Tuesday, December 7, 2010

யார் இந்த பக்கீர்ஷாக்கள்?

ஒட்டிய கன்னம். குழி விழுந்த கண். பச்ச தலைப்பாகை. காதில் ஒளிந்து கொண்டு எட்டிப் பார்க்கும் பீடி. கழுத்தில் பெரிய பாசி மாலை. கையில கொட்டு விரலுல கலர் கலராக பெரிய கல் பதிச்ச மோதிரம். 


இந்த கெட்டப்பும் கொல்லையில நிண்ணாக் கூட காதுல கேட்கிற மாதிரி புரியாத பாஷையில (காபாலி இசை அதாங்க A.R ரஹ்மான் பாடுவாறுல வந்தே..தே..தே இல்லாட்டி யாதும் ஊரே...ரே...ரே அப்புடியின்னு இழுப்பாறுல்ல அதுதான் காபாலி ராகம் ரஹ்மான் பாடினா மட்டும் புரியுமே) சத்தமாக பாடிக்கிட்டு அம்மா முஸாபர் வந்துருக்கம்மா அப்படியின்னு கூவுகிற குரலும் உங்கள் மனக்கண் முன் வந்து மறைகிறதாஆமா யார் இவுங்கஎங்கிருந்து வருகிறார்கள்இப்படி ஒரு கூட்டம் எப்படி உருவானார்கள்கை கால் எல்லாம் நல்லாதானே இருக்கு பின் ஏன் பிச்சை எடுத்து பொழைக்கனும்இத்தனை கேள்விகள் ஒங்க மனசுல தோன்றியிருக்கிறதா
(ஒங்களுக்கு தோணுதோ இல்லையோ நான் விளக்கி சொல்லாமவிடமாட்டேன்)


இந்த வீடியோவை பாருங்கள் எந்த பாடலின் ராகத்தினை பின்னனியாக கொண்டுள்ளது தெரிகிறதா? தெரியவில்லையென்றால் நான் எடுத்து தருகிறேன்(சாமியே அய்யப்பா அய்யப்பா சாமியே)..
        
இரண்டு நாள் குளிக்காமல் தலை வாராமல் பழைய கைலியை கட்டிக்கிட்டு திரிஞ்சா நண்பர்கள் என்னடா! பக்கீர்ஷா மாதிரி திரியுற என்று சொல்வார்களே இப்படி அசிங்கமானவர்கள் அநாகரிகமானவர்கள் என்ற வார்த்தையின் குறீயீடாக மாறிப்போன பக்கீர்ஷாக்களின் மறுபக்கம் என்ன தெரியுமா?


தியாகம், அர்ப்பணிப்பு, கொள்கைக்காக தன்னையே ஒப்புக் கொடுத்தல், இந்தியாவில் இஸ்லாத்தின் தூதை பரப்பக் கூடியப் பணி தங்களுடைய தோளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்து செயல்பட்ட சிறு கூட்டம் இவர்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் அதுதான் உண்மை!

முகலாய மன்னர்கள் இஸ்லாமிய மன்னர்கள் என்ற போர்வையில் இந்தியாவை ஆட்சி செய்த போது அவர்கள் கனவில் கூட இஸ்லாமியர்களாக நடந்துக் கொள்ளவில்லை.(ஒரு சில விதி விலக்கான மன்னர்களை தவிர) அவர்களுடைய கவனமெல்லாம் தன் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளை விரிவுப்படுத்துவது. புதிது புதிதாக உருவாகிற எதிராளிகளை எப்படி சமாளிப்பது. ஆபத்துகளிலிருந்து எப்படி தப்பிப்பது என்ற கவலையிலும் பொழுதன்னைக்கும் சண்டை போர்.போர் முடிஞ்சு அரண்மனைக்கு வந்து மனதை ரிலாக்ஸ் பண்ண  டான்ஸ், மது, மாது சிற்றின்பத்தில் திளைத்து மரத்து போனார்கள்.

