Tuesday, October 4, 2011

சவூதி வரை வந்த சாதீயம்

நண்பர் பாலமுருகன் பரமக்குடி பக்கத்தில் இருக்கிற தலித் கிராமத்தைச் சேர்ந்தவர் எனக்கு பக்கத்து ஊர்க்காரர். இங்கு சவூதியில் ஒரு கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கிறார். மாதம் இந்திய மதிப்பிற்கு 40000 சம்பளம் வாங்குகிறார்.

இன்னும் அதே ஊரைச் சார்ந்த நண்பர்கள் அனைவரும் ஒரே ரூமில் பத்தாஹ் என்கிற ஏரியாவில் இருக்கிறார்கள் வெள்ளிக்கிழமை விடுமுறைக்கு முதல் நாள் வியாழன் இரவே அவர்களின் ரூமிற்கு சென்று தங்கி இருந்து விட்டு வெள்ளிகிழமை மாலைதான் என் ரூமிற்கு வருவது வழக்கம். 

நண்பர் வருடா வருடம் சித்திரை மாதம் ஊருக்கு வருவார். எனக்கு ஆரம்பத்தில் முதல் வருடம் அவர் ஊருக்கு சித்திரை மாதம் போகும்போதே சந்தேகம். என்ன சித்திரை மாதம் யாரவது ஊருக்கு விடுமுறையில் போவார்களா? மண்டையை பிளக்கிற வெயில் அதுவுமில்லாமா அடிக்கடி கரண்ட் கட் ஆகும் ஏன் இந்த மாதம் கம்பெனியில் விடுமுறை வாங்கிட்டு போகிறார் என்ற கேள்வி புரியாத புதிராக இருந்தது.

அடுத்த ஆண்டுகளில் கொஞ்சம் நெருங்கி பழகிய பிறகு இதை அவரிடமே நேரடியாக கேட்டு விட்டேன். ஏங்க சித்திரை மாசம் ஊருக்கு போறீங்கே மண்டை பிளக்கிற கத்திரி வெயிலு. கரண்ட் வேற புடுங்கிருவாய்ங்க. இரவு நேரத்தில் கசகசன்னு வேர்க்கும். ஏன் ஒரு நாலு மாதம் கழித்து மழை காலத்துல போனால் என்ன? 

நண்பர் சொன்ன பதில் சித்திரை திருவிழாவுக்கு ஊருல இருக்கனும்.
அப்ப சரிதான் திருவிழாவுக்கு எல்லா நண்பர்களும், உறவினர்களும் வருவாங்க சந்திக்கலாம் அதைவிட ஆத்துல எறங்கிற ஆழகர் சாமியை தரிசிக்கலாம் (நண்பருக்கு தெய்வ பக்தி அதிகம் என்று மனதில் நினைத்துக் கொண்டே) என்பதற்காகத்தனே ஊருக்கு போறீங்க? சரிதான் அதற்காக கரண்ட் கட்டு, வெயில் இதையெல்லாம் பொறுத்துகிறலாம் என்று சொன்ன போது.

நண்பர் அதற்கு அளித்த பதில் ஒரு நிமிடம் என்னை அதிர்ச்சியடைய வைத்தது என்னங்க சொல்றீங்க? உண்மையாகவா? 


ஆமா ஹைதரு நான் பறையர் சாதியை சேர்ந்தவன் என்பதால் நான் தான் சாமி ஆத்துல எறங்கும் போது கொட்டடிக்கனும், ஏன் அதுக்கு ஊரில் ஆள் இல்லையான்னா? இருக்காங்க ஆனா எங்க ஊரைச் சேர்ந்த மூக்குலத்தோர்(கள்ளர்,தேவர்,மறவர்) ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள் ஆத்துல கள்ளழகராக வேடம் போட்டு ஆத்துல எறங்கும் போது அந்த ஊரைச் சேர்ந்த நாங்கள் தான் பரம்பரை பரம்பரையாக கொட்டடித்துக் கிட்டு போவது வழக்கம். அப்பாவுக்கு வயசாகி விட்டது முடியாது.



சவூதிக்கு விசா கிடைத்தவுடன் ஊரிலுள்ள ஆதிக்க சாதீக்காரர்கள் வீட்டிற்கு வந்து பிரச்சனை பன்னினார்கள், ஏண்டா எல்லா பறபயலும் துபாயி, சிங்கப்பூரு, சவூதின்னு போயிட்டா எவண்டா இங்கே கொட்டு அடிப்பாய்ங்க?
என்று சவுண்ட் விட்ட அவர்களிடம். ஐயா தம்பிக்கு வருடா வருடம் லீவுல திருவிழா மாசத்துல ஊருக்கு கொட்டடிக்க வந்துரும். அனுமதி கொடுங்கய்யா என்று கேட்ட பிறகு டேய் வருஷமானா திருவிழாவுக்கு கரெக்டா வந்துரனும் சரியா? என்ற மிரட்டி அவர்கள் வழிவிட்ட பிறகு தான் நான் சவூதி வர முடிந்தது என்றார்.

சரி உங்க வீட்டுக்கு எதாவது சமான் வாங்கி கொடுத்து விடுறீங்கலா பெட்டி கட்ட போறேன் என்று கிளம்பி விட்டார். என் பசங்களுக்கு விளையாட்டு சாமான்கள் வாங்கி கொடுத்து விட்டேன் இப்படி என் மகனுக்கும் அறிமுகமாகி விட்டார்.


