Sunday, September 4, 2011

இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும்.(பழைய நூல் புதிய அறிமுகம்)

ஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் புத்தகத்தின் முதல் பாகத்தை 2000 ஆம் ஆண்டு படித்தேன் இஸ்லாமிய ஆட்சியாளர்களை நடுநிலையோடு ஆய்வு செய்து வெளியான புத்தகம் படித்து முடித்த பிறகு இரண்டாவது பாகத்திற்காக காத்திருந்தேன் 11 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாவது பாகம் கிடைத்தது இதனை “தின்னைத் தோழர்கள் பதிப்பகம்” வெளியிட்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு எனது நன்றியும் பிரார்த்தனைகளும்.


முதல் பகுதியில்: இஸ்லாமிய இறையாட்சி பற்றிய இஸ்லாமியக் கன்ணோட்டம் ஏன்ன? முதலாம் நூற்றாண்டில் எந்தேந்த நியதிகளின் கீழ் அது செயல்பட்டது? என்னென்ன காரணங்களால் அது மன்னராட்சியாக மாறியது? அதனால் ஏற்பட்ட விளைவுகள் யாவை? அவ்விளைவுகளினால் இஸ்லாமிய சமூகத்தில் ஏற்பட்ட எதிர்தாக்கங்கள் என்னென்ன? என்பது பற்றியும்.

வரலாற்றில் உயர்ந்து நிற்கும் கஃலீபாக்கள்(மக்கள்பிரதிநிதித்துவ) ஆட்சி எப்படி இருந்தது? இஸ்லாமிய ஆட்சியை மன்னராட்சியின் பக்கம் இழுத்துச் சென்ற காரணிகள் யாவை? கிலாஃபத்துக்கும்- மன்னராட்சிக்கும் இடையிலான வேறுபாடுகள் யாவை?. இவைகள் குறித்து அறிந்துக் கொள்ள சரியான ஆதாரபூர்வமான புத்தகம்.


நான்கு கஃலீபாக்கள் இஸ்லாமிய அடிப்படையில் எப்படி ஆட்சி நடத்தினார்கள்   என்பது நம் கண்முன் விரிகிறது. இந்த காலப்பகுதியில் வாழ்ந்திருந்தால்அரசியல் என்பது சாக்கடை என்ற சிந்தனையோ, சொற்களோ பிறந்திருக்க வாய்ப்பே இல்லை. 

உதாரணத்திற்கு இப்புத்தகத்திலிருந்து சில சம்பவங்கள் உங்கள் பார்வைக்கு.

முதல் கலீஃபாவாக ஆக்கப்பட்ட மறுநாள் அபுபக்கர்(ரழி) அவர்கள் தமது தோளில் ஒரு துணிமூட்டையை சுமந்துக் கொண்டு விற்பதற்காக வீதியில் கிளம்பினார்கள் அதுதான் அவர்களுடைய வருமானத்திற்குரிய வழியாக இருந்தது. வழியில் உமர்(ரலி) அவர்கள் அபுபக்கரைக் கண்டு “தங்கள் என்ன செய்து கொண்டுள்ளீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “எனது மனைவி மக்களை நான் காப்பற்ற வேண்டாமா?” என்றார்கள்.

  “உங்களை கஃலீபவாக ஏற்றுக் கொண்டு இருக்கிறோம் தலைமை பொறுப்பு சுமத்தப் பட்டுள்ளது தங்கள் வியாபாரமும் செய்துகொண்டு அதனை நிறைவேற்ற முடியாது!” என்று கூறிய உமர் (ரலி) “வாருங்கள் நிதி அமைச்சர் அபூஉபைதா (ரழி) விடம் செல்வோம்” என்று அழைத்து சென்றார் இவருக்கு ஒரு சம்பளம் போட்டுக் கொடுங்கள் என்று கேட்டார்கள்.

