Monday, November 14, 2011

கம்யூனிஸ்ட்களின் பெண் விடுதலைக்குப் பின்னால்...

குழந்தை வளர்ப்பு, சமையல் முதலிய ‘முக்கியத்துவமற்ற பணிகளில் மூழ்கி தந்தை, கணவன்,மகன் ஆகியோரின் பாதுகாப்பில் வீடுகளுக்குள் அடக்கி ஒடுக்கப்பட்டு வாழ்க்கையைக் கழிப்பவர்கள் தாம் ஹவுஸ் ஒய்ப் என்று சொல்லக்கூடிய குடும்ப பெண்கள் இவர்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவது தான் எங்கள் முதல் கடமை என்று சொல்லுகிற கம்யூனிஸ்ட்களும் மேற்கத்திய போலி பெண்ணியவாதிகளும் (எந்த வகையான சுதந்திரத்தை பெற்றுத் தருவார்கள் என்பதை பிறகு பார்ப்போம்)

கம்யூனிஸ்ட்கள் பெண்ணுரிமை பற்றி வாய் திறந்தால் அதில் இஸ்லாமிய பெண்களைப் பற்றியும் பர்தாவைப் பற்றியும் எழுதாமல்இருந்ததில்லை.  சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், முஸ்லிம் சமூகம் பெண்களைக் கூண்டில் அடைத்து வைத்துள்ளது எனும் அபத்த சிந்தனைதான் இருதரப்பினரிடமும் காணப்படுகிறது.

ஆனால் நம்ம ஸ்டாலின் பர்தாவை சரியான உடை என்கிறார்.
நூல்: சர்வம் ஸ்டாலின் மயம், என்ற புத்தகத்தில் பக்கம்;135ல் நம்ம ஸ்டாலின் ரோம்ப அருமையாக ஒரு பெண்ணு எப்படியேல்லாம் டிரேஸ் போடனுன்னு தன்னுடைய மகளுக்கு பன்னுன அறிவுரையை பாருங்க, மகளே ஸ்வெத்லானா உடலோடு ஒட்டிக்கொள்ளும் படியாக ஏன் ஆடைகள் அணிகிறாய்? வளர்ந்த பெண்தானே! தொளதொளப்பான ஆடைகளை அணிய பழகிக்கொள். ஒரு போல்ஷ்விக் பெண்ணுக்கு கண்ணியம்தான் முக்கியம்! 

எல்லா நிலைகளிலும் அடக்குமுறைகளுக்கு ஆளான பெண்களுக்கு எடுத்துக் காட்டாக முஸ்லிம் மகளிரைக் காட்டிப் பிரச்சாரம் செய்கிறார்கள் மேற்கத்தியர்கள் அவர்களின் ஆங்கில கட்டுரைகளை தமிழில் அப்படியே காப்பியடித்து வாந்தியெடுக்கும் கம்யூனிஸ்ட்கள் முற்போக்கு என்று சொல்லிக் கொள்கிற பிற்போக்குவாதிகள்.

ஒரு ஆணுடன் வாழ்வதை அடிமைத்தனம் என்று நினைக்கிற,கூட்டு கலவி,ஓர்பாலின உறவு,விருப்பட்டவர்களிடம் செக்ஸை பகிர்ந்து கொள்வது என முற்போக்கின் பரிணாம உச்சியில் இருக்கிற மேற்கத்திய முற்போக்கு என்கிற கற்காலத்து பெண்களை பெறுத்தவரை இவர்கள் பிற்போக்குவாதிகள் தான். இவர்கள் முஸ்லிம் பெண்களுக்காகப் பேசும் முழு அதிகாரம் எங்களுக்கு உண்டு என்று அடம் பிடிக்கிறார்கள்.

இவ்வாறு முஸ்லிம் பெண்களை இழிவாகச் சித்தரிப்பதன் மூலம் தங்களின் இஸ்லாமிய எதிர்ப்பு நியாயமானது தான் என்று காட்ட முனைகிறார்கள். பெண்களை அடக்கி ஒடுக்குவதிலிருந்தே இஸ்லாம் எத்துணைக் கொடுமையான மதம் எனத் தெரிகிறதல்லவா என்றும் வினவுகின்றனார்.

முஸ்லிம் பெண்கள் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையற்ற அந்தந்த நாடுகளின் வட்டார பழக்க வழக்க வழிமுறைகளால் பல அநீதிகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை மறுக்கவில்லை.அவர்களின் திறமைகளும் ஆற்றல்களும் முழுமையாகப் பயன்படுத்தபடாமல் முடங்கிக் கிடக்கின்றன என்பதும் உண்மைதான். மார்க்கமின்மைதான் இவர்களின் முதல் பிரச்சனை.

ஆனால் இத்தகையச் சிக்கல்கள் முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமே உரியன என்பதுபோல் பிரச்சாரம் செய்யப்படுகிறது பெண் விடுதலைக்கு நிறமோ மதமோ சாதியோ இல்லை.மேற்கத்திய,கம்யூனிஸ பெண் விடுதலைக்கு என்ன அளவுகோலை நிர்ணயித்துள்ளார்களோ அந்த அளவுகோலை முழுமையாகப் பின்பற்றி மனநிறைவுடன் வாழும் ஒரு பெண் கூட இல்லை.

உண்மையான பெண்ணுரிமை, பெண்களின் விடுதலை என்பது அவர்களுக்குக் கண்ணியமான வாழ்வையும் அமைதியான சூழலையும் பெற்றுத் தர வேண்டும்.


ஆனால் கம்யூனிஸ்ட்கள் தங்களின் பொற்கால அற்புத ஆட்சி என்று வர்ணிக்கிற சோவியத் யூனியன் ரஷ்ய ஆட்சியில் பெண்கள் பட்ட துயரத்தை சொல்லி மாளாது.கம்யூனிஸ பொருளாதாரத்தின் இயற்கையான இயல்பே இயன்ற அளவு உற்பத்தியை பெருக்குவதேயாகும் அதற்காக சமுதாயத்தின் அத்தனை ஜீவன்களும் ஆலைகளிலும் ஆய்வுக் கூடங்களிலும்,கழனிகளிலும் ஆண்களைப் போல்.பெண்களும் கடுமையாக உழைத்தாக வேண்டும்.
                               அனைத்து கடுமையான வேலைகளிலும் பெண்கள்
ரஷ்ய கம்யூனிஸ அரசு பாய்ச்சல் வளர்ச்சி என்ற பெயரில் குறுகிய காலத்தில் அதிக உற்பத்தி செய்ய வேண்டும் என்று காட்டாயப்படுத்தி.ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் இருக்கும் உடல் வலிமையின் வேறுபாட்டை மறந்தது மட்டுமல்ல மனோ நிலையில் உள்ள வேறுபாட்டையும் மறந்து 8 மணிநேரம் வேலை என்பதை தியாகம் செய்யுங்கள் என்று மிரட்டி 16 மணிநேர வேலைகளை வாங்கி அந்த பெண்களை கசக்கி பிழிந்தார்கள்.

பெண்கள் உற்பத்தியில் ஈடுபடுவதை அவர்களின் குழந்தைகள் தடுத்து விட கூடாது என்பதற்காக மொத்த உற்பத்தியைப் போல் குழந்தைகளும் மொத்தமாகவே ஒரு இடத்தில் வளர்க்கப்பட்டனர். பெண்களுக்கு பிரசவக் காலத்தின்போது மட்டுமே சிறிது ஒய்வு கொடுக்கப்படும்.
 தாயின் பராமரிப்பு இல்லாமல் மொத்தமாக வளர்க்கப்படும் குழந்தைகள் 

பெண்களின் உள்விஷயம் வரை கம்யூனிஸ சர்வதிகார அரசு தலையிட்டது உடலுறவுக்கு அதிக நேரம் செலவிடாதீர்கள் ஆலை உற்பத்தி பாதிக்கும் என்பதை வேறு வார்த்தைகளில் மிருகத்தனமான பாலுணர்வுத் தூண்டலுக்கு சமூக அமைப்பே காரணம்.பாலுணர்வினைக் கட்டுப்படுத்த நல்ல பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.பெண்கள் அனைவரையும் தனக்கு நிகரான தோழனாகவே ஒருவர் கருதவேண்டும் என்று கம்யூனிஸம் கற்றுத் தருகிறது என்கிறார்கள். அதனால் தோழனை ஆலையில் வேலை செய்ய விடு என்று உடலுறவுக்கு ரேஷன் முறையை அமல்படுத்தினார்கள்.

ஒவ்வொரு குடிமகளும்,குடிமகனும் என்னென்ன வேலைகளைச் செய்திட வேண்டும் என்பதை அரசாங்கமே முடிவு செய்யும்: இதில் அரசாங்கம் உழைப்பவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு கிஞ்சிற்றும் இடம் தருவதில்லை.மனிதர்களின் இலட்சியம் என்னவாக இருந்திட வேண்டும்,மனிதர்களின் செயல்கள்,சிந்தனைகள் எப்படி இருந்திட வேண்டும் எல்லாவற்றையும் முடிவு செய்வது அரசாங்கமே!

இங்கே நாம் தனி மனிதன் செலுத்துகின்ற சர்வாதிகாரத்திற்கும்,அரசாங்கம் செலுத்துகின்ற சர்வாதிகாரத்திற்கும் இடையேயுள்ள வேறுபாட்டை தெளிவாகப் புரிந்துக் கொள்ளவேண்டும்.