  
இந்த வீடியோவை பாருங்கள்

அடுத்த வருடம் அதே சித்திரை மாதத்தில் நான் ஊருக்கு போக வேண்டிய அவசர சூழல் இப்ப இரண்டு பேரும் ஒன்றாக பயணம். சவூதியிலிருந்து இலங்கை இலங்கையிலிருந்து திருச்சி ஏர்போர்ட். ST  வேன் சர்வீஸில் புக் பன்னி விட்டதால் அவர்களே ஏர்போர்ட்டிலிருந்து வீடு வரை கொண்டு விட்டு விடுவார்கள் எனது ஊர் வருவதற்கு முன்பாக நண்பரின் கிராமம். நண்பர் எழுந்து இன் பன்னியிருந்த சட்டையையும் பேண்டையும் கழட்டி கைலிக்கு மாறினார். ஏங்க ஊரு வந்தவுடன் கைலிக்கு மாறுறீங்க? ஆமா பேண்ட் போட்டுகிட்டு போனா உயர்ஜாதிக்காரவுங்க முறைத்துப் பார்ப்பார்கள்.

அடப்பாவிகளா தலையில் அடித்துக் கொண்டேன் வண்டி நின்றது உள்ளே ஒத்தையடி பாதை அதனால் வண்டி போகாது தலையில் சூட்கேஸை தூக்கி வைத்துக்கிட்டு நடக்க ஆரம்பித்தார் சரி நாளைக்கு பார்ப்போம் என்று சொல்லி விட்டு நான் ஊருக்கு வந்து விட்டேன். நாளை என்று சொன்னனே தவிர அவரைப் பார்க்க நேரம் கிடைக்கவில்லை.

பரமக்குடி ஆத்துல சித்திரை திருவிழா நான் குடும்பத்தோடு போயிருந்தேன். பெரிய ராட்டினம், மரணகினறு, பாம்புப்பெண், போன்ற பொழுதுபோக்கு கட்டண அரங்குகளும், நிறைய ஸ்டால் கடை போட்டு இருப்பார்கள் ஊருக்கு போய் இருக்கும் போது பசங்கள கூட்டிட்டு போகாட்டி அவ்வளவுதான்! அதுவுமில்லாம என் மனைவி ஒவ்வொரு ஸ்டால் கடையா கையை காட்டி எனக்கு அது வாங்கி தா இது வாங்கி தா என்று சின்னபுள்ள மாதிரி கேட்டு வாங்குவதை எப்பூடி மிஸ் பன்ன முடியும்.


இப்புடி வாங்கிட்டு, சுத்தி பாத்துகிட்டு இருக்கும் போது என் மகன் சின்னவன் அத்தா அத்தா அங்கே பாருங்க என்று கையை பிடித்து இழுத்தான். என்னடா 
சொல்லு அந்த அங்கே கொட்டடிச்சுக் கிட்டு போறரே அவர் நம்ம பாலமுருகன் அங்கிள் தானே டாய்ஸ் கொண்டு வந்து கொடுத்தாரே அவர் தானே அவன் கைகாட்டிய திசையில் பார்த்தேன்.

 ஆமா பலமுருகன் சவூதியில் அழகான கலரில் பேண்ட் சார்ட் போட்டு அதை இன் பன்னி வருவார் அவ்வளவு அழகாக அங்கு இருப்பவர். இப்ப பழைய அழுக்கு வெட்டியே தூக்கி கட்டிகிட்டு அது நழுவிடாம இருக்க முதலை மார்க் நாலு இஞ்சி அகல பச்சை கலர்ல பெல்ட்டு கட்டிகிட்டு. உடம்பில் சட்டை இல்லாமல் காலில் செருப்பு இல்லாமல் தோளில் கொட்டோடு இணைக்கப்பட்ட வாரை மாட்டிகிட்டு. கள்ளழகர் வேடம் போட்ட ஆதிக்க சாதிகாரவுங்க பின்னாடி மூர்க்கமாக கொட்டடித்துக் கொண்டே போயிகிட்டு இருந்தார்.

மறுபடியும் என் மகன் அத்தா அது பாலமுருகன் அங்கிள் தானே? என்று கேட்டு இயல்புக்கு கொண்டு வந்தான். இல்லப்பா அவரு வீட்டுக்கு உனக்கு டாய்ஸ் கொண்டு வந்தருலே அப்ப இப்புடியா டிரஸ் போட்டு இருந்தாரு அவரு ஜீன்ஸ் டீசார்ட் போட்டு இருந்தார்ல இந்த அங்கிள் கிட்ட அதுலாம் இல்ல பாரு அவரு இல்ல இவரு என்றேன்.



டிஸ்கி

எனக்கு பலதரப்பட்ட நண்பர்கள் அதிகம் ஒவ்வொரு நண்பனின் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது அதனால் தான் தவிர்க்க முடியாமல் என்னைப் பற்றியும் என் நண்பர்களையும் அவர்களின் அனுமதியோடு எழுத வேண்டியது இருக்கிறது இவர்களை மையப்படுத்தி இந்த சமூகத்தின் மனசாட்சியை கேள்வி கேட்க வேண்டி இருக்கிறது. மற்றபடி இது புனைவோ, சுயசொறிதலோ அல்ல.  

57 comments:

  1. nalla pathivu,
    thotarattum ungkal pathivu

    ReplyDelete
  2. முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்October 5, 2011 at 12:46 AM

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹைதர் அண்ணே பரமக்குடி துப்பாக்கிச்சூட்டை மையமாக வைத்து எழுதப்பட்ட பதிவாக இருக்குமோ என்று நினைத்து படிக்க தொடங்கினேன்.ஆனால் நீங்கள் சகோ பாலமுருகனின் அறியாமையை எண்ணி மனம் நொந்துபோய் எழுதப்பட்ட பதிவென்பதை புரிந்துகொண்டேன்.இன்னும் பாலமுருகன் போன்ற எத்தணையோ சகோதரர்கள் இப்படி இருக்கத்தான் செய்கின்றார்கள்.சமத்துவ பாதையாகிய இஸ்லாத்திற்க்காக அவர்களுடைய உள்ளத்தை விரிவடைய செய்ய அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  3. நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்..

