அப்பூடியா? உன்மையாகவா? என்ன சொல்றீங்கே? சான்ஸே இல்லை பாஸ் நீங்க சொல்றது என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை இப்புடியுமா? பொழைக்கிறார்கள்? என்ற ஆச்சரியம் கலந்த கேள்விகளை நண்பர்கள் அடுக்கினார்கள். வயிற்று பிழைப்பிற்காக சிலர் செய்யும் தொழில்களை சொன்னபோது அவர்களால் நம்பவே முடியவில்லை.
சிறு வயதில் எனக்கு காதர் பாட்ஷா என்ற நண்பன் இருந்தான்.பக்கீர்ஷா
சிறு வயதில் எனக்கு காதர் பாட்ஷா என்ற நண்பன் இருந்தான்.பக்கீர்ஷா
என்ற பிரிவை சேர்ந்தவன் அவனுடைய தந்தை ‘காது குடையும்’ தொழில் செய்பவர் (பகுதி நேரமாக சாம்புரானி புகை போடுவர்) இவனும் அவர் கூடவே திரிவான் இவன் இல்லாமல் அவர் எங்கும் காது குடையும் தொழில் செய்ய போக மாட்டார் இவன் என்னுடைய நண்பன் என்பதால் சிலசமயம் என்னையும் அவர்கள் தொழில் செய்ய போகும் இடத்திற்கு அவன் அழைத்து செல்வான்.
கையில் ஒரு வயர் கூடையில் கொஞ்சம் வென்பஞ்சும், சில காது குடையும் குச்சிகளும், இரண்டு மூன்று பாட்டில்களில் கலர் கலரான திரவங்களும்
இவனின் டவுசர் பாக்கெட்டில் சில பேரீத்த பழங்களும் இருக்கும். ஊரில் பெரும் விவசாய நிலம் வைத்திருக்கும் சில பணக்காரர்களின் வீடுகளுக்கு சென்றவுடன் இவர்களுக்காகவே காத்திருந்தது போல் கொள்ள பக்கம் வா என்று சொல்வர்கள் அங்கு கயித்து கட்டிலில் ஒருசாய்ந்து படுத்துக் கொண்டு இவர்களிடம் காதுகளை கொடுப்பார்.
இவனின் தந்தை பஞ்சுகளை குச்சியில் சுத்தி சிவப்பு கலர் திரவத்தில்லேசாக முக்கி காதுகளுக்குள் மெதுவாக விட்டு குடைவார் அந்த காது குடையும் சுகத்தில் கிறங்கி படுத்து கிடக்க மெதுவாக இவர் பேச்சு கொடுப்பார் அய்யா காது குடைந்து ஒரு மாதம் ஆச்சுல்லே பாருங்க நிறைய அழுக்கு சேர்ந்து போச்சு பாருங்க என்று பஞ்சில் வண்டி வண்டியாக அழுக்கை எடுத்து காட்டுவார் அவரும் ஒரக்கண்ணால் பார்த்து விட்டு இவ்வளவு அழுக்க இருக்கு என்று ஆச்சரியமாக பார்ப்பார்.
காது குடையும் வேலை முடிந்தவுடன் கூலியாக மூன்று படி நெல் அளந்து கொடுப்பார் அந்த தானியங்களை வாங்குவதற்காகவே பிரத்யயோகமான பழைய வேட்டியில் செய்யப்பட்ட துணி பை வைத்திருப்பார்கள். இப்படி ஒரு நாளைக்கு நான்கு ஐந்து பேர்களிடம் காது சுத்தம் செய்வார்கள் எல்லோரிடமும் இதே டயலாக்கும் பஞ்சு நிறைய அழுக்கும் எடுப்பார்கள்.
அவர் வைத்திருக்கும் திரவம் அழுக்கை வெளியே எடுத்துக் கொண்டு வந்து விடுகிறது என்று ஆரம்பத்தில் நினைத்தேன் ஆனால் அவர்களின் கேவலமான தொழில் ரகசியத்தை நண்பன் கூட விளையாட்டு தனமாக கூட சென்றதின் மூலம் தெரிந்துக் கொண்டேன்.
ஒருநாள் காது குடையும் போது அந்த ஆண்டை காது குடையும் சுகத்தில் கண்கள் மூடிக்கிடக்க பஞ்சு சுற்றிய குச்சியை இவனின் பக்கம் வைத்தார். இவன் டவுசர் பாக்க்கேட்டில் கையை விட்டு நகக்கண்களில் பேரீச்சம் பழத்தை கிள்ளி எடுத்து அதை பஞ்சில் ஒட்டினால் எனக்கு இவன் டவுசரில் ஏன் பேரீச்சம் பழம் வைத்திருக்கிறான் என்ற ரகசியமும்,காதில் எப்படி வண்டி வண்டியாக அழுக்கு வருகிறது என்ற அவர்களின் பித்தலாட்ட தொழில் ரகசியமும், இவன் இல்லாமல் அவர் ஏன் எங்கும் காது குடைய தனி ஆளாக போவதில்லை என்ற காரணங்களையும் தெரிந்துக் கொண்டேன்.
இன்றும் கூட பல கிராமங்களில் இதுபோன்று தொழில் செய்பவர்கள் இருக்கிறார்கள்.ஆனால் வயர் கூடைகளுக்கு பதிலாக லெதர் பேக்கும்.பஞ்சுகுச்சிகளுக்கு மற்றாக பட்ஸ்களும் கூலியாக நெல்லுக்கு பதிலாக காசும். (எதை மாற்றினாலும் பேரீச்ச பழத்தை மாற்றவில்லை அதுதான் அந்த தொழிலுக்கு பொருந்தி வரும்)வாய் நிறைய ஏமாற்று பேச்சுமாக திரிகிறார்கள்.
