Tuesday, March 29, 2011

தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறை பாகம் -4


ந்த பயிற்சிகளைப் பற்றி
இந்த பயிற்சியை யார் வேண்டுமானலும் செய்யலாம்,Low pressure, high pressure உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அனைவரும் செய்யலாம். இப்பயிற்சிகளை செய்ய செய்ய அவைகள் குறைய வாய்ப்பிருக்கிறது.

இந்த வீடியோவை கவனித்து பாருங்கள்

 






செய்முறை விளக்கம்
இப்பயிற்சியை சில இடங்களில் சரியாக செய்யவிட்டால் எந்த பலனும் கிடைக்காது அது போன்ற இடங்களை மட்டும் நான் உங்களுக்கு சுட்டி காட்டுகிறேன்.

இரண்டு கைகளையும் காது மடல்களை ஒட்டினற்போல் மேலே தூக்கவும் பிறகு மூச்சை சாதரணமாக விட்டுக் கொண்டே கீழே குனிந்து கைகளால் தரையை தொட வேண்டும் அப்படி தொடும்போது முழங்கால்கள் டைட்டாக இருக்க வேண்டும் முன்னே வரக்கூடாது.


மூச்சை விட்டுக் கொண்டே மார்பை முன்னே தள்ளி தலையை பின்னே தள்ள வேண்டும் கைகளை வளைக்கக் கூடாது.

பின்னேயுள்ள கால்களை டைட்டாக வைத்து முன்னேயுள்ள காலை மடக்கி முழங்கைகளை முழங்காலின் வெளியே வைத்து இடுப்பை திருப்ப வேண்டும் இதை அப்படியே எதிர்மறையாக செய்ய வேண்டும்.

                                    

                                    
                                
                                    

                         


கைகளை வளைக்காமல் நேர்க்கொட்டில் நீட்டி முழங்கால்கள் வளையாமல் டைட்டாக வைத்து பாதங்களின் பின்புறம் தரையை தொட வேண்டும்(மூச்சை சாதரணமாக விடவும்)
                                                                                                                                                                                             
கடைசியாக
மேலேயுள்ள வீடியோ முழுமையானது இல்லை அதனுடைய தொடர் இருக்கிறது பாதி வீடியோவை அடுத்த பதிவில் இடுகிறேன்.
எனென்றால் இதை முதலில் பழகிக் கொள்ளுங்கள்.

இப்பதிவில் எதாவது சந்தேகம் இருந்தால் பின்னூட்டம் இடுங்கள் அல்லது மெயில் பன்னுங்கள்.

22 comments:

  1. பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  2. விக்கி உலகம்

    உங்களின் முதல் வருகைக்கு
    நன்றி நண்பா

    இன்னும் நிறைய இருக்கு

    தொந்தி குறைய மட்டும் 35க்கு மேற்ப்பட்ட பதிவு இருக்கு

    தொடர்ந்து வாருங்கள்

    ReplyDelete
  3. யாழ். நிதர்சனன்

    உங்களின் முதல் வருகைக்கு
    நன்றி நண்பரே

    நட்பை தொடருங்கள்

    ReplyDelete
  4. முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்March 29, 2011 at 8:27 AM

    அஸ்ஸலாமு அலைக்கும்,
    இதை செய்ய ரொம்ப கஷ்டப்படனும்போல இருக்கிறதே

    ReplyDelete
  5. உடலுக்கு உடற்பயிற்சி அவசியம், நல்ல பகிர்வு.

    ReplyDelete
  6. எளிய பயிற்சிகள். பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  7. சிறந்த பல பதிவுகளை வழங்கி வருகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. Chitra அவர்களுக்கு

    ரொம்ப நன்றியுங்க

    உங்களுடைய பெண் எழுத்துக்கள் படித்தேன் கலக்கியிருக்கீங்க

    ReplyDelete
  9. சுவனப்பிரியன் அவர்களுக்கு

    //சிறந்த பல பதிவுகளை வழங்கி வருகிறீர்கள். வாழ்த்துக்கள்.//

    பிளாக்கில் நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும் என்பதற்காகவும் பிறருக்கு பயனளிக்ககூடியாத இருக்க வேண்டும் என்கிற ஆசையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்