இஸ்லாத்தை தானும் பின்பற்றி பிறருக்கும் எத்தி வைக்கும் பணியை மறந்து ஆட்சி அதிகார மையம் சீரழிந்து போனதால் மக்களும் இந்த காவாலிப்பயல்களிடமா மார்க்கத்தைப் பற்றி கேட்பது என்று மன்னர்களை ஒதுக்கிவிட்டு சூபிகளிடமும் ஆலிம்களிடமும் சரண் அடைய ஆரம்பித்தார்கள். இது மன்னர்களுக்கு இன்னும் கெட்டு சீரழிய வாய்ப்பாக போனதுஇதுபோன்ற கேடுகெட்ட மன்னர்களின் நடத்தையால் மார்க்கத் தலைமை வேறு அரசியல் தலைமை வேறு என்று பிரிந்தது 
(இன்றுகூட இதே நிலைதான்).


இஸ்லாமிய கஃலீபாக்கள் ஆட்சி இப்படி இருக்கவில்லை. அரசியல் தலைமை ஆன்மீக தலைமை இரண்டும் ஒன்றாக இருந்தது. கஃலீபா ஆட்சியும் நடத்துவார். இஸ்லாமிய சட்டத்தீர்ப்பும் சொல்வார். கஃலீபா தான் இமாமாக நின்று தொழுகை நடத்துவார்...


மார்க்கத்துறைக்கு பொறுப்பேற்று இருந்தஆலிம்களும்
சூபிக்களும் சரியான இஸ்லாத்தை தெரிந்திருக்கவில்லை. ஒர்
உயிர்த்துடிப்புள்ள சன்மார்க்க நெறியின் இடத்தை உணர்ச்சிகளை
மரக்கச் செய்யும் வழிபாட்டுச் சடங்குகள் பிடித்துக்கொண்டன.
அவர்கள் இஸ்லாம் பற்றிய தங்களது தெளிவற்ற மங்கலான கருத்துக்களை
கையளித்து சென்றனர்.


உண்மையில் இக்கருத்துக்கள்இஸ்லாத்திற்கு எதிரான நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களாகும்என்பதில்மாற்றுகருத்தில்லை ஆனால் அவர்களுக்கு 
எந்த கொள்கையைசரியென்று நம்பினார்களோ அன்று அவர்களுக்கு தெரிந்த 
இஸ்லாத்தை பரப்புவதற்குதன்னையே அர்ப்பணித்தார்கள். இப்பணியைத் தமக்குக் கிடைத்த சொற்ப வளத்தைக் கொண்டு குறைவான நபர்களை கொண்டும் எப்படி
இந்த கொள்கையை பரப்புவது என்று இரவுபகலாக தூக்கம் வராமல் 
யோசித்தார்கள் முடிவில் அவர்களுக்கு கிடைத்த 
மிகப்பொரும் ஆயுதம் தான் அவர்களதுசீடர்களான பக்கீர்கள்


கிடைத்த ஒரு சில அழைப்பாளர்களுக்கென்று பிரத்யோகமான 
சட்டங்களை சூபிக்கள் உருவாக்கினார்கள்(இந்த சட்டங்களுக்கும்
இஸ்லாத்திற்கும்எந்த சம்பந்தமும் இல்லை என்பது வேறு விஷயம்)

1.சூபிக்களிடம் உங்களுக்கு முழுமையாக கட்டுப்படுவேன் என்று
பையத்(சத்தியப்பிராமணம்) செய்ய வேண்டும்.

ஏனென்றால் குறைவான நபர்கள் இருந்ததால் ஒரு தலைமையின் கீழ்
கட்டுப்பட வேண்டிய தேவை இருந்தது.

2.உழைத்து சம்பாதிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டும்.

இருக்கிறதே அற்ப நபர்கள் இவர்களும் சம்பாத்தியம் வியாபரமென்று
போயிட்ட அழைப்புபணியை யார் செய்யுறது அதனால 24 மணி
நேர ஊழியர் தேவை.


3.இந்த வாழ்க்கையில் ஒரு பயணியை போல் வாழ வேண்டும்.
பயணி என்பதை நினைவில் மறக்காமல் இருப்பதற்காக தன்னை
முஸாபர் என்றே அறிமுகப்படுத்த வேண்டும்
(அரபி மொழிப்படி (முஸபர்) என்றால் பயணி ஆனால் பேச்சு வழக்கில்
பிச்சைக்காரர்களை குறிக்கும் சொல்லாக மாறியதற்கு இந்த பக்கீர்கள்
காரணம்.