சில நேரங்களில் சர்வாதிகாரியாகச் செயலபடுகின்ற தனிமனிதர், நல்லவராக,இரக்க சிந்தை படைத்தவராக தனது நாடு முன்னேறிய ஆக வேண்டும் என்ற ஆசையை உடையவராக தன்னுடைய மனசாட்சிக்கு பயந்தவராக,இதய சுத்தி உடையவராக சட்டங்களை இயற்றுவதற்கு முன் மக்களை கலந்தலோசிப்பவராக இருந்திட வாய்ப்புண்டு.

ஆனால் அரசாங்கம் சர்வாதிகாரியாக இருக்கின்றபோது மேலே சொன்ன இவைகள் மறந்தும் நடந்திட வாய்ப்பில்லை. இதுபோலத்தான் கம்யூனிஸத்தில் இருக்கும் சர்வாதிகாரமும். ஏனெனில் கம்யூனிஸ அரசாங்கம் பொருளாதாரத்தைப் பற்றி மட்டுமே கவலைப் படுகின்றது. அது தனது இலக்கை அடைய தான் விரும்பும் திட்டங்களை இரும்புக் கரம் கொண்டு மக்கள் மீது திணிக்கின்றது இதன் பெயர் தான் ‘கம்யூனிஸ அரசாங்கத்தின் சர்வதிகாரம்’ என்பது.
சர்வதிகாரம் வீழ்ந்து ஸ்டாலின் உருவச்சிலை மாஸ்கோ தெரு குப்பையில்

இப்போது புரிகிறதா இவர்கள் ஏன் பெண் சுகந்திரத்தைப் பற்றி பேசுகிறார்கள் என்று?


நீங்கள் நல்ல கணவரா? 


உங்கள் மனைவியும் நீங்களும் உற்றதுனை என்ற முறையில் வீடு, குடும்பம் குழந்தைகள் இவர்களை நீ பார்த்துக் கொள் வருமானத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற முறையில் வேலைகளை பகிர்ந்து செயல்படுகிறீர்களா? 


அல்லது அப்படி செயல்படக் கூடிய சமூக அமைப்பில் நீங்கள் இருக்கிறீர்களா?


மனைவி வீட்டு வேலையும் பார்த்து அலுவலக வேலையும் ஏன் பார்க்க வேண்டும் அப்படியான தேவை எங்களுக்கு இல்லை என்று இருவரும் சேர்ந்து முடிவேடுத்து நீங்கள் உழைத்து குடும்பத்தை காப்பாற்றுகிறீர்களா?


தெரிந்துக் கொள்ளுங்கள் நீங்கள் ஆணாதிக்கவாதி பெண் உரிமையை பறிக்கிறவர் கம்யூனிஸ்ட்களின் உயர்ந்தஇலட்சியமான உற்பத்தியை பெருக்குவதற்காக ஆலைகளுக்கு பெண்களை காட்டுத்தனமாக உழைக்க அனுப்ப மறுக்கும் பெண்ணிய விரோதி.


இறுதியாக ஒரு சவால் விடுகிறேன் இங்குள்ள கம்யூனிஸ்ட்களை பற்றியும் அவர்களின் குடும்ப வாழ்க்கை பற்றியும் எனக்கு நன்றாக தெரியும். இவர்கள் தான் உழைக்கிறார்கள் பெண்களை வேலைக்கு அனுப்புவதில்லை.இதை அவர்களை மறுக்க சொல்லுங்கள் பார்ப்போம்.


வளைகுடா நாடுகளில் உழைக்கும், உழைக்க வந்த கம்யூனிஸ்ட்கள் ஏன்அவர்கள் வீட்டில் இருந்துக் கொண்டு பெண்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பவில்லை பதில் சொல்ல முடியுமா?


கம்யுனிச இயக்கங்களில்/கட்சிகளில் சரி சமமான அளவில் தலைமை பொறுப்புக்கள் பெண்களுக்கு பகிரப்பட்டுள்ளனவா?, எத்தனை பெண் தலைவர்களை கம்யுனிச இயக்கங்களில் நாம் கண்டுள்ளோம்? 


அட போலி கம்யுனிஸ்ட்களை (!?) விடுங்க...தாங்கள் தான் உண்மையான கம்யுனிஸ்ட்கள் என்று தம்பட்டம் அடிக்கும் இயக்கங்களின் தலைமை பொறுப்பை எத்தனை பெண்கள் இதுவரை அலங்கரித்துள்ளனர்? உண்மையான பெண்ணுரிமைவாதிகள் என்றால் இதுவரை நாம் சரி சமமான அளவில் தலைமை பொறுப்புக்களில் பெண்களை பார்த்திருக்க வேண்டுமல்லவா? 

98 comments:

  1. ஸ்டாலின்November 14, 2011 at 9:51 PM

    பெண்களின் உள்விஷயம் வரை கம்யூனிஸ சர்வதிகார அரசு தலையிட்டது உடலுறவுக்கு அதிக
    நேரம் செலவிடாதீர்கள் ஆலை உற்பத்தி பாதிக்கும் என்பதை வேறு வார்த்தைகளில்
    மிருகத்தனமான பாலுணர்வுத் தூண்டலுக்கு சமூக அமைப்பே காரணம். பாலுணர்வினைக்
    கட்டுப்படுத்த நல்ல பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். ////

    படுக்கையில் பெண்களை தண்டிக்க சொல்வதை விடவா - இது வெட்கக்கேடானது.

    ReplyDelete
  2. அன்பின் ஹைதரலி,

    இப்பதிவுக்காக உங்களுக்கு எனது ராயல் ஸல்யூட்.

    தொடருங்கள்.

    வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
    சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

    ****** முன்னாள் கம்யூனிஸ்ட்வாதி கொடிக்கால் செல்லப்பா இஸ்லாமிய அழைப்பு பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் என்ற பெயரில் தலை நிமிர்ந்து நடப்பதோடு, தன்னைச் சார்ந்த சக மக்களைப் பார்த்து புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி! என்று புத்தகம் மூலம் அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கிறார்

    ********

    MORE.
    சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

    **** அதிசயத்தக்க‌ வரலாறு. இந்தியாவில் முதலில் இஸ்லாத்தை தழுவியவர். இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித். இந்தியாவின் இந்து மன்னர் சேரமான் பெருமாள் முதலில் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை தழுவினார்.. இறை தூதர் நிலவை இரண்டு பகுதிகளாக பிரித்து காட்டிய நிகழ்வு ****


    **** ஒட்டுமொத்த இந்திய இஸ்லாமியர்களையும் கொன்று குவிக்க அறிவாளியொருவர்……. விடியோ விளக்கம் *****

    வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

    ReplyDelete
  3. கம்யூனிச படுகொலைகள் சில துளிகள்.

    சொடுக்கி காணவும்.

    1. COMMUNIST ATROCITIES .

    2. Communist Crimes Against Humanity Worldwide

    .

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் ஹைதர் அலி...

    நெத்தியடி...

    உங்களுக்கு விபரம் தெரியலேன்னு நினைக்கின்றேன். இங்கெல்லாம், ரசியாவில் இருந்தது போல் அதிநவீன குழந்தைகள் காப்பகம் இல்லையல்லாவா?..அதனால் தற்சமயத்துக்கு பெண்களை அடக்கிவைத்திருக்கின்றார்கள் இக்காலத்திய கம்யுனிஸ்ட்கள்.

    புரட்சி வெடிக்கும் (??) போது உண்மையான பெண்ணுரிமைவாதிகளாக நடந்துக்கொள்வார்கள்... :)

    நல்ல வேலை...கம்யுனிச அலுவலங்களில் ஆண்களுக்கு சரி சமமான அளவில் பெண்கள் வேலை செய்கின்றார்களா?, பொறுப்புக்கள் பாகுபாடின்றி பகிர்ந்துக்கொள்ளப்பட்டுள்ளனவா? - இப்படியெல்லாம் கேட்காமல் போனீர்களே..

    நேரமிருந்தால் இதனையும் படியுங்கள்..

    பெண்ணுரிமை வேஷம் போடும் இவர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா?

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  5. அப்படியே இதனையும் பாருங்கள்...காரி உமிழ்வீர்கள்...

    உண்மையான கம்யுனிஸ்ட்களின் கேவலமான புத்தி

    ReplyDelete
  6. //முஸ்லிம் பெண்கள் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையற்ற அந்தந்த நாடுகளின் வட்டார பழக்க வழக்க வழிமுறைகளால் பல அநீதிகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை மறுக்கவில்லை.//
    குர்ஆன், ஹதீஸ் அடிப்படைவாத நாடுகளில்தான் பெண்களுக்கெதிரான அடக்குமுறை அதிகம்.

    //இவர்கள் முஸ்லிம் பெண்களுக்காகப் பேசும் முழு அதிகாரம் எங்களுக்கு உண்டு என்று அடம் பிடிக்கிறார்கள்.//
    முஸ்லிம் ஆண்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகவிருந்த பர்தா சம்பந்தமான நிகழ்ச்சியை தடுத்தது ஒரு உதாரணம்.

    //உண்மையான பெண்ணுரிமை, பெண்களின் விடுதலை என்பது அவர்களுக்குக் கண்ணியமான வாழ்வையும் அமைதியான சூழலையும் பெற்றுத் தர வேண்டும்.//
    அடக்குமுறையும் கட்டற்ற சுதந்திரமும் கண்ணியத்தையும் அமைதியையும் கொடுக்காது.

    கம்யுனிச சர்வாதிகாரத்தில் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் உரிமையில்லை.

