Friday, January 6, 2012

மனிதக் கறி தின்னும் கார்ப்பரேட் மருத்துவர்கள்


தூத்துக்குடி சேதுலட்சுமி படுகொலை மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீது அரசு மருத்துவர்கள் காட்டும் அயோக்கியத்தனம் ஆகியவற்றை முன்வைத்து இக்கட்டுரை பதியப்படுகிறது. ஏற்றுக்கொள்பவர்கள் share செய்யுங்கள். நாட்டு மக்கள் தெரிந்துகொள்ளட்டும்.



“சாலை விபத்தில் சிக்கிய வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்.” “மூளைச் சாவு ஏற்பட்ட இளைஞரின் உறுப்புகள் தானம்’’  -இது போன்ற செய்திகளை மாதம் ஒருமுறையேனும் நீங்கள் படித்திருப்பீர்கள்.

டாக்டர் தம்பதியான அசோகன்-புஷ்பாஞ்சலியின் ஒரே மகன் ஹிதேந்திரன் மரணம்தான் இத்தகைய தானத்துக்கெல்லாம் மூலகாரணம். ஹிதேந்திரன் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட விஷயம், மீடியாக்கள் மூலம் பரவி, மிகப்பெரிய விழிப்பு உணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தியது.

2010, ஏப்ரல் மாதக் கணக்கீட்டின்படி, 86 பேரிடமிருந்து 479 பேர் உறுப்பு தானம் பெற்று பயனடைந்திருப்பதாக அரசுக் குறிப்பு தெரிவிக்கிறது. அதே சமயம், உரிய நேரத்தில் உறுப்புகளைப் பயன்படுத்த முடியாமல் சட்ட நடவடிக்கைகள் தடுப்பதாக அரசுக்குப் புகார்கள் வரத் தொடங்கின. இதையடுத்து, கடுமையாக இருந்த பழைய விதிமுறைகளைத் தளர்த்தி உத்தரவிட்டது தமிழக அரசு.

வெளிப் பார்வைக்கு இது உயிர் காக்கும் விஷயமாகத் தெரிந்தாலும், உண்மையில் ஈவிரக்கமற்ற கொலை வியாபாரம் ஒளிந்திருப்பதாக சமூக அக்கறை கொண்ட சில மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
‘‘இங்கு மூளைச் சாவு என்பது லாபகரமான ஒரு தொழில்’’ என்கிறார்கள் இம்மருத்துவர்கள்.

‘‘மூளை என்பது சிறுமூளை, பெருமூளை என இரண்டு வகையாக செயல்படுகிறது. இரண்டுமே செயலிழந்தால்தான் அது மூளைச் சாவு. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, சிறுமூளை அல்லது மூளைத் தண்டு செயலிழந்தாலே போதும். சட்டப்படி அதை மூளைச்சாவு என்று அறிவிக்கிறார்கள்.

சிக்கல் என்னவென்றால், சிறுமூளை இறந்த பிறகும் பெருமூளை வேலை செய்யும் என்பதுதான். அப்படிப் பெருமூளை வேலை செய்தால், சம்பந்தப்பட்டவர் உயிரோடு இருக்கிறார் என்றே அர்த்தம்.

உதாரணமாக, ஒரு கர்ப்பிணிக்கு பெருமூளை மட்டும் செயல்படுவதாக வைத்துக்கொள்வோம். அவரால் இயற்கையாக குழந்தை பெற முடியும், பால் கொடுக்கவும் முடியும். ஆண் என்றால், விந்தணுக்களை எடுத்து டெஸ்ட் டியூப் பேபி உருவாக்க முடியும். அடுத்த சந்ததியே இந்த நபரால்தான் என்கிற சூழ்நிலையில், சம்பந்தப்பட்டவரின் குடும்பத்துக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம் இல்லையா?

எனவே, “சிறுமூளை செயலிழந்ததாகக் கூறி சாவு என அறிவிப்பது இயற்கை விதிகளுக்கு முரணானது மட்டுமல்ல.  சட்ட விரோதமானதும்கூட’’ என்று எச்சரிக்கிறார் பிரபலமான ஒரு நரம்பியல் நிபுணர்.

‘‘நரம்பியல் சட்ட விதிமுறைகளின்படி, பெருமூளை செயலிழந்துவிட்டதை நியூக்ளியர் ஸ்கேன் செய்துதான் உறுதிப்படுத்த முடியும். ஆனால், இந்தியாவைப் பொறுத்த அளவில் இதில்மிக பழங்காலத்து நடைமுறையைத்தான் பின்பற்றுகிறார்கள்.

