Tuesday, December 14, 2010

யார் இந்த பக்கீர்ஷாக்கள்-பாகம்2



ஒரு சமுதாயத்தின் கடந்த காலப் போக்கே நிகழ்கால நிலையை நிர்ணயிக்கிறது.நிகழ்கால நிலை வருங்காலத்தைப் பாதிக்கிறது.
நிகழ்கால நிலை சீராக அமையுமாயின் எதிர்காலம் சிறப்புற்று விளங்கும்.

இனி எப்படி மக்களிடம் சென்று பிரச்சாரம் செய்வதற்கு என்ன 
வழிமுறையை தேர்ந்தெடுத்தார்கள் என்ற விஷயத்துக்கு வருவோம்.
ஒவ்வோரு ஊர் ஊராக, வீடு வீடாக, மக்கள் குழுமும் சந்தைகளில் கடைத்தெருக்களில் அலைந்து திரிந்துதான் சொல்லியாக வேண்டும்.
வெயிலில் இருந்து தப்பிப்பதற்கு பொதுவாக அக்கால மக்கள் தலைப்பாகை கட்டுவது வழக்கம்.


தலைப்பாகையின் துனியின் தரம் வேலைப்பாடு,இவைகளை வைத்து மக்கள் தலைப்பாகை அனிந்து இருப்பவரின்,அரசியல்நிலைப்பாடு,
வாழ்க்கைதரம்,அரசாங்க(மன்னனின்)பனியாளர்,குமஸ்தா, வக்கீல், என்று பிரித்து அறிந்து கொள்ளும் (யுனிபாம் மாதிரி)விதமாக அணிவார்கள்.
பக்கீர்களும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள பச்சை வண்ண தலைப்பாகையை தேர்ந்தேடுத்தார்கள்,


(பச்சை கலர் இஸ்லாமிய அடையாளமாகி போனதற்கு இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவைகள். அவை
1.இந்திய துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்த பக்கீர்கள் பச்சை கலரை இஸ்லாமிய அடையாளமாக்கினார்கள்.
2. ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் தொடங்கி அன்றைய முழு இந்தியாவையும் ஆட்சி செய்த முகலாயர்களின் கொடியின் நிறம் பச்சை)


முகலாயர்களின் பச்சை கொடி


முகலாயர்ஆட்சி பகுதிகள்

சூஃபிக் கொள்கையை பிரசங்கமாக செய்யவில்லை அது மக்களை ஈர்க்காதுஎன்பதால் இசைபுராணக்கதைகள் ஊடாக சொன்னார்கள்கிஸாக்களையும்,மசாலாக்களையும் (பாரசீக மொழியில் கிஸா என்றால் கதைகள், மசாலா என்றால் விடுகதை வினா விடை என்று பொருள்) இனைத்து பாடல்களை ரசனையுள்ளதாக மாற்றினார்கள்.அதற்காக கையில் சலங்கை ஒலி எழுப்பக்கூடிய கொட்டை கையில் எடுத்தார்கள்.
காவ்வாலி இசையின் தந்தை அமீர் குஸ்ரோ

காவ்வாலி இசை சூஃபிக்களின் தெய்வீக இசையாகிப் போனது.இசை இறைவனை நெருங்குவதற்குரிய சாதனம் என்று இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிர்மறையாக விளங்கி வைத்திருந்தார்கள் .
                   
வீடியோவை பாருங்கள்இசையின் மூலம் இறைவனை நெருங்கிற இலட்சனத்தை


        இந்த வீடியோவையும் பாருங்கள் (பாகிஸ்தான் சூஃபி கூட்டம்)                    
உதாரணத்திற்கு
பக்கீர்களின் மசாலா(விடுகதையை கீழே பாருங்கள்
ஞானவல்லி என்ற ராணியின் கேள்விகள்
"மானிலேயும் பெரிய மான்.
அறுபடாத மான் அது என்ன...?
மீனிலேயும் பெரிய மீன்
அறுபடாத மீன் அது என்ன...?
மாவிலேயும் நல்ல மாவு
இடிபடாத மாவு அது என்ன...?”

