Wednesday, November 30, 2011

கொலவெறி பாடலும் மன்மத ராசாவும்...

கொலவெறி பாடலை கேட்டீங்களா..? கேட்டீங்களா..?
என்று எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் பெங்களு(கர்நாடகா)ரை சேர்ந்த முஹம்மது அயாஸ் என்கிற நண்பர் நச்சரித்துக் கொண்டே இருந்தார்.
கனடாவில் மில்லியன் கணக்கில் பார்த்து இருக்கிறார்கள் You Tube,Face Book, இதுலே போய் பாருங்க ஹிட்ஸை காசு வாங்கமாலே அந்த பாடலுக்கு மார்க்கேட்டிங் பண்ணிக் கொண்டிருந்தார்.


இந்த பாடல் வடக்கையும் தெற்கையும் இணைத்து விட்டது என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த நண்பர் சொன்னார். நான் பதிலுக்கு ஆமா
கர்நாடகா,ஆந்திரா,கேரளா போன்ற அனைத்து மாநிலத்தாரின் மனதையும் இந்த பாடல் கொள்ளைக் கொண்டு இணைத்து விட்டதால்.அனைத்து மாநில நதிகளையும் தேசியமயமாக்க போகிறார்கள் இனி தமிழகத்திற்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது இனி காவிரி தங்குதடையின்றி தமிழகத்திற்காக திறந்து விடப்படும் முல்லை பெரியாறு அணையை மாற்றி கட்டும் யோசனையை கைவிடப்பட்டது அப்படித்தானே என்றேன் அவரிடம் பதிலில்லை.


சூர்யா ஜொதிகா,செல்வராகவன் சோனியா அகர்வால் இவர்களின் திருமணத்தை பத்திரிக்கைகள் தெற்கையும் வடக்கையும் இணைக்கும் திருமணங்கள் என்ற ரீதியில் எழுதப் படுகின்ற கவர்ஸ்டோரி செய்திகளை தொடர்ச்சியாக படிப்பதினால் எற்படுகின்ற சிந்தனை இழப்பு இது. 


கழுதைக்கு கல்யாணம் செய்து வைத்ததால் மழை பொத்துக் கொண்டு ஊத்தியதைப் போல!


இந்த காதுலே வாங்கி அந்த காதில் விட்டுட்டு போகிற பாடலுக்காக இவ்வளவு கொலவெறியான ஆய்வு தேவையா? “கொசு அடிக்க குண்டாந்தடியா?” இது போன்ற பாடல்கள் கொசுவுக்கு நிகரானவை என்பதெல்லாம் உண்மைதான்.ஆனால் கொசுவின் வலிமையை அதன் தோற்றத்தை வைத்தா கணிக்க முடியும்? அது பரப்பும் தொற்று நோயல்லவா அதன் உண்மையான வலிமை.

நன்றாக நினைவிருக்கிறது 2003 வருட இறுதியில் ஹிட் ஆன மன்மத ராசா படப் பாடல் திரும்பிய திசையெல்லாம் ஒலித்துக் கொண்டிருந்தது கொலவெறி பாடலை பாடிய தனுஷ் அன்று கொலவெறியோடு ஆடிய பாடல் அது. பல தளங்களில் அந்தப் பாடல் அக்கால பகுதியில் பல அதிர்வுகளை ஏற்படுத்திதை யாரும் மறுக்க முடியாது.
காதல் காம வெறியோடு அதி வேகமான இசையுடன் புழுதி பறக்க ஆடுவதற்காக தெர்ந்தேடுத்த இடம் (லொகேஷன்) எந்த இடம் தெரிகிறதா? (அதை தெரிந்து என்ன ஆகப் போகுது என்கிறீர்களா?) இந்தியாவின் கோலார் தங்க சுரங்கம்,உலக அளவில் 2-வது ஆழமான சுரங்கம் முதல் ஆழமான சுரங்கம் தென் ஆப்பிரிக்காவில் உள்ளது.


இவர்கள் இந்த இடத்தில் காமவெறியோடு ஆடுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே சுரங்க நிறுவனம் நஷ்டத்தில் செயல்படுவதாக அறிவித்து ஆயிரகணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து இதே பகுதியில் அவர்களை ஒருவேளை உணவு இல்லாமல் அலைய விட்டது.அதில் பெரும்பான்மை தொழிலாளர்கள் தமிழர்கள் என்று வெளிவந்த செய்திகளை இந்த பாடல், ஆடல் பற்றிய முக்கியத்துவமற்ற செய்திகள் ஆக்கிரமித்து கோலார் தங்க சுரங்கத்தை விட ஆழமான பள்ளத்தில் குழி தோண்டி புதைத்தன.

