Thursday, August 23, 2012

மது ஒரு பொதுத்தீமை (மீள் பதிவு)

மிழின் நீதி நூலான 'திரிகடுகம்' என்ற நூலில் மது குடிப்பவன் குறித்து கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:

"உறவினர்களின் பாதுகாப்பிற்குப் பயன்படாத செல்வம்,
பயிர் விளைந்த காலத்தில் அதைப் பாதுகாக்காதவனின் நிலம்.
இளம் வயதிலேயே கள்குடித்து வாழ்கிறவனின் குடிபிறப்பு"

இம்மூன்றுமே கெட்டுவிடும் என்கிறது அந்தத் திரிகடுகம் பாடல்.

மதுவால் புத்தி பேதலித்தவர்கள் எத்தனைப்பேர்.....?
மதுவால் தற்கொலை செய்தவர்கள் எத்தனைப்பேர்....?
மதுவால் பிறரைக் கொண்றவர்கள் எத்தனைப்பேர்....?

ஒய்வறியாமல் உழைத்து உருக்குலைந்து குடிபோதையில் தடுமாறும் கணவன்மார்களின் கால்களில் மிதிபட்டு, பசி மயக்கத்தில் தள்ளாடும் பிள்ளைகளுக்கு சோறிடும் பொறுப்பைச் சுமந்தபடி அன்றாடம் வாழ்க்கையுடன் போராடும் இலட்சக்கணக்கான தமிழக கிராம பெண்களின் அவலம் உங்களுக்கு தெரியுமா?

ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டிய ஆட்சியாளர்கள், குடும்பத்தலைவனை குடி பழக்கத்திற்கு அடிமையாக்கி, குடியானவனை கொன்று விட்டு, அவனது மனைவிக்கு விதவை உதவித்தொகை வழங்கி வருகின்றனர். இது அந்த ஏழைக் குடியானவன் இதுவரை அரசுக்குச் செலுத்தி வந்த டாஸ்மாக் கப்பத்துக்கு வழங்கப்படும் குடும்ப ஒய்வூதியமா என்பதை இந்த அரசு விளக்குமா?

தமிழகத்தில் ஏற்கனவே 6 சாராய ஆலைகளுக்கு அனுமதி இருந்த நிலையில், இதே உள்துறை, மேலும் 8 ஆலைகளுக்கு அனுமதி அளித்து, இனி மொத்த 14 ஆலைகள் இரவும் பகலும் சாராய உற்பத்தி செய்து, தமிழக ஆண்மக்களின் வாய்களில் மதுவைத் திணித்துவிட்டு.அப்புறம் என்ன மயி.....க்கு மது வீட்டுக்கும், நாட்டுக்கும், உயிருக்கும் கேடு என்று எச்சரிக்கை செய்கிறது?

குடிபோதையில் வீட்டிற்கு வராமல் தன் மனைவி குழந்தைகள் வீட்டில் என்னவானார்கள் என்பதைப்பற்றி கூட கண்டுக்கொள்ளாத அவர்களின் பாதுகாப்பு குறித்துக்கூட கவலைப்படாத கணவன்மார்கள்,மதுவால் தன் மகளிடம் தகாத முறையில் நடக்கும் தந்தை, தன் மருமகளிடம் மப்பில் மதி கேட்டு நடக்கும் மாமனார், தன் தாய் மது அருந்த காசு தரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக கொலை செய்ய துணியும் மகன்.....இப்படி மது பழக்கம் கருவையே கருவருக்கின்றது.
மது அருந்தும் தனிப்பட்ட மனிதனோடு அதன் பாதிப்பு நின்றுவிடுவதில்லை. ஆனால் அது அருந்தியவனின் மனைவி, பிள்ளைகள், குடும்பம், வசிக்கும் பகுதி என பாதிப்பின் வலை விரிந்துகொண்டே செல்வதுதான் போராபத்து. சமூகத்தின் பொருளாதாரத்தையும், பண்பாட்டையும் ஒருசேர குழித்தோண்டிப் புதைக்கும்.

எனவே தான் மதுவை ‘தீமைகளின் தாய்’ என்று இஸ்லாம் கூறுகிறது.

