Wednesday, August 1, 2012

எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்வோம் வாருங்கள்.பா-3

இந்த தொடரின் முதல் பாகத்தை வாசிக்க இங்கே அழுத்துங்கள்
பதிவின் இரண்டாவது பாகத்தை வாசிக்க இங்கே அழுத்துங்கள்.

3. எழுதுதல் செயல்முறைகள்

எழுத்தாக்கம் என்பது சிக்கலானதொரு செயல்முறையாகவே ஆரம்பத்தில் தோற்றமளிக்கும். அதற்காக ஒரு சில அடிப்படைத் திறன்களைப் பெற்றிருக்க வேண்டும். நமது எழுத்தாக்கத்தின் உள்ளடக்கம், அதன் நோக்கம்,நமது வாசகர்கள் என்பன நாம் விளங்கிக் கொண்டால், எழுத்தாக்கம் மேலும் எளிதாக்கப்பட முடியும். இவற்றுடன்,எழுதுதல் செயல்முறையை, கையாளுவதற்கு எளிதாக சிறுபடிகளாகப் பிரித்துக் கொள்வதன் மூலம் எழுத நினைக்கும்போது ஏற்படக்கூடிய விரக்தியின் அளவினைக் குறைத்துக் கொள்ளலாம்.

1. திட்டமிடல்

எழுதுதல் திட்டமிடலுடன் ஆரம்பமாகிறது.இது கையிலுள்ள விடயம் தொடர்பாக எதனை? எப்படி? எழுத வேண்டும் எனச் சிந்திப்பதை குறிக்கும். வழங்கவுள்ள கருத்துக்களின் முழு எல்லைகளை வகுத்துக் கொள்ளல்,குறிப்புகளை எடுத்தல்,அட்டவணைகளைத் தயாரித்தல் என்பனவும் இதிலடங்கும்.சிந்தனைகளையும் அவற்றுக்கு ஆதாரமான விபரங்களையும் குறித்து வைத்துக்கொள்வதன் மூலம்.அவற்றில் சிலவற்றை எழுத மறப்பதையும் அல்லது ஒழுங்கினமான அமைப்பில் அமைவதையும் தவிர்க்க முடியும். முதலாவது சொல்லை எழுதும் முன் இடம்பெறும் சிந்தனை,சொற்தெரிவு,கற்பனை ஆகியன முழு ஆக்கத்தினையும் எழுதுவதன் நுட்பங்களைப் போன்றே முக்கியத்துவம் பெறுகின்றன.

2. முதற் பிரதியை எழுதுதல்

எழுத ஆரம்பிக்கும்போது நாம் முதலாவது பிரதியைச் சுருக்க்மான வடிவத்தில் தயாரிக்கின்றோம்.இப்பபிரதியில் தேவைக்கு அதிகமான சொற்களோ அல்லது எடுத்துச் சொல்லப்படும் கருத்துக்களைச் சிக்கலாக்கும் தெளிவற்ற சொற்களோ இருக்கக் கூடாது.இப்பிரதியைத் தயாரிக்கும் போது வாசகர்களையும்,முக்கியமான கருத்துகளை விளங்கிக் கொள்வதில் அவர்களுக்குள்ள ஆற்றலையும் நாம் மனதிற் கொள்வது அவசியம். நாம் பயன்படுத்தும் விவரண உதாரணங்கள் நிறைய சந்தர்ப்பங்களில் சிக்கலான கருத்துக்களைத் தெளிவுபடுத்த உதவுகின்றன.

எழுத்தாக்கத்தின் அடிப்படையே இந்த முதற்பிரதியாகும். எனவே இதனைத் தயாரிப்பதற்குச் செலவாகும் நேரம் வீணாகுவதில்லை.முதற் பிரதி தயாரான பின்னர், கருத்துக்கள்,உதாரணங்கள்,எழுத்துநடை போன்ற எடுத்தாளப்படக்கூடிய அம்சங்களை இனங்காணும் பொருட்டு, அதனை நாம் மீள் பார்வை செய்ய வேண்டும்.இதனால், திருத்தம் செய்யும்போது இவ்வம்சங்களை ஒழுங்குப்படுத்த இயலும்.பிரதி சரிவர அமையாவிடின் அதன் ஒரு பகுதியோ அல்லது முமுயாகவோ தூக்கியெறியவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