    //வளைகுடா நாடுகளில் உழைக்கும், உழைக்க வந்த கம்யூனிஸ்ட்கள் ஏன்அவர்கள் வீட்டில் இருந்துக் கொண்டு பெண்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பவில்லை பதில் சொல்ல முடியுமா?//
    வேலை கிடைத்திருக்காது, அல்லது அரபிகள் பெண்களை கொடுமைப்படுத்துவார்கள் என்று பயந்திருக்கலாம்.

    ReplyDelete
  7. @Robin

    மிஸ்டர் ராபின் அவர்களுக்கு
    இத்தனை நாட்களாக ஒவ்வோரு இஸ்லாமிய தளத்திலும் மைனஸ் ஓட்டு போட்டு கொண்டு திரிந்த தாங்கள் வெளிப்படையாய் வந்ததில் மகிழ்ச்சி
    இது தான் ஆரோக்கியமானது.

    என்னுடைய தளத்திலும் மைனஸ் ஓட்டுகள் போட்டு சாதனை படைத்ததும் நீங்கள் தான்.

    சரி உங்களுக்கு விரிவான பதில் இருக்கு தயாராக இருங்கள்

    ReplyDelete
  8. வணக்கம் சகோ இந்த நீளமான பகிர்வை ஆறுதலாக வாசித்துக்
    கருத்து இடுகின்றேன் .வாழ்த்துக்கள் சகோ உங்கள் முயற்சிகளுக்கு .
    மிக்க நன்றி பகிர்வுக்கும் ..........

    ReplyDelete
  9. கட்டுப்பாடுகள் கழுத்தை நெரிப்பன அல்ல...
    மாறாக....
    அது ஒரு பாதுகாப்புக் கேடயம்
    என்பதை புரிந்துகொள்ள சிலருக்கு காலம் தேவைப்படுகிறது....

    அது மார்க்கத்தின் தவரல்ல...
    பார்ப்பவர்களின் பார்வைக் கோளாறு....
    சிந்தனைச் சிதைவு....

    ReplyDelete
  10. ஆண் பெண் சமத்துவம்
    பலதார மணம்
    தலாக்
    ஜீவனாம்சம்
    ஹிஜாப் (பர்தா)
    பாகப் பிரிவினை
    சாட்சிகள்
    அடிமைப் பெண்கள்

    ஆகியவை குறித்து அறியாமையின் காரணமாகவோ, வேண்டுமென்றோ இஸ்லாத்தின் மீது சேறு வாரி இறைப்பது இன்று பலருக்கும் ஒரு தொழிலாகவே ஆகிவிட்டது.

    சில வகுப்புவாத அமைப்புகள் நடத்தும் பத்திரிகைகள் மட்டுமல்ல தேசிய நாளேடுகள் கூட இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் தவறாகவே விமர்சித்து வருகின்றன.

    மேற்கண்ட விஷயங்களில் அவர்கள் சுமத்தும் தவறான குற்றச்சாட்டுகளுக்கு 'இஸ்லாம் பெண்களைக் கொடுமைப்புடுத்துகிறதா? ' எனும் இந்நூல் பதில் தருகிறது.


    இந்து, கிறிஸ்தவ, நாத்திக கம்யூனிச‌ முகாம்களிலிருந்து இஸ்லாத்தின் மீது தொடுக்கப்பட்ட அனைத்து விமர்சனங்களுக்கும் தெளிவான பதில்.

    சுட்டியை க்ளிக் செய்து OPEN WITH செய்து நேரடியாக படிக்கலாம் அல்லது SAVE FILE செய்து தரவிறக்கம் DOWNLOAD செய்தும் படிக்கலாம்.

    இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா? இஸ்லாம் பெண்களை கொடுமைப்படுத்துகின்றதா?

    .

    முதலில் இதை படித்துவிட்டு வாருங்கள்.
    .

    ReplyDelete
  11. //இத்தனை நாட்களாக ஒவ்வோரு இஸ்லாமிய தளத்திலும் மைனஸ் ஓட்டு போட்டு கொண்டு திரிந்த தாங்கள் வெளிப்படையாய் வந்ததில் மகிழ்ச்சி //
    மைனஸ் ஓட்டு போட்டு கொண்டு திரிவது இஸ்லாத்தின்படி தவறானதா?

    //என்னுடைய தளத்திலும் மைனஸ் ஓட்டுகள் போட்டு சாதனை படைத்ததும் நீங்கள் தான்.//
    இந்த பதிவிற்கும் மைனஸ் ஒட்டு போட்டு என்னுடைய சாதனையை தக்க வைத்து கொள்கிறேன்.

    ReplyDelete
  12. @Robin

    ராபின் அவர்களுக்கு
    ரொம்ப நன்றி
    ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்கிற கிருஸ்துவ நம்பிக்கை இயங்கியல்ரீதியாக ஒத்து வராது என்பதை நிறுபித்து

    மைனஸ் ஓட்டால் அடிக்கும் உங்கள் வீரத்திற்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்November 15, 2011 at 1:29 AM

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோ உங்களிடம் இதுபோன்று போலிகளின் முகத்திரையை கிழிக்கும் கட்டுரைகள் நீங்கள் வலைத்தம் ஆரம்பிக்கும் நாள் முதல் எதிர்ப்பார்த்து கொண்டிருந்தேன்.தொடருங்கள் சகோ தொடர்ந்து அரசியல் லாபத்துக்காக‌ போலியாய் ஓலமிடும் அவர்களுடைய முகமூடியை கிழித்தெரியுங்கள்.

    ReplyDelete
  14. @ஸ்டாலின்

    நண்பர் அவர்களுக்கு

    //படுக்கையில் பெண்களை தண்டிக்க சொல்வதை விடவா - இது வெட்கக்கேடானது.//

    இப்படி மொட்டையாக சொன்ன எப்படி?

    கொஞ்சம் மனசு வச்சு எந்த இடத்தில் இஸ்லாம் அவ்வறான கட்டளை இடுகிறது என்று சொன்னால் நான் விளக்க ஏதுவாக இருக்கும்

    தயவுசெய்து கொஞ்சம் சொல்லுங்க நண்பரே

    ReplyDelete
  15. //மைனஸ் ஓட்டால் அடிக்கும் உங்கள் வீரத்திற்கு என் வாழ்த்துக்கள்// உங்க அளவுக்கெல்லாம் எனக்கு வீரம் இல்லை பாய், நான் சாதாரண ஆள்தான் ஒத்துக்கிறேன்.

    ReplyDelete
  16. ஹைதர் அலி said... 13
    @Robin

    ராபின் அவர்களுக்கு

    //ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்கிற கிருஸ்துவ நம்பிக்கை இயங்கியல்ரீதியாக ஒத்து வராது என்பதை நிறுபித்து//

    ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...???

    ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா?
    இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா? என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது
    ----------
    மேலும் படிக்க க்ளிக் செய்யுங்கள்.

    LINK.

    >>>> ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...??? கிறிஸ்துவ போலிமாயைக்கு சவால்?

    புதிய ஏற்பாடு பைபிள்: யோவான்:18 : 22 – 23. ல்
    இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று,

    இயேசுவை ஒரு அறை அறைந்தான்..

    இயேசு அவனை நோக்கி
    : “நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில்,
    என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.”

    தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி ஒரு போலி மாயையை ஏற்படுத்தி

    “ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு” இயேசு இப்படி போதித்தார்

    என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்..
    <<<<<
    ---------------

    ReplyDelete
  17. ஸலாம் சகோ.ஹைதர் அலி,

    உங்களிடம் இதை...இதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்.

    ஏனெனில், இதில் நீங்கள் 'இதுபற்றிய விபரம் அறிந்த ஸ்பெஷலிஸ்ட்' என்று எனக்குத்தெரியும்.

    நெத்தியடி,
    சாட்டையடி,
    சவுக்கடி,
    மொத்தத்தில் மரணஅடி..!

    ReplyDelete
  18. இப்பதிவில்....
    //பெண்களுக்கு பிரசவக் காலத்தின்போது மட்டுமே சிறிது ஒய்வு கொடுக்கப்படும்.//---என்று இதையாவது தருகிறதே அந்த 'முற்போக்கு(?)' கம்யுனிஸ்டுகள்..!

    ஆனால், இந்த 'பின்நவீனத்துவ(?)' முதலாளித்துவம் இருக்கிறதே...
    அது சொல்வது... "அரசுப்பணிக்குச்செல்லும் ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க பெண்களின் குழந்தை பிரசவ நாளன்று கூட அவர்களுக்கு விடுமுறை ஓய்வு கிடையாது..!" ...என்பதெல்லாம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..!?

    என்ன கொடுமை சகோ.ஹைதர் அலி..!

    இவ்வளவு 'பெண்மை சுரண்டல்' சித்தாந்தங்களை தன்னகத்தே கொண்ட இவர்கள்... பெண்களுக்கு இஸ்லாம் கொடுத்திருக்கும் உரிமை, கண்ணியம், சலுகை, பாதுகாப்பு இவற்றை எல்லாம் விமர்சிபார்களாம்..!

    என்ன அருகதை இருக்கிறது இவர்களுக்கு..???

    இஸ்லாத்தில் ஆணடிமைத்தனம் & பெண்ணாதிக்கம்..!

    இந்த முதலாளித்துவ மற்றும் கம்யூனிச பிரிவினர் இருவருமே பெண்கள் விஷயத்தில்
    'அறியாமையில் உழலும் அறிவிலிகள்' அல்லது 'அரக்கத்தனமான ஆணாதிக்கசுயநலவாதிகள்' என்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை

    ReplyDelete
  19. இன்னும் முயன்றிருக்கலாம்.

