Saturday, March 31, 2012

காயப்படுங்கள்,கவலைப்படுங்கள்.

எல்லா நேரங்களிலும் துன்பம் இழிவானதும் அன்று. எல்லாக் காலங்களிலும் துயரம் வெறுக்கத்தக்கதும் அன்று. சில சூழ்நிலைகளில் காயங்கள் நமக்கு நன்மை அளிக்கும்.

மனம் வலிக்கும் போதுதான் மனிதன் உருக்கமாகப் பிரார்த்திக்கிறான். கவலையேற்படும் போதுதான் இறைவனை உளப்பூர்வமாகத் துதிக்கிறான். படிக்கும் பருவத்தில் வலிகளைச் சகித்துக் கொள்ளும் மாணவன் சிறந்த அறிஞனாக உயர்வான். படிக்கும் காலத்தில் சோதனைகள் அவனைத் திணறடிக்கலாம். ஆனால் முடிவில் ஆற்றல்மிக்க அறிஞனாகப் பிரகாசிப்பான். கவிஞனின் வலி சிறந்த இலக்கியத்தைத் தரும். அவனது உள்ளத்திலும், இரத்த நாளத்திலும் கனன்று கொண்டிருக்கும் வேதனை அவனது உணர்வுகளைத் தட்டியெழுப்பும்.ஓர் எழுத்தாளனின் காயம் உயிரோட்டமான படைப்பை நமக்குத் தரும். அதில் அனுபவங்களும் நினைவுகளும் வாழும்.

காயங்களால் அவமானங்களால் சிரமங்களால் கழுவப்படாத மாணவன், மகிழ்ச்சியை மட்டுமே அனுபபித்து அழுக்குப்படாமல் உலா வரும் மாணவன் சோம்பேறியாகவே இருப்பான். அவனிடம் தளர்ச்சியும் பலவீனமும் மிகைத்திருக்கும்.

கசப்பான அனுபவங்களைச் சுவைக்காத, இன்னல்களை அசை போடாத, வலியறியாத கவிஞனின் கவிதைகள் மிகச் சாதாரணமாகவே இருக்கும். அவை வெறும் வார்த்தை நுரைகள். ஏனெனில், அந்த வரிகள் அவனது நாவிலிருந்து வெளிப்பட்டவை; உள்ளத்திலிருந்து புறப்பட்டவை அல்ல. அந்த வார்த்தைக் குவியலில் கவிஞனின் இதயத்தையோ, உணர்வுகளையோ காண முடியாது.

சில அறிஞர்கள் மிகச் சிறந்த புத்தகங்களை எழுதியுள்ளார்கள். அவர்கள் பட்ட வேதனைகள்தான் இதற்குக் கராணம். சாதனையாளர்கள் பலரும் வாழ்க்கையில் சந்திக்கின்ற தடைகளை, சோதனைகளைக் கண்டு பயந்து ஓடாதீர்கள். அவை சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும்,ஆற்றலையும் நமக்குத் தரலாம். எரிந்து கொண்டிருக்கும் உள்ளத்தோடும் உணர்வோடும் வாழும் வாழ்க்கை, எந்த உணர்ச்சியும் இல்லாமல் செத்துப் போன இதயத்தோடு வாழும் வாழ்க்கையை விடச் சிறந்தது; தூய்மையானது.

சமூக பாதிப்புகளை பார்த்து வெந்துகொண்டிருக்கும் சொற்பொழிவாளனின் மனதிலிருந்து தெறிக்கும் வார்த்தைகள் கேட்பவரது இதயத்தின் ஆழம் வரை ஊடுருவிச் செல்லும். உயிரின் வேர் வரை பாயும். எனெனில் அந்தச் சொற்பொழிவாளன் காயங்களின் மேல் வாழ்கிறான்.