4.உலக வாழ்க்கையில் மையத்(உயிரற்ற பிணம்) போல 
இருப்பேன் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும்.


இதை ஒரு சடங்காக செய்வாகள் 6அடி குழி வெட்டி அதில் உயிரோடு சில நொடிகள் புதைத்து அப்புறம் வெளியே எடுப்பார்கள் .அதாவது மெளத்தா போய் விட்டார் நடமாடுவது மையத் அதற்கு எந்த ஆச பாசமும் கிடையாது.ஒருவர் பக்கீர் ஆவது என்றால் சும்மா ஆகிவிடமுடியாது இதற்கு மேற்கூறிய நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும்.

சரி இப்ப பிரச்சாரம் பன்ன ஆட்கள் ரெடிஅவர்கள் எப்படியெல்லாம்
இருக்க வேண்டும் என்பதற்கான கொள்கை ரெடி
இனி எப்படி மக்களிடம் சென்று பிரச்சாரம் செய்வதற்கு என்ன 
வழிமுறையை தேர்ந்தெடுத்தார்கள் என்பதைஅடுத்த தொடரில் பார்ப்போம்.
(இறைவன் நாடினால்)

39 comments:

  1. அனைவரும் தெளிவு பெற உதவுவதற்கு மிக்க நன்றி...
    அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக

    ReplyDelete
  2. சகோ ஆமினா அவர்களுக்கு

    //அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக//
    ஜஸக்கல்லாஹ் கைர்
    உங்களுக்கும் இறைவன் நற்கூலி
    வழங்குவானாக

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் ஹைதர் அண்ணே வீடியோ தெரியவில்லை சரி செய்ய‌வும்

    ReplyDelete
  4. அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
    சகோ லெனின்
    வீடியோ வேலை செய்கிறது பார்க்கவும்

    ReplyDelete
  5. புதிய பல பக்கீர்ஷாக்கள் உருவாகும் முன் பழைய பக்கீர்ஷாக்களை களையெடுக்கும் முயற்சி பாரட்டத்தக்கது.

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும்,

    சகோதரர் ஹைதர் அலி,

    அல்ஹம்துலில்லாஹ்...அறிந்திராத தகவல்கள். கூடிய விரைவில் தூய இஸ்லாத்தில் இருந்து வெளியே இருப்பவர்கள் எல்லாம் சத்தியமார்க்கத்தின்பால் திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். அதற்கு நம்முடைய தாவாஹ் இன்னும் வீரியமடைய வேண்டும்.

    தொடருங்கள் உங்கள் அழகான பணியை....அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரர் ஹைதர் அலி,
    இன்றும் ஒவ்வொரு முஸ்லிம் கிராமங்களிலும் கையில் தப்பையுடன் (தப்ஸ்) அடித்துக் கொண்டு நோன்பு நாட்களில் சஹர் நேரங்களில் அவர்கள் வலம் வருவார்கள். மற்ற நாட்களில் குறிப்பாக வெள்ளிக் கிழமைகளில் அவர்களின் தரிசனத்தை நாம் காணலாம். நல்லதொரு தொடர். சூபியிசத்தை பற்றி எழுதுவதாய் ஏற்கெனவே சொல்லியிருந்தீர்கள். அனேகமாக அதன் ஆரம்ப புள்ளியாக தான் இது தொடங்குகிறது என்று நான் நினைக்கிறேன். ஆனாலும் இவர்களில் (பக்கீர்கள்) சிலர் சுதந்திர போராட்டத்தில் ஆற்றிய பங்கு அபரிதமானது. சுதந்திர செய்தியை மற்றும் சில ரகசியங்களை இவர்களின் மூலமாக சுதந்திர போராளிகள் பரிமாறிக் கொண்டனர். அதையும் உங்களது தொடரில் இனைத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஆனாலும் இவர்களிடம் உண்மையான இஸ்லாம் இல்லை என்பது தான் கவலைக்குரிய விடயம். ஆனால் இன்று மெல்ல மெல்ல இந்த நிலை மாறி வருகிறது. முன்னரெல்லாம் நிறைய நபர்கள் இவ்வாறு பக்கீர்ஷாக்களாக இருப்பார்கள். ஆனால் இப்போது அந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது. இவர்களிடத்திலும் உண்மையான இஸ்லாம் வர வேண்டும் என்று அந்த ஏக இறைவனை பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  8. அருமை.