    "எல்லா மனிதர்களும் ஆதாம், ஏவாள்லிருந்தே வந்தனர். ஒரு அரபி, அரபி அல்லாதவரை காட்டிலும் உயர்ந்தவரல்ல. அதுபோலவே ஒரு அரபி அல்லாதவர், அரபியரை விட உயர்ந்தவரல்ல. மேலும், வெள்ளையர் கருப்பரை விடவோ அல்லது கறுப்பர் வெள்ளையரை விடவோ உயர்ந்தவரல்ல" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தன்னுடைய இறுதி பேருரையில்..

    இதை தவிர சொல்லுவதற்கு வேறொன்றுமில்லை.

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  4. இப்போஎல்லாம் எங்கே இருக்கு சாதி என்று அப்பாவிபோல நடிக்கிற அறிவாளிகளுக்கு இது தெரியுமா ?

    ReplyDelete
  5. உண்மை எதையும் மறைக்காமல் உரைத்த பாலமுருகன் பாராட்டுக்குரியவர்.

    ReplyDelete
  6. அபு ஃபைஜுல்October 5, 2011 at 4:33 AM

    அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி பரக்காதஹூ.
    சகோ: ஹைதர் அலி. நாம் பிறமத சகோதரர்களிடம் இரண்டு நிலைகளை கடைபிடிக்கின்றோன். ஒன்று அவர்கலோடு அவர்கலாக ஒன்றற கலந்து விடுகிறோம் அல்லது அவர்கள் யாரோ நாம் யாரோ என்பது போல் இருந்து விடுகிறோம் இது இரண்டுமே ஆபத்து என்பதை விளங்குவதில்லை.(உங்களை அப்படி என்னவிலை) உங்கள் மகன் பாலமுருகன் மாமாவா? என்று கேட்டதிற்கு, நானா இருந்திருந்தால் ஆம் என்று சொல்லி இருப்பேன், ஏன் இந்த நிலை என்பதை அவனுக்கு புரியவத்திருப்பேன்,அவன் மொழியில். ஆயிரம் காரணம் சொன்னாலும் இதுபோன்ற திருவிழாவுக்கு போகின்றது தவரே.

    ReplyDelete
  7. அபு ஃபைஜுல்October 5, 2011 at 4:36 AM

    @VANJOOR

    அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி பரகாதஹூ.
    ஏன் மாறாது வாஞ்ஜுரார். நீங்கள் என்ன ஜாதி சொல்லமுடியுமா?
    மாற்றம் வேண்டுமா ? ஓ மனிதர்களே என்று கூப்பிடும் மார்க்கம்மான
    இஸ்லாம் பக்கம் ஓடி வாருங்கள்.ஒரு ஆண், ஒரு பெண். இருவரில் இருந்து படைக்கப்பட்டது தான் இந்த உலம் என்று சொல்லி, உலக மக்கள் அனைவரும் சகோதரர்களே என்று சொல்லும். தூய இஸ்லாத்தை உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொள்ளுங்கள் இன இழிவு மாறும். இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
  8. @~முஹம்மத் ஆஷிக்_citizen of world~

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    நீக்கி விட்டேன் இனி கவனமாக இருக்கிறேன் நன்றி

    ReplyDelete
  9. என்ன கொடும இது??? :-((((

    நானும் ரியாத் தான். முடிந்தால் மடல் அனுப்புங்கள் kvraja [at] gmail [dot] com

    ReplyDelete
  10. @அபு ஃபைஜுல் கூறியது...

    // @VANJOOR

    அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி பரகாதஹூ.
    ஏன் மாறாது வாஞ்ஜுரார். நீங்கள் என்ன ஜாதி சொல்லமுடியுமா?
    மாற்றம் வேண்டுமா ? ஓ மனிதர்களே என்று கூப்பிடும் மார்க்கம்மான
    இஸ்லாம் பக்கம் ஓடி வாருங்கள்.ஒரு ஆண், ஒரு பெண். இருவரில் இருந்து படைக்கப்பட்டது தான் இந்த உலம் என்று சொல்லி, உலக மக்கள் அனைவரும் சகோதரர்களே என்று சொல்லும். தூய இஸ்லாத்தை உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொள்ளுங்கள் இன இழிவு மாறும். இன்ஷா அல்லாஹ்.//

    அன்பின் அபு ஃபைஜுல்.

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்..

    நான் குறிப்பிடிருந்த சுட்டியை சொடிக்கி கட்டுரையை படித்திருக்க வேண்டாமா?

    "click and read" என குறிப்பிட்டுள்ளதை காண தவறிவிட்டீர்கள்.



    தாழ்த்தப்பட்ட மக்களின் இன இழிவு நீங்கி ஜாதிகள் ஒழிந்து மீண்டும் தமிழக மக்கள் ஒருதாய் மக்களாக ஆக வேண்டுமென்றால்

    அதற்குறிய ஒரே வழி அது அவர்களின் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற ஆதி மார்க்கமான சாந்தி வழியை இஸ்லாத்தைத் தழுவுவது மட்டுமே ஒரே வழியாகும்.