நாம் அனுபவத்தில் பல கவிஞர்களின் கவிதைகளைப் படித்திருப்போம். சில கவிதைகளில் உயிர் இல்லாமல் இருந்ததை கவனித்து இருக்கிறீர்களா? ஏனெனில், அவை வேதனையால் எழுதப்பட்டவையல்ல. அவற்றில் சூடும் இல்லை. ஐஸ் கட்டியைப் போல குளிர்ச்சியாகவும், மண்ணாகட்டியைப் போல உணர்ச்சியற்றவையாகவும் அவை இருக்கும்.

மேலும் சில சொற்பொழிவாளர்களது நூல்களையும் படிக்கும் போது அவை வாசகர்களது உள்ளத்தில் அணுவளவு பாதிப்பைக் கூட ஏற்படுத்தக் கூடிய வகையில் இருக்காது. இதற்குக் காரணம் அந்தப் பேச்சாளர்கள் எந்த வலியையும் வேதனையையும் அனுபவித்து இருக்க மாட்டார்கள். எனவேதான், அவர்களது வார்த்தைகளில் உயிரோட்டத்தைப் பார்க்க முடிவதில்லை.

ஆகவே உங்களின் எழுத்தின் மூலம், கவிதையின் மூலம் மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என விரும்பினால், முதலில் நீங்கள் சமூக அக்கறையோடு காயப்பட்ட விடயங்களை எழுதுங்கள். அல்லது காயப்படுங்கள் தோல்விகளையும் துயரங்களையும் அனுபவிங்கள். அதன் பிறகு உங்களது உள்ளத்திலிருந்து புறப்படும் வார்த்தைகள் பிறரது உள்ளங்களில் ஊடுருவும்; நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். வாழ்க்கையில் பல விடங்களில் காயப்பட்டு வாழ்ந்துக் கொண்டிருக்கும் என் அனுபவத்தில் சொல்கிறேன்.

32 comments:

  1. உண்மையை
    அதிலும் உள்ளதை சொன்னீர்கள் சகோ

    உண்மைதான்
    நிறை
    கதை
    கவிதை
    எண்ணங்கள்
    வாசித்து இருக்கிறேன்
    சிலர் அனுபவம் இல்லை என்றாலும்
    வாசிப்பின் வாசனையில் இல்லாத உயிரையும்
    இருப்பதா பாவித்துக்கொண்டு எழுதுவார்கள்

    சில
    சமூகத்தோடு பயணித்து நேரிட்ட
    வாழ்கயின் வலிகளை எழுதுவார்கள்
    அதில் இலக்கியமும் இலக்கணமும் இல்லை என்றாலும்
    உயிர்மை இருக்கும்

    வலிகளை
    சுமந்து சுழலும் பூமியில்
    களங்கமற்ற மழை விழுகையில்
    மண்வாசனை உயிர்த்தெழும்
    அதுவே மெய்யான
    வாசம்

    ReplyDelete
  2. எல்லா நேரங்களிலும் துன்பம் இழிவானதும் அன்று. எல்லாக் காலங்களிலும் துயரம் வெறுக்கத்தக்கதும் அன்று. சில சூழ்நிலைகளில் காயங்கள் நமக்கு நன்மை அளிக்கும்.

    உன்மையிலும் உண்மைதான்

    ReplyDelete
  3. சரியான கரு
    முதல் பாய்ன்ட் நச்

    ஒரு விஷயத்தை பிறர் மனதில் பதியும் படி உணர்வு பூர்வமாக தாக்க வேண்டும் எனில்
    நாம் அனுபவப்பட்டிருக்க வேண்டும்

    சோ வலிகள் வலிகளாக பொருட்படுத்த கூடாது..அனுபவங்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும்
    என்பது போல் சொல்லப்பட்டிருக்கிறது!

    இப்படியாக நினைத்தாலே வாழ்வில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை பக்குவமனதுடன் கடக்க, வேதனையில்லாத வாழ்க்கை வாழ ஏதுவாக இருக்கும்!