    ReplyDelete
  20. நன்றி நண்பர் ஹைதர் அலி,

    கம்யூனிசம் கூறும் பெண்னியம் குறித்து ஒரு பதிவு இடவேண்டும் என்று கடந்த சில நாட்களாகவே எண்ணிக் கொண்டிருக்கிறேன். காரணம் தொடர்ந்து வரும் பின்னூட்டங்கள் குறிப்பாக இப்ராஹிம். ஆனால் எதில் தொடங்குவது எதில் பயணிப்பது என்பவை குறித்து திட்டமிடாமலேயே இருந்தேன். நீங்கள் ஒரு வடிவம் தந்திருக்கிறீர்கள். நன்றி. விரைவில் இடுகிறேன். அது உங்கள் பதிவையும் உள்ளடக்கியிருக்கும்.

    தோழமையுடன்
    செங்கொடி

    ReplyDelete
  21. @செங்கொடி

    நண்பர் செங்கொடி

    //நீங்கள் ஒரு வடிவம் தந்திருக்கிறீர்கள்.//

    வடிவம் கிடைக்காமல் இருந்த உங்களுக்கு என் மூலம் வடிவம் கிடைத்ததை நினைத்து மகிழ்கிறேன்
    எனேன்றால் எல்லா விஷயங்களைப் பற்றி பேசும் நீங்கள் பெண்கள் குடும்பம் சம்பந்தமாக மார்க்ஸிய வடிவம் கொடுத்ததில்லை விரைவில் கொடுங்கள் காத்திருக்கிறேன்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  22. அஸ்ஸலாமு அலைக்கும்!
    //உண்மையான பெண்ணுரிமை, பெண்களின் விடுதலை என்பது அவர்களுக்குக் கண்ணியமான வாழ்வையும் அமைதியான சூழலையும் பெற்றுத் தர வேண்டும்//
    இஸ்லாம் எங்களுக்கு தரும் மகா ராணி வாழ்கையை விட்டு விட்டு நடன மாதுவின் வாழ்க்கைக்கு மாறினால் தான் பெண் சுதந்திரம் என்று உச்சி குளிர்வார்கள் எனதெரிகிறது.
    நாங்கள் தொழில் செய்ய வேண்டும் என்று எங்கள் மார்கமே எங்களை நிர்பந்திக்கவில்லை. ஆனால் இந்த kamyuunisd தலையை தடவி கண்ணை பிடுங்கும் வேலையை செய்கின்றனரே!!!

    ReplyDelete
  23. Bhai.....


    solla vaarthaigale illai. miga miga miga soodaana....ella 'tholar'galukkum print seythu thanthida vendiya oru idugai. miga miga manathaara paaraatugiren. unmaiyaana pen suthanthiram enna enbathai manthaal islaathaiyum, sharee'athaiyum virumbi, hijaabai kavasamaaya aninthu thalai nimirthi vaalum islaamiya pengalidam kettu therinthu kolla vendum. oru kelvikkaavathu pathil varumaa paarpom :)

    ReplyDelete
  24. ////மேலே உள்ள வினவின் முகப்பு-சுட்டுவில் இவர்களின் “கொள்கையான” ‘கம்யூனிசம்’ எனும் தலைப்பில், ‘கல்வி’, ‘கேள்வி-பதில்’, ‘செவ்வியல்’…என வரிசையாக உள்தளைப்புகளில் ‘கிளிக்’ செய்தால் “நீங்கள் தேடும் பக்கத்தைக் காண இயலவில்லை” என்று “ஈ” என்று தளம் பல்லு இளிக்கிறது. இதிலெல்லாம் பதிவு போட இவர்களுக்கு விஷயம் இல்லை…! (?) ///--இந்த பின்னூட்டம் நான் வினவிடம் வினவியது. விரைவில் போடுவதாக சொன்னார்கள்.
    http://www.vinavu.com/2009/10/15/arrest-tirupathi-elumalaiyan/
    ஸாரி .... ரெண்டு வருஷம் ஆச்சு...
    இன்னும்...
    கம்யூனிசம் என்றால் என்ன என்று வினவு பக்கம் போய் யாராவது அறிய நாடினால்...

    http://www.vinavu.com/category/what-is/

    இங்கே சென்று //There is no post to show for this Category// என்பதைத்தான் அறிய முடிகிறது.

    "கேள்வி பதிலே" இவ்வருடம் மே மாசம்தான் ஆரம்பித்தார்கள்.

    இப்போது செங்கொடி சொல்கிறார் 'விரைவில்' என்று.

    பார்ப்போம். அவர் ஏற்கனவே சகோ.ஆஷிக் அஹமத்வின் 'எதிர்குரல்' பரிநாமக்கட்டுகைதிகளுக்கு ஆப்படிக்கும் அறிவியல் கட்டுரைகளுக்கு "எதிர்பதிவுகள்" விரைவில் வரும் என்றார். அந்த 'விரைவையே' இன்னும் காணோம்..!

    ReplyDelete
  25. சலாம் சகோ ஹைதர் அலி!

    சிறந்த இடுகை. மிகவும் அவசியமான இடுகையும் கூட. தொடருங்கள்.

    ReplyDelete
  26. மறக்க முடியுமா குஜராத் இனப்படுகொலையை!

    http://www.sinthikkavum.net/2011/11/blog-post_10.html

    ReplyDelete
  27. http://www.sinthikkavum.net/2011/11/blog-post_10.html

    ReplyDelete
  28. @F.NIHAZA

    //அது மார்க்கத்தின் தவரல்ல...
    பார்ப்பவர்களின் பார்வைக் கோளாறு....
    சிந்தனைச் சிதைவு....//

    சரியாகச்சொன்னீர்கள் சகோ
    உங்களை போன்ற சகோதரிகளின் தெளிவாக இருப்பதால் இங்கு சிந்தனை சிதைவை அவர்கள் விற்க முடிவதில்லை

    நன்றி சகோ

    ReplyDelete
  29. அருமையான கட்டுரை

    ReplyDelete
  30. பெண்ணுக்கு கண்ணியம்தான் முக்கியம்! //

    மிக அருமையாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள் சகோ!.... பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  31. @VANJOOR

    என் பதிவை உண்மைப்படுத்தும் சுட்டிகளுக்கு நன்றி சகோதரரே

    ReplyDelete
  32. @VANJOOR

    வீடியோவை சேமித்து வைத்துக் கொண்டேன்

    ReplyDelete
  33. @Aashiq Ahamed
    வ அலைக்கும் வஸ்ஸலாம்

    //உங்களுக்கு விபரம் தெரியலேன்னு நினைக்கின்றேன். இங்கெல்லாம், ரசியாவில் இருந்தது போல் அதிநவீன குழந்தைகள் காப்பகம் இல்லையல்லாவா?..அதனால் தற்சமயத்துக்கு பெண்களை அடக்கிவைத்திருக்கின்றார்கள் இக்காலத்திய கம்யுனிஸ்ட்கள்//

    அடப்பாவமே இதுதான் விஷயமா?

    சுட்டிகளுக்கும் நன்றி

    ReplyDelete
  34. @அம்பாளடியாள்

    வருகைக்கு நன்றி
    நிதானமாக வாசியுங்கள்

    ReplyDelete
  35. @VANJOOR

    தெளிவு பெற விரும்பிவோர் பார்க்க வேண்டிய சுட்டி

    ReplyDelete
  36. @~முஹம்மத் ஆஷிக்_citizen of world~

    வ அலைக்கும் வஸ்ஸலாம்
    அல்ஹம்துலில்லாஹ்

    தங்கள் வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  37. @~முஹம்மத் ஆஷிக்_citizen of world~

    மேற்க்கத்தியார்களும் இந்த கம்யூனிஸ்ட்களும் இரு பிரிவினரும் நடுநிலை தவறி விடுகின்றனர்

    உங்கள் சுட்டிகளுக்கு நன்றி

    ReplyDelete
  38. @kalai

    இன்னும் காலமும் நேரமும் இருக்கிறது தோழரே

    ReplyDelete
  39. @zalha
    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ..
    //நாங்கள் தொழில் செய்ய வேண்டும் என்று எங்கள் மார்கமே எங்களை நிர்பந்திக்கவில்லை. ஆனால் இந்த kamyuunisd தலையை தடவி கண்ணை பிடுங்கும் வேலையை செய்கின்றனரே!!!//

    மிக தெளிவான கருத்துரை சகோ
    இந்த பதிவுக்கேற்ற உதாரணம்

    நன்றி சகோ

    ReplyDelete
  40. @அன்னு

    வாங்க சகோதரி

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  41. @~முஹம்மத் ஆஷிக்_citizen of world~

    உங்களோடு சேர்ந்து நானும் எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  42. @சுவனப்பிரியன்

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
    தொடர்கிறேன்

    ReplyDelete
  43. @nidurali

    தங்களின் முதல் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  44. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரர் ஹைதர் அலி,
    சிவப்பு வட்டாரத்தின் கருப்பு பக்கங்களில் சிலவற்றை பதிவாக இட்டமைக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள். சில கருப்பு பக்கங்கள் வெளிவந்ததற்கே தாம் தூமென்று குதிக்க ஆரம்பித்து விட்டனர் செங்கொடி வகையறாக்கள். தொடர்ந்து தமது கற்பனைத்திறனை மட்டுமே நம்பி இஸ்லாத்தை குறித்து அவதூறுகளை அள்ளி விடுபவர்கள் தம்மை பற்றிய விமர்சனம் என்றால் அதற்கு பதில் கொடுக்காது வெறுமனே ஒப்பாரி மட்டுமே வைப்பார்கள். இதில் ராபின் நம்பும் கிறித்தவமாகட்டும் இல்லை கம்யூனிசமாகட்டும் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இஸ்லாம் குறித்த அவதூறுகளை அடிப்படையில்லாமல் பரப்பிவிடுவதற்கு தயங்காதவர்கள் தம்மை குறித்து வரும் விமர்சனங்களுக்கு உருப்படியான பதிலை அளிக்க மாட்டார்கள். சிவப்பு வட்டாரத்தை குறித்து எழுதப்பட்ட இந்த பதிவில் ராபின் என்ற கிறிஸ்துவர் எதிர்மறை ஒட்டு அளித்ததன் ரகசியம் என்னவோ? ஒருவேளை கிறித்தவமும் கம்யூனிசமும் இஸ்லாமை எதிர்ப்பதில் ஒன்று சேருகிறதோ?