    இன இழிவு நீங்க இதல்லாத வேறு வழியே இல்லை.


    =============================
    சுட்டியை சொடுக்கி படிக்கவும்

    >>>>>>> ஏழு தலைமுறை என்ன? எழுபது தலை முறை ஆனாலும் இன இழிவு நீங்காது <<<<<<<<

    For more articles
    சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

    >>>> வாஞ்ஜுர்


    .

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    மனதை கனக்க வைத்த பதிவு சகோ....

    வெயிலின் தாக்கத்தை இரவில் அடையாமல் இருக்க முழு பௌர்ணமி அன்று கட்டு சோறு கட்டி க்கொண்டு போக ஏற்படுத்தப்ப்பட்ட அனைவருகும் பொதுவான சித்ரா பௌர்ணமி திருவிழாவில் இத்தகைய சாதி வெறியும் அடங்கியிருக்கா??? கொடுமை கொடுமை

    நாற்பதாயிரம் சம்பளம் வாங்கும் அளவுக்கு அவரின் வாழ்க்கை தரம் உயர்ந்திருந்தும் ஊரில் தன் குடும்பம் எந்த தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக வாழ தன் தன்மானம்,சுயமரியாதை இழந்து வாழும் அந்த சகோவின் நிலை மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம்

    ReplyDelete
  12. என்ன கொடுமை இது? கல்வி ஒரு மனிஷனோட நிலையை உயர்த்தும்னு பார்த்த, என்ன படிச்சாலும் ஜாதி விடாது போல :(

    ReplyDelete
  13. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

    இந்த பதிவு ரொம்பவும் வருத்தத்துக்கு உரியது சகோதரரே. ஆனாலும் மையக் கருத்தை விடுத்து நம் மதத்துக்கு வந்து சேர் என்று சொல்லுவதா இந்த கட்டுரையின் நோக்கம். மாற்று மதத்தார் நம்மை மேலும் வசை பாட வைக்க நாமே இடம் கொடுப்பது நல்லதா ? இழிவை சுட்டிக் காட்டுவோம் தட்டிக் கேட்போம். அந்த தோழருக்கு தோள் கொடுப்போம். ஆனால் என் மதத்துக்குள் வந்துவிடு என்று ஆசைக் காட்டுவது ஏமாற்றுவது இல்லையா ? நபிகள் அப்படி எங்காகிலும் நமக்கு கட்டளை இட்டிருக்கிறாரா ? மதத்தைக் காட்டிலும் மனிதம் பேணும் நம் மதத்தில் சிலர் இப்படி செய்வதால் தானே நிறைய கெட்ட பேர் சம்பாதிக்கிறோம்.

    இன்ஷா அல்லா...
    அவர்களும் மாற்று மத சாதி வெறியர்களும் மனம் திருந்த துஆ செய்கிறேன்.

    ReplyDelete
  14. அவரை இஸ்லாத்தை எத்தி வையுங்கள் ...அல்லா அவர்க்கு ஈமானை கொடுக்க தூவா செய்வோம் ..

    மறுமை சிந்தனை மட்டும் தான் இதற்கு தீர்வு

    ReplyDelete
  15. @அபு ஃபைஜுல்அதற்குறிய ஒரே வழி அது அவர்களின் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற ஆதி மார்க்கமான சாந்தி வழியை இஸ்லாத்தைத் தழுவுவது மட்டுமே ஒரே வழியாகும்.
    # அப்ப ஏன் பாகிஸ்தானில் தினமும் ஷியா மக்கள் கொல்லபடுகிரார்கள். கேட்டவர்கள் எங்கேயும் கெட்டவர்களே

    ReplyDelete
    Replies
    1. பாக்கிஸ்தானில் சியாக்களை விட சன்னிக்கலே அதிகம் கொல்லப்படுகிரார்கள் அதற்கு காரணம் சாதி வெறி கிடையாது அங்கு நடக்கக்கூடிய அரசியல் குழப்பமே இத்தகைய கொலைகளுக்கு காரணம்

      Delete
  16. Castism is terrible. I was shocked to read this post.
    Thanks for sharing.

    ReplyDelete
  17. ஸலாம் சகோ.ஹைதர் அலி..!

    சாதியம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று.
    அதில் மாற்றுக்கருத்து இல்லை.

    அதனை அடியோடு ஒழிப்பது பற்றிய எனது பதிவு...


    "நம்மிடையே நிலவும் சாதியை ஒழிக்க என்னதான் தீர்வு..?"


    இங்கே மிக நல்லதொரு பதிவை தந்திருக்கிறீர்கள் சகோ.ஹைதர் அலி. மிக்க நன்றி.

    ஆனால், ஒரே ஒரு குறை...

    //பரமக்குடி ஆத்துல சித்திரை திருவிழா நான் குடும்பத்தோடு போயிருந்தேன். பெரிய ராட்டினம், மரணகினறு, பாம்புப்பெண், போன்ற பொழுதுபோக்கு கட்டண அரங்குகளும், நிறைய ஸ்டால் கடை போட்டு இருப்பார்கள் ஊருக்கு போய் இருக்கும் போது பசங்கள கூட்டிட்டு போகாட்டி அவ்வளவுதான்! அதுவுமில்லாம என் மனைவி ஒவ்வொரு ஸ்டால் கடையா கையை காட்டி எனக்கு அது வாங்கி தா இது வாங்கி தா என்று சின்னபுள்ள மாதிரி கேட்டு வாங்குவதை எப்பூடி மிஸ் பன்ன முடியும்.//

    ஆக, சாதி ஒழிக்கப்பட வேண்டியது எனில், சாதியத்தை காக்க நடைபெறும் அனைத்து முயற்சிகளும் ஒழிக்கப்பட வேண்டியதுதான்..!