அதற்கு அபுஉபைதா (ரழி) கூறினார்கள் “தங்களுக்கு அகதிகளின் ஒரு சாதாரண நபரின் வருமானத்தின் அளவு உதவிப்பணம் வழங்கப்படும் அது மிக உயர்ந்த நிலையிலுள்ளோரின் வருமான அளவைப் போன்றும் இருக்காது. மிகதாழ்ந்த நிலையிலுள்ளோரின் வருமான அளவைப் போன்றும் இருக்காது!”

அவ்வடிப்படையில் அபுபக்கர்(ரழி) அவர்களுக்கு வருடாந்திர உதவிப் பணமாக நாலாயிரம் திர்ஹம் தீர்மானிக்கப்பட்டது. அப்படியிருந்த போதும் அபுபக்கர் (ரழி) மரணத்தருவாயில் எட்டாயிரம் திர்ஹம்கள் தன்னிடம் மீதமுள்ளதை (பைத்துல்மால்) அரசாங்க கஜானவிற்கு கொடுத்து விடுங்கள் என்று இறுதி சாசனம் செய்துவிட்டு சென்றார்கள். இப்பொருள் இரண்டாம் கஃலீபா உமர்(ரழி) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது அவர் கூறினார்.

“தமக்கு பின்னால் (கஃலீபவாக) வருபவர்களை அபுபக்கர்(ரழி) மிகவும் கஷ்டத்திற்கு ஆளாக்கிவிட்டார்.

கஃலீபாக்களின் ஜனநாயக ஆட்சிமுறை
ஈரான்,ஈராக்,சிரியா, பாலஸ்தீன் போன்ற 36 நாடுகளை மாநிலமாக கொண்டு ஆட்சி செய்த கஃலீபா அலி(ரழி)அவர்களை காரிஜிய்யாக்கள்(அலி (ரழி)அவர்களின் ஆட்சியை ஏற்காமல் எதிர்புரட்சி செய்தவர்கள்) பகிரங்கமாக பொது இடத்தில் அவரைத் திட்டினார்கள் என்று ஐந்து காரிஜியாக்கள் கைது செய்யப்பட்டு அவர் முன்பு கொண்டு வரப்பட்டார்கள். அவர்களில் ஒருவன் நான் அலியைக் கொள்வேன் என்றும் பகிரங்கமாக கூறியிருந்தான்.
அவர்களை விடுவித்தபிறகு அலி(ரழி) தமது ஆதரவாளர்களிடம் கூறினார்கள். ”நீங்களும், நாடினால் அவர்கள் திட்டுவதைப் போன்றே திட்டிவிடுங்கள்.

ஆனால் செயல் வடிவில் அவர்கள் எதுவும் செய்யாதவரை அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் கூடாது!
வார்த்தைகளில் திட்டுவது ஒன்றும் கைநீட்டும் அளவுக்கு கொடிய குற்றமல்ல என்றார்கள்.(பக்கம் 137ல்)


வெளியீடு
தின்னைத் தோழர்கள் பதிப்பகம்
24,நேரு வீதி குமராநந்தபுரம்
திருப்பூர் 641602,தமிழ்நாடு
தொடர்புக்கு
9994600350-9952635343


7 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். அருமையான புத்தக மதிப்புரை சகோ. நான் வெகு நாட்களாக எதிா்பாா்த்த புத்தகம். அதோடு புத்தகம் கிடைக்கும் முகவாியும் சோ்ந்து கொடுத்தால நலமாக இருக்கம்.(ஆன்லைன் பா்ச்சேஸ் கிடைத்தால் இன்னும் நலம்)தோழமையுடன்

    ReplyDelete
  2. சகோ மன்னிக்கவும். நான் முழுமையாக கீழே படிக்க வில்லை. முகவாி இருக்கிறது. நன்றி.