    ReplyDelete
  45. @Robin

    நண்பர் ராபின் நான் மைனஸ் ஓட்டு போடுவதில்லை

    ReplyDelete
  46. @பி.ஏ.ஷேக் தாவூத்

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    தங்கள் வருகைக்கும் ஆழ்ந்த அனுபவ கருத்துரைக்கும் நன்றி

    ReplyDelete
  47. @ஹைதர் அலிஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    சகோ ஹதைர் பாய்... அவுட்லைன் சொன்னப்ப கூட இப்படி நான் நினைக்கல மாஷா அல்லாஹ் மிக நேர்த்தியான பதிவு.

    மேல ஸ்டாலின் போதனைகளில் இஸ்லாமிய ஆடைக்கான அங்கிகரிப்பு, கீழே வீழ்த்தப்பட்ட அவரது சிலை.,

    ஏன் ? இஸ்லாமிய ஆடை முறைக்கு வலுச்சேர்க்கும் வகையில் வாய்மொழி தந்ததாலா...? என எண்ண தோன்றுகிறது., செந்திற முகமுடி அணிந்து பார்த்தால்..

    கம்யூனிஷ பெண் விடுதலை ஆக்கம் முழுவதும் நன்றாய் பல்லிளிக்கிறது., சகோ., ஹைதர் பாய் இவ்வாக்கம் மூலமாக என் எண்ணத்தில் கொஞ்சம் "HIGH BOY" யாகவே காட்சியளிக்கிறார்

    சிட்டிஷன் சொல்வதுப்போல
    //நெத்தியடி,
    சாட்டையடி,
    சவுக்கடி,
    மொத்தத்தில் மரணஅடி..!//

    ஆனால் இன்னும் கொஞ்சம் ஆக்கம் தொடர்பான ஆதார தரவுகளை தந்திருந்தால் மேற்சொன்ன 'அடிகளை' நூறால் பெருக்கிக்கொள்ளலாம்.

    ReplyDelete
  48. சகோ செங்கொடி
    அதெப்படி, இஸ்லாம் சார்ந்த எதிர்மறை கருத்துக்களுக்கு மட்டும் பக்கம்-பக்கமாக பின்னூட்ட கருத்து இடும் நீங்கள், நீங்கள் சார்ந்த கொள்கை குறித்து விளக்க சொல்லும் போது // எதில் தொடங்குவது எதில் பயணிப்பது என்பவை குறித்து திட்டமிடாமலேயே இருந்தேன்.// என வழித்தடங்களை மறந்து விட்டீர்கள்.

    இன்னும் அவசாகம் இருக்கிறது சகோதரரே., சகோதரர் ஹதைரின் ஆக்கம் தவறேன நிறுவி அப்படியே., கம்யூனிஸ்ட்களின் பெண் விடுதலைக்குப் பின்னால்... இருக்கும் பெண்களுக்கான தனிமனித நன்மைகள் -சமூக பாதுகாப்புகள் -வர்த்தரீதியான முன்னுரிமைகள் போன்றவற்றை விளக்கி பதிவிடுவீர்கள் என எதிர்ப்பார்க்கிறேன்.

    ReplyDelete
  49. சகோ ராபின்

    உண்மையாகவே விவாதித்து தெளிவு காண்பது தான் உங்கள் உண்மையான நோக்கமா...? அதெப்படி விவாதிக்கும் ஒரு தளத்தில் கூட தடம் பதித்து நிலைக்கொள்ளாமல் ஆக்கத்தில் அங்காங்கே ஜெஸ்ட் காப்பி & பேஸ்ட் செய்து விட்டு இடை இடையே கேள்வி என நீங்கள் நினைத்து எதையாவது பதிந்து விட்டு அப்படியே நகர்ந்து சென்றே கொண்டிருக்கிறீர்கள்., இங்காவது நிலையாக விவாதித்து உங்கள் சிந்தனையே தெளிவுடன் தொடர என் வாழ்த்துகள்...

    ReplyDelete
  50. @முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ..

    //தொடர்ந்து அரசியல் லாபத்துக்காக‌ போலியாய் ஓலமிடும் அவர்களுடைய முகமூடியை கிழித்தெரியுங்கள்.//

    கம்யூனிஸ மதவெறிக்கேதிரான எனது பதிவுகள் தொடரும் சகோ

    ReplyDelete
  51. இந்தக் கட்டுரை கம்யூனிச சமூகத்தில் பெண்களின் நிலை பற்றி கூறப்பட்டுள்ள கருத்தை தவறாக புரிந்துகொண்டோ அல்லது கம்யூனிசத்தின் மீது அவதூறு பரப்பும் தனியுடைமை சிந்தனையாளர்களின் அவதூறு கட்டுரைகளிலிருந்தோ வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், தங்களது கருத்து முதல்வாதத்திற்கேற்ப கம்யூனிசத்தில் பெண்களின் நிலையை கற்பனை செய்து எழுதப்பட்டுள்ளது.

    ஸ்டாலின் கூறியது, அணியப்படும் ஆடைக்கு மேல் இன்னொரு ஆடை என்பதல்ல. இறுக்கமான ஆடையை விடுத்து தொளதொளப்பான ஆடையையே அணியச் சொல்கிறார். ஆனால் இஸ்லாம், அணிந்திருக்கும் ஆடை மேல் இன்னொரு ஆடை என்பதையே வலியுறுத்துகிறது. இதை பதிவர் நன்கு அறிந்திருந்தும் இரண்டிற்கும் முடிச்சு போடுவது ஏன் என விளங்கவில்லை.

    நிலப்பிரபுத்துவ காலகடத்தில், பெண் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிறுசிறு உற்பத்தியில் ஈடுபட்டபோதிலும், கூடுதலாக வீட்டு வேலைகளையும் பெண்கள் செய்ததைப் போலவே,. முதலாளித்துவத்தின் தொழிற்சாலைகளில் பலமணிநேரம் வேலை செய்யும் பெண்களே குடும்பத்தை பராமரிப்பதிலும் ஈடுபடுகின்றனர். இதனுடன் ஆணாதிக்கத்தின் விளைவாக ஏற்படும் துன்பங்களாலும் பெண்கள் அல்லலுற வேண்டியிருக்கிறது. எனவே உழைக்கும் நேரம் போக ஓய்வு நேரங்களில் பெண்களின் சுமையை குறைக்கவே பொது உணவு விடுதிகளையும் பொது சலவை நிலையங்களையும் குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்களுக்கு உதவியான பணிகளையும் கம்யூனிசம் ஏற்படுத்திக் கொடுக்கும். ஒரு பெண் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள சமூகத்தை சார்ந்திருக்க வேண்டுமேயன்றி தனிமனிதனையல்ல (இங்கு தேவை என்பதை ஆபாசப் பொருளில் புரிந்துகொள்ளவேண்டாம்) என்பதுதான் கம்யூனிசத்தின் நோக்கம். எனவே இத்தகைய பெண்களின் சுமைகளை ஒழிப்பதையே சோஷலிசம் செய்தது.

    ReplyDelete
  52. //தொடர்ந்து அரசியல் லாபத்துக்காக‌ போலியாய் ஓலமிடும் அவர்களுடைய முகமூடியை கிழித்தெரியுங்கள்.//

    இது மகஇக வை நோக்கியதாக இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் பீஜே போன்று அரசியல் பொறுக்கித்தனம் (சந்தர்ப்பவாதம்) மகஇக செய்வதில்லை. மகஇக வின் எதிரிகள் கூட இதுவரையிலும் இது போன்ற குற்றச்சாட்டை கூறியதில்லை.

    ReplyDelete
  53. Assalamu alaikkum,

    very gud post. but i have expected more details. continue...

    ReplyDelete
  54. @kalai

    தோழர் கலை
    ///இது மகஇக வை நோக்கியதாக இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் பீஜே போன்று அரசியல் பொறுக்கித்தனம் (சந்தர்ப்பவாதம்) மகஇக செய்வதில்லை. மகஇக வின் எதிரிகள் கூட இதுவரையிலும் இது போன்ற குற்றச்சாட்டை கூறியதில்லை.///

    சும்மா வாயை கேளறாதீங்கே

    ம.க.இ.க வை சேர்ந்தவர்களின் கயமைத்தனத்தை அடுத்த பதிவுகளில் அம்பலப்படுத்துகிறேன் காத்திருங்கள்

    எவ்வளவு பொய் அரசியல் நேர்மையற்றதனம் என்பதை நீங்களும் அறிவீர்கள்

    ReplyDelete
  55. @கார்பன் கூட்டாளி

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
    தங்கள் வருகைக்கு நன்றி
    இனிமே இதை பற்றிதான் எழுத போகிறேன் தொடர்ந்து படியுங்கள்

    ReplyDelete
  56. //ஒவ்வொரு குடிமகளும்,குடிமகனும் என்னென்ன வேலைகளைச் செய்திட வேண்டும் என்பதை அரசாங்கமே முடிவு செய்யும்//

    ஒவ்வொரு குடிமகனும் வேலை செய்யவேண்டும் என்பதுதான் கட்டாயம். வேலையை தேர்ந்தெடுப்பது என்பது குடிமகனின் உரிமை.. ஒருவருக்கு அவர் செய்த வேலை பிடிக்கவில்லையென்றால் வேறு வேலைக்கு மாறிக் கொள்ளலாம். அதற்காக அவருக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அந்த கால அவகாச நாட்களில் சம்பளமும் கொடுக்கப்பட்டது. இதுதான் சோவியத்தில் நடைபெற்ற நடைமுறை. ஆனால், பதிவாளர் கம்யூனிச அவதூற்றின் மீது மனதை பறிகொடுத்துவிட்டு தன் இஷ்டத்திற்கு புளுகித் தள்ளியிருக்கிறார்

    ReplyDelete
  57. அஸ்ஸலாமு அலைக்கும்.