    நீங்கள் இந்த விழாவிற்கு போகாமல் புறக்கணித்திருக்க வேண்டும்.

    ஏனெனில்,

    புறக்கணிக்க வேண்டிய சமூக தீமைகள் ஆன... சித்திரை திருவிழா போன்ற பொழுதுபோக்கு, விளையாட்டு, கடைத்தெரு விஷயங்கள் அடங்கிய கந்தூரி, சந்தனக்கூடு, கொடியேத்தம் போன்ற எந்த தர்ஹா விழாவிற்காவது போவீகளா என்ன..?

    அப்புறம் இதற்கு மட்டும் எதற்கு சப்பைக்கட்டு காரணம்..?

    நீங்கள் இந்த விழாவிற்கு சென்றது தவறு சகோ.ஹைதர் அலி..!

    அப்புறம்... வேண்டுகோளுக்கு இணங்க அந்த வரியை நீக்கியதற்கு நன்றி சகோ.ஹைதர் அலி. ஜசாக்கலாஹ் க்ஹய்ர்.

    ReplyDelete
  18. பதிவரின் அவதானிப்பு தமிழகத்தின் கண்டிக்கவேண்டிய இழிநிலையின் குறுக்குவெட்டைச் சுட்டும் கீற்று. அதே நேரத்திலே பின்னூட்டமிட்டிருக்கும் சிலரின் - எம் வழி அல்லது வழியேதுமில்லை- இஸ்லாமிய அடிப்படைவாதத்தினைச் சாதியத்தைச் சுட்டிக்காட்டும் பதிவர்கள் விமர்சிக்கமறுத்து ஒதுங்கிவிடுகிறீர்கள். சாதியவெறியர்களுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்களில்லை இவர்களைப் போன்ற மதவெறியர்கள்.

    தவிர, கீழ்க்காணும் கட்டுரையின் உள்ளடக்கத்தினைப் பற்றி, புகுந்தமதங்களிலும் பிடித்துத்தொங்கும் சாதியத்தைப் பற்றி இவர்களின் கருத்தென்னவென்பது தெரியவில்லை.

    "வேலிக்கு அடியில் நழுவும் வேர்கள் - இஸ்லாமியப் புனைவுகள் - மு.நஜ்மா" http://www.penniyam.com/2011/10/blog-post.html

    கண்மூடித்தனமான மொழித்தேசியம், அரசியல்வளர்க்கும் சாதியம், அழுங்/க்குப்பிடி மதவடிப்படைவாதம், விமர்சனமற்ற கம்யூனிசம் எதுவுமே ஒன்றுக்கொன்று குறைந்ததல்ல

    ReplyDelete
  19. @பெயரில்லா

    அனைத்து நண்பர்களுக்கும் முதலில் வேலை பளு காரணமாக உடனே பதிலுறுக்க முடியவில்லை மன்னிக்கவும்.

    நண்பர் பெயரில்லா அவர்களுக்கு.

    பொதுவாக பெயரில்லாத பின்னூட்டங்களை நான் அனுமதிப்பதில்லை ஆனால் உங்கள் பின்னூட்டத்தில் சரியான கருத்துரீதியான தர்க்கம் இருந்ததால் வெளியிட்டேன்.

    //எம் வழி அல்லது வழியேதுமில்லை- இஸ்லாமிய அடிப்படைவாதத்தினைச் சாதியத்தைச் சுட்டிக்காட்டும் பதிவர்கள் விமர்சிக்கமறுத்து ஒதுங்கிவிடுகிறீர்கள். சாதியவெறியர்களுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்களில்லை இவர்களைப் போன்ற மதவெறியர்கள்.//

    நண்பரே நான் இதற்கு எதிர்வினையாக ஒரு காத்திரமான பதிவு எழுதுகிறேன் இது இதுவரை என் பார்வைக்கு வரவில்லை லிங்க் கொடுத்தமைக்கு நன்றி. ஆனால் மத அடிப்படையிலேயே மனிதனை கூறு போட்டு பிரித்து ஏணி போல் அடுக்குகிற அமைப்பு குர்ஆன்,ஹதீஸ் முதல்நிலை ஆவணங்களில் இல்லை
    அவைகள் தான் ஆதாரப்பூர்வமானவைகள் ஒரு பகுதியின் வாட்டார பழக்க தவறான இஸ்லாம் முழு மார்க்கமல்ல அதை தான் நஜ்மா அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். உதாரணத்திற்கு

    //பத்து வயசு சென்டா பறையண்ட கைலயாலும் பிடிச்சு குடு, ஏனென்டா பருவமான பெண்ணை வச்சிக்கிறது அவ்வளவு பாவம்’ (பனிமலர் : 62-63)///

    இப்படி ஒரு நாட்டார் வசை இருப்பது அந்த பதிவை படித்த பிறகே தெரிந்துக் கொண்டேன் அதற்கு அவர் கொடுத்த் ஆதாரம் அதைவிட நகைச்சுவை பனிமலர் என்ற நூல் இது என்ன இஸ்லாமிய அடிப்படை புத்தகமான குர்ஆனா?

    நண்பரே அனைத்துக்கும் பதில் தருகிறேன் ஆரோக்கியமாக அடுத்த பதிவு அதுதான்.

    வருகைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  20. //இப்போஎல்லாம் எங்கே இருக்கு சாதி என்று அப்பாவிபோல நடிக்கிற அறிவாளிகளுக்கு இது தெரியுமா ?//

    இதுதான் என்னுடைய ஆதங்கமும், அருமையான பதிவை தந்தமைக்கு நன்றி, இதை ஒரு பதிவாக மட்டும் பார்க்காமல், மனித உரிமை மீறல் என்று தான் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  21. நண்பனின் மானம் காக்கப்பட வேண்டுமே என குழந்தைகளிடத்தில் மழுப்ப முயலும் உங்களின் நிலையை விட வாழ்வதற்காக கடல் கடந்து போராடும் தன்னை, குடும்பத்திற்காக இந்த அவல நிலைக்கு வருத்திக் கொள்ளும் நண்பரின் நிலை மிக மிக வருத்தத்தை கொடுக்கிறது பாய். லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ். பிலால் (ரலி) அவர்களின் வாக்கை நினைத்துப்பார்க்கிறேன், “நல்ல வேளை இறைவன் யார் யாருக்கு மார்க்கம் என முடிவு செய்யும் உரிமையை அவனே வைத்துக் கொண்டான்...இல்லையென்றால், கருமை நிறமும், தடித்த உதடுகளும் கொண்ட என்னைப்போன்றோருக்கு எப்படி இஸ்லாம் கிடைத்திருக்கும்” என.... எத்தனை உண்மை இந்த காலத்திலும்... :(

    ReplyDelete
  22. பழனியப்பன்October 7, 2011 at 11:08 AM

    இங்கு பதிவிட்ட அனைவரும் ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறியுள்ளனர்....வரவேற்போம்...ஜாதி மட்டுமா...மதம் கூட ஒழியத்தானே வேண்டும்...வாருங்கள் மத அடையாளம் உள்ள பெயரை துறக்க இங்கு எத்துனை பேர் தயார்...நம் பெயர்களின் மூலம் ஜாதி மதம் மொழி இனம் போன்ற அடையாளங்களை துறக்க முயற்சி செய்ய எத்துனை பேர் தயார் வாருங்கள் நானும் தயாராக இருக்கிறேன்....எல்லா மதத்தினரும் வாருங்கள்...

    ReplyDelete
  23. பழனியப்பன்October 7, 2011 at 11:23 AM

    அன்பு ஹைதர் அலி மற்றும் பால முருகன்...இந்த கொடுமையை செய்தவர்கள் பற்றிய விபரம் கூறுங்கள்....உண்மை எனில் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்....எந்த ஊர்....அவர்களின் பெயர்கள்...போன்றவை தேவை...பல ஊர்களில் இது போன்ற தெய்வ வழிபாடுகளில் வேறு ஏற்பாடு செய்தால் (தாழ்த்தப்பட்டவர்கள் என கூறப்படும்)மனிதர்கள் கோப பட்டு சண்டைக்கே வந்து விடுகிறார்கள்...ஏனென்றால் வழிபாட்டில் அவர்களின் உரிமை போய் விடுகிரதேன்று....இப்போது இந்த தப்பு அடித்தல்...கொட்டுன் பறை அடித்தல் போன்றவற்றிற்கு மின்சார வாத்தியங்கள் வந்து விட்டன...(எனக்கு இந்த பதிவு மிகைப்படுத்த பட்டதாகவே தோன்றுகிறது)...உண்மையெனில் உங்களைப்போல ஆதங்க படாமல்...ச்சூ கொட்டாமல் செயலில் இறங்கி..இந்த கொடுமையை செய்தவர்களுக்கு தண்டனை பெற்று தருவோம்..

    ReplyDelete
  24. @
    நண்பர் பழனியப்பன்


    //இங்கு பதிவிட்ட அனைவரும் ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறியுள்ளனர்....வரவேற்போம்...ஜாதி மட்டுமா...மதம் கூட ஒழியத்தானே வேண்டும்...வாருங்கள் மத அடையாளம் உள்ள பெயரை துறக்க இங்கு எத்துனை பேர் தயார்...நம் பெயர்களின் மூலம் ஜாதி மதம் மொழி இனம் போன்ற அடையாளங்களை துறக்க முயற்சி செய்ய எத்துனை பேர் தயார் வாருங்கள் நானும் தயாராக இருக்கிறேன்....எல்லா மதத்தினரும் வாருங்கள்...//

    நல்ல அரைகூவல் நல்லது

    ஆனால் நான் இங்கு புகைப்படத்தோடு, அடையாளத்தோடு. சொந்த பெயரில் எழுதிக் கொண்டிருக்கிறேன்

    ஆனால் நீங்கள்???

    என்னுடைய பின்னூட்டத்தில் உள்ள பெயரை க்ளிக் பன்னினால் நான் யார் என் அரசியல் என்ன என்பது தெரியும் ஆனால் நீங்கள் யார் என்பது தெரியவில்லையே அன்பரே?

    பழனியப்பன் என்ற பெயரை நீங்களே க்ளிக் பன்னி பாருங்கள்

    உங்கள் சரியான அட்ரஸ்க்காக வெயிட்டிங்

    ReplyDelete
  25. @பழனியப்பன்

    நண்பரே

    //..(எனக்கு இந்த பதிவு மிகைப்படுத்த பட்டதாகவே தோன்றுகிறது)...///

    முனு வேலையும் நல்ல உணவும் ஜாலியாக இருக்க பணமும் உள்ளவனிடம் போய் ஆந்திரா விவசாயிகள் பஞ்சம் பட்டினியால் தற்கொலை செய்துக் கொண்டார்கள் என்ற உன்மையை சொல்லிப் பாருங்கள் நோ சான்ஸ் என்று உங்களைப் போல் தான் சொல்வான்.

