Monday, February 6, 2012

வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்!

உலக இன்பம் அற்பமானது.உலகம் சுமைகள் நிறைந்தது.உலகம் கவலை மிகுந்தது.உலகம் பல நிறங்களைக் கொண்டது.துக்கம்,துன்பம்,துயரம் ஆகியவற்றின் கலவைதான் உலகம்.அதில் நீயும் ஒருவன்.

பிரச்சனைகள் இல்லாத இடமே இல்லை.உன்தந்தை,மனைவி,நண்பன் ஆகியோர் வாழ்விலும் நிச்சயமாகத் துயரங்கள் இருக்கும்.உனது வீட்டிலும்,தொழிலிலும் சிக்கல்கள் உருவாகும்.எனவே,நன்மையின் குளிர்ச்சியால் தீமையின் வெப்பத்தை நீ தணித்துக் கொள்.

இறைவன் இந்த உலகத்தை முரண்பாடுகளால் அமைத்துள்ளான்.நன்மை-தீமை, அமைதி-குழப்பம், மகிழ்ச்சி-கவலை என ஒவ்வொன்றிலும் இரு வேறு தன்மைகளை,நிலைகளை இறைவன் ஏற்படுத்தியுள்ளான்.

பசித்த பிறகு உண்கின்றாய்,தாகித்த பிறகு நீர் அருந்துகின்றாய்,களைப்புற்ற பிறகு உறங்குகின்றாய்.நோயுற்ற பிறகு குணமடைகின்றாய்.காணாமல் போனவன் விரைவில் வருவான். வழிதவறியவன் நேர்வழி பெறுவான்.

பரந்த பாலைவனத்தை நீ கண்டால், அதற்கப்பால் பசுமை நிறைந்த,மரங்கள் மிகுந்த அழகான தோட்டம் உண்டு என்பதைப் புரிந்துக் கொள்.

உறுதியான கயிற்றைக் கண்டால் அது ஒரு நாள் அறுந்து போகும் என்பதையும் நீ அறிந்துக் கொள்.

கண்ணீருக்குப் பிறகு புன்னகை உண்டு. அச்சத்திற்குப் பிறகு அமைதி உண்டு.அதிர்ச்சிக்கு பிறகு நிம்மதி உண்டு.

எனவே எதார்த்தமான வாழ்க்கையை மேற்கொள்.கற்பனைகளில் மிதக்காதே! வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக்கொள். வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களைச் சகித்து வாழ்வதற்கு உனது ஆன்மாவைப் பக்குவப்படுத்து. இந்த உலகில் காயங்கள் அற்ற மனிதனையும்,குறைகள் அற்ற பொருளையும் உன்னால் காண முடியாது.முழுநிறைவும்,கவலையின்மையும் வாழ்க்கையின் பண்புகள் அல்ல.
கீ போர்டில் இருந்து கையை எடுத்து இறங்கி நடந்து ஏழைகள் வாழும் பகுதியில் நின்று கொண்டு உன்னைச் சுற்றிலும் பார்.வலப்பக்கமும், இடப்பக்கமும் பார். துயரப்படுவோரும்,துன்பப்படுவோரும்தாம் உனது கண்ணில் அகப்படுவார்.ஒவ்வொரு வீட்டிலும் அழுகுரல்.ஒவ்வொரு கன்னத்திலும் கண்ணீரின் அடையாளம்... எல்லா திசைகளிலும் வலியின் ஓசை.உன்னைச் சுற்றி இதுதான் நடைபெறும்.

இந்த உலகில் நீ மட்டும் சோதிக்கப்படவில்லை.மற்றவர்களை ஓப்பிட்டுப் பார்த்தால் உனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறைவானவையே.பல ஆண்டுகளாக நோயால் பாதிக்கப்பட்டு,உறக்கமின்றி இங்கும் அங்குமாகப் புரண்டுப் புரண்டு அவதிப்படுவோர் பலர் இருக்கின்றனர்.நோயின் வலி தாளாமல் துடிப்பவர்களும்,கதறுபவர்களும் அதிகம் உள்ளனர்.
வருடக்கணக்காக சிறையில் வாடுவோர்தாம் எத்தனை பேர்! சிறைக் கூடத்தைத் தவிர வேறேதையும் அறிய முடியாமல், தமது கண்களால் சூரியனைக் கூட பார்க்க இயலாமல் சிறையில் வாடுவோர் ஏராளம் ஏராளம்.

இளம் வயதிலேயே தம் செல்லப்பிள்ளைகளைப் பறிகொடுத்த தாயும் தந்தையும் இந்த உலகில் அதிகம் உண்டு.கடன் பிரச்னையால் நொந்து போனவர்களும்,பல்வேறு இன்னல்களால் மூச்சுத் திணறிக் கொண்டிருப்பவர்களும் பலர் உண்டு.

முடிந்தது முடிந்துவிட்டது
எதிர்பார்க்கப்படுவது மறைவானது
நீ வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்த நேரம் மட்டும் உனக்குரியது.

நீ கவலைப்படாதே! ஏனெனில் உனது கவலையின் மூலம் சூரியனை,கால ஓட்டத்தை நிறுத்த நினைக்கிறாய். கடிகார முள்ளைப் பின்னோக்கி நகர்த்த முனைகிறாய்.பின்னோக்கி நடக்க முயல்கிறாய்.ஆற்றை அதன் பிறப்பிடத்தில் பால் திருப்பியனுப்பத் துடிக்கிறாய்.

நீ கவலைப்படாதே! கவலை,புயல் போன்றது.அது காற்றை நாசமாக்கும்.பேரலைகளை உருவாக்கும்.வானிலையை மாற்றும்.இசைக்கும் தோட்டத்தின் கண்கவர் மலர்களை அழிக்கும்.

நீ கவலைப்படாதே! ஏனெனில் கவலை கடலில் குதித்து கடலிலேயே ஓடும் அறிவற்ற ஆற்றைப் போன்றது. கவலைப்படுவது உடைந்த பானையில் தண்ணீரை நிரப்புவதற்கு ஒப்பானது.

இறைவா! உறங்காத கண்களில் உன்னிடமிருந்து நிம்மதியான உறக்கத்தைப் போடு.தடுமாறும் மனங்களில் அமைதியை ஏற்படுத்து. அவற்றிற்கு வெற்றியைப் பரிசாக வழங்கு.தடுமாறும் பார்வைகளுக்கு உன் ஒளியின்பால் வழிகாட்டு.வழிதவறியவர்களுக்கு நேர்வழி காட்டு.

தமிழ்மண ஓட்டு போட http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1139073

35 comments:

  1. நச்சுனு சொல்லி இருக்கீங்க பாஸ்.

    நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா


    வார்த்தைக்கு வார்த்தை வாழ்க்கைக்கு தேவைப்படும் உபதேசம்

    சாகநினைப்பவன் கூட வாழ்க்கை இருக்கு என திரும்ப வைக்கும் வரிகள்


    மாஷா அல்லாஹ்...

    அருமை அருமை

    சொல்ல வேறு வார்த்தைகளே வரவில்லை

    ReplyDelete
  3. //
    நீ கவலைப்படாதே! ஏனெனில் உனது கவலையின் மூலம் சூரியனை,கால ஓட்டத்தை நிறுத்த நினைக்கிறாய். கடிகார முள்ளைப் பின்னோக்கி நகர்த்த முனைகிறாய்.பின்னோக்கி நடக்க முயல்கிறாய்.ஆற்றை அதன் பிறப்பிடத்தில் பால் திருப்பியனுப்பத் துடிக்கிறாய்.//

    மாஷா அல்லாஹ்....

    அருமையான வைர வரிகள்

    ReplyDelete
  4. அஸ்ஸலாமுஅலைக்கும் சகோ......