இந்த மதுவை குறித்த சிறு வரலாற்றுப்பார்வை:

மதுவைக் காய்ச்சி வடிகட்டும் முறை (Distillation) அன்றைய அரேபிய, பாரசீக, ரோம சாம்ராஜ்யங்களில் நிலவி வந்தது. இதில் ஒயினை விடவும் கூடுதல் போதை தரும் ‘அல்-கூகுல்’ எனும் திரவத்தைக் கண்டு பிடித்தவர் ஜாபர் இப்னு கையாம் என்பவர். இவர் ஒரு வேதியல் அறிஞர். இந்த அல்-கூகுலே பிறகு அல்கஹால்
 என்று அழைக்கப்பட்டது. 

ஜாபர் இப்னு கையாம் அதை மருந்தாகத்தான் பயன்படுத்தினார். அவரது நோக்கமும் அதுவே. பிறகு 13-ம் நூற்றாண்டில் இத்தாலிமாண்ட் பெல்லியர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர்னால்ட் வில்லோனோவா என்பவர்தான் அதை மதுவாகவும் பயன்படுத்தலாம் என்று கண்டறிந்தார். இன்றைய நவீன மது வகைகள் தோன்றிய வரலாறு இதுவே.

தமிழகத்தில் சங்க காலத்திற்கு முன்பே மதுவை முறையாக அறிமுகப்படுத்தியவர்கள் ஆரியர்கள்தான். கைபர், போலன் கணவாய் வழியாக வரும்போதே சோமபானம், சுரபானம் போன்ற மது வகைகளையும் கையில் கொண்டு வந்தார்கள். மது அருந்தாததையே அடையாளமாகக் கொண்டு அசுரர்கள் என்று தமிழரை அழைத்தார்கள். சுரபானம் அருந்துகின்ற ஆரியர்கள் சுரர்கள் என்று அழைக்கப்பட்டு. சுரபானம் அருந்தாத திராவிடர்கள் அசுரர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டார்கள்.
ஆனால் இன்று தமிழர்கள், திராவிடர்கள் என்று சொல்லப்படுகின்றன தமிழகத்தின் நிலை என்ன தெரியுமா? சில புள்ளி விபரங்களை பார்ப்போம்.

1.குவார்ட்டர் கட்டிங், சைட் டிஷ் போன்ற அதிமுக்கியமான தலைப்புகளில் சினிமா படங்கள் தயாரிக்கப்படுவது இங்கே தான்.

2. இன்று இந்தியாவில் மிக அதிகமாக மது அருந்துபவர்கள் உள்ள மாநிலம் தமிழகம். இங்கு 13 வயது சிறுவர்கள் கூட குடிகாரர்களாக இருக்கிறார்கள்.

3. தமிழகத்தில் குடிகாரர்களின் எண்ணிக்கை ஒரு கோடி. அவர்களில் 20 விழுக்காட்டினர் குடியைவிட்டு மீளமுடியாத அளவுக்கு அடிமைகள்.

4.தமிழகத்தில் அன்றாடம் மது அருந்துபவர்களில் 49 இலட்சம் பேர் 13 முதல் 28 வயதை சேர்ந்தவர்கள்.

5.மிக அதிகமான சாலை விபத்துக்களைக் கொண்ட மாநிலம் என்ற பெருமை தமிழகத்தையே சேரும். ஒராண்டில் நடக்கும் 60,000 சாலை விபத்துகளுக்குப் பல்வேறு காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் இருக்கலாம். ஆனால் 60 விழுக்காடு சாலை இறப்புகளுக்குக் குடித்துவிட்டு ஓட்டுவதே முதன்மைக் காரணம்.

6.மதுபான விற்பனையால், ஆண்டு தோறும் தமிழக அரசுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. தமிழக அரசின் சொந்த வருவாயில், கிட்டதட்ட 30 சதவீத அளவுக்குச் சாராய விற்பனையில் இருந்து கிடைக்கும் நிலை.

7.கிராமப் புறங்களில் உள்ளவர்கள் தங்கள் வருமானத்தில் 24 சதவீதத்தையும், நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் 32 சதவீதத்தையும் மதுபானத்துக்காக செலவிடுகிறார்கள்.