    //உண்மையெனில் உங்களைப்போல ஆதங்க படாமல்...ச்சூ கொட்டாமல் செயலில் இறங்கி..இந்த கொடுமையை செய்தவர்களுக்கு தண்டனை பெற்று தருவோம்..//

    கண்டிப்பாக கொஞ்சம் நான் இந்த பதிவில் இட்டுருக்கிற வீடியோவை பாருங்கள் கண்டதேவி என்ற ஊரில் இன்னும் எந்த தலித்தும் கைப்பிடித்து தேர் இழுக்க முடியாது அந்த வீடியோவை பாருங்கள் அதில் ஒரு ஆதிக்க சாதிக்காரர் எங்க ஊரு எம்.எல்.ஏ கூட இந்த தேரை இழுக்க முடியாது ஏனேன்றால் அவர் தாழ்த்தப்பட்டவர் என்று வீடியோ ஆதாரத்தோடு இருக்கிறது முடிந்தால் முயற்சியுங்கள்.

    பாப்பரப்பட்டி,கீரிப்பட்டி இரண்டு பஞ்சாயத்து தொகுதிகளிலும் தலித்துக்கு ஒதுக்கப்பட்டும் எந்த தலித்தும் நிற்க பயப்படுகிறார்கள் அவர்களுக்கு சட்டப்படி கொஞ்சம் உதவ முடியுமா.

    இவையேல்லாம் அரசாங்கத்திற்கோ மீடியாவுக்கோ தெரியாத விஷயமில்லை கொஞ்சம் உதவுங்கள் நான் தயராக இருக்கிறேன்.

    அப்புறம் வீடியோ ஆதாரம் கவனிக்கவும்

    ReplyDelete
  26. சகோ ஹைதர் அலி:

    ரொம்ப நல்ல பதிவு. இந்த உண்மையைப் பார்த்து இதுபோல் பாலமுருகனை கஷ்டப்படுத்துவது தப்புனு திருந்த மாட்டானுக. மாறாக யாரு இதை சொல்லுறா? ஏன் இதை சொல்லுறார்? னு ஏதாவது குதர்க்கமா யோசிச்சு, உங்க மேலே குறை கண்டுபிடிக்கப்பார்ப்பானுக!

    ReplyDelete
  27. @ நண்பர்
    வருண்


    //ரொம்ப நல்ல பதிவு. இந்த உண்மையைப் பார்த்து இதுபோல் பாலமுருகனை கஷ்டப்படுத்துவது தப்புனு திருந்த மாட்டானுக. மாறாக யாரு இதை சொல்லுறா? ஏன் இதை சொல்லுறார்? னு ஏதாவது குதர்க்கமா யோசிச்சு, உங்க மேலே குறை கண்டுபிடிக்கப்பார்ப்பானுக!///

    ஆமா நண்பரே
    நீ யாருடா துலுக்கபயலே இத பத்தி பேச என்பதுபோல் ஆரம்பித்து விடுகிறார்கள்.

    உண்மையில் இந்த துலுக்கபயல்கள் அரபு நாட்டிலிருந்து இங்கு வரவில்லை
    எங்கள் முன்னோர்களின் வேர் இந்த சாதீய விடுதலையிலிருந்து தான் ஆரம்பித்தது என்பது இவர்கள் உணர வேண்டும்.

    எங்களுடைய நான்கு தலைமுறை முன்னர் எங்கள் பாட்டன் யராக இருந்தர் என்பதும் எங்களுக்கு தெரியும்

    வருகைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  28. சொல்ல வார்த்தைகள் இல்லை. பற்றிக்கொண்டு வருகிறது.

    ReplyDelete
  29. @VANJOOR

    நன்றி சகோ தாங்கள் அளித்த லிங்கிற்கு

    ReplyDelete
  30. @umarfarook

    உங்களின் முதல் வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  31. @முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
    கண்டிப்பாக சகோ

    ReplyDelete
  32. @Aashiq Ahamed

    அருமையான பொன்மொழி
    நன்றி சகோ

    ReplyDelete
  33. @காமராஜ்

    நண்பர் அவர்களுக்கு
    இவர்களின் உண்மைகள் கிழித்து விடும்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  34. @அபு ஃபைஜுல்

    வ அலைக்கும் வஸ்ஸலாம்..
    சகோ உள்ளத்தை இறைவன் அறிவான்
    மற்றபடி அவனுக்கு விளக்கி புரிய வைக்க முடியாது.

    கொஞ்சம் வளரட்டும் சாதீ எதிரான சமூக போராளியாக மாற்றி விடுவோம் இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  35. @KVR

    வருகைக்கு நன்றி நேரில் சந்திப்போம் விரைவில்

    ReplyDelete
  36. @ஆமினா

    வ அலைக்கும் வஸ்ஸலாம்

    //நாற்பதாயிரம் சம்பளம் வாங்கும் அளவுக்கு அவரின் வாழ்க்கை தரம் உயர்ந்திருந்தும் ஊரில் தன் குடும்பம் எந்த தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக வாழ தன் தன்மானம்,சுயமரியாதை இழந்து வாழும் அந்த சகோவின் நிலை மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம்//

    எவ்வளவு வாழ்க்கை தரம் உயர்ந்தாலும் பிறப்பின் அடிப்படையில் இவர் அவர்களுக்கு அடிமை என்று நினைக்கிறார்கள்

    வருகைக்கு நன்றி தங்கை

    ReplyDelete
  37. இதயம் கணக்கிறது.

    ReplyDelete
  38. அஸ்ஸலாமு அலைக்கும் ஹைதர்பாய்!

    படிப்பினையூட்டும் பதிவு.