அப்பாஸ் மன்னரின் பதில்

மானிலேயே பெரிய மான்
அறுபடாத மானானது - அது
ஈ மானடி ஞானப் பெண்ணே!
மீனிலேயும் பெரிய மீன்
அறுபடாத மீனானது - அது
ஆமீனடி மெகர்பானே..!
மாவிலேயும் நல்ல மாவு
இடிபடாத மாவும் ஆனது - அது
'கலிமாதானடி கண்ணே !
 எவ்வளவு அறிவுப்பூர்வமான கேள்வி பதிலு!? சரி மசாலாக்கள் இலட்சனம் இதுவென்றால்
கிஸாக்களைப் பாருங்கள் விறகுவெட்டி கிஸா,ஜைத்துன் கிஸா, சலீம் அனார்கலி, லைலா மஜ்னு காதல் கதைகள் இவைப் போன்ற கற்பனை கதை வழியாக இஸ்லாத்தை சொன்னார்கள்.
(நம்பமுடியவில்லையா ஆனால் அதுதான் உண்மை)

பக்கீர்களின் லைலா மஜ்னு கதைகளை படியுங்கள்




பாரசீக மொழியில் 

லைலா மஜ்னு கதையை

 கற்பனை கலந்து எழுதிய கவிஞர் நிஜாமி


லைலாவின் தெருவில் அலைந்து கொண்டிருந்த மஜ்னூன்அவள் வீட்டின் சுவர்களை முத்தமிட்டுக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்துப் பரிகாசம் செய்தவர்களின் காதுகளில் விழுமாறு ஒரு கவிதை படிக்கிறான்:

"லைலாவின் தெருவில்

அவள் வீட்டின் சுவர்களை
முத்தமிடுகிறேன் நான்.
இந்தச் சுவற்றின் மீதோ
அல்லது அந்தச் சுவற்றின் மீதோ
காதல் கொண்டவனல்ல நான்.
என் மனதில் பொங்கி வழிவது
அந்த வீட்டுக்குள் இருப்பவளின் காதலே!"  

இந்த கதையின் மூலம் பக்கீர்கள் சொல்ல வரும் செய்தி என்ன தெரிகிறதா?
இறைவனைக் காதலியாகக் குறிப்பிடும்(நவூதுபில்லாஹ்) சூபிகளின் சூழ்ச்சி இது இறைவனை பெண்ணாக உருவகப்படுத்தி காதலியின் நினைவாகவே இருக்க வேண்டும் என்று சொல்லுகிற வழிகேடர்களின் வார்த்தைகளை இஸ்லாம் என்று பக்கீர்கள் அறிமுகப்படுத்தினார்கள்

சூபிகளின் காலில் விழும் போது நான் விழுவது இவர் காலாக இருந்தாலும் அவரினுள் குடியிருக்கும் இறைவனின் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக அல்லவா என்று வியக்கியானம் பேசினார்கள்.
(இன்றும் பேசுகிறார்கள்)  
என்னதான் வியாக்கியானம் பேசினாலும் மஜ்னு மாதிரி இறைக்காதலில் சுற்றித்திரிந்தாலும் பசியும் இயற்கையான உடல் தேவைகளும் இவர்களை விட்டு வைக்கவில்லை.
சம்பாதிப்பதை ஹரமாக்கிக் கொண்ட இவர்கள் சாப்பாட்டுக்கும் பிற தேவைகளுக்கும் என்ன செய்தார்கள்? எப்படி சமாளித்தார்கள்? யாரிடம் உதவிப் பெற்றார்கள் என்ற கேள்விகளை(இறைவன் நாடினால்) அடுத்த தொடரில் பார்ப்போம்.


31 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்...

    ஹைதர்பாய்... நிறைய படித்து ஆராய்ச்சியெல்லாம் செகிறீர்கள் போல.

    நூலகத்தில் இருப்பதால் உங்கள் தளம் நிறைய புதிய கருத்துக்களை ஆதாரபூர்வமாய் சொல்கிறது.
    மாஷால்லாஹ்.

    'இஸ்லாம் என்றாலே பச்சைக்கலர்'(?!),
    'காவ்வாலி இசையின் தந்தை அமீர் குஸ்ரோ'...
    இப்படி... சொல்லலாம்.

    நூர்மசாலாவை நியாபகப்படுத்தி விட்டீர்கள். எழுபதுகளின் கடைசி எண்பதுகளின் ஆரம்பத்தில் அந்த ஆடியோ கேசட் பாகங்கள் செம பிரபலம்.(மேலும் பாடல்களுடன் கூடிய அய்யூப் நபி கிஸ்ஸா, சுலைமான் நபி கிஸ்ஸா... போன்றவையும் மிக பிரபலங்கள்) யார் மூலமோ அறிந்து அதை கேட்பதற்கென்றே டேப் ரிக்கார்டர் வீட்டுகளுக்கு வரும் வரும் புதிய புதிய மக்கள்... அல்லது அது பற்றி அறியாத-(இப்படி இருந்தால் ரொம்ப அவமானம்) வீட்டுக்கு வருவோர் போவோர் எல்லாரையும் பிடித்து வைத்து கேட்கவைத்த காலம்... இப்போது நினைத்தாலும் ரொம்ப கேவலமாக உள்ளது.