    அருமை...சோகத்தில்,தோல்வியில் துவண்டு போன உள்ளங்களுக்கு அருமருந்தான வார்த்தைகள்...வாழ்க்கையை பாசிடிவ்வா பறக்க சொல்லும் நல்ல பதிவு...

    ReplyDelete
  5. மிகவும் அருமையான சிந்தனைகள்.முடிந்தது முடிந்துவிட்டது
    எதிர்பார்க்கப்படுவது மறைவானது
    நீ வாழ்ந்து கொண்டிருக்கும்
    இந்த நேரம் மட்டும் உனக்குரியது.

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும்,

    என்னா தத்துவம், என்னா தத்துவம். எப்படி பாஸ் இப்படியெல்லாம்.

    மாஷா அல்லாஹ். மிக அருமை. வாழ்வின் யதார்த்ததை தெளிவாக பதிவு செய்திருக்கின்றீர்கள். ஜசாக்கல்லாஹ்.

    வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக்கொள்வோம்.

    இன்று முதல் நீங்கள் "தத்துவவாதி ஹைதர் அலி" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவீர்கள்.. :)

    வஸ்ஸலாம்..

    ReplyDelete
  7. //முடிந்தது முடிந்துவிட்டது; எதிர்பார்க்கப்படுவது மறைவானது; நீ வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நேரம் மட்டும் உனக்குரியது.//

    மிகச் சரியான உண்மை. பதிவு தெளிந்த நீரோடை போல் அருமை. ஜஸாக்கல்லா ஹைரன்.

    ReplyDelete
  8. //இந்த உலகில் காயங்கள் அற்ற மனிதனையும்,குறைகள் அற்ற பொருளையும் உன்னால் காண முடியாது.முழுநிறைவும்,கவலையின்மையும் வாழ்க்கையின் பண்புகள் அல்ல.//

    அருமை சகோதரரே!


    அறிந்தும் (அறியாமல்) தவிப்போரை என்ன சொல்ல?

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

    மாஷாஅல்லாஹ்..ஒவ்வொன்றும் வாழ்வின் நிதர்சனத்தை உணர்த்தும் வைர வரிகள்..
    நல்லதொரு பகிர்வுக்கு நன்றி சகோ .

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரே, அருமையான பதிவு, படித்தவுடன் கவலை சிறிது குறைந்ததாது. நன்றி

    ReplyDelete
  11. சலாம் சகோ!

    கவலையை மறக்கடிக்கும் பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  12. அஸ்ஸலாமு அலைக்கும் தத்துவவாதி ஹைதர் சகோ!
    //முடிந்தது முடிந்துவிட்டது
    எதிர்பார்க்கப்படுவது மறைவானது
    நீ வாழ்ந்து கொண்டிருக்கும்
    இந்த நேரம் மட்டும் உனக்குரியது.// அருமை!!

    //நீ கவலைப்படாதே! ஏனெனில் உனது கவலையின் மூலம் சூரியனை,கால ஓட்டத்தை நிறுத்த நினைக்கிறாய். கடிகார முள்ளைப் பின்னோக்கி நகர்த்த முனைகிறாய்.பின்னோக்கி நடக்க முயல்கிறாய்.ஆற்றை அதன் பிறப்பிடத்தில் பால் திருப்பியனுப்பத் துடிக்கிறாய்.// சத்தியம்
    //இறைவா! உறங்காத கண்களில் உன்னிடமிருந்து நிம்மதியான உறக்கத்தைப் போடு.தடுமாறும் மனங்களில் அமைதியை ஏற்படுத்து. அவற்றிற்கு வெற்றியைப் பரிசாக வழங்கு.தடுமாறும் பார்வைகளுக்கு உன் ஒளியின்பால் வழிகாட்டு.வழிதவறியவர்களுக்கு நேர்வழி காட்டு// ஆமீன் ஆமீன் ஆமீன்