நமது எதிர்கால சமூகத்தை நினைத்தால் பயமே ஏற்படுகிறது.

டாஸ்மாக் குடிவெறியில் மனைவி, மகனை 


கொன்ற விவசாயி

போதையில் தடுமாறும் தந்தை
போதையில் பொது இடத்தில் போலீஸ்

மாணவர்கள் எதிர்கால இந்திய எங்கே
நிற்கிறது பார்த்தீர்களா?
சத்தியமா இது திருவிழா கூட்டம் இல்லீங்கே

போதை என்பதே விஷம் தான். அது எந்த வடிவத்தில் சமூகத்தில் நடமாடினாலும் சரி. இந்த பொதுத்தீமையை எதிர்த்துப் போர்த்தொடுப்போம். வைரஸ் காய்ச்சலை விட மிக வேகமாக பரவி வரும் இந்த போதைக் கலாச்சாரத்தை அழிக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. இதிலிருந்து நாம் நழுவினால், வருங்கால தலைமுறையினருக்கு பதில் சொல்ல வேண்டியது வரும்.

14 comments:

  1. குடிபோதையில் ரூ.200 கடனுக்காக நண்பனைக் குத்திக் கொன்ற வாலிபர்: மக்கள் மறியல்

    நெல்லை: பாளையங்கோட்டை அருகே 200 ரூபாய் கடனுக்காக கூலித் தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முருகன். அவரும் புதுக்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரும் நண்பர்கள். ஆறுமுகத்திடம் முருகேசன் 200 ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

    நேற்று இருவரும் பாரில் அமர்ந்து மது அருந்தியபோது ஆறுமுகம் கடனை திருப்பிக் கேட்டார். முருகேசன் பிறகு தருவதாக கூறியதும் அவர் சமாதானம் அடைந்தார். ஆனால் மீண்டும் முருகேசன் வீட்டுக்கு வந்து கடனை திருப்பித் தருமாறு வற்புறுத்தி தகராறு செய்த ஆறுமுகம் திடீரென முருகேசனை கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு ஓடிவிட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த முருகேசனை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அவர் வழியிலேயே இறந்தார். இந்த சம்பவத்தைக் கண்டித்து நேற்று இரவு தெருமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ஜெயபாலன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குற்றவாளியை கைது செய்வதாக கூறியதும் அவர்கள் கலைந்து சென்றனர்.

    http://tamil.oneindia.in/news/2012/08/23/tamilnadu-youth-stabs-friend-death-rs-200-loan-160117.html

    'மப்பு' ஓவராகி 65 வயது மாமியாரை பலாத்காரம் செய்த மருமகன்

    நாக்பூர்: குடிபோதையில் 65 வயது மாமியாரை பலாத்காரம் மருமகனை நாக்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.

    நாக்பூர் அருகே கடோல் கிராமத்தைச் சேர்ந்த கவானி என்பவருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஓராண்டுக்கு முன்புதான் மகளுக்கு திருமணம் ஆனது. இரண்டு மகன்களும் பள்ளியில் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வந்த கவானி வீட்டில் இருந்த மகன்கள் இருவரையும் வெளியே போய் படுக்கச் சொல்லியிருக்கிறார். அவரது மனைவி உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்றுவிட்டா. இதுதான் சமயம் என்று கருதி கவானி, வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த மாமியாரை கட்டிப் பிடித்து கீழே தள்ளி கற்பழித்திருக்கிறார்.

    காலையில் வீட்டுக்குத் திரும்பிய மகளிடம் தாம் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி கூறி புலம்பியிருக்கிறார் தாய். இதையடுத்து தமது கணவன் மீது போலீசில் புகார் கொடுத்திருக்கிறார் மனைவி. இப்பொழுது கவானி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    http://tamil.oneindia.in/news/2012/07/24/india-drunk-man-molests-65-year-old-mother-in-law-158282.html

    ReplyDelete
  2. குடிபோதையில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்திக் கொலை செய்த எய்ட்ஸ் நோயாளி

    திண்டிவனம் காவேரிப்பாக்கத்தைத் சேர்ந்த ராமச்சந்திரனின் 3 வயது மகள் பவானி. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள பள்ளி அருகே கொலை செய்யப்பட்டுக் கிடந்தாள்.