    இது வரை யாரும் தொடாத சப்ஜக்ட்டா இருக்கு.

    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    சகோதரர் ஹைதர் அலி,
    இதுவரை யாரும் சொல்லாத விஷயங்கள். அத்தனையும் எனக்கு புதிது. இதில் 'தொடரும்' வேறா? மாஷாஅல்லாஹ்.. தொடருங்கள் உங்கள் அறிவுப்பூர்வமான அழகிய தனித்துவத்தை...!

    பக்கிர்ஷாக்களுக்கு இஸ்லாம் தெரியவில்லை. இதில் மக்களுக்கு பிரச்சாரம் வேறு செய்ய கிளம்பி விட்டார்களா அவர்கள்?

    நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்துவிடுவோம்...

    //புஹாரி- பாகம் 2, அத்தியாயம் 24, எண் 1469:

    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினதாக, அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
    ...யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்கிறானோ அவனை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான்; யார் பிறரிடம் தேவையற்றவனாக இருக்கிறானோ அல்லாஹ் அவனைத் தேவையற்றவனாக ஆக்குகிறான்.//

    ///புஹாரி-பாகம் 2, அத்தியாயம் 24, எண் 1471

    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம்; அல்லது மறுக்கவும் செய்யலாம்.” ஸுபைர் இப்னுல் அவ்வாம்(ரலி) அறிவித்தார்.///

    ////புஹாரி-பாகம் 2, அத்தியாயம் 24, எண் 1472

    ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, ‘ஹகீமே! நிச்சயமாக இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படும்; இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறவருக்கு அதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது” எனக் கூறினார்கள்.

    நான், இறைத்தூதர் அவர்களே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீது ஆணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும் வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன் எனக் கூறினேன்.////

    ReplyDelete
  10. அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
    சகோ அஹமது அஷிக் அவர்களுக்கு
    ஜஸக்கல்லாஹ் கைர்

    ReplyDelete
  11. அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
    சகோதரர்.
    பி.ஏ.ஷேக் தாவூத் அவர்களுக்கு

    //அனேகமாக அதன் ஆரம்ப புள்ளியாக தான் இது தொடங்குகிறது என்று நான் நினைக்கிறேன்//

    ஆமாம் இது ஆரம்ப புள்ளிதான் ஆனால்
    பக்கீர் தொடரை முடித்து விட்டு

    சூபிக்களின் தொற்றமும் வளர்ச்சியும்
    என்ற தலைப்பில் தொடர் எழுதலாம் என்று நினைக்கிறேன்
    மேலும் உங்களுடைய ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  12. ராஜவம்சம்
    சகோ
    ஜஸக்கல்லாஹ் கைர்

    ReplyDelete
  13. முஹம்மத் ஆஷிக்
    அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
    உங்களின் ஆதரவுக்கு நன்றி
    ஜஸக்கல்லாஹ் கைர்

    ReplyDelete
  14. பக்கீர்ஷாக்களைப் பற்றிய‌ தெளிவான அறிமுகக் கட்டுரை! கூட்டம் கூட்டமாக கிளம்பி வந்து திடுக்கிடும் சத்தத்தில் குழல் மாதிரி ஒன்றை வைத்து ஊதிய வேகத்தில், நீங்கள் சொல்வது மாதிரி புரியாத பாஷையில எதையோ கோஷமாக சொல்வதைக் கேட்டதும் பயத்தில் விழுந்தடித்து வீட்டுக்குள் ஓடுவோம் :)) (சின்ன வயதில்) அப்போதே தகப்ப‌னார், பாட்டனார் எல்லாம் வாசலில் வைத்து அவர்களுக்கு உபதேசம் பண்ணி அனுப்புவார்கள், ஆனால் ஏனென்று புரியாது எங்களுக்கு. கொஞ்சம் வளர்ந்த பிறகுதான் அவர்களைப் பற்றிய விபரம் புரிந்தது.