    தமிழில் குர்ஆனும் ஹதீஸும் கிடைக்கப்பெற்ற கடந்த முப்பது-இருபது வருட தமிழ் மக்கள் பாக்கியம் நிறைந்தவர்கள். அதன் பிறகுதானே கிஸ்ஸாக்கள் இசைப்பாடல்கள் எல்லாம் ஒழிந்தன?

    நம்மை சரியான இஸ்லாத்தை அறிந்துகொள்ள வைத்த அல்லாஹ்விற்கு மிக்க நன்றி. அதற்கு மீடியமாய் இருந்த-இருக்கும் அறிஞர்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக.

    ReplyDelete
  2. நன்கு ஆராய்ந்து எழுதி உள்ளீர்கள், அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் உள்ளது.

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புதிய செய்திகளோடு வீடியோவும் இதுவரை பார்க்காத கூத்துக்கள்! இஸ்லாத்தில் பிறந்தே இது போன்ற பல கோலங்கள் :( நரகத்தின் பாதை நோக்கி செல்லும் இவர்கள், அதன் வாசலை நெருங்கும் முன் அல்லாஹுத்தஆலா நேர்வழியில் கொண்டு வரட்டும், இன்ஷா அல்லாஹ்!

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    பக்கீர்ஷாக்கள் குறித்த அறியாத விஷயங்கள் அதிகம் இவ்வாக்கத்தில் சகோதரே., கிஸ்ஸாக்கள் குறித்த செய்தியும் 'மிஸ்'ஸாகாமல் தந்துள்ளீர்கள்.எழுத்தின் ஆழத்தைப்பார்க்கும்போதே நீங்கள் எவ்வளவு தூரம் மெனக்கெட்டு இருப்பீர்கள் என்பது விளங்குகிறது. கூடுதலாக படங்கள் வேறு., வரலாற்று ரீதியான நிகழ்வுகளை இன்னும் அதிகப்படுத்தலாமே., இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  5. அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
    சகோ முஹம்மத் ஆஷிக்

    ///நம்மை சரியான இஸ்லாத்தை அறிந்துகொள்ள வைத்த அல்லாஹ்விற்கு மிக்க நன்றி.//
    அல்ஹம்துலில்லாஹ் நாமக்கு கிடைத்த நேர்வழி பிறருக்கும் கிடைக்க வேண்டும்
    அதற்காக நம்மால் முடிந்தவரை போராடுவோம்

    ReplyDelete
  6. @இளம் தூயவன்
    உங்களுடைய ஆதரவுக்கு நன்றி

    ReplyDelete
  7. அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
    சகோ அஸ்மா
    ///வீடியோவும் இதுவரை பார்க்காத கூத்துக்கள்!///

    இந்த வீடியோவை முதன்முறையாக நான் பார்த்தபோது சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் போனது.

    நன்றி சகோ

    ReplyDelete
  8. அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
    சகோ குலாம்
    //வரலாற்று ரீதியான நிகழ்வுகளை இன்னும் அதிகப்படுத்தலாமே.//

    அதிகப்படுத்திருவோம் இன்ஷாஅல்லாஹ்

    ஜஸாக்கல்லாஹ் கைரன் சகோ

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரர் ஹைதர் அலி,
    எதிர்பார்த்தபடியே தொடர் மிக அறிய தகவல்களுடனும் சுவாரசியமாகவும் செல்கிறது. அடுத்த தொடரையும் ஆவலாக எதிர்நோக்கியபடி

    ReplyDelete
  10. இவர்களுக்கு பின்னால் இவ்வளவு சமாச்சாரம் உள்ளது இப்பத்தான் தெரியும்
    தொடரட்டும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. சகோதரர் ஹைதர் அலி,

    அல்ஹம்துளில்லாஹ். நன்றாக ஆய்வு செய்திருக்கின்றீர்கள். இதுவரை நான் அறியாத தகவல்கள். மிக்க நன்றி.

    அதுமட்டுமல்லாமல், சகோதர/சகோதரிகள் பலரும் பல்வேறு துறைகளில், பல்வேறு தலைப்புகளில் அருமையான ஆக்கங்களை எழுதி வருகின்றீர்கள். இது இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகின்றது. இறைவன் நமக்களித்த மாபெரும் கிருபை இந்த தருணம்.