நிழலை பார்த்து நிஜத்தை விளங்கி நகர்ந்து போகும் வரை பிரச்சனையில்லை
ஆனால் நிஜங்கள் நிழல்கள் போல் மாற ஆசைப்படுவது ஆபத்தானது. அந்தந்த பட நாயகனாக நாயகியாக தன்னை எண்ணிக் கொள்வது அதேப்போன்று அசிங்கமாக பொதுவில் ஆடுவது இது ஒருவகையான மனநோய் அல்லவா?


மன்மத ராசா பாடலை பார்த்த பொற்றோர்கள், ஆசிரியர்கள் இதே போன்று ஆடை உடுத்தி தன் மகனை, மகளை ஆடவைத்து பார்ப்பதையே லட்சியமாக கொண்டதை மறக்க முடியவில்லை 2003 வருட அனைத்து ஸ்கூல் ஆண்டு விழாவிலும் இந்த ஆடையே அணிந்துக் கொண்டு அசிங்கமாக ஆடாத மாணவ மாணவிகள் பாவம் செய்தவர்கள். 

நடிகன் நடிகைகளை கெட்ட முன்மாதிரியாக கொண்டு அவர்களின் நடை உடை, ஆபாச காட்சிகள் இவற்றை சிறு வயதில் இருந்த உணவோடு சேர்த்து ஊற்றி வளர்த்து விட்டு ஒரு கட்டத்தில் அவர்கள் காமத்தை திருடும் திருடா திருடியாக மாறி ஒடிப் போகும் போது. சமூக மானம் போயிடுச்சு, குடும்பம் மானம் போயிருச்சுன்னு ஒப்பாரி வைத்து என்ன பலன்.?!

அதிலும் இந்த இலங்கை ஈழதமிழ் சமூகம் படத்திற்கும் பாடலுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் இருக்கே! 1999ல் எனது ஊர் பக்கத்தில் மண்டபம் அகதிகள் கேம்பில் உள்ள ஈழத்தை சேர்ந்த நண்பனின் காதலி யாழ்ப்பானத்தில் இருந்தார் அவரிடமிருந்து இவனுக்கு கடிதம் வரும்.எப்படி தெரியுமா?

அன்புள்ள அத்தான் அவர்களுக்கு தங்கள் அனுப்பிய கடிதமும் காதலுக்கு மரியாதை பாட்டு புத்தகமும் பெற்றுக் கொண்டேன் அடுத்த முறை விஜய்யின் புதிய பாடல் புத்தகங்களை அனுப்பி தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.ரொம்ப முக்கியம் அங்கு வாழ்வா சாவான்னு போராட்டம் நடந்துகிட்டு இருக்கு மூதேவி நீ இங்கு அகதியாக அடிப்படை வசதியில்லாமல் இருக்கே இதுலே பாடல் ஒரு கெடான்னு வாய் விட்டு கேட்டு இருக்கிறேன் அதற்கு என்ன மச்சான் செய்ய சொல்றே அவ விருப்பட்டு கேக்குற மறுக்க முடியுமா? என்பான்.

 சினிமாபாடல் ஆடல் இவைகளுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை புறக்கணிக்கும் வரை இந்த சமூகம் மட்டுமல்ல எந்த சமூகமும் வெளங்கவே வெளங்காது எப்புடியும் நாசமாக போங்க... என்று திட்டி இருக்கிறேன்.


இது போன்ற பாட்டுப் புத்தகங்கள்,பாட்டுப் புத்தக கடைகள் ஒழிந்து விட்டன ஆனால் அந்த இடத்தை இணைய தளங்களும் பிளாக்கர்களும் தத்தேடுத்து அறிவியல் உச்சக் கட்ட தொழிற் நுட்பத்தை பயன்படுத்தி அழகான வடிவங்களில் டிசைன் பன்னி செவ்வனே தங்களின் பணியை செய்துக் கொண்டிருக்கிறார்கள்.  “எந்த சமூகம் இசையில் லயித்து முழ்கி போகிறதோ அந்த சமூகத்திற்க்கு மீட்சி என்பதே கிடையாது என்று சொல்லுகிற சீன தத்துவம் நினைவுக்கு வருகிறது.”


