Friday, November 4, 2011

பரிதாபத்துக்குரிய என் சகோதரியே....


பரிதாபத்துக்குரிய என் சகோதரியே
கேமரா கண்களை பார்த்து
வெளிக் கண்கள் சிரித்து
உள் மனதால் அழுது கொண்டிருக்கும்
உன் நிலையை யார் அறிவார்


கந்து வட்டி காரனின்
பச்சையான திட்டுகளிலிருந்து விடுபட
கச்சை கட்டி

கொச்சை மொழி பேசி
எச்சை கல நாய்களின்
இச்சை காசை பெறுகிறாய்
என்பதை யாரறிவார்

பாய்ந்து வரும் காளை
மார்பில் குத்தி விடலாகது
என்பதற்காக ஸ்பாய்னிய கலைஞனின்
ஜிகினா சிவப்பு துணி கை

ஐம்பது ரூபாய் தாளை
மார்பில் காமக்காளை
குத்தி விட வேண்டுமென்பதற்காக
கரகாட்ட கலைஞியின்
ஜிகினா துணி ரவிக்கை
முன்னது உயிர் பிழைப்பிற்காக
பின்னது வயிற்று பிழைப்பிற்காக

மேடையில் பரத நாட்டியம் ஆடும்
மேட்டுக்குடி பெண்களை போன்று
பாத சுவடி வரை இறக்கமான
உடை உடுத்தி ஆடிப்பார்
இறக்கமான உடை
குடிகாரர்களின்
இரக்கத்தை பெற்று தராது
என்ற விடையை அறிவாய்

சுடலை மலை சாமி திருவிழாவுக்கு
விடலை பசங்க வருவது
அரை நிர்வாண உன் உடலை ரசிக்கத்தான்
என்பதை சுடலை சாமியை விட நீ நன்றாக அறிவாயே

உன்னை ஆபாச பண்டமாக்கி
வானி ஒழுக பார்க்கும்
கிழட்டு மிருகங்கள்
காம கிழத்தியாய் உன்னை
பார்த்த பார்வைகள் குருடாகட்டும்
சலங்கைக்கு ஓய்வு கொடு
செருப்புக்கு வேலை கொடு

37 comments:

  1. //உன்னை ஆபாச பண்டமாக்கி
    வானி ஒழுக பார்க்கும்
    கிழட்டு மிருகங்கள்
    காம கிழத்தியாய் உன்னை
    பார்த்த பார்வைகள் குருடாகட்டும்
    சலங்கைக்கு ஓய்வு கொடு
    செருப்புக்கு வேலை கொடு//

    அருமை சகோ..

    கரகாட்ட கலை சகோதரிகளின் வலியை உணர்த்தியுள்ளீர்கள்..

    அழகான அருமையான பகிர்விற்க்கு நன்றி

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  2. சலங்கைக்கு ஓய்வு கொடு
    செருப்புக்கு வேலை கொடு/

    nice..

    ReplyDelete
  3. அருமையான கவிவரிகள் நண்பரே...

    ///முன்னது உயிர் பிழைப்பிற்காக
    பின்னது வயிற்று பிழைப்பிற்காக///

    எனக்கு இந்தவரிகள் மிகவும் பிடித்துள்ளது

    ReplyDelete
  4. சமுதாய அழுக்குகளை வெளுப்பதற்கு, ஆள் பற்றாக்குறை இருக்கத் தான் செய்கிறது

    ReplyDelete
  5. ஒரு கீழ்மட்ட கலைஞரின் அவலத்தை படம்பிடித்துள்ள கவிதைஅருமை,! ஆனால் வலிக்கிறது!

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும்,

    அருமை...

    ///சலங்கைக்கு ஓய்வு கொடு
    செருப்புக்கு வேலை கொடு///

    நச்...

    வஸ்ஸலாம்,

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

    அண்ணா கவிதைல கலக்குறீங்க

    //சலங்கைக்கு ஓய்வு கொடு
    செருப்புக்கு வேலை கொடு//

    செம....செம...செம......


    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. சலங்கைக்கு ஓய்வு கொடு
    செருப்புக்கு வேலை கொடு/

    ReplyDelete
  9. கரகாட்டக்கலைஞர்களின் மனக்குமுறல்கள் உங்கள் வரிகளில்
    தெறித்து விழுந்திருக்கிறது!

    கடைசி வரிகள் அடிக்காமல் அடித்துவிட்டது !

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    சகோ.ஹைதர்,
    கலக்கல் கவிதை!
    அனைத்து வரிகளுமே சிறப்பானவை!

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
    இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள்!!!!!!!!!!!

    ReplyDelete
  12. Dear Brother

    EID MUBARAK to You and your family with all best wishes.

    ReplyDelete
  13. இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  14. @மாய உலகம்
    உங்களுக்கும் என்
    இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்
    சகோதரரே

    ReplyDelete
  15. @angelin
    உங்களுக்கும் என் நெஞ்சார்ந்த என்
    இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. @சார்வாகன்

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ..

    இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. நல்லா இருக்கு அண்னா

    by

    jalal


    இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. @Anonymous
    ஜலால் அவர்களுக்கு
    இனிய தியாக திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    கொஞ்சம் ஏக்கம் + கொஞ்சம் கோபம் + கொஞ்சம் அனுதாபம் + நிறைய காரம் = பரிதாபத்துக்குரிய என் சகோதரியே...

    இறையருளால் ஈத்தை நலமுடன் கழித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

    வாழ்த்துக்கள் மற்றும் துஆ உடன் ...