    தாங்கள் தொடர்ந்து சிறப்பாக எழுத இறைவன் அருள்புரிவானாக...ஆமின்.

    (தங்களுடைய கட்டுரைகளை தமிழ்மணம், இன்ட்லி, தமிழ்10 போன்றவற்றில் இணைக்கவில்லையா?)

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ.

    ReplyDelete
  12. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
    அன்பின் சகோதரர்கள்

    @பி.ஏ.ஷேக் தாவூத்

    @ராஜவம்சம்

    @அஹமது அஷிக்
    அனைவரின் கருத்துக்கும் ஆதரவுக்கும்
    நன்றி ஜஸாக்கல்லாஹ் கைரன்

    சகோதரன்
    ஹைதர் அலி

    ReplyDelete
  13. பக்கீர்ஷாக்கள் பத்தி அறியாத விஷயங்கள்.....

    //நம்மை சரியான இஸ்லாத்தை அறிந்துகொள்ள வைத்த அல்லாஹ்விற்கு மிக்க நன்றி. அதற்கு மீடியமாய் இருந்த-இருக்கும் அறிஞர்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக. //

    ReplyDelete
  14. நன்றி சகோதரி ஆமினா

    ReplyDelete
  15. நண்பர் திரு ஹைதர் அலி,

    சிறப்பாக எழுதி உள்ளீர்கள், தொடர்ந்து அம்பல படுத்துங்கள், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. அஸ்ஸலாமு அலைக்கும வரஹ்...

    அருமை ஹைதர் பாய் அருமை. அதிலும் வீடியோ மூலம் பல வித்தியாசமான மார்க்க சீரழிவுகளை அறிந்து கொள்ள முடிகிறது.

    புதிய பல அரிய தகவல்களை உங்களது வலையுகம் மூலம் அறிந்து கொண்டேன். மேலும் அறிய ஆவலுடன் உள்ளேன். உங்களது இந்த முயற்சி தொடரட்டும்.

    அன்புடன்

    அனீஸ்

    ReplyDelete
  17. நண்பர் கார்பன் கூட்டாளி அவர்களுக்கு

    மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  18. அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
    சகோ அனீஸ் அவர்களூக்கு

    //அறிய ஆவலுடன் உள்ளேன். உங்களது இந்த முயற்சி தொடரட்டும்.//

    என்னை ஊக்கப்படுத்தி மேலும் எழுது என அன்பு கட்டளையிடுவது போல் உள்ளது. இப்படி நீங்க சொன்னதுக்காகவே நிறைய விஷயங்கள் சொல்லணூம்னு தோணுது. எல்லாவற்றிற்கும் மனமார்ந்த நன்றிகள் பல.

    ReplyDelete
  19. அஸ்ஸலாமு அலைக்கும்
    நான் உங்களை அண்ணன் என்றழைப்பது நீங்கள் வயதில் மூத்தவர் என்ற காரணத்திற்க்காக.(2 வயதுதான் எனக்கும் தங்களுக்கும் வித்தியாசம் எதற்கு நமக்குள் இப்படியென்று நீங்கள் சொல்வதுண்டு).உண்மையிலேயே அனுபவத்திலும்,ஆராய்வதிலும் நீங்கள் எனக்கு மூத்தவர் என்பதினால் இனி உங்களை அண்ணன் என்றழைப்பதுதான் சிறந்தது ஹைதர் அண்ணே.மென்மேலும் தாங்கள் தொடர்ந்து எழுத எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.ஆமீன்

    ReplyDelete
  20. அலைக்கும் வஸ்ஸலாம்...
    அண்ணே லெனின்
    உங்களுக்கும்
    இறைவன் அருள் புரிவானாக.

    ReplyDelete
  21. அஸ்ஸலாம் அழைக்கும்

    ஹைதர் அவர்களே,
    இதுவரை யாரும் கண்டு கொள்ளாத பக்கீர்ஷாக்கள் பற்றி மிகவும் மெனக்கெட்டு தொடராக எழுதுவது போற்றுதலுகூரியது, தவ்ஹீதை பற்றி அறியாத கால கட்டங்களில் ஏர்வாடி, பொட்டல் புதூர் போன்ற தர்காக்களில் இவர்களின் அட்டுழியங்களை பார்த்தது உண்டு. மேலும் ஒவ்வொரு வியாழகிழமை, வெள்ளி கிழமைகளில் " தப்ஸ்" என்னும் மேளத்தை வைத்து கொண்டு அவர்கள் பண்ணும் அலும்பு தாங்க முடியாது.