    திண்டிவனம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். கொலை நடந்த பகுதிக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் அருகில் இருந்த முருகன் என்பவரின் வீட்டுக்கருகே போய் நின்றது. இதேபோல் தொடர்ந்து இதே வீட்டை நோக்கி மோப்ப நாய் சென்றதால் முருகனை போலீசார் விசாரித்தனர்.

    ஆனால் அவர் சந்தேகப்படும் படியான ஆதாரங்கள் இல்லாததால், வீட்டில் உள்ள மற்ற நபர்களை பற்றி விசாரித்தனர். அப்போது முருகனின் தம்பி துரைராஜ் திடீரென வெளியூருக்கு புறப்பட்டுச் சென்றது தெரிய வந்தது.

    அப்பகுதியை ரகசியமாக கண்காணித்துக் கொண்டிருந்த போலீசார், இரு நாட்களுக்கு பிறகு துரைராஜ் அங்கு வந்ததும் பிடித்து விசாரித்தனர். முதலில் நடித்தவன், பின்னர் சிறுமி பவானியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டான்.

    துரைராஜை போலீசார் கைது செய்தனர். துரைராஜ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்: நான் சென்னை பல்லாவரத்தில் வசித்து வந்தேன். எனக்கு உமா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.

    கூலி வேலை செய்து வந்த எனக்கு, தகாத பெண்களுடன் ஏற்பட்ட சகவாசத்தால் எய்ட்ஸ் நோய் வந்தது. இதனால் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்றாள்.

    சம்பவத்தன்று நான் திண்டிவனம் காவேரிப்பாக்கத்தில் உள்ள எனது தம்பி முருகன் வீட்டுக்கு வந்தேன். நாங்கள் 2 பேரும் கடையில் மது குடித்து விட்டு மாலை 6-30 மணி அளவில் வீடு நோக்கி திரும்பினோம்.

    என்னுடைய தம்பி வீட்டுக்கு சென்று விட்டான். நான் மட்டும் தனியாக நின்ற போது திடீரென மின்சாரம் தடைபட்டது. அப்போது அந்த வழியாக சிறுமி பவானி வந்தாள்.

    உடனே அவளுடைய வாயை பொத்தி அருகில் இருந்த பள்ளிக்கூட பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்தேன். இதில் பவானி மயங்கி விழுந்துவிட்டாள். நான் மட்டும் அங்கிருந்து வீடு திரும்பி விட்டேன்.

    பிறகு சிறிது நேரம் கழித்து அங்கே நான் சென்று பார்த்த போது அவள் இறந்து கிடந்தாள். யாருக்கும் தெரியாமல் அவளுடைய உடலை முட்புதரில் வீசிவிட்டு வந்தேன்.

    மறுநாள் பவானியின் கொலை விவகாரம் வெளியே தெரிந்தது. நானும் அங்கு கூட்டத்தோடு கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தேன். அப்போது மோப்ப நாய் வரப்போகிறது என்றார்கள்.

    எனவே பயந்து திருச்சி வந்துவிட்டேன். மீண்டும் அதிகாலையில் நான் திண்டிவனம் திரும்பிய போது போலீசாரின் சந்தேகப் பார்வையில் விழுந்து சிக்கிக்கொண்டேன்.

    இவ்வாறு துரைராஜ் தனது வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    http://tamil.oneindia.in/news/2009/11/24/aids-affected-youth-rapes-kills.html
    போதையில் சில்மிஷம்- தந்தையை கொன்ற மகன்

    நெல்லை: நெல்லை அருகே குடித்துவிட்டு பெண்களிடம் சில்மிஷம் செய்து வந்த தந்தையை, அவரது மகன் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் மேலக்கொட்டாரத்தை சேர்ந்தவர் சுடலையாண்டி. கூலி தொழிலாளி.

    சுடலையாண்டி குடித்துவிட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். மேலும் அவர் குடிபோதையில் பெண்களிடம் சில்மிஷம் செய்வதும் உண்டாம். இதனையடுத்து நாராயணன் அவரை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால், அவர் கேட்டபாடில்லை.