அவர்களின் தலைவனின் புகழ்படுவதற்கு கூட டப்பாங்குத்து பாடலின் துணையை நாடும் அவலம் இங்கு கணொளி சாட்சியாக.


இசையால் எவ்வளவு பாதிப்புகள்

1. மனிதன் இசையை கேட்கும் போது அவனை அறியாமலேயே ஒருவிதமான மதி மயக்கத்தில் ஆழ்ந்து விடுகிறான். இறை சிந்தனை மறந்து போகிறது


2. இசையை ரசிப்பவர்கள் குடிபோதையில் இருப்பவர்களுடைய மனோ நிலையை பெற்றுவிட்டார்களோ என்று கூட சில நேரம் எண்ணத் தோன்றிவிடுகிறது அந்த அளவுக்கு அது மனிதனை குறிப்பாக இளைஞர்களை சீரழிக்கிறது

3. இன்றைய இளைஞர்கள் சினிமா, டான்ஸ், கூத்து கும்மாளம் என்று செல்வதற்கு எது மூலகாரணமாக இருக்கிறது இசைதானே! ! அந்த இசையைக் கொண்டுதானே பல்வேறு பாவங்கள் அரங்கேற்றப்படுகின்றன.

4. இசையைக் கேட்பதால் மனம் நிம்மதியடையுமா? என்றால் நிச்சயம் இல்லை. மாறாக இசையைக் கேட்பதால் நரம்புகள் பாதிப்படைதல் தூக்கமின்மை அமைதியின்மை ஆகியவை தான் ஏற்படுகின்றன.

5. செல்போன், எஃப்.எம். ரேடியோ அல்லது இதர உபகரணங்களைக் கொண்டு ஏதாவது இசையை ரசித்துக் கொண்டே படுப்பது, நடப்பது, வாகனம் ஓட்டுவது இன்று அன்றாட வாடிக்கையாகிவிட்டது. இதனால் அதிக டெசிபல் அல்லது நிறுத்தாமல் (Non stop) பாடிக் கொண்டிருக்கும் ரேடியோ அதிர்வலைகளால் காது நரம்புகளுக்கு நல்லதல்ல என்று டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள்.

6. ஹெட்போனை அதிகளவில் பயன்படுத்துவதால் தூக்கம் கெடுதல், தலைவலி, காதுவலி போன்றவை சாதாரணமாக ஏற்படும் என்றும் தெரிய வந்துள்ளது.

தற்போது ஏழைகளை சாகடிக்கும் விலைவாசி பிரச்சினை,கூடாங்குளம் அணுமின் நிலைய பிரச்சனை இவை பற்றி எழுதுகிற பதிவுகளை பதிவளர்களை புறக்கணித்து விட்டு இந்த பாடலுக்கு சர்வதேச அளவில் ஐம்பது இலட்சம் ஹிட் கொடுப்பது ஆபத்தானதாக தெரியவில்லையா? இந்த பாடலுக்கு கிடைத்த ஊடக வரவேற்பு சமகால சமூக அவலங்களுக்கு கிடைப்பதில்லையே ஏன்?

உணவு,உடை போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் போராடிக் கொண்டு இருந்த (இருக்கிற) காலங்களில் யாரும் கவிதை, கதை, பிளாக் நடத்தி புகழ் பெற வேண்டுமேன்பதை விருப்புவது இல்லை வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் வாழ்க்கை போராட்டத்திற்கே நேரம் சரியாக இருக்கிறது என்பதாக கூட வைத்துக் கொள்ளலாம்.

நல்ல உணவு,உடை, வேலைவாய்ப்பு வசதியான வாழ்க்கை போன்ற விஷயங்கள் கைகூடிய பிறகு அடுத்த கட்டமாக கவிதை,கதை, பிளாக்கர் புகழ் இவைகளை நாடி மனம் செல்லும் இவை தவறில்லை பழையதை மறக்காமல் நினைவு வைத்து சமகால சமூக பிரச்சினைகளை முன்னிறுத்தி போராடும் வரை.

கொலவெறி பாடலைப் பற்றி ஆளுக்காளு பதிவு போட்டுக் கொண்டிருக்கிறார்கள் அந்த உன்னதமான பணியில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன் இதோ அந்த பாடலுக்கான கணொளி என்ற ரீதியில் பதிவு இடுகிறார்கள் நானும் அந்த ஜோதியில் கலந்து அது சம்பந்தப் பட்ட தலைப்பில் எழுத விட்டால் இந்த பாவத்தை எங்கு கொண்டு போய் தொலைப்பது.என்ற கவலை ஆட்கொள்ளவே இப்பதிவு.