    உங்களை போன்றவர்களின் ஆதரவினால் இன்னும் உற்சாகமாக செயல்படுகிறேன்

    நன்றி சகோ

    ReplyDelete
  10. முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    //இதை செய்ய ரொம்ப கஷ்டப்படனும்போல இருக்கிறதே//

    செய்ய செய்ய ஈஸியாக ஆகிவிடும்

    வலிகள் ஏதும் சுமக்காமல்
    வழிகள் எதுவும் திறக்காது

    நன்றி சகோ

    ReplyDelete
  11. இளம் தூயவன் அவர்களுக்கு

    நன்றி சகோ

    ReplyDelete
  12. நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!

    சகோ.ஹைதர் அலி மாஸ்டர்..!

    //இந்த பயிற்சியை யார் வேண்டுமானலும் செய்யலாம்//

    நீங்கள் உடற்பயிற்சியை இலகுவாக செய்கிறீர்கள். பார்க்க எளிதாக தெரிகிறது. ப்பூ... இவ்வளவுதானே... என்று செய்ய ஆரம்பித்தால்...

    ....ம்ம்ம்....

    பார்க்க எளிதாக தெரிந்தது. நீங்கள் உடற்பயிற்சியை நன்றாக கற்று செய்கிறீர்கள். காரணம்:நீங்கள் மாஸ்டர்..!

    //செய்ய செய்ய ஈஸியாக ஆகிவிடும்//என்கிறீர்கள். இப்படி ஈஸியாக செய்ய, நீங்கள் எத்தனை ஆண்டுகளாய் செய்துவருகிறீர்கள் என்று அறிய ஆவல்..!

    ReplyDelete
  13. அஸ்ஸலாமு அலைக்கும்.

    நீங்கள் உடற்பயிற்சியை இலகுவாக செய்கிறீர்கள். பார்க்க எளிதாக தெரிகிறது,but கஷ்டப்படனும்போல Therikiradhu.


    வலிகள் ஏதும் சுமக்காமல்
    வழிகள் எதுவும் திறக்காது

    You Are Correct Brother.

    ReplyDelete
  14. பயனுள்ள பதிவு, தொடருங்கள்........'நிறையப் பேரின் தொந்தியை குறைக்க வேண்டி இருக்கு....

    ReplyDelete
  15. சகோ முஹம்மத் ஆஷிக்

    நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!

    //பார்க்க எளிதாக தெரிந்தது. நீங்கள் உடற்பயிற்சியை நன்றாக கற்று செய்கிறீர்கள். காரணம்:நீங்கள் மாஸ்டர்..!//

    நானும் ஒரு காலத்தில் ஆரம்ப நிலையில் இருந்துதான் வந்தேன்

    //செய்ய செய்ய ஈஸியாக ஆகிவிடும்//என்கிறீர்கள். இப்படி ஈஸியாக செய்ய, நீங்கள் எத்தனை ஆண்டுகளாய் செய்துவருகிறீர்கள் என்று அறிய ஆவல்..!//

    சும்மா ஒரு 10 வருஷமாக செய்து கொண்டு வருகிறேன்

    ஆனால் பயிற்சி மூன்று மாதங்களில் கைகூடி விட்டது

    நன்றி சகோ

    ReplyDelete
  16. சகோ அந்நியன் 2 என்ற அய்யூப்

    நீங்க பயிற்சியை பத்தி ஒன்னும் சொல்லவேயில்ல

    நன்றி சகோ

    ReplyDelete
  17. ரொம்ப நல்ல விஷயத்தை ரொம்ப எளிமையா அழகா சொன்னதற்கு நன்றியும் பாராட்டுக்களும்

    ReplyDelete
  18. ரொம்ப நல்ல விஷயத்தை ரொம்ப எளிமையா அழகா சொன்னதற்கு நன்றியும் பாராட்டுக்களும்

    ReplyDelete
  19. S.A. நவாஸுதீன் அவர்களுக்கு

    உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  20. ஸ்லிம் ஆவதற்கும்
    பயிற்சி..உணவுமுறைகள்
    இருப்பின் பகிருங்களேன் சகோ.....

    ReplyDelete