    மேலும் நீங்கள் இங்கே இணைப்பில் இணைத்துள்ள வீடியோக்களை பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக இருகின்றது. நபிகள் நாயகம் அவர்கள் எது நடக்க கூடாது என்று மிகவும் அஞ்சினாரோ அதையே மூலதனமாக வைத்து இவர்கள் (இஸ்லாமிய பெயர் தாங்கிகள் ) கூத்து அடிப்பது வருந்தத்தக்க ஒன்று.

    புதிதாக தொடங்கிய இந்த பிளாக்கில் மேலும் மேலும் இஸ்லாத்தின் பெயரால் நடைபெறும் இது போன்ற அக்கிரமங்களை தோலுரித்து உணமையான மார்கத்தின் பழக்க வழக்கங்களை மாற்று மத சகோதர்களும் புரியும் வண்ணம் உங்கள் ஆக்கங்கள் அமைந்திட இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்.

    ReplyDelete
  22. சகோதரர் ஹைதர் அலி அவர்களே நல்ல பல விடயங்களை தொகுத்து தந்து இருக்கிறீர்கள், நான் எல்லாம் சிறுவயதாக இருந்த காலங்களில் இந்த பக்கிர்ஷாக்கள் அதிகம் வருவார்கள் ஆனால் இப்போது இது குறைந்த விட்டது . எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் முதல் பகுதியில் சொல்லி இருப்பது போல் இப்போதுள்ளவர்களும் இன்னும் குழுவாக இயங்குகிறார்கள?

    ReplyDelete
  23. அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
    சகோதரர் ஜே
    உங்களுடைய முதல் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் பல

    நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன் (சூறா மாயிதா,02)

    இந்த அடிப்படையில் சகோதரர்களின் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்

    சகோதரன்
    ஹைதர் அலி

    ReplyDelete
  24. சே.முகம்மது ஆதம்
    சகோ அவர்களுக்கு

    //எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் முதல் பகுதியில் சொல்லி இருப்பது போல் இப்போதுள்ளவர்களும் இன்னும் குழுவாக இயங்குகிறார்கள?//

    ஆம் இப்போதும் குழுவாக இயங்குகிறார்கள் வேலூரில் நடந்த பக்கீர்கள் மாநட்டிற்கு நான் சென்று நேரடியாக பார்த்தேன். மலேசியா, மாலத்தீவு இங்கிருந்தேல்லாம் பக்கீர்கள் வந்திருந்தார்கள்
    என்னுடைய அடுத்த பதிவுகளில் இது சம்பந்தமான விப்ரங்கள் இடம்பேறும்
    (இறைவன் நாடினால்)

    ReplyDelete
  25. (லெனின்)முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்December 26, 2010 at 5:15 AM

    அடுத்த கட்டுரை எப்போது அண்ணே

    ReplyDelete
  26. சகோ முஹம்மது ஷஃபி
    புதிய தொடர் வெளிவந்துவிட்டது
    பார்த்தீர்களா இல்லையா?

    ReplyDelete
  27. ASSALAMU-ALAIKUM

    Dear brother in Islam

    PART II has songs but no fights - why :)

    Anyways, jokes apart, MASHA-ALLAH presenting something to read is OK but when you say it with a picture it has more value as a Chinese proverb says - A picture speaks a 1000 words. But here you have put a video about the subject. GOOD JOB - KEEP IT UP.

    IMPORTANT NOTE TO READERS: I have always denied the importance of history but now (in the last few years) am realizing the importance of history, esp ISLAMIC HISTORY, as its always helpful in DAWAH.

    Brother, awaiting release of PART III :)

    Encouraging you to write more & serve the community in future INSHA ALLAH. May Allah make it easy for you - Ameen.

    May Allah guide us all - Ameen.

    ReplyDelete
  28. இதுவரை தெரியாத பல தகவல்களை அறியத்தந்ததற்கு மிக்க நன்றி சகோதரரே.

    ReplyDelete
  29. @சிநேகிதன் அக்பர் அவர்களுக்கு

    உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  30. அஸ்ஸலாமு அலைக்கும்
    வருங்களேன் உங்கள் பதிவுகளை மீல் பதிவு செய்து இருக்கிறேன் திட்டாதீர்கள் லிங்க் கொடுத்து இருக்கிறேன் உங்கள் கருத்தையும் வாழ்த்தையும் தாருங்களேன்

    ReplyDelete
  31. @kaleelsms.com

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    சகோதரர் அவர்களுக்கு நன்றி

    வந்து பார்த்தேன் படித்தேன்

    ReplyDelete