதுபற்றி யாராவது ஒரு புனைவு கதையாகவாவது படமாக்க தயாரா..?
அமெரிக்காவை வில்லனாக்கி ஒரு தமிழ் படமாவது இதுவரை வந்ததுண்டா..?
வருமா..? வர முடியுமா..? தர வக்கு இருக்கா..?
அடப்போங்கைய்யா நீங்களும் பொய் சொல்லும் உங்க சினிமாவும்..!
அருமையாக சொன்னீர்கள் சகோ.முகம்மத் ஆசிக்
Deleteமொத்த தனிக்கறியையும் அமெரிக்க காரனுக்கு போட்டுட்டு (முஸ்லிம்களை தீவிரவாதியாக ,இரக்கம் இல்லாதவர்களாக, காட்டுவது), ஒரே ஒரு குட்டி எலும்புத்துண்டை (ஹீரோ ஒரு முஸ்லிம்) மட்டும் இஸ்லாமியர்களுக்கு காட்டி கமல் அனுதாபம் தேட முயன்றிருக்கிறார்..அமெரிக்க காரன் காலை கழுவி குடிப்பது இந்தியர்களுக்கு எப்படி தேசப்பற்றாகும் (தகவல் அறியும் உரிமை சட்டதால்தான் தெரிஞ்சிக்கணும் போல ஹி ஹி )
கமலுக்கு தைரியம் இருந்திருந்தால் ஹீரோவை ஒரு முஸ்லிம் அல்லாதவர்களாக காட்டி இருக்க வேண்டும்..அப்போது தெரியும் அனைவருக்கும் விபரீதம் என்ன என்பது..! முஸ்லிமாக காட்டியது இன்னும் மேலும் வலியைத்தான் உண்டாக்குகிறது..!
என்ன தைரியத்தில் பிரியாணி கேட்டார் கமல்..! குட்டி எலும்பு துண்டை வைத்து பிரியாணி செய்யமுடியாது ...அதுக்கு பேரு குஸ்கா..! அதுவும் கெடையாது அஸ்கு..புஸ்கு...!
//ஒரே ஒரு குட்டி எலும்புத்துண்டை (ஹீரோ ஒரு முஸ்லிம்) மட்டும் இஸ்லாமியர்களுக்கு காட்டி கமல் அனுதாபம் தேட முயன்றிருக்கிறார்..அமெரிக்க காரன் காலை கழுவி குடிப்பது இந்தியர்களுக்கு எப்படி தேசப்பற்றாகும் //-------------தனது தந்தை காந்தியை சுட்டவனான கோட்சேயின் பூட்சை கழுவி குடிப்பாரா காந்தியின் மகன்..? அப்படி காட்டினால்... காந்தியின் மகனுக்கு அது எலும்புத்துண்டாக எப்படி கருத முடியும்..? காந்தியின் மகனை கேவலப்படுத்துதல் அல்லவா இது..? கமல் இங்கே முஸ்லிம்களை இன்னும் அதிகமாக கேவலப்படுத்தி உள்ளார்.
Deleteஅமெரிக்காவை முஸ்லிம்கள் எதிர்த்துக்கொண்டு இருக்க... இந்த கமல் எனும் 'கலக நாயகன்' அமெரிக்காவுக்கு அடிமை சேவை செய்யும் ஹீரோ வேஷத்துக்கு பேரு 'கமலஹாசன்' என்று பொருத்தமாக வச்சி தொலைக்காமல்... அதற்கு ஒரு முஸ்லிம் பாத்திரம் தானா கிடைத்தான்...? எவ்வளவு வஞ்சினம் பாருங்கள்..!
கூத்தாடிகளின் நயவஞசக தன்மையை அழகாக பதிவாக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteகடைசி நேரத்தில் பத்ம விருதுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட கமல் பெயர்... விஸ்வரூபம் சர்ச்சை காரணம்?
ReplyDeletePosted by: Shankar Published: Saturday, January 26, 2013, 16:22 [IST]
டெல்லி: மத்திய அரசின் உயரிய விருதான பத்பூஷனுக்கு பரிந்துரைக்கப்பட்ட கமல்ஹாஸனின் பெயர் கடைசி நேரத்தில் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகவும்,
விஸ்வரூபம் சர்ச்சைதான் இதற்குக் காரணம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு நேற்று பத்ம விருதுகளை அறிவித்தது.
விருது பெறுவோர் பட்டியலில் தமிழகத்திலிருந்து கமலுக்கு பத்மபூஷன் பரிந்துரைக்கப்பட்டிருந்ததாம்.
ஆனால் கமல் மீதான தற்போதைய பிரச்சினைகள் மத்திய அரசு அதிகாரிகளை கடைசி நேரத்தில் யோசிக்க வைத்துள்ளன. விஸ்வரூபம் படத்துக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளன.
இதையடுத்து தமிழகத்தில் இப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
வேறு சில மாநிலங்களிலும் தடை செய்யப்பட்டு உள்ளது.
இந்த சூழ்நிலையில் கமலுக்கு பத்மபூஷன் விருது வழங்குவது பொருத்தமாக இருக்காது என்று கருதி விருது பெறுவோர் பெயர்களை அறிவிப்பதற்கு முந்தைய நாள் பட்டியலில் இருந்து கமல் பெயரை கடைசி நேரத்தில் நீக்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read more at: http://tamil.oneindia.in/movies/heroes/2013/01/kamal-s-name-removed-from-padma-award-168638.html
கமல்ஹாசன் கருத்துக்கு தமுமுக வன்மையாக கண்டனம்
ReplyDeleteSaturday, 26 January 2013 11:01
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் கண்டன அறிக்கை:
விஸ்வரூபம் படம் தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து கமல்ஹாசன் ஏதேதோ கூறுகிறார்.