    ReplyDelete
  4. வலிகள் காயங்களின் சிறந்த அலசல்.
    நினைத்தால் ஒவ்வொன்றும் எத்தனை
    கனதியான அனுபவங்கள்.
    அதில் அனுபவ முத்தெடுப்போம்.
    நல்ல மாலையாக்குவார்கள் பிறர்
    என்று பூரித்து எழுதுவோம்.
    வாழ்த்துகள் சகோதரா.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  5. மிக அருமையான் பகிர்வு.
    தலைப்பே அருமை

    ReplyDelete
  6. உணர்ந்து எழுதப்பட்ட கட்டுரை!
    அதனால்தான் இது உண்மையின் உரைகல்லாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  7. கரையில் இருந்துApril 1, 2012 at 1:09 AM

    இறைவனின் சாந்தி உண்டாகட்டும் !!!

    அருமையான பதிவு !
    தங்கள் சொல்லியதை இரண்டு வருடத்துக்கு முன் நான் செய்து இருகிறேன் !!
    அதன் விளைவாக ....இதோ என்னுடைய சில கவிதைகள் !!!!





    யாரடா தமிழன் ! யாரடா இந்தியன் !!!


    வெளளிகிழமை வெடித்த குண்டுகளுக்காக எங்களை
    சிறையில் அடைத்தீர்கள் .....பலியிலும் நாங்கள் ,பழிலும் நாங்கள் !!!


    இருந்தும் நீங்கள் தேசா துறவிகள் , நாங்கள் துரோஹிகள் !!!


    ஈழ தமிழர்களுக்காக தமிழ் நாட்டில் முதலில் குரல் கொடுத்தோம் !
    அதற்கு பரிசாக எங்களை பள்ளிவாசலில் புகுந்தது சுட்டிகள் !!!!


    இருந்தும் நீங்கள் தமிழ் போராளிகள் ,நாங்கள் தமிழ் துரோகிகள் !!!!


    உள் இருந்து எரிந்து பெட்டிகளுக்காக எங்களின் உயிர்களையும் ,மானத்தையும்
    தீயிட்டு ஏரிதீர்கள் ......!!


    இருந்தும் நீங்கள் முதல் மந்தீரிகளாக ...நாங்கள் முதேவிகளாக !!!


    எங்கள் பழம் பேரும் கட்சியை நீங்கள் பிரித்தீர்கள் ,முரிதீர்கள் ,சிதைதீர்கள் ,பழிதீரிகள்!!!!
    இருந்தும் நீங்கள் சிம்மாசனத்தில் நாங்கள் சாக்கடையில்....!!!


    சமுதாய போராளியை கொண்டு கட்சியை நீங்கள் வளர்த்தீர்கள் , பலபடுதினிர்கள்,திடபடுத்துநீர்கள் ...பிறகு எங்களை முதுகில் குத்துநீர்கள்
    இருந்தும் நீங்கள் மேடையில் ...நாங்கள் தரையில் !!!!!


    திரையிலும் ,திரை அரங்களிலும் எங்களை தீவிரவாதியாக சித்தரித்து !!
    மாற்று மத சஹோதரனிடம் எங்களை பகைவனாக காண்பித்தீர்கள் ....!!!


    இருந்து நீங்கள் இயக்குனர்களாக ...நாங்கள் பர்ர்பவர்களாக !!!!


    ஒரு காலம் வரும் அன்று கல்லும் ,பாறையும்
    சாட்சி சொல்லும் .....


    யார் உண்மையாளர் என்றும் ,
    யார் தமிழர் என்றும் ,
    யார் இந்தியர் என்றும்.......


    தெரிந்து கொள் துரோஹியே தெரிந்து கொள் ....
    பிறப்பால் - இஸ்லாமியன்
    இனத்தால் - திராவிடன்
    மொழியால் - தமிழன்
    தேசத்தால் - இந்தியன்



    - கரையில் இருந்து ...