    அடிப்படையான தொழுகைக் கூட இல்லாமல், வசூலுக்கு பிறகு மது போதையில் மூழ்கிக் கிடப்பார்கள் என்பது தெரியும். கந்தூரி சமயங்களில் அவர்கள் நடத்தும் கூத்தும் அளவில்லாதது! இப்போது ரொம்பவே குறைந்துவிட்டாலும், உங்கள் மூலமாக நிறைய விபரங்கள் அறிந்துக் கொள்ள முடிகிறது.

    அல்லாஹ்தஆலா உங்களின் இந்தப் பணிக்கு நற்கூலி வழங்குவானாக! அனைவருக்கும் நேர்வழி கொடுப்பானாக!

    ReplyDelete
  15. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    சகோதரர்., வித்தியாசமான அதே நேரத்தில் அவசியமான பதிவு.அனேகமாக சூபிஸம் குறித்த பதிவிற்கு முன்னோட்ட பதிவாக இது இருக்கும் என நினைக்கிறேன். கைர்,எந்த ஒரு விஷயமும் மக்கள் மத்தியில் இலகுவாக சென்றடைய அவர்களோடு நேரடி தொடர்பை அவ்விசயத்துடன் ஏற்படுத்துவது அவசியம்., அப்படிப்பட்ட ஊடகமாக செயல்பட்ட இந்த பக்கீர்ஷாக்களை இஸ்லாமிய போர்வையில் தவறான சிந்தனையுடன் உலவ விட்டது தான் வேதனையான விசயம்.,
    // //ஆனால் அவர்களுக்கு எந்த கொள்கையை சரியென்று நம்பினார்களோ அன்று அவர்களுக்கு தெரிந்த இஸ்லாத்தை பரப்புவதற்கு
    தன்னையே அர்ப்பணித்தார்கள்//
    என்பதை இவ்வாக்கியங்கள் தெளிவாக எடுத்துரைக்கிறது
    தொடருங்கள் சகோதரரே ., உங்கள் உயர்வான எண்ணங்கள் எழுத்தாக மாற இறவனிடம் பிரார்த்திக்கும் ஓர் இறையின் அடிமை...

    ReplyDelete
  16. முஹம்மது ரஃபீக்.December 9, 2010 at 3:07 AM

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
    அன்புச் சகோதரர் ஹைதர் அலி, சிறு வயதில் பக்கீர்ஷக்களை பார்த்ததும் ஒரு பயம் கலந்த பார்வை இருக்கும்.. ஏன் இவர்கள் யாசித்து சாப்பிடுகிறார்கள் என்று இதுவரை யோசித்ததில்லை. இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.. நிச்சயமாக இறைவன் நாடினால் பக்கீர்ஷாக்கள் தொடர்பான அதிக விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்.. தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருக்கிறேன்.. தொடருங்கள் சகோதரரே!!

    இஸ்லாமிய சகோதரன்,
    முஹம்மது ரஃபீக்.

    ReplyDelete
  17. சகோ அஸ்மா
    அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்.

    //அல்லாஹ்தஆலா உங்களின் இந்தப் பணிக்கு நற்கூலி வழங்குவானாக!//

    ஜஸக்கல்லாஹ் கைர்

    //அனைவருக்கும் நேர்வழி கொடுப்பானாக!//
    இதுதான் நான் எனக்காகவும் பிறருக்குகாகவும் செய்கின்ற துஆ

    ReplyDelete
  18. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
    சகோதரர் G u l a m

    //அனேகமாக சூபிஸம் குறித்த பதிவிற்கு முன்னோட்ட பதிவாக இது இருக்கும் என நினைக்கிறேன்//

    ஆமாம் சூபிஸத்தைப் பற்றி ஆய்வுரிதியாக எழுதலாம் என்று இருக்கிறேன்

    ReplyDelete
  19. சகோ, இஸ்ஸதீன் ரிழ்வான்
    உங்களுடைய வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

    ReplyDelete
  20. சகோதரர், முஹம்மது ரஃபீக்.
    அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
    உங்களுடைய கருத்துக்கும் துஆக்களுக்கும் நன்றி
    ஜஸக்கல்லாஹ் கைர்

    ReplyDelete
  21. நேரமில்லை வருகிறேன்

    ReplyDelete
  22. பக்கிர் என்கின்ற இந்த கூட்டம் யார் என்பதை தெளிவு படுத்தி உள்ளீர்கள்,அருமை.