    இந்நிலையில் நேற்று இரவு நாராயணன் வேலை முடித்து வீட்டிற்கு வந்தபோது சுடலையாண்டி குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது நாராயணன் குடித்து விட்டு இனி வீட்டுக்கு வரக்கூடாது என்று தனது தந்தையிடம் சத்தம் போட்டுள்ளார்.

    இதில் தந்தை, மகனுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சுடலையாண்டி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.

    அவரை தேடி நாராயணன் சென்றுள்ளார். அப்போது சுடலையாண்டி பக்கத்து வீட்டில் அரைகுறை நிர்வணமாக படுத்து தூங்கியுள்ளார்.

    இதனை கண்ட நாராயணன் ஏன் இப்படி அலங்கோலமாக படுத்திருககீறர்கள் என்று சத்தம் போட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த நாராயணன் தனது தந்தையை அரிவாளால் வெட்டியுள்ளார். வெட்டு பட்ட சுடலையாண்டி அங்கிருந்து தப்பியோடியுள்ளார். ஆனால் நாராயணன், அவரை விரட்டி, விரட்டி சராமரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சுடலையாண்டி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவத்தை அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நாராயணனை கைது செய்தனர்.

    http://tamil.oneindia.in/news/2009/08/16/tn-son-arrested-for-murdering-father.html

    ReplyDelete
  3. கும்மிடிப்பூண்டி முகாமில் , குடிபோதையில் அகதிகள் மோதல் - தந்தை, 2 மகன்களுக்கு அரிவாள் வெட்டு

    சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில், குடிபோதையில் இருந்த அகதிகள் செய்த அட்டகாசத்தைத் தட்டிக் கேட்ட தந்தை மற்றும் இரு மகன்கள் அரிவாளால் வெட்டப்பட்டனர்.

    கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருபவர் செல்வநாயகம். இவரது மகன்கள் நாகேந்திரன், ஜெயந்தன்.

    நேற்று இரவு இதே முகாமை சேர்ந்த வாலிபர்கள் ஜெகன், கிருபா, இளையராஜா, பிரபு, செல்வம் மற்றும் யோகேந்திரன் ஆகிய 6 பேர் குடிபோதையில் முகாமில் அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டையுடன் சுற்றி கொண்டிருந்தனர். அந்த வழியாக சென்றவர்களை ஆபாசமாக திட்டி கொண்டிருந்தனர்.

    இதை நாகேந்திரன் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் நாகேந்திரன், தந்தை செல்வநாயகம், தம்பி ஜெயந்தன் ஆகியோரை உருட்டுக்கட்டையால் தாக்கி அரிவாளால் வெட்டியது.

    நாகேந்திரன் தலையிலும் செல்வநாயகம் இடது கையிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. கவலைக்கிடமான நாகேந்திரன் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செல்வநாயகமும் ஜெயந்தனும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாகி விட்ட அந்த ஆறு அகதிகளையும் தேடி வருகின்றனர்.

    http://tamil.oneindia.in/news/2009/08/04/tn-father-sons-hacked-by-drunkard-


    குடி போதையில் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையைக் கொன்ற மகள்

    சென்னை அருகே குடிவெறியில், பெற்ற மகளைப் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையைக் கொன்றதைத் தொடர்ந்து மகள் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

    தன்மானத்தைக் காக்க ஒரு பெண் எதையும் செய்யலாம் என்று கூறிய மகாத்மா காந்தியடிகளின் வாக்கை அடிப்படையாக வைத்து இந்த உத்தரவைப் பிறப்பிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்

    சென்னை, மாங்காடு அருகே உள்ள கோவூரைச் சேர்ந்தவர் அனூஜ் ஜெர்மி. 19 வயதான இவர் தனது தந்தை மற்றும் தம்பியுடன் வசித்து வந்தார். தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்தார்.

    கடந்த மே மாதம் 17-ந்தேதி அனூஜ் ஜெர்மி வீட்டில் தனியாக இருந்தபோது அவரது தந்தை குடிபோதையில் வந்து தவறாக நடக்க முயன்றார். எவ்வளவோ தடுத்தும் கற்பழிக்க முயன்றார். இதனால் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக அவரது தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்தார் ஜெர்மி

    இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதேசமயம், காமவெறி பிடித்த தந்தையைக் கொன்ற காரணத்தால், மாணவி கைது செய்யப்படவில்லை.