16 comments:

 1. மாப்ள நடத்துய்யா!

  ReplyDelete
 2. சொல்லப்பட்டவை யாவும் நச்!

  ReplyDelete
 3. ஹைதர் அலி! சலாம் அலைக்கும்! பாட்டை, இசையை விமர்சிக்கிறேன் என்ற போர்வையில், பல Youtube வீடியோக்களை வெளியிட்டு போகிற வழிக்கு புண்ணியம் தேடிக் கொண்டீர்கள்... :-) :-)

  Keep it up

  ReplyDelete
 4. அன்பரே!
  ஏதோ ஒரு நாய் குரைத்திருக்கிறது; கழுதை ஒன்று கத்தியிருக்கிறது. ஏதுமறியா ஒரு கூட்டம் அதைக் கேட்டிருக்கிறது. அதை நீங்களும் இசையெனும் பேரின்பத்துக்குள் சேர்த்து விளம்பரம் கொடுக்கலாமா?
  இசையால் ஏற்படும் விளைவுகள் என நீங்கள் குறிப்பிடும் முதல் நான்கும், உங்கள் கருத்தா? பொதுக் கருத்தா? அதை உணர்ந்து எழுதியுள்ளீர்களா?நீங்கள் நஸ்ரத் வேத் அலி கான் எனும் பாகிஸ்தான் பாடகரின் இசை கேட்டுள்ளீர்களா? சேக் சின்ன மொலானாவின் நாதஸ்வர இசை கேட்டுள்ளீர்களா?,பிஸ்மிலா கானின் செனாய் வாத்திய இசை கேட்டுள்ளீர்களா?, இஸ்லாமிய உலகில் ஒலிக்கும் தெய்வீக இசைகளை அனுபவித்துள்ளீர்களா? திருக்குரான் ஓதும் போது ஏற்படும் சொல்லுக் ஒப்ப ஏற்ற இறக்கங்களால் உண்டாகும் சிந்தை கவரும் இசையை ரசித்துள்ளீர்களா.
  அந்த இசை தரும் இறை அனுபவத்தை அனுபவித்துள்ளீர்களா?
  நல்லிசை கேழுங்கள்.
  நிறைய எழுதலாம்... வேண்டாம்.
  ஏனைய கருத்துக்களுடன் நான் மிக உடன் படுகிறேன்

  ReplyDelete
 5. கொலைவெறி(செய்யும்)ப்பாடல்களை
  பாடல்களை தவிர்த்து நல்ல மெல்லிசை கேட்பதில் தவறில்லை என நினைக்கிறேன் சரியா நண்பரே?

  ReplyDelete
 6. ஸலாம்
  எனக்கு என்னா எழுதுவது என்று தெரியவில்லை ...
  இருந்தாலும் எழுது கிறேன் ...
  மன அமைதியை பற்றி பேசீருந்தீர்கள்...
  // 4. இசையைக் கேட்பதால் மனம் நிம்மதியடையுமா? என்றால் நிச்சயம் இல்லை. மாறாக இசையைக் கேட்பதால் நரம்புகள் பாதிப்படைதல் தூக்கமின்மை அமைதியின்மை ஆகியவை தான் ஏற்படுகின்றன. //

  குரான் சொல்லுகிறது
  13:28. (நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!

  நல்ல இசையா ..... ????

  என்னத்த சொல்றது .....

  ReplyDelete
 7. நல்ல பாடல்கள் கேட்டுப்பாருங்க. உங்க கண்ணோட்டமே மாறிடும்.

  ReplyDelete
 8. யோகன் பாரிஸ் அவர்கள் கருத்துக்களுடன் வரிக்கு வரி உடன்படுகிறேன். இசையை இவர்கள் தவறான வழிக்கு உபயோகப்படுத்தினால், அதற்க்கு இசையை குற்றம் சொன்னால் எப்படி? அதுவும் இஸ்லாமிலேயே எவ்வளவோ தெய்வீக இசை தொகுப்புகள் இருக்கும்போது! (சுபி இசையை சொல்கிறேன்)

  மற்றபடி, நீங்கள் சொன்ன மற்ற கருத்துக்களுடன் உடன் படுகிறேன்.