    ReplyDelete
  8. கரையில் இருந்துApril 1, 2012 at 1:09 AM

    இறைவனின் சாந்தி உண்டாகட்டும் !!!

    அருமையான பதிவு !
    தங்கள் சொல்லியதை இரண்டு வருடத்துக்கு முன் நான் செய்து இருகிறேன் !!
    அதன் விளைவாக ....இதோ என்னுடைய சில கவிதைகள் !!!!





    யாரடா தமிழன் ! யாரடா இந்தியன் !!!


    வெளளிகிழமை வெடித்த குண்டுகளுக்காக எங்களை
    சிறையில் அடைத்தீர்கள் .....பலியிலும் நாங்கள் ,பழிலும் நாங்கள் !!!


    இருந்தும் நீங்கள் தேசா துறவிகள் , நாங்கள் துரோஹிகள் !!!


    ஈழ தமிழர்களுக்காக தமிழ் நாட்டில் முதலில் குரல் கொடுத்தோம் !
    அதற்கு பரிசாக எங்களை பள்ளிவாசலில் புகுந்தது சுட்டிகள் !!!!


    இருந்தும் நீங்கள் தமிழ் போராளிகள் ,நாங்கள் தமிழ் துரோகிகள் !!!!


    உள் இருந்து எரிந்து பெட்டிகளுக்காக எங்களின் உயிர்களையும் ,மானத்தையும்
    தீயிட்டு ஏரிதீர்கள் ......!!


    இருந்தும் நீங்கள் முதல் மந்தீரிகளாக ...நாங்கள் முதேவிகளாக !!!


    எங்கள் பழம் பேரும் கட்சியை நீங்கள் பிரித்தீர்கள் ,முரிதீர்கள் ,சிதைதீர்கள் ,பழிதீரிகள்!!!!
    இருந்தும் நீங்கள் சிம்மாசனத்தில் நாங்கள் சாக்கடையில்....!!!


    சமுதாய போராளியை கொண்டு கட்சியை நீங்கள் வளர்த்தீர்கள் , பலபடுதினிர்கள்,திடபடுத்துநீர்கள் ...பிறகு எங்களை முதுகில் குத்துநீர்கள்
    இருந்தும் நீங்கள் மேடையில் ...நாங்கள் தரையில் !!!!!


    திரையிலும் ,திரை அரங்களிலும் எங்களை தீவிரவாதியாக சித்தரித்து !!
    மாற்று மத சஹோதரனிடம் எங்களை பகைவனாக காண்பித்தீர்கள் ....!!!


    இருந்து நீங்கள் இயக்குனர்களாக ...நாங்கள் பர்ர்பவர்களாக !!!!


    ஒரு காலம் வரும் அன்று கல்லும் ,பாறையும்
    சாட்சி சொல்லும் .....


    யார் உண்மையாளர் என்றும் ,
    யார் தமிழர் என்றும் ,
    யார் இந்தியர் என்றும்.......


    தெரிந்து கொள் துரோஹியே தெரிந்து கொள் ....
    பிறப்பால் - இஸ்லாமியன்
    இனத்தால் - திராவிடன்
    மொழியால் - தமிழன்
    தேசத்தால் - இந்தியன்



    - கரையில் இருந்து ...

    ReplyDelete
  9. //எல்லா நேரங்களிலும் துன்பம் இழிவானதும் அன்று. எல்லாக் காலங்களிலும் துயரம் வெறுக்கத்தக்கதும் அன்று. சில சூழ்நிலைகளில் காயங்கள் நமக்கு நன்மை அளிக்கும்.//

    அருமை சகோ!.

    துன்பம் சிந்தனையைத்தூண்டும், மிகுந்த மகிழ்ச்சி தன்னிலை மறக்கச் செய்யும்.