    ReplyDelete
  39. //சவூதிக்கு விசா கிடைத்தவுடன் ஊரிலுள்ள ஆதிக்க சாதீக்காரர்கள் வீட்டிற்கு வந்து பிரச்சனை பன்னினார்கள், ஏண்டா எல்லா பறபயலும் துபாயி, சிங்கப்பூரு, சவூதின்னு போயிட்டா எவண்டா இங்கே கொட்டு அடிப்பாய்ங்க?//
    தலித் நண்பரின் தந்தைக்கு அந்த ஊரில் ஏதேனும் நிலம் இருக்கிறதா என்ன? ஓசைபடாமல் ஊரை காலி செய்து விட்டு சென்னை போன்ற நகரங்களில் குடியேறினால் இந்த இழிவிலிருந்து தப்பிக்கலாம் அல்லவா? இது ஏன் அவருக்கு தோன்றவில்லை?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  40. நண்பர்களே , அஸ்ஸலாம் அலைக்கும்.......
    எல்லாம் வல்ல இறைவன் என்றைக்கும் நம்மை நேர் வழியில் செலுத்துவானாக .............
    உண்மையிலேயே இந்த பதிவை படித்தவுடன் என்க்கு எந்தவிதமான உனர்வும் தோன்றவில்லை காரணம்,அவர்கள் மனம் இசைந்துதானே அந்த இழி செயலை செய்கிறார்கள், இதட்கு நாம் வருந்தி என்ன பயன். பாதிக்கப்பட்டவர்கள் மாத்தி யோசித்தால் தான் உண்டு நல்ல வழி ...ஒன்று அவர்கள் ஊரை காலி செய்து விட்டு வேற எங்காவது போகலாம் அல்லது தன இழிவான மார்கத்தை விட்டு வேற மார்கத்துக்கு போகலாம் .மற்றும் சுய புத்தியாவது இருக்கணும் அல்லது சொல் புததியாவது இருக்கணும் இரண்டுமே இல்லையென்றால் நாம் என்ன செய்ய முடியும் பரிதாபம் படுவதை தவிர .....இன்னும் 100 பெரியார்கள் பிறந்தாலும் , எதுவும் செய்யமுடியாது என்பதே உண்மை ......

    ReplyDelete
  41. ஹைதர் அலி! என்னோட ஃபேஸ்புக் அக்கவுண்டுக்கு வாங்க. இல்லைன்னா, உங்களோட மெயில் ஐடியை எனக்கு அனுப்பிவிடுங்க.

    ReplyDelete
  42. சாதியம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று.
    அதில் மாற்றுக்கருத்து இல்லை.

    ReplyDelete
  43. @நாணல்

    //என்ன கொடுமை இது? கல்வி ஒரு மனிஷனோட நிலையை உயர்த்தும்னு பார்த்த, என்ன படிச்சாலும் ஜாதி விடாது போல :(//

    படித்தவர்கள் தான் இன்னும் மூர்க்கமாக ஜாதியை தூக்கி பிடிக்கிறார்கள்

    முதல் வருகைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  44. @ஹேடர்

    //இன்ஷா அல்லா...
    அவர்களும் மாற்று மத சாதி வெறியர்களும் மனம் திருந்த துஆ செய்கிறேன்.//

    கண்டிப்பாக செய்யுங்கள்

    ReplyDelete
  45. @curesure4u

    உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  46. Fortunately or Unfortunately, I have never come across such an atrocity face to face though I have heard a lot. Very moving blog.

    ReplyDelete
  47. //Anonymous has left a new comment on the post "முக்குலம்தான் ஆளணும்…":

    பறையனுக்கு பறையடிக்க தெரியும்
    பாப்பானுக்கு வேதம் ஓத தெரியும்
    சாணானுக்கு மரமேற தெரியும்
    தேவனுக்கு மட்டும் தானே ஆள தெரியும் !
    இதிலென்ன தவறு கண்டீர்//
    இது பின் வரும் முகவரியிலுள்ள வலை பதிவிற்கு வந்த பின்னூட்டம்
    http://marchoflaw.blogspot.com/2011/10/blog-post.html?ext-ref=comm-sub-email

    ReplyDelete
  48. பறையை அடிக்கும் கைகள் ஆதிக்க வெறிக்கு சாவு மணி அடிக்கட்டும் . அதில் விடுதலைக்கான போர் முழக்கம் திக்கெட்டும் ஒலிக்கட்டும்.

    உங்களை போன்றவர்களுடைய கட்டுரைகள் மானுடத்தின் மனசாட்சியை உலுக்கட்டும்

    ReplyDelete
  49. நல்லாதான் எழுதி இருக்கிறீங்க ஆனா எழுதியவர் பெயரை பார்த்து கொமொன் போடுறாங்க.. சில பேர் சாதியம் இல்லைன்னு மறைக்க பாடுபடுகிறார்கள்.. அப்ப அன்மையில் பரமகுடியில் நடந்தது என்னவாம்.. நாற்றில் இருக்கும் லிங் பார்த்து வந்தேன் சகோ..!((

    ReplyDelete
  50. ASSLAMU ALAIKUM,
    இன்றைய சூழலில் பயன்தரத்தக்க கட்டுரை இது...பதிவு நல்லா இருந்தது....முயற்சி தொடரட்டும்,உண்மையை சொல்லும் வித்தியாசமான கட்டுரை,எங்க தளத்திற்கும் நீங்க வாங்க...தளத்தில் உறுபினராக ஆகுங்கள்

    www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ......உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-3), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..இன்னும் பல. அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

    ReplyDelete