இவ்வாறு காதில் கண்ட திரவத்தை ஊற்றி காது குடைவது தவறானது என்ற விஷயம் கிராமத்து மக்களுக்கு தெரியாதவரை இவர்களின் பொழப்பு நடக்கும் என்று நினைக்கிறேன். கிராமத்து மக்களை விடுங்கள் படித்த அலுவலகத்தில் வேலை பார்க்கின்றவர்கள் சிலர் பேனாவாலும் பென்சிலாலும் காதுக்குள் விட்டு குடையும் போது இவர்களைவிட அவர்கள் பாதுகாப்பாகத்தான் குடைகிறார்களோ என்று நினைக்க தோன்றுகிறது.
கருததுக்கு ஏற்ற தலைப்பு..“
ReplyDeleteவியந்தேன்..
புதிய தகவல்... நன்றி
ReplyDelete////இவ்வாறு காதில் கண்ட திரவத்தை ஊற்றி காது குடைவது தவறானது என்ற விஷயம் கிராமத்து மக்களுக்கு தெரியாதவரை இவர்களின் பொழப்பு நடக்கும் என்று நினைக்கிறேன். கிராமத்து மக்களை விடுங்கள் படித்த அலுவலகத்தில் வேலை பார்க்கின்றவர்கள் சிலர் பேனாவாலும் பென்சிலாலும் காதுக்குள் விட்டு குடையும் போது இவர்களைவிட அவர்கள் பாதுகாப்பாகத்தான் குடைகிறார்களோ என்று நினைக்க தோன்றுகிறது.////
ReplyDeleteஆமா பாஸ் இது பற்றி விழிப்புணர்வு தேவை உங்கள் பதிவு சிறப்பாக இருக்கு
அடப்பாவிங்களா????
ReplyDelete2 அதிர்ச்சி.... ஒன்னு இப்படியும் ஒரு தொழிலான்னு... இன்னொன்னு இதுலையும் ஏமாற்றுவேலையான்னு!!!
விழிப்புணர்வுடன் கூடிய அனுபவ பதிவு பகிர்வுக்கு நன்றி அண்ணா
விழிப்புணர்வுடன் கூடிய அனுபவ பதிவு
ReplyDeleteஸலாமுன் அலைக்கும் யா சகோ.ஹைதர் அலி,
ReplyDeleteஇப்படியும் ஒரு தொழிலா..!
இப்படியும் ஒரு பொழப்பா..!!
அநேகமாக...
இதுபற்றி வலையில் சொன்ன முதல் பதிவு உங்களுடையதாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்..!!!
இதை படிப்போர்...
இனி காது அழுக்கை ஒரு முறை 'சுவைத்து பார்த்துவிட்டுத்தான்' காசு தருவார்களோ..?
எனில்,
உப்புத்தண்ணிரில் ஊற வைத்த பேரிச்சம் பழத்தை எடுத்து போகச்சொல்லுங்கள். 'அதை சுவைத்த' பின்னர் அவர்கள் நம்பிவிடலாம்..!
டிஸ்கி:
'அது' உவர்ப்பாக இருக்கக்கூடும் என்பது ஒரு அனுமானமே..! சுவை பிழைக்கு கம்பெனி பொறுப்பல்ல..!! ஹி..ஹி..!!!
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
ReplyDeleteஅப்பூடியா? உன்மையாகவா? என்ன சொல்றீங்கே? சான்ஸே இல்லை பாஸ் நீங்க சொல்றது என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை இப்புடியுமா? பொழைக்கிறார்கள்?
மக்கள்தான் கவனமாக இருக்கனும்.
ReplyDeleteஅன்பு நண்பர் ஹைதர் அவர்களுக்கு என் அன்பிற்குரிய சலம் அஸ்ஸலாமு அழைக்கும், ஏமாறுகிறவன் இருக்கிற வரைக்கும் ஏமாறுகிறவன் இருப்பன்.இதைப்பற்றி எழுதிய நீங்கள் காதுக்குள்ளே வண்டு எடுக்கிரதைப்பற்றியும் எழுதுங்களேன். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
ReplyDeleteஇப்படியும் ஒரு தொழிலா...
சகோ நான் இப்பதான கேள்விபடுகிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteமும்பையில் இத்தொழில் அதிகம் பேர் செய்துவருகிறார்கள். அப்போதே நினத்தேன் இப்படியும் ஒரு தொழிலா என்று!
சகோதரம் இது தேவையற்ற ஒன்றல்லவா... அங்கே குடைய வேண்டிய அவசியமில்லையே... எல்லாம் இயற்கையாகவே சீர்ப்படுத்தப்படுமல்லவா?
ReplyDeleteஎன்ன செய்வது நம்புறாங்களே
ReplyDeleteஇப்படி பதிவு மூலம் சிலரையாவது சென்றடயட்டும்.நல்ல விழிப்புணர்வு பதிவு
ReplyDeleteஇப்புடியுமா பொழைக்கிறார்கள்?
ReplyDeleteநானும் கூட முதலில் இது நல்லது என்று நினைத்து விட்டேன்....
அறியாத் தகவல்... வித்தியாசமான தகவலும் கூட...
ReplyDelete