Friday, November 16, 2012

சுட்ட சொல்...!



நீ சுட்டிய சொல்லில்
சுருண்டு போனேன்.

ஒரு தீக்குச்சியின் உரசல்
வெடி மருந்து கிடங்கில்.

விரல் நீண்டது என் பக்கம்
குத்தியது உன் கண்களை

இருபக்க கூர் கொண்ட
கத்தி அச்சொல்

என் கூட படித்தவனே
என் மனதையும் படித்தவனே.

இதுவரை அப்படி
ஒரு சொல் 
சொல்லியதில்லை.நீ

யாரோ சொன்னார்களாம்
அச்சொல்லை சொல்ல

தனியாக சொல்லியிருந்தால்
தவித்து இருக்க மாட்டேன்.

பொதுவில் சொன்னயாடா
போங்க வாங்க என்று.

போலித்தனமான உலகில்
உன் போடா வாடா
என் நிஜ உலகம்
அதை கலைத்து விடாதே

23 comments:

  1. தங்கள் மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..! :-)

    //நீ சுட்டிய சொல்லில்
    சுருண்டு போனேன்.//
    //பொதுவில் சொன்னயாடா//

    சகோ, பொறுமை கொள்வீர்களாக.
    பொறுமையாளர்களுடன் இறைவன் இருக்கின்றான்..!

    ReplyDelete
    Replies
    1. ///தங்கள் மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..! :-)///

      உண்மையில் இச்சொல் மிகப் பெரிய ஆறுதல் ஜஸாக்கல்லாஹ் கைர சகோ

      Delete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரர் ஹைதர் அலி,
    பொறுமையாளர்களுடன் இறைவன் இருக்கிறான் (இன்னல்லாஹ மஹஸ் சாபிரீன்)
    இதுவும் கடந்து போகும் என்று எண்ணிக் கொள்ளுங்கள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம்

      ///பொறுமையாளர்களுடன் இறைவன் இருக்கிறான் (இன்னல்லாஹ மஹஸ் சாபிரீன்)
      இதுவும் கடந்து போகும் என்று எண்ணிக் கொள்ளுங்கள் சகோ.///

      நிச்சயமாக சகோ

      ஜஸாக்கல்லாஹ் கைர

      Delete
  3. // நீ சுட்டிய சொல்லில்
    சுருண்டு போனேன்.//

    சலாம்,

    வேண்டாம் அந்த சுருளல் . இலக்கு நோக்கிய பயணம் தொடரட்டும் !!!

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம் இலக்கை நோக்கிய பயணத்தை அல்லாஹ்வை தவிர வேறு யாரும் தடுக்க முடியாது சகோ

      வருகைக்கு ஜஸாக்கல்லாஹ் கைர

      Delete
  4. ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும்
    தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக...!!! சகோ

    பொறுமையை கையாளுங்கள் அல்லாஹ் நம்மை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.

    - ஹுசைன்

    ReplyDelete
  5. ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும்
    தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக...!!! சகோ

    பொறுமையை கையாளுங்கள் அல்லாஹ் நம்மை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.

    ஹுசைன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் மீதும் ஏக இறைவனின் சாந்த்தியும் சமாதானமும் நிலவட்டும்

      //பொறுமையை கையாளுங்கள் அல்லாஹ் நம்மை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.///

      நிச்சயமாக

      Delete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!

    உங்கள் வருத்தமும் வேதனையும் புரிகிறது. அதில் நாங்களும் பங்கு கொள்கிறோம்... உங்களை ஆறுதல்படுத்த மட்டுமல்ல, உண்மையாகவே வேதனையாக உள்ளது சகோ :( கவலைப்படாதீர்கள்! அல்லாஹ் போதுமானவன்.

    //விரல் நீண்டது என் பக்கம்
    குத்தியது உன் கண்களை//

    அழகா சொல்லியிருக்கீங்க ஹைதர் அலி! எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற சொல், செயல்கள் எப்போதும் இப்படிதான் ஆகும். அது சில நேரங்களில் வெற்றிபோல் தோன்றினாலும், பின்னாளில் திரும்பிப் பார்த்தால்தான் புரியும் அது தோல்வியென்று.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்)

      தங்களின் வருகையும் கருத்தும் மிகப் பெரும் ஆறுதல் சகோதரி

      ஜஸாக்கல்லாஹ் கைர

      Delete
  7. போடா வாடா என்ற வார்த்தைகளில் இருக்கும் இருக்கம் வாங்க போங்க வில் இல்லைதான்...

    நல்லதொரு படைப்பு...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரரே

      Delete
  8. போலித்தனமான உலகில்
    உன் போடா வாடா
    என் நிஜ உலகம்
    அதை கலைத்து விடாதே

    கரெக்டா சொன்னிங்க.

    ReplyDelete
    Replies
    1. வாங்க லஷ்மி அக்கா நலமா??

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  9. அன்னோனியம் 'போடா வாடா' - வில் தானே...!

    நல்ல பகிர்வு...
    tm10

    ReplyDelete
    Replies
    1. //அன்னோனியம் 'போடா வாடா' - வில் தானே...!///

      சரியாகச் சொன்னீர்கள்

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  10. சகோ, பொறுமை கொள்வீர்களாக.
    பொறுமையாளர்களுடன் இறைவன் இருக்கின்றான் என்றென்றும்...!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக சகோ

      ஜஸாக்கல்லாஹ் கைர

      Delete
  11. சலாம் ஹைதர் அண்ணா...

    இதுவும் கடந்துபோகும் :(

    அவரவரின் செயலுக்கு இறைவன் கூலியை கொடுப்பான்...


    ReplyDelete
  12. அடடா அழகான வரிகள். அன்பை உணர்த்தும் சில வார்த்தைகள் மாறும் போது வலிக்கவே செய்கிறது.

    ReplyDelete
  13. நீ சுட்டிய சொல்லில்
    சுருண்டு போனேன்.
    .//

    சுட்டெறிக்கும் சொல்
    சுடுவதென்னவோ உண்மை
    ஆனால்
    சுடுவதெல்லாம் நெருப்பாகாது
    சொல்வதெல்லாம் உண்மையுமாகாது

    சிலநேரங்களில் தவிர்க்கமுடியா தவிப்புகள்
    நம்மில்வந்து தொற்றில்கொள்ளத்தான் செய்யும்
    துடைத்து எரிந்துவிட்டு, தூயவனிடம் கையேந்துங்கள்
    சகலமும் சரியாகும்...

    ReplyDelete