முதலில் கலாச்சார பயங்கரவாத்தை எதிர்கொள்வேன் என்றார்.
இப்போது முதுகில் குத்திவிட்டார்கள் என்கிறார்,
தேசப்பக்தி உள்ள முஸ்லிம்கள் எதிர்க்க மாட்டார்கள் என்கிறார்.
முஸ்லிம்களை கொச்சைப் படுத்த கமல் எடுத்திருக்கும் விஸ்வரூபம் படப் பிரச்சனை கருத்து தீவிரவாதமாகவே பார்கிறோம்.
படத்தை பார்க்க காலத்தை நீட்டித்தார்.
படத்தை இறுதிவரை பார்த்தப் பின் அதிர்ச்சி அடைந்ததால் அவருடன் மேலும் ஏதும் பேசாமல் கிளம்பினோம்.
அவர் மீது எங்களுக்கு இருந்த நம்பிக்கையை படம் தகர்த்து விட்டது.
இந்தப் படத்தில் எந்த மாச்சரியங்களும் இடம் பெறாது என்றும், கமலுடன் நடந்த முதல் இரண்டு சந்திப்புகளின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்காது என்ற நம்பிக்கையும் எங்களுக்கு ஏற்பட்டது.
ஆனால் அவருடைய அலுவலகத்தில் இந்த படத்தை நாங்கள் பார்த்த போது அங்குலம் அங்குலமாக படம் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு விரோதமாகவும் அனைத்து காட்சிகளும், கதாபாத்திரங்களும் ஒரு வெறுப்பு பிரச்சாரமாகவே அமைந்திருந்தது
இதன் காரணமாகதான் இப்படத்தை தடை செய்ய தமிழக அரசிடம் கோரினோம்.
படத்தை பார்த்த பின்னர் நாங்கள் படத்திற்கு கமலிடம் நற்சான்றிதழ் எதுவும் தரவில்லை
தேசப்பற்று இருக்கின்ற காரணத்தால் தான், நாட்டில் ஏதும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது என்ற அக்கறையில் தான் களத்தில் இறங்கினோம்.
எனவே கமல்ஹாசன் அவர்களின் கருத்தை தமுமுக வன்மையாக கண்டிக்கிறது.
இவண்,
(ஜே.எஸ்.ரிபாயீ)
SOURCE: TMMK
இதெல்லாம் இந்த நடுநிலை பேசும் நல்லவர்களுக்கு தெரியாது... சே என்ன மனுச ஜென்மங்கள்னே தெரியல...எல்லாம் படிக்கிறாங்க.. படிச்சிட்டும் இஸ்லாமிய தீவிரவாதம்னு பேச எப்படி தான் மனசு வருதுன்னு தெரியல.. இதுல பேச்செல்லாம் பெரிய புடலங்கா மாதிரி வேற பேசுவாங்க..
ReplyDeleteவெட்கக் கேடு..
ஒரு குண்டு வச்சு 20 பேர் செத்தா ஆ, ஊன்னு குதிக்கிறாங்க....
ReplyDeleteஎப்-55 ல குண்டு போட்டு ஆயிரக்கணக்கில கொல்றவங்க கண்ணுக்கு தெரியமாட்டேங்குது...
எதிர்வினையை மட்டும் விமர்சிக்கும் இவர்கள் என்ன மனிதர்கள்????
இறைவா!! அநியாயம் செய்யும் ஒவ்வொருவர் மீதும் உன் சாபத்தை இறக்கு...
தேவையெனில் உச்சநீதிமன்றத்துக்கும் போவோம்... - முஸ்லிம் அமைப்புகள் அறிவிப்பு
ReplyDeleteசென்னை: கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படம் எக்காரணத்தைக் கொண்டும் வெளியாகக் கூடாது. தேவைப்பட்டால் இதற்காக உச்சநீதிமன்றத்துக்கும் செல்லத் தயாராக உள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் கூட்டாக அறிவித்துள்ளன.
விஸ்வரூபம் படத்தின் மீதான தடையை நீக்குவதா இல்லையா என்பது குறித்து நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றம் அறிவிக்கவிருக்கிறது.
இதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று விஸ்வரூபம் படத்தை சென்னையில் பார்த்தனர்.
இதற்கிடையே, விஸ்வரூபம் படத்தின் மீதான தடை ஒருவேளை நீக்கப்பட்டால், அதே நாளில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
24 அமைப்புகளும் கூட்டாக உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாக அறிவித்துள்ளனர்.
விஸ்வரூபம் படத்தை ஏற்கெனவே ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் திரையிட முடியாத சூழல் உள்ளது. கேரளாவில் இந்தப் படம் வெளியான இரண்டு நாளில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
எனவே பிற மாநிலங்களிலும் இந்தப் படத்துக்கு தடை கோர முஸ்லிம் அமைப்புகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/islamic-organisations-decide-approach-supreme-court-168642.html
விஸ்வரூபம் படத்தை தணிக்கை செய்த உறுப்பினர்களில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த நான் இடம் பெற்றிருந்தாலும் அதில் பங்குபெறும் மற்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவே இறுதியானதாகும் என்பது உண்மை.
ReplyDeleteவிஸ்வரூபம் படத்திற்கு அனுமதி அளித்த தணிக்கைக் குழுவில் உறுப்பினராக இடம் பெற்றுள்ள திமுகவைச் சேர்ந்த ஹசன் முகம்மது ஜின்னா, விஸ்வரூபம் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
>>>>>> விஸ்வரூபம் தணிக்கைக் குழுவின் ஹசன் முகம்மது ஜின்னா விளக்கம்.
.