  ReplyDelete
 9. அபு ஃபைஜுல்December 1, 2011 at 9:55 AM

  அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி பரகாதஹூ.
  சகோதரர் ஹைதர் அருமையான பதிவு தனது சிறு குழந்தைக்கு சினிமா பாடலை போட்டு அதற்கு ஆட சொல்லும் தாய்மார்கள் உண்டு, அவர்கள் சிந்திக்க வேண்டும் குழந்தைகள் பாவியாக நாம் தான் காரணம் என்பதை.அனைத்து கல்வி நிலையங்களுக்கும் அனுப்புங்கள் முடிந்தால்.அன்பு நன்பரே பாடலை விமர்ச்சித்தை பாராட்டலாம் அதேபடலை நீங்ளும் போட்டு காட்டனுமா ? முன்பு ஸ்ரையாவை விமர்ச்சித்து அவரின் அந்த கோலத்தின் படத்தை போடாதபத்திரிக்கை இல்லை ஆனால் ஒரு பத்திரிக்கை மட்டும் விமர்ச்சித்து எழுதி ஐந்து வயது சிறுமி போடும் உடையை அணிந்து வந்தார் என்று போட்டு போட்டோவை போடாமல் விமர்சனம் செய்தார்கள் அதுபோல் செய்யலாமே.

  ReplyDelete
 10. சலாம் !
  முஸ்லிம்கள் இசைகிரார்கள் என்பதற்காக இசை கருவிகளின் இசையை ரசிப்பது நல்லது என்றாகிடாது ..ஆனால் , நல்ல கருத்துகளுடன் வரும் குரலிசை முஸ்லிம் அல்லாதவர் பாடினாலும் ரசிப்பது தீங்காஹிடாது . நபியவர்களும் சிறந்த கருத்துகள் அமைந்த குரலிசையை ரசித்துள்ளார்கள் ..

  ReplyDelete
 11. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  என்ன சொல்ல! வழக்கம் போல நச்! பதிவு ஆனா...

  முன்னாடியே கேட்கணும்னு இருந்தேன்., பட் சில பின்னூட்டங்கள் இசை ஆதரவு + எதிர்ப்பு நிலையில் பதிவிடப்பட்டிருப்பதால்., அதற்கான உங்களின் பதில்கள் எப்படி இருக்குனு பார்த்துட்டு இன்ஷா அல்லாஹ் தொடர்கிறேன்

  ReplyDelete
 12. அஸ் ஸலாமு அலைக்கும் பாய்,

  மாஷா அல்லாஹ் மிக சிறந்த பதிவு. எண்ணங்களை தெளிவாக சொல்லியுள்ளீர்கள். இதை நான் எழுதுவது கொஞ்சம் முரண்தான், ஏனெனில் நானும் இசைக்கு விசிறிதான். இன்னமும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன் அதை விட்டு வெளியே வர...இன்ஷா அல்லாஹ்.

  ஆனால் இசையை ரசிப்பது வேறு, அதனை வெறியாக பார்ப்பது வேறு. இங்கே நீங்கள் கூறியுள்ளது நம் மக்க்ளில் இப்பொழுது பெருகிக் கொண்டிருக்கும் இசை வெறியைப் பற்றி என்பது புரிகிறது. அந்த வெறி வந்ததால்தான் அந்த பிள்ளைகளை அப்படி ஆட விட்டு காண முடிகிறது. அதே போல அபப்டி ஆட தெரியாவிட்டால் திட்டவும். அந்த எண்ணம் ஆட்டத்தோடு நில்லாமல் பரவினால், ஓலமும் செய்ய தூண்டுகிறது. சில வீடியோக்களை சொன்னதோடு விட்டுவிட்டு பதிவில் சேர்க்காமல் விட்டிருக்கலாம். எனினும், மக்களின் எண்ணம் எதை நோக்கி இப்படி வீழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டு,

  சில நேரம் நானும் எதையேனும் ஹம்மிங் செய்யும்போது ஹதீத்தா / பொன்மொழியா நினைவிலில்லை... ஆனால் படித்த அந்த சொடர் நினைவுக்கு வரும். “இசையும் குர்’ஆனும் ஒரே உள்ளத்தில் தங்காது, ஒன்றை மற்றொன்று விரட்டி அடிக்கும்” என.... அதை நினைத்தே இன்னமும் அந்த சுவடுகளிலிருந்து மீள வழி தேடுவோம்.... இன்ஷா அல்லாஹ்.

  ReplyDelete
 13. hii.. Nice Post

  For latest stills videos visit ..

  www.chicha.in

  www.chicha.in

  ReplyDelete
 14. கடைசியில் என்னையும் அரசியல் வாதி அகிடான்களே ......... :)

  ReplyDelete