Wednesday, December 28, 2011

அவன் என்னை திட்டவில்லை...


ஒரு மனிதனின் சிகரத்தை
தம்மால் எட்ட முடியாதபோது
மக்கள் அவன் மீது பொறாமை கொள்கிறார்கள்.
அவர்கள் அவனது எதிரிகள்
அழகானப் பெண்களின் சக்களத்திகளைப் போல
அவர்கள் பொறாமையால் வெறுப்பால்
அவனைக் கீழ்த்தரமாகப் பேசுவார்கள்

அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள
அருட்கொடைகளுக்காக
அவர்கள் பொறாமைக்கு ஆளாகிறார்கள்

அதற்காக இறைவன்
அந்த அருட்கொடைகளை
அவர்களிடமிருந்து பறித்து விடமாட்டான்.

வீணர்களின் அநீதி குறித்து
நீ முறையிடுகின்றாய்
ஆனால்,சாதனையாளர்கள் எவரும்
பொறாமைக்காரர்களின் பிடியிலிருந்து தப்பியதில்லை
பொறாமையின் தொடர் பிடியில் சிக்கித் தவிக்கும்
மதிப்புக்குரிய நண்பனே!
கீழ்த்தரமானவன்
பொறாமை கொள்ளப்படமாட்டான்
என்பதை புரிந்துக் கொள்!

ஒருவன் புகழின் வானத்தை தொட்டால்
நட்சத்திரங்கள் எண்ணிக்கையில்
எதிரிகள் இருப்பார்கள்
அவர்கள் முழுப் பலத்தைப் பயன்படுத்தி
அவன் மீது அம்பெய்வார்கள்
ஆனால்,
அவர்களால் அவனது எல்லையைத்
தொட முடியாது

சிறுவன் கடலில்
கல் எறிவதால்
கடல் காயமடையாது

என்னைத் திட்டி கொண்டிருக்கும்
ஒரு முட்டாளை நான் பார்த்த போது
‘அவன் என்னைத் திட்டவில்லை’எனக் கூறி
வேகமாக நடந்து சென்றேன்.


டிஸ்கி
பொறாமைக்காரர்களும் தவறானக் கொள்கை உடையவர்களும் உங்களை விமர்சித்தால், அதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள். ஏனெனில்,
பொறாமையால் அவர்கள் உமிழ்கின்ற வார்த்தைகளையும் விமர்சனங்களையும் நீங்கள் தாங்கிக் கொண்டால் உங்களுக்கு நன்மை வழங்கப்படும். மேலும் அவர்களது விமர்சனம் உங்களது மதிப்பை உயர்த்தும். உங்களை உலகிற்கு அடையாளப்படுத்தும். எப்போதுமே சாதாரணமானவர்களைப் பார்த்து பிறர் பொறாமை கொள்வதில்லை.
செத்த நாயை மக்கள் உதைப்பதில்லை.

15 comments:

  1. என்னைத் திட்டி கொண்டிருக்கும்
    ஒரு முட்டாளை நான் பார்த்த போது
    ‘அவன் என்னைத் திட்டவில்லை’எனக் கூறி
    வேகமாக நடந்து சென்றேன்.

    ReplyDelete
  2. என்னைத் திட்டி கொண்டிருக்கும்
    ஒரு முட்டாளை நான் பார்த்த போது
    ‘அவன் என்னைத் திட்டவில்லை’எனக் கூறி
    வேகமாக நடந்து சென்றேன்.
    உண்மை நன்றி

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...
    பதிவு அருமையென்றால் டிஸ்கி அதைவிட அருமை

    ReplyDelete
  4. அருமை! இதே பொறுமை நம் எல்லோருக்கும் எப்போதும் வாய்க்க இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  5. மாப்ள நாம் இந்த உலகுக்கு வந்த வேலை முடிந்த உடன் போக வேண்டியது தான்...இதில் எவரும் நமக்கு எதிரிகள் இல்லை!..இது என் தாழ்மையான கருத்து..!

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும்,
    அன்பின் சகோதரர் அண்ணன் ஹைதர் அலி,
    கவிதைகள் என்றாலே அலங்கார வார்த்தைகள் இருக்கும். நெஞ்சை மயக்கும் வார்த்தை ஜாலங்கள் இருக்கும். இது எதுவுமின்றி வெறும் நிகழ்கால உண்மைகளை போட்டுடைத்த படி செல்கிறது உங்களின் இந்த கவிதை. காத்திரமான பதிவுகளில் மட்டுமின்றி கவிதைகளினூடாகவும் உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  7. சலாம்!

    கவிதை அருமை. நன்றாக வந்துள்ளது.

    ReplyDelete
  8. ஒருவன் புகழின் வானத்தை தொட்டால்
    நட்சத்திரங்கள் எண்ணிக்கையில்
    எதிரிகள் இருப்பார்கள்
    அவர்கள் முழுப் பலத்தைப் பயன்படுத்தி
    அவன் மீது அம்பெய்வார்கள்
    ஆனால்,
    அவர்களால் அவனது எல்லையைத்
    தொட முடியாது

    பிரச்சினைகளின் மையம் இதுதானோ?

    ReplyDelete
  9. கரையில் இருந்து ......December 29, 2011 at 8:57 AM

    அருமை ஷஹோதரா !!
    !அருமையையும் பெருமையும் கலந்த பதிவு .....

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    பொ'றா'மை ,பொ'று'மை இவ்விரு சிறு வார்த்தைகளுக்கு மத்தியிலுள்ள 'பெரிய' வித்ததியாசத்தை

    எளிதாக
    தெளிவாக - அதுவும்
    நாசூக்காக...

    விளக்கியமைக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

    ReplyDelete
  11. சிறுவன் கடலில்
    கல் எறிவதால்
    கடல் காயமடையாது

    என்னைத் திட்டி கொண்டிருக்கும்
    ஒரு முட்டாளை நான் பார்த்த போது
    ‘அவன் என்னைத் திட்டவில்லை’எனக் கூறி
    வேகமாக நடந்து சென்றேன்.
    உண்மைதான் இருந்தாலும் மனிதர்கள் நாம்
    கொஞ்சம் வலிக்காதான் செய்கிறது ...
    தவிர்ப்பதை தவிர்த்தால் நலம் தான் .அல்லாஹ் போதுமானவன்

    ReplyDelete
  12. கடைசி வரி என்னவோ செய்கிறது....

    ReplyDelete
  13. //ஆனால்,சாதனையாளர்கள் எவரும்
    பொறாமைக்காரர்களின் பிடியிலிருந்து தப்பியதில்லை//

    இது கண்கூடு, அருமையாக செதுக்கியுள்ளீர்கள்!

    ReplyDelete
  14. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
    கவிதை நடையில் ஆழமான நல்ல கருத்துக்கள்,
    //சிறுவன் கடலில் கல் எறிவதால் கடல் காயமடையாது// அருமையான வரிகள்.... தொடரட்டும் உங்கள் முயற்சி இன்ஷா அல்லாஹ் ..

    எங்க தளத்திற்கும் நீங்க வாங்க...தளத்தில் உறுபினராக ஆகுங்கள்...

    www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ......உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-3), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..இன்னும் பல. அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

    ReplyDelete