    ReplyDelete
  20. கவிதை ஜால வார்த்தைகளை அதிகம் கொண்டுள்ளது.

    ஆனாலும்
    /சலங்கைக்கு ஓய்வு கொடு
    செருப்புக்கு வேலை கொடு /

    நல்ல வரிகள் ஹைதர் அண்ணே,

    எனக்கென்னவோ, உங்கள் பாணியில் [b]கட்டுரையாக[/b] இதை எழுதியிருந்தால் இன்னும் தாக்கமாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  21. அஸ்ஸலாமு அலைக்கும்
    டமீல் டமீலுன்னு அரஞ்சி இருக்கீங்க

    ReplyDelete
  22. @K.s.s.Rajh

    அவர்களின் இயாலமை
    அதை தான் அப்படி சொன்னேன்

    ReplyDelete
  23. @tamilan

    பார்த்தேன் ஆனால் ரசிக்க முடியவில்லை

    ReplyDelete
  24. @suryajeeva

    நாம் வெளுத்து வாங்குவோம் வாங்க

    ReplyDelete
  25. //கொச்சை மொழி பேசி
    எச்சை கல நாய்களின்
    இச்சை காசை பெறுகிறாய்
    என்பதை யாரறிவார்//

    உண்மை... உண்மையான வரிகள்...

    சகோதரருக்கு வணக்கம்...

    இப்போது தான் உங்கள் பதிவின் பக்கம் வந்து அனைத்து பதிவுகளையும் படித்துக்கொண்டு இருக்கிறேன்...

    இவ்வளவு நாள் தவற விட்டுவிட்டேன் தங்கள் பதிவுகளை ஒவ்வொரு பதிவும் நச் நச் என்று உள்ளது.....

    மீண்டும் சந்திப்போம் சகோதரரே....

    ReplyDelete
  26. //கொச்சை மொழி பேசி
    எச்சை கல நாய்களின்
    இச்சை காசை பெறுகிறாய்
    என்பதை யாரறிவார்//

    உண்மை... உண்மையான வரிகள்...

    சகோதரருக்கு வணக்கம்...

    இப்போது தான் உங்கள் பதிவின் பக்கம் வந்து அனைத்து பதிவுகளையும் படித்துக்கொண்டு இருக்கிறேன்...

    இவ்வளவு நாள் தவற விட்டுவிட்டேன் தங்கள் பதிவுகளை ஒவ்வொரு பதிவும் நச் நச் என்று உள்ளது.....

    மீண்டும் சந்திப்போம் சகோதரரே....

    ReplyDelete
  27. //உன்னை ஆபாச பண்டமாக்கி
    வானி ஒழுக பார்க்கும்
    கிழட்டு மிருகங்கள்
    காம கிழத்தியாய் உன்னை
    பார்த்த பார்வைகள் குருடாகட்டும்
    சலங்கைக்கு ஓய்வு கொடு
    செருப்புக்கு வேலை கொடு//

    வரிகள் ஒவ்வொன்றும் நறுக் நறுக்....

    ReplyDelete
  28. உன்னை பார்த்திருக்கிறேன் ரசிக்கவில்லை எனெனில் நீ யாரோ ஒருவனுக்கு மகளாக சகோதரியாக தாயாகவோ இருப்பாய்
    உன்னிடம் உன் தொழிலில் உள்ள கஸ்டம் என்ன என்று கேட்டேன் சீசன் வந்து விட்டதால் உன் கர்ப்பத்தை கறைத்திருப்பதாய்
    கூறினாய் நீ அறிவாய எனத்தெரியாது உனக்காக நான் அழுதிருக்கிறேன் வாழ்வதென்பது அவ்வளவு கஸ்டமானதா சகோதரி

    உன் சலங்கைக்கு விடை கொடுத்தாலே போதும் செருப்புக்கு வேலையில்லாமல் போகும் செய் உன் வருங்கால சந்ததி தலை நிமிர செய்

    ReplyDelete
  29. @சங்கவி

    தங்களின் வருகைக்கும் ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றி சகோதரரே

    ReplyDelete
  30. @kaleelsms.com

    வாங்க சகோ

    கவிதை நல்லாயிருக்கு
    நீங்களும் எழுதுங்களேன்

    ReplyDelete
  31. உங்கள் அன்புக்கு நன்றி சகோ வலையுகத்தில் வாசகர் பகுதியை
    துவக்குங்கள் வாசகர்களோடு நானும் எழுதுகிறேன்
    பின் வரும் வரிகளை கவணியுங்கள் பிடித்திருந்தால் சொல்லுங்கள்

    வருந்துகிறோம்
    சுவரொட்டி வருந்த மணம் இல்லை
    வரதட்சனைக்காக நிறாகரிந்தவனின் சவ ஊர்வலம்.

    அதிசயம்
    வரதட்சனை இல்லாத மணமகன் அக்காவின் கணவன்

    ReplyDelete
  32. நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
    இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.

    தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

    தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

    இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
    please go to visit this link. thank you.

    ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

    கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

    போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

    ReplyDelete
  33. அந்த பெண்ணின் சோகத்தை சொல்லும் அவள் கண்களே ஒரு மென் சோக கவிதை...!!

    அருமையான செருப்படி அண்ணே... பெண்ணை காட்சிபோருளாக மட்டுமே பார்த்து அவள் அங்கத்தில் தன் கேவலமான உடற்பசியை தீர்க்க கண்களால் குத்தி கிழிக்கும் மிருகங்களுக்கு....!!

    ReplyDelete
  34. அருமையான பதிவு.....

    ReplyDelete