3.மீள்பரிசீலனை செய்தல்

நமது முதற் பிரதியைக் கணிசமான அளவுக்கு மேம்படச் செய்யும்.தெளிவற்ற கருத்துக்களைத் தெளிவாக்கவும் அநாவசிய விபரங்களைக் களையவும் இது உதவும். ஆயினும் முதலாவது பிரதியை உறுதிப்படுத்தும் ஒரு செய்ல்முறையாக மீள்பரிசீலனைக் கொள்ளக் கூடாது. மாறாக இறுதி ஆக்கத்தைப் படைப்பதற்கான ஒரு வழிமுறையாகவே இதனைக் கருத வேண்டும்.எழுதப்பட்ட கண்ணோட்டத்தை மாற்ற வேண்டிய நிலை சாதாரணமாக இக்கட்டத்தில் ஏற்படுவதுண்டு.கருத்து குழப்பநிலைகலை நீக்குவதற்கு ஏற்ற சந்தர்ப்பமாகவும் இது அமையும்.

4. பிரதியை சரிபார்த்தல்

ஒரு முறையோ பல முறைகளோ முதலாம் பிரதி மீள்பரிசீலனை செய்யப்பட்ட பின்,இறிதிப் பிரதி தயாராகும்.இவ்விறுதிப் பிரதி இலக்கண,எழுத்து மற்றும் நிறுத்தல் குறிகள் விடுபட்டுள்ளதா என கவனித்து திருத்தம் செய்ய வேண்டும். “சரி பார்த்தல்” (Proof reading) நேரமில்லையெனில் எழுவதற்கே நேரமில்லை என்பதை குறிக்கும்.

5.எழுத்தளரின் இடர்கள் (Writer' s Block)

நாம் எழுத நினைக்கும் விடயம் சம்பந்தமாக ஒரு சொல்லக்கூடத் தொடர்ந்து எழுதவோ,நினைக்கவோ முடியாது தடைப்பட்டு விடுவது போன்ற ஒரு நிலையைக் குறிப்பிடவே ‘எழுத்தளரின் இடர்’ என்று சொல்லுகின்றோம். இந்நிலைமையைச் சமாளிப்பதற்கு சில அழகிய உதாரணங்களைப் பார்ப்போம்.

. ஒரு கருத்து இன்னொன்றுக்கு இட்டுச் செல்லும் விதமாகத் தொடர்ச்சியாக எழுதுவதற்கு நம்மை வலுக்காட்டாயப்படுத்திக் கொள்ளலாம். (தொடர் பதிவுகள் போன்றவை) 

. நமது இந்த சிக்கலான நிலை குறித்து எழுத்தர்வமுள்ள  நண்பர்களுடன் பேசலாம் அவ்வாறு செய்யும் பொழுது புதிய வழிகாட்டல்களும் பொருளட்க்கம் பற்றிய புதிய அணுகு முறைகளும் கிடைக்கலாம்.

. நாம் எழுவதிலிருந்து கொஞ்ச நேரம் விடுபட்டு வேறு விடயங்களில் கவனத்தை செலுத்தி விட்டு. பின்னர் புது ஊக்கத்துடன் மீண்டும் எழுத ஆரம்பிக்கலாம்.

6. உதவிக் குறிப்புகள்

சிறந்த எழுத்தாக்கத்துக்கான சில துணைக் குறிப்புகள் பின்வருமாறு:

1. உண்மைகளின் அடிப்படையில் வசனங்களை அமைக்க. எளிமையான,சுருக்கமாக,திருத்தமாகக் கூறுக.

2. கடின கலைச் சொற்களைத் தவிர்க்க. அதிகம் பயன்படுத்தப்பட்டு புளித்துப் போன சொற்களையும் சொற் தொடர்களையும் தவிர்க்க.

3.பெயர்ச் சொற்களை விட கூடுதலான வினைச் சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை உறுதிப்படுத்துக.