    தொழிற்சாலைகளில் இயங்கிக் கொண்டிருக்கும் எந்திரங்களுள் ஒன்றாகத்தான் பெண்களையும் கம்யூனிஸம் பார்க்கும்.

    பெண்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் காலங்காலமாய் மழுங்கடித்துவிட்டு, "பெண்ணடிமைத் தனத்துக்கு இஸ்லாமே காரணம்" என்று எதிர்த்திசையில் கூசாமல் விரல் நீட்டுவர் காம்ரேடுகள்.

    இன்னும் ஆழமான கட்டுரைகளை சகோ. ஹைதரிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

    சிறந்த பதிவுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  58. //ஏனெனில் கம்யூனிஸ அரசாங்கம் பொருளாதாரத்தைப் பற்றி மட்டுமே கவலைப் படுகின்றது//

    இதுவும் சுத்த பேத்தலான கருத்து. கம்யூனிச சமுதாயத்தில் அரசாங்கம் என்று ஒன்று கிடையாது. பதிவாளர் இன்னும் படித்துவிட்டு முயற்சிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  59. //எவ்வளவு பொய் அரசியல் நேர்மையற்றதனம் என்பதை நீங்களும் அறிவீர்கள்//

    இதற்கு உங்களிடம் நான் சவால் விடுகிறேன். மகஇக நேர்மையற்ற முறையில் அரசியல் செய்திருக்கிறது என்பதை நிரூபியுங்கள் பார்க்கலாம்.

    ReplyDelete
  60. @kalai

    //இந்தக் கட்டுரை கம்யூனிச சமூகத்தில் பெண்களின் நிலை பற்றி கூறப்பட்டுள்ள கருத்தை தவறாக புரிந்துகொண்டோ அல்லது கம்யூனிசத்தின் மீது அவதூறு பரப்பும் தனியுடைமை சிந்தனையாளர்களின் அவதூறு கட்டுரைகளிலிருந்தோ வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், தங்களது கருத்து முதல்வாதத்திற்கேற்ப கம்யூனிசத்தில் பெண்களின் நிலையை கற்பனை செய்து எழுதப்பட்டுள்ளது.//

    கற்பனை செய்து எழுதப்பட்டதா கற்பனையில் எழுவதற்கு நான் என்ன கம்யூனிஸ்டா

    சும்மா சிரிப்பு காட்டதீங்கே

    ReplyDelete
  61. பெண்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் காலங்காலமாய் மழுங்கடித்துவிட்டு,

    அய்யா/அம்மா வஹ்ஹாபி, கம்யூனிசத்தை நோக்கிய சோஷலிசம் அதிகாரத்தில் ஒரு அரை நூற்றாண்டு கூட இல்லை. எப்படி அது காலம் காலமாக மழுங்கடித்திருக்கும்?. நீங்கள் சொல்வதைப் இஸ்லாம்தான் மழுங்கடித்திருக்கும். இல்லியா வஹ்ஹாபி!

    ReplyDelete
  62. @kalai

    //ஸ்டாலின் கூறியது, அணியப்படும் ஆடைக்கு மேல் இன்னொரு ஆடை என்பதல்ல. இறுக்கமான ஆடையை விடுத்து தொளதொளப்பான ஆடையையே அணியச் சொல்கிறார்.//

    ஏன் அப்படி அணிய சொல்கிறார் அது ஆணாதிக்கமில்லையா?

    //என்பதுதான் கம்யூனிசத்தின் நோக்கம். எனவே இத்தகைய பெண்களின் சுமைகளை ஒழிப்பதையே சோஷலிசம் செய்தது.///

    அதாவது வீட்டு வேலைகளை குறைத்து விட்டு ஆலைகளிலில் உற்பத்தியை பெருக்குவதற்காக 16 மணி நேரம் கசக்கி பிழிவது இதற்கு வீட்டு வேலைகள் எவ்வளவே மேல்
    நல்லவேளை கம்யூனிஸ ஆட்சி ஒழிந்து பெண்கள் தப்பித்தார்கள்

    ReplyDelete
  63. @kalai

    //இதுதான் சோவியத்தில் நடைபெற்ற நடைமுறை. ஆனால், பதிவாளர் கம்யூனிச அவதூற்றின் மீது மனதை பறிகொடுத்துவிட்டு தன் இஷ்டத்திற்கு புளுகித் தள்ளியிருக்கிறார்///

    இஸ்லாமிய அவதூறுகள் மீது நீங்கள் மனதை பறிகொடுத்தது போல் நான் கொடுக்கவில்லை நடுநிலையோடு தான் எழுதியிருக்கிறேன்

    சரி வினவு, செங்கொடி போன்றவர்கள் ஒலக விஷயத்தையெல்லாம் எழுத கூடியவர்கள் ஏன்? கம்யூனிஸ பெண்களின் மார்க்ஸிய பார்வைகளை நிலைமைகளை எழுதுவதில்லை?

    கொஞ்சம் எழுத சொல்லுங்கள் சரியானதை நாங்கள் தெரிந்து மனது மயங்கி கம்யூனிஸ மதத்துக்கு மாற வேண்டாமா?

    ReplyDelete
  64. @kalai

    ///இதுவும் சுத்த பேத்தலான கருத்து. கம்யூனிச சமுதாயத்தில் அரசாங்கம் என்று ஒன்று கிடையாது. பதிவாளர் இன்னும் படித்துவிட்டு முயற்சிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.//

    இது தான் முழிச்சுகிட்டு இருக்கும் போதே கண்ணை பிடுங்குவது என்பது

    ReplyDelete
  65. @kalai

    //இதற்கு உங்களிடம் நான் சவால் விடுகிறேன். மகஇக நேர்மையற்ற முறையில் அரசியல் செய்திருக்கிறது என்பதை நிரூபியுங்கள் பார்க்கலாம்.//

    http://www.ethirkkural.com/2010/10/blog-post.html உண்மையான கம்யுனிஸ்ட்களின் கேவலமான புத்தி இதை கொஞ்சம் பாருங்கள். அப்புறம் உங்க சவாலை பின்னுட்ட பேட்டியில் வைத்து முடிக்க எனக்கு விருப்பம் இல்லை ஏன் என்றால்? உங்கள் நேர்மையற்ற சந்தர்ப்பவாதங்கள் அவ்வளவு நீளம் பதிவு தான் சரி ஒரு பதிவு எழுதி முழு விளக்கம் கொடுக்கிறேன் பதிவின் தலைப்பு கூட தயார் கம்யூனிஸ்ட்களின் கயமைத்தனம் நல்லாயிருக்கா? கலை வம்பா வந்து இப்புடியா மாட்டிகிறது

    ReplyDelete
  66. சகோதரர் கலை,

    உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

    இங்கு சகோதரர் ஹைதர் அலி உங்களுடன் வாதித்து கொண்டிருப்பதால் நானும் உள்ளே புகுந்து உரையாட விரும்பவில்லை. உங்கள் இருவருக்குமிடையேவே உரையாடல் நடக்கட்டும். இந்த கமெண்ட் மூலமாக ஒரு சிறு நினைவூட்டல் மட்டுமே.

    முதலில், இந்த கட்டுரை கம்யுனிசத்தின் பெண்ணுரிமை குறித்து பேசுகின்றது. இந்த கட்டுரைக்கு மறுப்பாக இதுவரை ஆதார தரவுகளுடன் யாரும் மறுப்பை தெரிவிக்கவில்லை. நானும் கம்யுனிஸ்டாக இருந்தவன் என்ற முறையில் 'கம்யுனிசம் கூறும் பெண்ணுரிமை' என்று எதனையும் நான் அறிந்ததில்லை. ஆகவே, உண்மையான கம்யுனிஸ்ட்கள், கம்யுனிசம் கூறும் பெண்ணுரிமைகளை ஆதார தரவுகளுடன் விளக்குவார்களேயானால் அறிந்துக்கொள்ள ஆவலுடன் இருக்கின்றேன்.

    அதுபோல ///இதற்கு உங்களிடம் நான் சவால் விடுகிறேன். மகஇக நேர்மையற்ற முறையில் அரசியல் செய்திருக்கிறது என்பதை நிரூபியுங்கள் பார்க்கலாம்.///

    தவறாக நினைக்கவேண்டாம். இப்படி சொல்ல வெட்கமாக இல்லையா உங்களுக்கு? குறைந்தபட்ச நேர்மை கூட இல்லாத மனிதர்களா நீங்கள்? மனிதாபிமானம் என்ற ஒன்று கொஞ்சமாகவது இருந்தால் மேலே ஹைதர் கொடுத்திருக்கும் என்னுடைய லிங்க்கிற்கு பதில் சொல்லுங்கள். இதோ அதே லிங்க்குகளை நானும் கொடுக்கின்றேன்

    வினவின் பித்தலாட்டம் அம்பலம்
    திருந்த மாட்டீர்களா வினவு?