    ReplyDelete
  13. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    //இறைவா! உறங்காத கண்களில் உன்னிடமிருந்து நிம்மதியான உறக்கத்தைப் போடு.தடுமாறும் மனங்களில் அமைதியை ஏற்படுத்து. அவற்றிற்கு வெற்றியைப் பரிசாக வழங்கு.தடுமாறும் பார்வைகளுக்கு உன் ஒளியின்பால் வழிகாட்டு.வழிதவறியவர்களுக்கு நேர்வழி காட்டு.//

    இந்தப் பதிவில் சொன்ன அத்தனை அறிவுரைகளுக்கும் முத்தாய்ப்பான பிரார்த்தனை, மாஷா அல்லாஹ்! கவலை என்பது தாங்கமுடியாத அளவிலும்கூட நமக்கு தெரியலாம். ஆனால் அதற்காக சொல்லிலோ, செயலிலோ நிலைத்தடுமாறிவிடக் கூடாது என்பதை சொல்லும் அழகிய பதிவு! ஜஸாகல்லாஹ் சகோ.

    ReplyDelete
  14. @ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)

    //நச்சுனு சொல்லி இருக்கீங்க பாஸ்.//

    டக்குனு வந்து கருத்துரை போட்டதிற்கு நன்றி பாஸ்

    ReplyDelete
  15. @தங்கை ஆமினா


    //சாகநினைப்பவன் கூட வாழ்க்கை இருக்கு என திரும்ப வைக்கும் வரிகள்//

    அல்ஹம்துலில்லாஹ் நன்றி சகோ

    ReplyDelete
  16. @தங்கை ஆமினா

    படித்து உணர்ந்து கருத்துரை இட்டமைக்கு நன்றி தங்கை

    ReplyDelete
  17. @NKS.ஹாஜா மைதீன்

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    கவலைப்பட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை மனதை இறகாக இலேசாக வைத்துக் கொண்டால் நீங்கள் சொல்ற மாதிரி பறந்துகிட்டே இருக்கலாம்

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  18. @Lakshmi

    உங்கள் வருகைக்கும் ஆதாரவுக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  19. @Aashiq Ahamed

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    //இன்று முதல் நீங்கள் "தத்துவவாதி ஹைதர் அலி" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவீர்கள்.. :)//

    ஆஹா வியாதியா? ம்ம் ஆபத்தை கடப்போம் இறையுதவியுடன்

    ReplyDelete
  20. @எம் அப்துல் காதர்

    //மிகச் சரியான உண்மை. பதிவு தெளிந்த நீரோடை போல் அருமை. ஜஸாக்கல்லா ஹைரன்.//

    வார்த்தையின் கனத்தை அனுபவித்து கருத்துரை இட்டமைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  21. @Syed Ibramsha

    //அறிந்தும் (அறியாமல்) தவிப்போரை என்ன சொல்ல?//

    நமக்கு அறிந்த விஷயங்களை சொல்லிக் கொண்டே இருப்போம் சகோ
    அதற்கு பலனை எதிர்பார்க்காமல்

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  22. @Ayushabegum

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்... சகோ

    அல்ஹம்துலில்லாஹ்
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி சகோ

    ReplyDelete
  23. @Nizam

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    //படித்தவுடன் கவலை சிறிது குறைந்ததாது. நன்றி///

    மாஷா அல்லாஹ் இதற்கு இதற்காகத்தான் இந்த பதிவு சகோ

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  24. @சுவனப்பிரியன்

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  25. @zalha

    வ அலைக்கும் வஸ்ஸலாம்

    //தத்துவவாதி ஹைதர் சகோ!//

    இரண்டு வார்த்தை கோர்த்தாப்புலே எழுதினால் உடனே தத்துவ வாதியா?
    ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும்

    நன்றாக பதிவை உள்வாங்கி படித்து கருத்திட்டமைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  26. @அஸ்மா