    ReplyDelete
  10. உண்மை தான்-சகோதரா!


    பட்டால் தான்-
    புத்தி என்று அழகா சொன்னீங்க!

    மேலும் பானையில் உள்ளதுதானே-
    அகைப்பையில் வரும்!

    நல்ல கருத்து கொண்ட பதிவு!

    ReplyDelete
  11. எல்லோருக்கும் எப்படியோ தெரியலங்க என்னோட வரிகளில் என் மனக் காயங்கள் நிறைய இருக்கும் . என்ன செய்வது பகிர முடியாதவர்கள் எழுத்தில் தானே பகிர முடிகிறது . நல்ல பதிவு .

    ReplyDelete
  12. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    தங்களின் அனுபவம் எழுத்தில் தெரிகிறது சகோ .மனித பிறவியில் வலிகளுக்கும்.வேதனைகளுக்கும் குறை ஒன்றும் இல்லை ,ஆனால் நாம் அதை எப்படி உள்வாங்கி கொண்டு இருக்கிறோம் என்பது நீங்கள் சொல்வது போல வெளிபடுத்துதலில் இருக்கிறது.

    நல்லதொரு பதிவுக்கு நன்றி சகோ..

    ReplyDelete
  13. வணக்கம் சகோ..!
    உங்கள் எழுத்துக்களிலேயே எங்களுக்கு தெரியும் இந்த வயதிலேயே நீங்கள் பரந்த அனுபவம் உள்ளவர் என்று.!!

    ReplyDelete
  14. தோல்விகளை வெற்றியின் படிக்கட்டுகள்
    என்று சொல்வார்கள்..
    அதுபோல...
    வரும் வலிகளை தூக்கி கொல்லையில்
    போட்டுவிட்டு விவேகத்துடன் வீறுநடை போட..
    உங்கள் பதிவு ஊக்கம் கொடுக்கிறது.

    ReplyDelete
  15. உணர்ந்து உணர்வோடு எழுதப்படும் எதிலும் உயிர் இருக்கும்.அடுத்தவர்களுக்கும் பயன்படும் !

    ReplyDelete
  16. பதில் தாமதமாக கொடுப்பதற்கு முதலில் அனைவரும் மன்னிக்கவும்

    ReplyDelete
  17. @சகோ
    செய்தாலி


    மிக அருமையான கருத்துரை சகோ மிக்க நன்றி

    ReplyDelete
  18. @Lakshmi

    ///உன்மையிலும் உண்மைதான்//

    வாசித்து உணர்ந்து உண்மைப் படுத்தியதற்கு நன்றி

    ReplyDelete
  19. @சகோ
    ஆமினா


    ///சோ வலிகள் வலிகளாக பொருட்படுத்த கூடாது..அனுபவங்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும்
    என்பது போல் சொல்லப்பட்டிருக்கிறது!///

    அதே தான் அதே தான்

    நச் கருத்துரை நன்றி

    ReplyDelete
  20. @சகோ
    kovaikkavi


    அழகான கருத்துரைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  21. @புலவர் சா இராமாநுசம்

    ///உணர்ந்து எழுதப்பட்ட கட்டுரை!
    அதனால்தான் இது உண்மையின் உரைகல்லாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள்!//

    உங்கள் வாழ்த்து கண்டு ரொம்ப மகிழ்ச்சி ஐயா

    ReplyDelete
  22. @கரையில் இருந்து

    சகோதரரே தாமதமாக ப்திலளிப்பதற்கு மன்னிக்கவும்

    எழுத்து பிழைகள் அங்காங்கு இருந்தாலும் அருமையான கவிதை சகோ
    //எரிந்து கொண்டிருக்கும் உள்ளத்தோடும் உணர்வோடும் வாழும் வாழ்க்கை, எந்த உணர்ச்சியும் இல்லாமல் செத்துப் போன இதயத்தோடு வாழும் வாழ்க்கையை விடச் சிறந்தது; தூய்மையானது.//
    என்று பதிவில் சொன்னது போல் உங்கள் மனநிலை இருக்கிறது இறைவன் உதவி புரிய போதுமானவன் சகோ வருகைக்கும் உணர்ச்சிபூர்வமான கவிதைக்கும் நன்றி