4.பெயர்களை வினைகளாக மாற்றுவதன் மூலம் தேவையற்ற சொற்களை நீக்குக.

5. பெயர்,பெயர் அடைச் சொற்களை வினைச் சொற்களாகப் பயன்படுத்த வேண்டாம்.

6. எழுவாய் செயலை ஆற்றும் வகையில் செய்வினை வாக்கியங்களை உபயோகிக்க.

7. ஒரே சொல் மீள வருதலைத் தவிர்க்க ஒத்த கருத்துடைய வேறு சொல்லை உபயோகிக்கலாம்.

8.முக்கியமான சொற்களையும், பொருத்தமான கருத்துக்களையும் ஒரு தாளில் அல்லது கணினியில் குறித்துக் கொண்டு நமது முதலாவது பிரதித் தயரிப்பை ஆரம்பிக்கவும்.தொடரொழுங்கு,வரிசைப்படுத்துதல் என்பன பற்றி முதலில் கவனம் செலுத்த வேண்டியதில்லை. உப பிரிவுகளாகப் பின்னர் வகைப்படுத்தலாம்.

முஹம்மது நபி ஸல் அவர்கள் கூறியதை நினைவில் கொள்ளுங்கள்: ”சொற்களில் சிறந்தவை திருத்தமான, சுருக்கமான சொற்களாகும்.”

எழுத்துத்துறையில் ஆர்வமுள்ள அனைத்து சகோதரர்களும் சிறந்த முறையில் எழுதி எழுத்தாளர்களாக உயர என் வாழ்த்துகள் (முற்றும்)

15 comments:

  1. சலாம் சகோ...

    பயனுள்ளதாக இருக்கு படிக்கவும் பின்பு எழுதவும்....

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  2. /* படிக்கவும் பின்பு எழுதவும் */

    அப்ப.. ஹைதர் அலி படிக்காம எழுதிட்டாருன்னு சொல்ல வர்றீங்களா மச்சான்???? டவுட்டு...

    ReplyDelete
    Replies
    1. படிக்கவும் சிறப்பாக இருக்கு பின்பு எழுதவும் நடைமுறையில் நன்கு இருக்கும் என்பது போல் சொல்லுகிறார் என்று நினைக்கிறேன்

      Delete
  3. salaam,

    வலையக உரிமையாளருக்கு நன்கு உதவும் பதிவு...


    புதிய வரவு:

    விஜய் டி.விக்கு புகாரை உடனடியாக அனுப்புங்கள்

    read more-http://tvpmuslim.blogspot.in/2012/08/ban-vijay-tv-program-cinema.html

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம்
      தங்கள் பதிவை பார்வையிட்டேன் அருமை

      Delete
  4. சகோ..

    இந்த பெயர்ச்சொல், வினைச்சொல், பெயரை வினயாக மாற்றுவது..இதையெல்லாம் இன்னும் கொஞ்சம் புரியும் படி சொல்லி இருக்கலாமோ??? எல்லாருக்கும் இது புரியுமானு தெரியல....

    ReplyDelete
    Replies
    1. இன்ஷா அல்லாஹ் தனிப்பதிவு போடும் அளவுக்கு மிக விரிவாக சொல்ல வேண்டும்
      முடிந்தால் அதற்கு பதிவு எழுதுகிறேன்

      Delete
  5. maasha allah!

    payanulla thakavalakal!
    mikka nantri!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  6. Milavum piriyosanamana thakaval vaalthukkal

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி கவி அழகன்

      Delete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரே, நீங்கள் கொடுத்த எல்லா குறிப்புகளும் பயனுள்ளது.

    முதல் தொடர் லிங்க் வேலை செய்யவில்லை. இதோடு இந்த பாகங்கள் முடிந்து விட்டதா?

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
      வருகைக்கு நன்றி ஆமா முடிந்துவிட்டது
      முதல் லிங்க் சரிசெய்யப்பட்டு விட்டது சுட்டிகாட்டிமைக்கு ஜஸகல்லாஹ்

      Delete
  8. நல்ல ஆக்கம்,சிந்திக்க வைக்கிறது வாழ்த்துக்கள்.

    ReplyDelete