    ReplyDelete
  3. @Feroz

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    நன்று நீங்களும் என்னைபோல் இந்த புத்தகத்தை எதிர்பார்த்து இருந்திருக்கிறீர்கள் போல கண்டிப்பாக வாங்கி படியுங்கள் பல தகவல்களை தெரிந்து கொள்ளலாம்

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    சகோ.ஹைதர் அலி,
    மிக அருமையான நூலை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். நன்றி.

    //அவ்வடிப்படையில் அபுபக்கர்(ரழி) அவர்களுக்கு வருடாந்திர உதவிப் பணமாக நாலாயிரம் திர்ஹம் தீர்மானிக்கப்பட்டது. அப்படியிருந்த போதும் அபுபக்கர் (ரழி) மரணத்தருவாயில் எட்டாயிரம் திர்ஹம்கள் தன்னிடம் மீதமுள்ளதை (பைத்துல்மால்) அரசாங்க கஜானவிற்கு கொடுத்து விடுங்கள் என்று இறுதி சாசனம் செய்துவிட்டு சென்றார்கள்//

    ---அதாவது கலீஃபா அபுபக்கர் ரலி... அவர்கள் தான் இரண்டு வருட வருமானத்தை திருப்பி அளித்து விட்டார்கள்..!

    அப்படியானால் அவர்கள் ஆட்சி செய்தது..?

    சுமார் இரண்டே வருடங்கள்தான்..!

    சுபஹானல்லாஹ்..!

    ஆக, இதிலிருந்து புரிவது என்னவென்றால்...
    கலீஃபா அபுபக்கர் ரலி... சம்பளமே வாங்கிக்கொள்ளாமல் வேலை பார்த்துள்ளார்கள்..!

    ///இப்பொருள் இரண்டாம் கஃலீபா உமர்(ரழி) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது அவர் கூறினார்.

    “தமக்கு பின்னால் (கஃலீபவாக) வருபவர்களை அபுபக்கர்(ரழி) மிகவும் கஷ்டத்திற்கு ஆளாக்கிவிட்டார்.///

    ---சரியாத்தான் சொல்லி இருக்காக உமர் ரலி... அவர்கள்..!

    ///இந்த காலப்பகுதியில் வாழ்ந்திருந்தால்அரசியல் என்பது சாக்கடை என்ற சிந்தனையோ, சொற்களோ பிறந்திருக்க வாய்ப்பே இல்லை.///---முற்றிலும் உண்மை..! அரசியல் என்றால்... சந்தனம்... தேன்... அமிர்தம்... இப்படியெல்லாம் கூட சொல்லியிருப்போம்..!

    ஹூம்... நமக்கு கொடுத்து வைக்கவில்லை..!

    ReplyDelete
  5. @~முஹம்மத் ஆஷிக்_citizen of world~

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...

    //! அரசியல் என்றால்... சந்தனம்... தேன்... அமிர்தம்... இப்படியெல்லாம் கூட சொல்லியிருப்போம்..!//

    வரலாற்றை படிக்க்கும்போதே சந்தன மனக்கிறது வாழ்ந்திருந்தால்.

    //ஹூம்... நமக்கு கொடுத்து வைக்கவில்லை..!//

    உண்மைதான் சகோ

    ReplyDelete
  6. //ஹூம்... நமக்கு கொடுத்து வைக்கவில்லை..!// ஆம் உண்மை தான் அதனாலென்ன? இப்படிப்பட்ட அற்புதமான தகவல்களையெல்லாம் மிக இலகுவாக இணையத்தில் அறிந்து கொள்ளும் 'வலையுக' காலத்தில் வாழ்கின்றோம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டியது தான் ஆஷிக்.அல்ஹம்து லில்லாஹ்.

    ReplyDelete
  7. @மஸ்தூக்கா

    வாங்க சகோ நலமா?

    //அறிந்து கொள்ளும் 'வலையுக' காலத்தில் வாழ்கின்றோம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டியது தான் ஆஷிக்.அல்ஹம்து லில்லாஹ்.//

    அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete