Wednesday, September 28, 2011

(சிறுகதை)நிஜத்தைத் தரிசிக்கும் போது...



இரவு 11 மணி.

சாலையில் ஓர் வாடகை டாக்ஸி வேகமாகச் சென்று கொண்டிருந்தது.

ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி,  ‘டாக்ஸி’ என கையசைத்து நிறுத்தினார்.

தம்பி ஆஸ்பத்திரி போகனும்.

நான் சாப்பிட்டுட்டு, படுக்கப் போற நேரம்.

என் மகளுக்கு பிரசவ நேரம்பா, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா’ என்றார் அப்பெண்மணி.

நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும்’என்றான் அந்த டாக்ஸி ஓட்டும் இளைஞன்.

அப்பெண்மணி 500 ரூபா என்ன 1000 ரூபாய் கேட்டால் கூட தர சம்மதம் என்பதுபோல் வேகவேகமாக தலையாட்டி சம்மதிக்க, டாக்ஸி அவர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தது.

டாக்ஸி ரெயில்வே கேட்டை நெருங்கவும், எச்சரிக்கை மணி ஒலிக்க கேட் மூடப்பட்டது.

அக்கர்ப்பினியின் முனகல் சற்று அலறலாக மாறியது. நல்ல வேளை அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லை.

இரண்டு ரயில் வண்டிகள் எதிர் எதிர் திசையில் கடக்க, பத்து நிமிடத்தில் கேட் திறந்தது.

இப்போது டாக்ஸி இன்னும் சற்று வேகமாக ஓடி மருத்துவமனையில் நின்றது.

நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்தது அப்பிரசவத் தாயின் அலறல். மூடிய விழிகளில் நீர் மல்க, அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கைகளைக் கூப்பி மகளுக்காக இறைவனிடம் வேண்டினாள்.

அந்த டாக்ஸி இளைஞனும் அமைதியாக அங்கே நின்றிருந்தான்.

சற்று நேரத்தில் சுகப் பிரசவம்.

‘தம்பி! ரொம்ப நன்றிப்பா. இந்தா நீ கேட்ட பணம்’ என பணத்தை நீட்டினாள் அப்பெண்மணி.

‘வேனம்மா எங்கம்மா என்னைப் பெற எவ்வளவு வேதனைப் பட்டிருபாங்கன்னு கடவுள் எனக்குப் புரிய வைச்சிருச்சு. பணத்தை நீங்களே வையிங்க. என்று சொன்னபடி நடக்க ஆரம்பித்தான். எதோ யோசிக்க மொபைலை எடுத்து ஒரு நம்பரை கண்டுபிடித்து டயல் பன்னினான்.

ஹலோ முதியோர் இல்லமா?

ஆமா என்ன இந்த நேரத்துல போன் பன்னுறீங்கே?

மன்னிக்கவும் நாளு நாளைக்கி முன்னாடி அனதைன்னு சொல்லிட்டு ஒருத்தவங்கள உங்க இல்லத்துல சேர்த்தேன் இல்லையா? அவுங்க அனாதை இல்லை என்ன பெத்த தாய். நாளைக்கு காலையிலே வர்றேன் அவுங்கள கூட்டிட்டு போக. முதியோர் இல்ல பொறுப்பளரின் அனுமதியைக் கூட கேட்காமல் மொபைலை கட் பன்னிவிட்டு வண்டியை தீர்க்கமான முடிவோடு ஸ்டார்ட் செய்தான்.

ஆம்! நிஜத்தை தரிசிக்கும் ஒவ்வொரு இதயமும்... ஒரு மனிதனைப் பிரசவிக்கிறது.

22 comments:

  1. மிக அருமை. நன்றி .பெற்றோரின் அருமை தெரியாமல் நம்மில் பலர் இதே தவறை செய்கின்றனர். இப்பதிவைப் பார்த்தாவது அவர்கள் திருந்தட்டும்.

    ReplyDelete
  2. சட்டுன்னு முடிச்சிட்ட மாதிரி இருக்கு. இருந்தாலும் நல்லா எழுதியிருக்கீங்க பாய். Keep it up!!!!

    ReplyDelete
  3. கதையே இல்ல நேர்ல.நடந்தத பார்த்த மாதிரியே இருக்கு சூப்பர்.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

    சிறியதாக இருந்தாலும் நெகிழ்ச்சியான கதை. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. //
    ஆம்! நிஜத்தை தரிசிக்கும் ஒவ்வொரு இதயமும்... ஒரு மனிதனைப் பிரசவிக்கிறது.
    //

    அருமையான வரிகள்

    ReplyDelete
  6. சிறுகதை செப்பிய விதம் அருமை, நெஞ்சைத் தொட்டது.

    // நிஜத்தை தரிசிக்கும் ஒவ்வொரு இதயமும்...
    ஒரு மனிதனைப் பிரசவிக்கிறது// இதுவும் சூப்பர் சகோ

    ReplyDelete
  7. @அன்னு

    குட்டிகதையாக இருக்கனும் ஆனால் ஒரு பெரிய விஷயத்தை அது தாங்கி இருக்கனும் என்று சிந்தித்து தான் இப்படி எழுதினேன்.

    முதல் முயற்சி
    ஆதர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  8. @suryajeeva

    என்ன நண்பரே ஹைக்கூ கவிதை மாதிரி பல பொருள் பட என்னை விட ஷாட்ட பின்னூட்டத்தை முடித்து இருக்கிறீர்கள்

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  9. @ஜின்னா

    உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  10. @Abdul Basith

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.

    நன்றி சகோ

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்........

    ஆஹா...........

    அழகான கருவை சுமந்த கதை

    ஒவ்வொரு வரி முடிக்கும் போதும் அடுத்து என்ன சீன் என வேக வேகமாக படிக்க தூண்டிவிடும் காட்சியமைப்புகள்...

    வாழ்த்துக்கள் அண்ணா

    தொடருங்கள் இத்திறமையை.....

    ReplyDelete
  12. நிஜமாவே சிறிய கதையில் பெரிய கருத்தை வைத்துவிட்டீர்கள். கதையைப் படிக்க ஆரம்பிக்கும்போது இருந்த விறுவிறுப்பு குறையும் முன்பே கதையை முடித்த விதமும் புதுசா இருக்கு :)

    ReplyDelete
  13. உண்மையில் சில சம்பவங்களை நேரில் உணர்ந்தால் தான் மனசாட்சி சரியாக இயங்க ஆரம்பிக்கும்... உணரவும் மனம் வேண்டும்... அருமை வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  14. @ஆமினா

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    //வாழ்த்துக்கள் அண்ணா//
    நன்றி தங்கை

    //தொடருங்கள் இத்திறமையை.....//

    தொடர்கிறேன் சகோ

    ReplyDelete
  15. @enrenrum16

    வாங்க சகோ ரொம்ப நாளா ஆளையே பார்க்க முடியவில்லை பிஸியா?

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  16. @மாய உலகம்

    வாங்க சகோ.

    ///உணரவும் மனம் வேண்டும்...///

    ஆமா சகோ மனம் மரத்து போனவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் நன்றி சகோ

    ReplyDelete
  17. அருமையான கதை..
    கடைசி மனதை கலங்க வைத்தது...
    நல்லாயிருக்கு எழுத்தோட்டம் நிஜமான கதைபோல இருந்தது...
    அன்புடன் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  18. இன்றைய சூழலில் மனிதம் மரித்துப் போனதை அழகாக படம் பிடித்து ஒருவர் திருந்து வதற்க்கான நல்ல வாய்ப்புகளை இங்கிருந்தே எடுத்து வழங்கி இருக்கிறீர்கள் பாராட்டுகள் .

    ReplyDelete
  19. மனித சமூகத்திற்கு தேவையான ஒருகதையை சுவைபட எழுதியிருக்கிறீர்கள். நல்ல மனிதர்கள் பிறப்பதே இன்றைய தேவை. உங்கள் கதையை என் வலைச்சரத்தில் கோர்த்துள்ளேன். மிக்க நன்றி.

    கீழிருக்கும் link வலைச்சரத்தில் உங்கள் கதையை நான் பகிர்ந்த இடுகை.

    http://blogintamil.blogspot.com/2011/12/gigo-theory.html

    ReplyDelete