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    //இந்தப் பதிவில் சொன்ன அத்தனை அறிவுரைகளுக்கும் முத்தாய்ப்பான பிரார்த்தனை, மாஷா அல்லாஹ்!//

    முடிக்கும் போது துஆ கேட்கனும் போல இருந்தது அதான் இறுதியில் பிரார்த்தனையோடு முடித்தேன்
    இயல்பாக முத்தாய்ப்பாக மாறியதில் மகிழ்ச்சி சகோ

    //கவலை என்பது தாங்கமுடியாத அளவிலும்கூட நமக்கு தெரியலாம். ஆனால் அதற்காக சொல்லிலோ, செயலிலோ நிலைத்தடுமாறிவிடக் கூடாது என்பதை சொல்லும் அழகிய பதிவு!///

    சரியாக புரிந்து கொண்டீர்கள் சகோ

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  27. அஸ்ஸலாமு அலைக்கும்
    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சேவை...
    நான் இந்த பதிவை படிப்பதற்கு முன் ஒரு மிக பெரிய மன கவலையில்தான் இருந்தேன் இப்போது மனம் கொஞ்சம் relax ஆகயுள்ளது
    அனைத்தும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை...

    வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  28. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
    மாஷா அல்லாஹ் இதன் மூலம் உங்களது எழுத்து திறமையை அறிய முடிந்தது.இது போல் இதற்கு எதிர்மறையாக அதாவது மகிழ்ச்சியில் திளைக்கும் மானிடனே கவலைப்படு என்றும் உங்களால் எழுத இயலும் என்று நினைக்கிறேன். மனிதனுக்கு மகிழ்ச்சி,கவலைப்படுதல் என்பவைகள் இறைவன் அளித்த பரிசு அதனால் நம் வாழ்கையில் ஒரே மகிழ்ச்சியாக இருக்காமல் கொஞ்சம் கவலையும் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து

    ReplyDelete
  29. சலாம் சகோ ஹைதர் அலி,

    வித்தியாசமான முயற்சி. பாராட்டுக்கள். ஏன் திடிர்னு 4 கேப்??? அடுத்த பதிவ தட்டிவிடுங்க சகோ.

    ReplyDelete
  30. ////இந்த உலகில் நீ மட்டும் சோதிக்கப்படவில்லை.மற்றவர்களை ஓப்பிட்டுப் பார்த்தால் உனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறைவானவையே.பல ஆண்டுகளாக நோயால் பாதிக்கப்பட்டு,உறக்கமின்றி இங்கும் அங்குமாகப் புரண்டுப் புரண்டு அவதிப்படுவோர் பலர் இருக்கின்றனர்.நோயின் வலி தாளாமல் துடிப்பவர்களும்,கதறுபவர்களும் அதிகம் உள்ளனர்.///

    தன் வாழ்வின் பிரச்சினைகளை எண்ணி சோர்ந்து போன மனதை தட்டி எழுப்பும் வரிகள்...

    சுருக்கமா சொல்லனும்னா சூப்பர் சகோ...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  31. masha allah...kastamaana manasukku uram oottum vaarthaigal

    ReplyDelete
  32. அஸ்ஸாலாம் அலைக்கும் சகா,
    கவலையை மறக்கவும், மற்றவர்கள் கவலையை அறியவும் முடிகிறது. தன் கவலைகளை மறந்து மற்றவர்கள் உதவியை செய்ய முயற்ச்சிக்கிறன். இன்ஷா அல்லா....
    நல்ல பதிவை வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  33. நமக்கு இருக்கும் கவலைகள் தான் கஷ்டமானது, என்னும் மனிதர்கள், மற்றவர்கள் கவலை சிந்தித்தால், அவனுக்கு இருக்கும் கவலைகளே தெரியாது..
    அனால் பலர் சிந்திக்க மாட்டரர்கள்..

    ReplyDelete