    ReplyDelete
  23. பக்கீர்சாக்கள் பற்றிய உண்மை வரலாறு எனக்குத் தெரிந்த வரையில் இப்போது தான் வெளிவந்திருக்கிறது. அதனை சுவையோடு சொல்லியிருக்கும் மட்டுமல்ல விடியோ மூலம் காட்டியிருக்கும் சகோ. ஹைதர் அலி-க்கு ஜஸாக்கல்லாஹ் கைரன்.

    உங்களிடமிருந்து சமுதாயத்திற்கு தேவையான நல்ல பல கருத்துக்களை எதிர் பார்க்கிறோம். தொடரட்டும் உங்களது பணி.

    ஆவலுடன் பக்கீர்சாவின் அடுத்த தொடரை எதிர்பார்த்து...

    அன்புடன்

    அனீஸ்

    ReplyDelete
  24. மகாதேவன்-V.K
    ///நேரமில்லை வருகிறேன்///

    என்ன நண்பரே வர்ரேனு சொல்லிட்டு போயிட்டீக

    ReplyDelete
  25. இளம் தூயவன்
    நண்பர் உங்களின் முதல் வருகைக்கு நன்றி தொடர்ந்து படியுங்கள்

    ReplyDelete
  26. அனீஸ் அண்ணே
    ///ஆவலுடன் பக்கீர்சாவின் அடுத்த தொடரை எதிர்பார்த்து...///

    இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன்
    உங்களுடைய ஆதரவுக்கு நன்றி ஜஸாக்கல்லாஹ் கைரன்

    ReplyDelete
  27. அண்ணே இப்பொழுதுதான் உங்களது வலைதளத்தை பார்வையிடுகிறேன், மிகவும் அருமையாக உள்ளது. மேலும் நமது சகோதரர்கள் ஆதரவும் அமோகமாக உள்ளது. வாழ்த்துகள்! இறைவன் நாம் அனைவருக்கும் நேர்வழி காட்டட்டும்.

    ReplyDelete
  28. அண்ணே பாரூக்
    அஹ்லன் அஹ்லன்

    உங்களுடைய முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
    ஜஸாக்கல்லாஹ் கைரன்

    ReplyDelete
  29. ASSALAMU ALIKUM 'PAKKIEERSHAKAL STORY' VERY TO MUCH NOT REALY

    ReplyDelete
  30. சகோதரர்
    ஹைதர் அவர்களுக்கு ...
    யாரும் அறிந்திடாத தகவல்கள் இந்த பக்கீர்ஷக்களை பற்றி என்னிடம் உள்ளது .... இன்னும் இவர்கள் இஸ்லாத்தில் தனி ஜாதியாக தமிழகத்தின் சில கிராமங்களில் தீண்ட தகாதவர்களாக கருதபடுகின்றார்கள் பக்கிர்சா என்ற வார்த்தை எள்ளி நகையாடும் வார்த்தையாக அங்கு கருதபடுகிறது ....
    அவர்களின் வாழ்க்கை முறை மாறி அவர்களாகவே மாற்றிகொண்டாலும் அவர்கள் அங்கு இஸ்லாத்தின் தலித்துகள் ....
    ஜாதி இல்லாத துய இஸ்லாத்தில் இந்த காடையர்களின் ஊர்களில் பக்கிர்சாகள் கேவலமானவர்கள்
    இன்னும் விவரம் வேண்டுமாயின் தர நான் தயார்....