    மேலும் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெர்மி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து, இளம்பெண் அனூஜ் ஜெர்மி தனது கற்பையும், தன்னையும் காத்து கொள்வதற்காக தனது தந்தையை சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கொலை செய்துள்ளார்

    ஒரு பெண் தன்னையும் தன்மானத்தையும் காப்பாற்றி கொள்வதற்காக இதுபோல் நடந்து கொள்வதில் தவறு இல்லை என்று மகாத்மா காந்தியே எழுதி உள்ளார். எனவே அனூஜ் ஜெர்மி மீது தொடரப்பட்ட கொலை வழக்கை தள்ளுபடி செய்கிறேன்

    இதில் முறையாக விசாரணை நடத்தி வழக்குபதிவு செய்த போலீஸ் அதிகாரி அழகுக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவிக்கிறது என்று தீர்ப்பளித்தார்

    குடி போதையில் குழந்தையை சுவற்றில் அடித்து கொன்ற குடிகார தந்தை.

    சென்னை : சென்னையை அடுத்த மறைமலைநகர் அருகே பொத்தேரியைச் சேர்ந்த சரவணன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்.இதனால் தமது மனைவியுடன் அடிக்கடி சண்டை போடுவாராம்.

    இதுபோல் கடந்த 2011-ம் ஆண்டு குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட சரவணன், வெறித்தனமாக தமது 2வயது குழந்தை அபிநயாவை சுவற்றில் தூக்கி வீசியுள்ளார்.
    இதில் அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

    இதனால் சரவணன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ReplyDelete
  4. குடி,போதையில் மாணவிகளை ஆடவைத்த ஆசிரியர்

    மத்தியப்பிரதேச மாநிலம், பேட்டுல் மாவட்டத்தில் உள்ள தேவ்சவுக்கி என்ற கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தவர் மகேஷ் மாளவியா.

    இவர் கடந்த 23-ந் தேதியன்று மது குடித்து விட்டு பள்ளிக்கூடத்துக்கு போதையில் வந்தார்.

    மாணவிகளை நடனமாட வைத்தார். பூட்டிய அறை என்பதால் மாணவிகள் சரியாக ஆட வில்லை போலிருக்கிறது.

    அதற்கு அவர்களை ஆசிரியர் பிரம்பாலும் அடித்தார். பத்தே வயதான ஒரு மாணவரிடம் பணம் கொடுத்து மது பாட்டில் வாங்கி வரும்படியும் கூறினார்.

    இது குறித்து பாதிப்புக்குள்ளான மாணவ, மாணவிகளின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு முடிவு கட்டியே ஆக வேண்டும் என கருதி அவர்கள், மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் போர்க்கரிடம் புகார் செய்தனர்.

    6 வயது மகளிடம் குடி போதையில் தவறாக நடந்த தந்தை கைது..!

    தென்காசி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 39).

    இவர் தனது 6 வயது மகளிடம் தவறாக நடந்துள்ளார்.

    இதை அந்த சிறுமி, தன் தாயிடம் கூறினார். அதிர்ச்சி அடைந்த தாய், கணவனை கண்டித்தார். அன்று முதல் குழந்தையை தீவிரமாக கண்காணித்து வந்தார்.

    ஆனாலும் சுதாகர் அவ்வப்போது குடி போதையில் குழந்தையிடம் சில்மிஷம், செய்வதை தொடர்ந்துள்ளார்.

    எவ்வளவோ கண்டித்தும் பல முறை இந்த கொடுமை தொடர்ந்ததால், மனம் உடைந்த தாயார் தென்காசி போலீசில் புகார் செய்தார்...."


    குடி போதையில் கணவன் மனைவி இடையே தகராறு: இருவர் பலி

    தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி போலீஸ் சரகம், முறம்பன் கிராமம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுடலை மணி. இவரது மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளாகிறது. கூலித் தொழிலாளியான சுடலை மணி தான் சம்பாதிக்கும் பணத்தை குடித்துவிட்டு ஊதாரித்தனமாக செலவு செய்து வந்தாராம்.