    ReplyDelete
  23. @சகோ
    Syed Ibramsha


    ///துன்பம் சிந்தனையைத்தூண்டும், மிகுந்த மகிழ்ச்சி தன்னிலை மறக்கச் செய்யும்.///

    அதே தான் சகோ சரியாகச் சொன்னீர்கள்

    ReplyDelete
  24. @சகோSeeni

    பதிவுக்கேற்ற பழமொழிகளை கருத்துரையாக கொடுத்ததற்கு நன்றி சகோ

    ReplyDelete
  25. @சகோ
    சசிகலா


    ///எல்லோருக்கும் எப்படியோ தெரியலங்க என்னோட வரிகளில் என் மனக் காயங்கள் நிறைய இருக்கும் . என்ன செய்வது பகிர முடியாதவர்கள் எழுத்தில் தானே பகிர முடிகிறது///

    அதை உங்கள் எழுத்தில் உணர்ந்திருக்கிறேன்

    வருகைக்கு நன்றி .

    ReplyDelete
  26. @சகோ
    Ayushabegum

    வ அலைக்கும் வஸ்ஸலாம்

    ///தங்களின் அனுபவம் எழுத்தில் தெரிகிறது சகோ .மனித பிறவியில் வலிகளுக்கும்.வேதனைகளுக்கும் குறை ஒன்றும் இல்லை ,ஆனால் நாம் அதை எப்படி உள்வாங்கி கொண்டு இருக்கிறோம் என்பது நீங்கள் சொல்வது போல வெளிபடுத்துதலில் இருக்கிறது.///

    தங்களின் ஆங்கிகாரத்திற்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  27. @அண்ணேகாட்டான்

    ///உங்கள் எழுத்துக்களிலேயே எங்களுக்கு தெரியும் இந்த வயதிலேயே நீங்கள் பரந்த அனுபவம் உள்ளவர் என்று.!!////

    எதோ கற்றவரை எழுதுகிறேன் அனுபசாலி நீங்கள் தான் சொல்லிக் கொடுக்க வேண்டும் தம்பிகளுக்கு

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  28. @சகோதரர்மகேந்திரன்

    ///தோல்விகளை வெற்றியின் படிக்கட்டுகள்
    என்று சொல்வார்கள்..
    அதுபோல...
    வரும் வலிகளை தூக்கி கொல்லையில்
    போட்டுவிட்டு விவேகத்துடன் வீறுநடை போட..
    உங்கள் பதிவு ஊக்கம் கொடுக்கிறது.///

    அழகாக விளங்கி சொன்னீர்கள்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  29. @ஹேமா அவர்கள்

    ///உணர்ந்து உணர்வோடு எழுதப்படும் எதிலும் உயிர் இருக்கும்.அடுத்தவர்களுக்கும் பயன்படும் !///

    கண்டிப்பாக அடுத்தவர்களுக்கு பயன்படும் உதவேகம் கொடுக்கும்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  30. உளத்தூய்மையுடன் பிரார்த்தித்து தேல்வியை உள்வாங்கி அதிலிருந்து மீண்டவர்களுக்கு வெற்றி: இந்தப் பையன் ஏன் அழுகிறான் என்று என் மகன் கேட்டான் படத்தை மாற்றுங்கள் சகோ உண்மை உறக்கச் சொல்வோம்

    ReplyDelete
  31. வலிகள் எப்போதும் நிறைய கற்றுத் தருபையாக/அவமானங்கள் எதையும் சந்திக்கும் வலிமை தருபவையாக/

    ReplyDelete