    ReplyDelete
  31. அலைக்கும் வஸ்ஸலாம்
    சகோ பெயரில்லா

    ///'PAKKIEERSHAKAL STORY' VERY TO MUCH NOT REALY///
    இப்படி ஒரு வரியில் தங்கள் மறுப்பதைவிட எந்த இடத்தில் எப்படி மிகைப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது என்று சொன்னீர்கள் ஏன்றால் நன்றாக இருக்கும் (தவறு இருந்தால்)நானும் திருத்திக் கொள்ள வாய்ப்பாக இருக்கும்

    முயற்சி செய்யுங்கள்

    உங்களுடைய வருகைக்கும் மற்றுக் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  32. சகோதரர்
    சேக் அவர்களுக்கு...

    ///யாரும் அறிந்திடாத தகவல்கள் இந்த பக்கீர்ஷக்களை பற்றி என்னிடம் உள்ளது .... இன்னும் இவர்கள் இஸ்லாத்தில் தனி ஜாதியாக தமிழகத்தின் சில கிராமங்களில் தீண்ட தகாதவர்களாக கருதபடுகின்றார்கள் பக்கிர்சா என்ற வார்த்தை எள்ளி நகையாடும் வார்த்தையாக அங்கு கருதபடுகிறது ....
    அவர்களின் வாழ்க்கை முறை மாறி அவர்களாகவே மாற்றிகொண்டாலும் அவர்கள் அங்கு இஸ்லாத்தின் தலித்துகள் ....
    ஜாதி இல்லாத துய இஸ்லாத்தில் இந்த காடையர்களின் ஊர்களில் பக்கிர்சாகள் கேவலமானவர்கள்
    இன்னும் விவரம் வேண்டுமாயின் தர நான் தயார்....//

    உண்மையில் உங்களைப் போன்றவர்களைத்தான் நான் பெரிதும் எதிர்ப் பார்த்தேன்
    தயவு செய்து உங்களுக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

    பின்னூட்டமாக அல்லது என்னுடைய ஈமெயில் ஐடி rriyasali15@gmail.com
    மடலாகவும் எழுதுங்கள் காத்திருக்கிறேன்
    அதன்பிறகு உங்களின் கருத்துக்களுக்கு
    கண்டிப்பாக பதில் சொல்லுகிறேன்

    ReplyDelete
  33. அருமையான ஆய்வு கட்டுரய் மென் மேலும் வருவற்கு அல்லாவிடம் துவா
    செய்கிறேன்

    ReplyDelete
  34. abumina அவர்களுக்கு

    உங்களின் முதல் வருகைக்கும் துஆவுக்கும் நன்றிகள் பல

    ReplyDelete
  35. ASSALAMU-ALAIKUM

    Dear brother in Islam

    Compared to your first 'RELEASE' this is a very 'UNCOMMON' BUT an IMPORTANT SUBJECT which every Muslim/Non-Muslim should be aware of as many of us don't know the exact history of the Fakirs.

    MASHA-ALLAH - presentation style is different - casual way which appeals the readers. It's as if you are chatting with us!

    Encouraging you to write more & serve the community in future INSHA ALLAH. May Allah make it easy for you - Ameen.

    May Allah guide us all - Ameen.

    ReplyDelete
  36. அண்ணன் muzammil shafi சொன்னதை தமிழில் முன்மொழிகிரேன்

    ReplyDelete
  37. சகோ முஸாம்பில் அவர்களுக்கு
    உங்களுடைய கருத்துக்களுக்கும் துவா வுக்கும் நன்றி
    இறைவன் நம்முடைய பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள்வானாக

    அல்ஹம்துலில்லாஹ்
    துவா செய்யக்கூடிய சகோதரர்கள் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி

    ReplyDelete
  38. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    சகோ muhammed Anees

    நமது சகோதர ஒற்றுமையை அல்லாஹ் பலப்படுத்தி உறுதியாக்கி சகோதர வாஞ்சையோடு வாழக் கூடிய சகோதரர்களாக இறைவன் வாழச் செய்வானாக

    ReplyDelete
  39. இதையெல்லாம் படிக்கும் போது சிறு வயதில் ஊரில் இந்த சம்பவங்களை பார்த்த நினைவுகள் மலர்கிறது.... :) தொடரட்டும் அதிரடி....

    ReplyDelete