    நேர்மை குறித்து பேச தகுதியற்றவர்கள் எல்லாம் சவால் விட வந்துவிட்டீர்கள். மறுபடியும் சொல்கின்றேன், நீங்கள் ஒரு மனிதாபிமானமுள்ள மனிதர் என்றால் மேலே உள்ள லிங்க்குகளுக்கு பதில் சொல்லுங்கள்...

    வாய் சவடால் விடுவதால் ஒரு உபயோகமும் இல்லை...இனி ஹைதர் பார்த்துக்கொள்வார் இந்த உரையாடலை...

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  67. ஐயா கலை,

    கம்யூனிஸதுக்கு வக்காலத்து வாங்க வந்தீர்களா? வாங்க, வாங்க!

    வந்தது வந்தீர்கள், கம்யூனிஸத்தின் வேரைப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்து கொண்டு வந்திருந்தால் சந்தோஷமாயிருந்திருக்கும்.

    ஐந்தாம் நூற்றாண்டின் மஸ்டக், அதன் பின்னர் வெகுகாலம் கழித்து 16ஆம் நூற்றாண்டின் "யூட்டோபியா" (தாமஸ் மோர்), 18ஆம் நூற்றாண்டின் "க்ராம்வெல் & கம்யூனிஸம்" (எட்வர்ட் பெர்ன்ஸ்டின்) பற்றியெல்லாம் கொஞ்சம் படிச்சிட்டு வந்து சொல்லுங்கள்.

    கார்ல் மார்க்ஸ்ஸின் காலம்தான் கம்யூனிஸத்தின் பிறந்த தேதி என்று எண்ணிக் கொண்டு ... கம்யூனிஸ்ட் என்றும் சொல்லிக் கொள்வது ... தமாசு பண்றீங்க.

    பதினாராம் நூற்றாண்டின் யூட்டோபியாவில் கொஞ்சம்போல மசாலா தடவித்தானே மார்க்ஸிஸம்னு சொன்னாங்க ... இல்லீங்களா?

    செத்தவங்களப் பத்தி ரொம்பப் பேசியாச்சி. கம்யூனிஸத்தைப் பத்தியும் பேசுவோம் - இன்னுங் கொஞ்சம்.

    ReplyDelete
  68. அபு தவ்ஹீதாNovember 17, 2011 at 11:16 AM

    அற்ப்புதமான பதிவு சகோதரா உங்கள் எழுத்துப்பனி தொடரட்டும் பெண்னியம் பேசி ஆட்சிப்பனியில் மகிழ்வதற்க்குத்தான் கம்யூனிஸம். கம்யூனிஸவாதிகளுக்கெதிராய் சுழலட்டும் உங்கள் இஸ்லாமிய ஆக்கங்கள் .இதில் கம்யூனிஸவாதி செங்கொடி இனைந்துள்ளார் அவருக்கு இறைவன் தூய இஸ்லாத்தை மீண்டும் உணரவைக்கட்டும்

    ReplyDelete
  69. @அபு தவ்ஹீதா

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    தங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  70. ஸலாம் ,
    சகோ @கலை

    இங்கு ஆக்கம் கன்யூனிஷ அரசை மையப்படுத்திய பெண்ணியம் குறித்து., ஆக பதிவாளர் கூறுபவை தவறென்றால் அதை தவறேன நிறுவும் ஆதார தரவுகள் தான் தந்து விவாதிக்க வேண்டும். அதைவிடுத்து இஸ்லாத்தின் மீது பாய்ந்து கம்யூனிஷத்தை சரி செய்ய முயல்வது என்ன விவாதம் என்று தெரியவில்லை..?

    அதுமட்டுமில்லாமல் விமர்சிப்பதிலும் ஒரு நீதம் வேண்டும்...அதுவும் இங்கே மிஸ்ஸிங்., இஸ்லாம் பெண்களின் ஆடை விசயத்தில் இரண்டு ஆடை அணிய வேண்டும் என்று எங்கு சொல்கிறது? யாராவது எழுதும் ஆக்கங்களை படித்து விட்டு எதையாவது சொல்லாதீர்கள்...

    விவாதப்பொருள் இங்கு இஸ்லாம் அல்ல - ஆக கருத்துச் சிதைவு ஏற்படும் என்ற ஐயத்தில் மேலதிக விளக்கம் தவிர்த்து முடித்துக்கொள்கிறேன்

    கம்யூனிஷம் குறித்த + உங்கள் பதில் =நேர்மையானதாக இருக்கட்டும்!

    -இறை நாடினால் இனியும் சந்திப்போம்

    ReplyDelete
  71. அய்யா/அம்மா வஹ்ஹாபி,

    அன்றைய லெனினிய,ஸ்டாலினிய ஆட்சிக் காலங்கள் கம்யூனிச சமுதாய காலகட்டம் அல்ல அது ஒரு சோஷலிச காலகட்டம் தான் என்றாலும் அது கம்யூனிஸ்டுகளினால் ஆட்சி செய்யப்பட்டதினால் கம்யூனிச காலகட்டம் என பொதுவாக பொதுப்புத்தியில் பதியவைக்கப்பட்டிருக்கிறது. இது தவறான கருத்து ஆகும். இக்கட்டுரையும் சோசலிச காலகட்ட நிகழ்வைப் பற்றிதான் பேசுகிறது. நானும் இதற்குண்டான மறுப்பைத்தான் எழுதுகிறேன். மேலும், நான் கம்யூனிசத்தின் வேர் மார்க்ளிடமிருந்துதான் முளைக்கிறது என்று எங்கேயும் குறிப்பிடவில்லை. எனக்கு வானத்திலிருந்து விழுந்ததாக மார்க்சும் கூட கூறிக்கொள்ளவில்லை. ஆனால், மார்க்ஸியத்தின் வேர் மார்க்சிடமிருந்தே தோன்றுகிறது என்பது உண்மை. மேலும், இதற்குள் நுழைவது பதிவின் சாராம்சத்திலிருந்து விலகிட நேரிடும் என்பதினால் இதை இத்துடன் முடித்துக்கொள்ளலாம் என கருதுகிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் வஹ்ஹாபி?

    ReplyDelete
  72. ஐயா கலை,

    நீங்க காலகட்டத்தைப் பற்றிப் பேசியதால்தான் நானும் பேசவேண்டியதாயிற்று.

    முடித்துக் கொள்ள நீங்கள் விரும்பினால் முடித்துக் கொள்ளலாம்.

    திசைமாறிப் போகாமல் தலையாய கருவைப் பற்றிப் பேச வேண்டுமெனில், "பெண்ணுரிமை விடுதலைக்காகவே பிறப்பெடுத்து வந்த கட்சியின் பொலிட் ப்யூரோவில் பங்காற்றும் பெண்களின் சதவீதம் என்ன? உலகளாவிய அளவில் பெண் கம்யூனிஸ்ட் தலைவர்கள் எத்தனை பேர்?" என்ற எனது ஐயங்களைத் தீர்த்து வையுங்கள்.

    அப்புறம்,
    At the very beginning of the Communist Revolution in Russia a decree was passed declaring that all women between the ages of seventeen and thirty-two became the property of the State, and that the rights of husbands were abolished. (Novaia Zhizn, No. 54, 1918 p. 2.) In keeping with the idea that liberation means working in a factory rather than in a home, we read in a Soviet book published in 1935: "Women's labor has become one of the main sources from which industry could draw fresh supplies of workers. During the earlier years of the first Five Year Plan, there were about six million housewives in the towns. All the local Communist organizations received orders to call up these reserves and attach them to production." (Shaburova, Woman is a Great Power, 1935 edition, p. 32) The women refused to accept what the Communists called "the emancipation for women from depressing domestic atmosphere" but they were ultimately forced into "emancipation" and began working in mines, sewers, and in the manipulation of pneumatic drills. A few years ago twenty-three percent of the miners were women. The Soviet poets composed ballads for the women to sing as they were "released from socially unprofitable and exhausting domestic toil." (Shaburova, Ibid, p. 36) பற்றியும் கொஞ்சம் விளக்கம் தாருங்கள்.

    Personal : என்னுடைய ப்ரோஃபைலில் பாலினம் "ஆண்" என்றுதானே உள்ளது. நீங்கள் "அம்மா/அய்யா" என விளிப்பதன் இரகசியம் என்ன?