    மேலும், குடித்து விட்டு வ்நது மனைவியிடம் தின்நதோறும் தகராறு செய்வராம். இதனால் மனமுடைந்த சுடலை மணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாராம்.

    தூத்துக்குடி மாவட்டம், ஏரல் மேல முதலியார் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர், இவரது மனைவி சரஸ்வதி (30).. கூலித் தொழிலாளியானாக இவர் குடித்துவி்ட்டு வ்நது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்வாராம்.

    இதனால் மனமுடைந்த சரஸ்வதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ReplyDelete
  5. பதிவுலகில் சிலர் வீம்புக்காக இக்கொடிய தீன்மையை ஆதரித்து பதிவிடுவதை காணும்போது மனது கணக்கிறது

    ReplyDelete
  6. சலாம் சகோ!

    குடியின் கெடுதியை அழகாக எடுத்து சொல்லியிருக்கிறீர்கள். சொல்வது நமது கடமை. செயல்படுத்துவதும் அல்லது நீ யார் எனக்கு சொல்ல என்று கேட்பதும் அவரவர் விருப்பம்.

    குடி குடியைக் கெடுக்கும்.

    ReplyDelete
  7. ஸலாம் சகோ.ஹைதர் அலி...
    அரிய பல தகவகல்கள் அறிய தந்தமைக்கு மிக்க நன்றி சகோ.

    ///சுரபானம் அருந்தாத திராவிடர்கள் அசுரர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டார்கள்.///---இந்த அசுரர்கள் கண்டு பிடித்த அசுர பலம் வாய்ந்த அழிவு ஆயுதம்தான் டாஸ்மாக்..! இதில், ஆரியர்கள் தோற்றார்கள்... திராவிடர்களிடம்..!

    மது ஒழிப்பு பற்றி இன்னும் இன்னும் விழிப்புணர்வு ஊட்ட வேண்டியது பாக்கி உள்ளது..! வாரம் ஒரு பதிவாவது மது ஒழிப்பு பற்றி (மீள் பதிவாக இருந்தாலும் பரவாயில்லை) போட்டாக வேண்டிய அவசரகால சூழல் நம் நாட்டில் தற்போது நிலவுகிறது சகோ..! :-((

    ReplyDelete
  8. அருமை...
    இது பதிவு...
    சொல்ல வந்த கருத்துக்கள்...மிக எளிமையாக...
    படிப்பவரை சென்றடைகிறது...

    இந்த பதிவுக்கு என் ஆதரவு உண்டு...

    ReplyDelete
  9. சலாம் சகோ....

    மது அரக்கனுக்கு எதிராக இதுபோன்று விழிப்புணர்வு பதிவுகள் இன்னும் நூறு வேண்டும்...இதை படிக்கும் நூறில் ஒருவர் திருந்தினாலும் அது வெற்றிதான்..தொடருங்கள் சகோ...

    ReplyDelete
  10. குடியின் தீமை பற்றி இதற்கு மேல் யாரும் அழகாக பதிவிடமுடியாது...

    இதை ஒவ்வொரு குடிகாரனும் படித்தால் நிச்சயம் அடுத்த முறை குடிக்கும் போது இவ்வரிகள் கண்ணிற்கு வரும்...

    நல்ல பதிவு நண்பரே...

    ReplyDelete
  11. பதிவு சூப்பர்.....!

    ReplyDelete

  12. குடிக்காமல் இருப்பவனை பார்த்து 'ஏன் உளறுகிறாய்' என்று உ.பா.பிரியர்கள் சொல்லும் காலமாகிவிட்டது. :)

    ReplyDelete

  13. காந்தி, பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் பற்றி பதிவுகளில் போற்றும் சில தேசபக்தர்கள் மதுவிற்கு சியர்ஸ் சொல்லி அவர்களின் மதிப்பை ஒழிப்பது கூட ஒருவகை சமூக சேவை போல!!

    ReplyDelete
  14. அருமையான பதிவு.

    குடியின் தீமைகளை அழகாக விளக்கியுள்ளீர்கள்.

    குடிக்காரனாய் பார்த்து திருந்தவிட்டால் குடியை ஒழிக்க முடியாது.

    தொடருங்கள்


    ReplyDelete