    ReplyDelete
  73. அருமையான கட்டுரை

    ReplyDelete
  74. அஸ்ஸலாமு அலைக்கும்
    சகோ ஹைதர் அவர்களே அருமையான பதிவு கம்யூனிஸத்தில் பென்னுரிமை என்றால் என்ன தெரியுமா ஆண்களைப் போன்றே பெண்களும் கடுமையாக உழைக்கவேண்டும் அதன்மூலம் உற்பத்தியை பெருக்கவேண்டும் பெண்கள் மட்டுமா நடக்கவே தெம்பில்லாத வயதான பெரியவர்களையெல்லாம் அடிமைகள்போல் அடித்து இழுத்துவந்து போலிஸ் காவலில் வேலை வாங்கிய காட்சிகளையெல்லாம் அன்று எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளாக பார்க்கும்போது யாருக்கும் கண்கலங்கிவிடும் இப்படியெல்லாம் மனிதர்களை ஆடுமாடுகள் போன்று வேலைவாங்கி நாட்டை முன்னேற்றப்போகிறோம் என்று சொன்னவர்களை விட அமெரிக்க முதலாளித்துவ பொருளாதாரம் எவ்வளவோ முன்னேறியிருந்தது

    ReplyDelete
  75. பெண்களைப்பற்றிய விஷயங்களில் இஸ்லாத்தை கண்ணைமூடிக்கொண்டு விமர்சிக்கும் கம்யூனிஸ்ட்டுகளின் பென்னுரிமை என்னதெரியுமா செங்கொடி போன்றவர்கள் தங்களின் தளத்தில் வைத்திருக்கும் இவர்களின் தலைவர்களான லெனினும் மாசேதுங்கும் பெண்களுக்கு வழங்கிய சமஉரிமைகள் என்ன என்று தெரியுமா லெனின் இறப்பெய்தக் காரணமான நோய்க்குக் காரணமே கனக்கு வழக்கில்லாமல் பெண்களிடம் உறவுகோண்டதால் ஏற்ப்பட்ட நரம்பு நோய்னால்தான். மாசேதுங்கோ கட்சி தலைவர்கள் எல்லோருடனும் (பீரோ) கலந்துரையாடல் நடந்து கொண்டிருக்கும்போதே சிறிது நேரத்தில் வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு அந்தப்புரத்தில்போய் அழகிகளுடன் கூத்தடித்துவிட்டு வருவார் மாசேதுங்கிற்க்கு இதுநாள்வரை எத்தனை மனைவிகள் எத்தனை பிள்ளைகள் என்று யாருக்கும் தெரியாது இப்படிப்பட்டவர்கள் பெண்ணுரிமை பற்றி பேசுவதுதான் வேடிக்கை. இதைப்பற்றி தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  76. @வஹ்ஹாபி

    //ஐந்தாம் நூற்றாண்டின் மஸ்டக், அதன் பின்னர் வெகுகாலம் கழித்து 16ஆம் நூற்றாண்டின் "யூட்டோபியா" (தாமஸ் மோர்), 18ஆம் நூற்றாண்டின் "க்ராம்வெல் & கம்யூனிஸம்" (எட்வர்ட் பெர்ன்ஸ்டின்) பற்றியெல்லாம் கொஞ்சம் படிச்சிட்டு வந்து சொல்லுங்கள். கார்ல் மார்க்ஸ்ஸின் காலம்தான் கம்யூனிஸத்தின் பிறந்த தேதி என்று எண்ணிக் கொண்டு ... கம்யூனிஸ்ட் என்றும் சொல்லிக் கொள்வது ... தமாசு பண்றீங்க. பதினாராம் நூற்றாண்டின் யூட்டோபியாவில் கொஞ்சம்போல மசாலா தடவித்தானே மார்க்ஸிஸம்னு சொன்னாங்க ... இல்லீங்களா?// எனக்கு இதுவரை தெரியாத தகவல்கள் நன்றி சகோ

    ReplyDelete
  77. @kalai

    நண்பர் கலை

    http://valaiyukam.blogspot.com/2011/05/blog-post_06.html

    வினவே..! யார் பயங்கரவாதி..? மாவோயிஸ்டா..? தாலிபானா..? பதில் சொல்..!

    இப்படி பதிவிட்டு பல மாதங்கள் ஆகின்றன இதுவரை பதிலில்லை

    ஏற்கனவே எழுதியிருக்கிறேன் இனியும் எழுதுகிறேன்

    ReplyDelete
  78. முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்November 19, 2011 at 11:09 PM

    @வஹ்ஹாபி////// என்னுடைய ப்ரோஃபைலில் பாலினம் "ஆண்" என்றுதானே உள்ளது. நீங்கள் "அம்மா/அய்யா" என விளிப்பதன் இரகசியம் என்ன?////அய்யா/அம்மா என்றழைப்பது சம உரிமை கொடுக்கிறோம் என்று காட்டுவதற்க்காகத்தானோ என்னவோ கம்யூனிஸ்டாச்சே.

    ReplyDelete
  79. இஸ்லாத்தின் கொள்கைகளை எடுத்து
    தெருக் கடை நடத்துபவர்கள் இவர்கள்.
    இவர்கள் கடைகளில் கலப்பட பொருள்களே அதிகம்.
    இவர்கள் ஆண்ட மாநிலத்தை பார்த்தாலே புரியும்
    அதன் வளர்ச்சிகள் தெரியும்.
    விளக்கை அனைத்து வாழும் இவர்களுக்கு
    இஸ்லாம் என்னும் வெளிச்சத்தைப் பற்றி எனன் தெரியும்.வெறும் வாய் சொல்லி வீரர்கள் இவர்கள் .

    உங்கள் கட்டுரை தெளிவாய் கேள்விகளை கேட்டுவிட்டது ,பதில் சொல்லவா போகிறார்கள் .
    சொல்லத்தான் முடியுமா ?

    ReplyDelete
  80. கவால்துறை என்கிற பெயரில் ஒரு கயமை துறை!,ஈழத்திலே தன் உறவுகளை இழந்து, தன் சொத்துக்களை இழந்து, நாட்டை இழந்து தமிழ் மக்கள் அகதிகளாக தமிழகம் வந்தால் அவர்களை மீன்பிடிக்க கூடாது என்று க்யூபிராஞ்ச் போலீஸ்காரன் மிரட்டுகிறான்.கேடுகெட்ட காவல்துறை குற்றவாளியை பிடிக்க முடியாமல் ஜோதிடரை அணுகி உள்ளது,இது காவல் துறை இல்லை கயமை துறை! காவல்துறை என்கிற பெயரில் ஒரு பயங்கரவாத படை இயங்குகிறது. இந்த படைக்கு மனிதாபிமானம், மனித நேயம், ஒழுக்கம், நேர்மை, நீதி, நியாயம் என்று ஒன்றுமே தெரியாது. காவல்துறை என்கிற பெயரில் ஒரு ரவுடி கூட்டம் செயல்படுகிறது please go to visit this link. thank you.

    ReplyDelete
  81. மிக அருமையான விளக்கமான கட்டுரை.

    ReplyDelete
  82. @abdul hakkim
    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    //பெண்கள் மட்டுமா நடக்கவே தெம்பில்லாத வயதான பெரியவர்களையெல்லாம் அடிமைகள்போல் அடித்து இழுத்துவந்து போலிஸ் காவலில் வேலை வாங்கிய காட்சிகளையெல்லாம் அன்று எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளாக பார்க்கும்போது யாருக்கும் கண்கலங்கிவிடும்//

    இதுபோன்ற வீடியோக்களை தேடிக் கொண்டிருக்கிறேன் கிடைத்தால் எனக்கு அனுப்பி வையுங்கள்


    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  83. @கலைநிலா

    //உங்கள் கட்டுரை தெளிவாய் கேள்விகளை கேட்டுவிட்டது ,பதில் சொல்லவா போகிறார்கள் .
    சொல்லத்தான் முடியுமா ?//

    அவர்களின் குலதேய்வமான மார்க்ஸ்க்கே வெளிச்சம்

    தங்களின் முதல் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  84. வணக்கம் நண்பர்களே,

    நான் கூறியபடி பெண்ணியம் குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இங்கே கொசிப்புகள் செய்தவர்களில் எத்தனை பேர் அங்கு வந்து விவாதிக்கவோ பரிசீலிக்கவோ செய்கிறார்கள் எனப் பார்க்கிறேன்.

    பேசுதற்கெளிய பண்டம் மட்டுமா பெண்ணியம்?
    http://senkodi.wordpress.com/2011/12/02/communism-2/

    ReplyDelete
  85. அஸ்ஸலாமு அலைக்கும்
    மண்ணைக்கவ்விய மார்க்ஸிஸம்
    http://neermarkkam.blogspot.com/2011/12/blog-post.html

    ReplyDelete
  86. @செங்கொடி

    //நான் கூறியபடி பெண்ணியம் குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இங்கே கொசிப்புகள் செய்தவர்களில் எத்தனை பேர் அங்கு வந்து விவாதிக்கவோ பரிசீலிக்கவோ செய்கிறார்கள் எனப் பார்க்கிறேன்.//

    என்ன நண்பரே பதில் சொல்லுகிறேன் என்று சொல்லி விட்டு

    கலிமுத்திடுத்து என்பது போல் புலம்பி தள்ளி இருக்கிறீர்கள்

    விரைவில் பதில் தருகிறேன் நண்பரே

    ReplyDelete
  87. @abdul hakkim

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
    தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  88. //உங்கள் கட்டுரை தெளிவாய் கேள்விகளை கேட்டுவிட்டது ,பதில் சொல்லவா போகிறார்கள் .
    சொல்லத்தான் முடியுமா ?//

    //அவர்களின் குலதேய்வமான மார்க்ஸ்க்கே வெளிச்சம்//

    ஹைதர் பாய்,
    அந்த அல்லாவுக்கே வெளிச்சம்.

    ReplyDelete
  89. அஸ்ஸலாமு அலைக்கும்
    நமது தளத்தில் புதிய கட்டுரை பதிவேற்றப்பட்டுள்ளது
    கம்யூனிஸம் ஒரு சுருக்கமான அறிமுகம் (மண்ணைக்கவ்விய மார்க்ஸிஸம் தொடர் 2)
    http://neermarkkam.blogspot.com/2011/12/2.html

    ReplyDelete
  90. முறையான செயல்பாடு. நல்ல சேவை .வாழ்த்துகள்.
    JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
    "Allah will reward you [with] goodness."

    ReplyDelete