ஜப்பானில், மூளைச் சாவு சம்பந்தமான குழப்பம் ஏற்பட்டபோது 100 நபர்களை நியூக்ளியர் ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தினார்கள். அப்போது, 22 பேர் அதில் உயிரோடு இருப்பது தெரிய வந்தது. இதுபோன்ற சோதனைகள் இந்தியாவில் செய்யப்படுவதில்லை. எனவேதான், மூளைச் சாவு சட்டத்தில் திருத்தம் செய்தால் மட்டுமே இந்த அவலத்தைப் போக்க முடியும்” என்கிறார் அவர்.

சரி, “தானம், தானம்” என்கிறார்களே மருத்துவர்கள். உண்மையில் அது தானம்தானா?

‘‘இல்லை. தானம் என்கிற பெயரில் மூளைச்சாவு ஏற்பட்டவர்களிடமிருந்து பெறப்படும் மனித உறுப்புகள், கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படுகிறது’’ என்கிறார்கள் சமூக அக்கறை கொண்ட மருத்துவர்கள்.

  ‘கெடாவர்’ என்கிற மனித கசாப்பு கடை:

அது என்ன கெடாவர் கசாப்பு கடை?

மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் உடல் உறுப்புகளை ‘கெடாவர்’ என்று அழைக்கிறது மருத்துவ உலகம். இந்தக் கெடாவர் பிசினஸ்தான் தற்போதைய கார்ப்பரேட் மருத்துவமனைகளின் ஹாட்டஸ்ட் பிசினஸ்.

பெரும்பாலான கார்ப்பரேட் மருத்துவமனைகளில், உடல் உறுப்பு தேவைப்படுகிறவர்களுக்கு என தனியாகவே கெடாவர் ரெஜிஸ்ட்ரேஷன் கவுன்ட்டர் வைத்திருக்கிறார்கள். உறுப்பு தேவைப்படுபவர்கள் இந்த கவுண்ட்டர்களுக்கு சென்று பதிவு செய்துகொள்ளலாம்.

இதற்காக, ஒருவர் ஒரு லட்சமோ அல்லது பத்து லட்சமோ டெபாசிட் செய்யவேண்டும். அதே சமயம், டெபாசிட் செய்துவிட்டு குறைந்தது ஆறு மாதம் முதல் ஐந்து வருடங்கள் வரை கெடாவருக்காக இவர்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.  இன்று சராசரியாக ஒவ்வொரு கார்ப்பரேட் மருத்துவமனையிலும் தலா ஒரு உறுப்புக்கு 50 முதல் 80 பேர்வரை முன்பதிவு செய்திருப்பதாகக் மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன.இதிலும்கூட, வசதியான நபர் என்றால், ஒரே ஆள் பத்துப் பதினைந்து மருத்துவமனைகளில் டெபாசிட் செய்திருப்பாராம்.

இப்படி டெபாசிட் செய்யப்படும் தொகையை எப்போது வேண்டுமானாலும் நோயாளிகள் திரும்பப் பெற முடியும். என்றாலும், முக்கால்வாசிப்பேர் திருப்பி வாங்குவது இல்லை. காரணம், கேட்ட உறுப்பு கிடைக்கவேண்டிய நாளில், ‘லம்ப்பாக இருபது லட்சம்’ கொடுத்து பெரும் பணக்காரர்கள் யாராவது லவட்டிக்கொண்டு போய்விடுவதே. எனவே, டெபாசிட் செய்தவர் மீண்டும் காத்திருப்புப் பட்டியலிலேயே இருப்பார்.

இப்படியாக, டெபாசிட் தொகையாகவே நாடு முழுவதும் பல நூறு கோடி ரூபாய் தனியார் மருத்துவமனை கணக்குகளில் கொள்ளையடித்து வைக்கப்பட்டிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த டெபாசிட்டுகளுக்கு வருமான வரி விலக்கும் அளிக்கப்படுகிறது என்பதுதான்.

எந்த முதலீடும் இல்லாமல், நோயாளியின் தலையில் மிளகாய் அரைத்து, மாதம் ஒன்றுக்கு வட்டியாகவே பல லட்சங்கள் வருமானம் பார்க்கிற பிஸினஸ். மருத்துவம் படித்த மூளை என்னமாக சார்டட் அக்கவுண்ட் செய்கிறது பார்த்தீர்களா?

ஒரு மருத்துவமனை ஊழியர் இப்படிச் சொன்னார்: ‘‘சில சக்சஸ்ஃபுல் ஆபரேஷன்களைப் பற்றிப் பத்திரிகையில் படித்திருப்பீர்கள். வெளிநாட்டினருக்கு கல்லீரல் மாற்று அறுவை, இதய அறுவை செய்ததை சாதனையாக காட்டியிருப்பார்கள். ஆனால், நம் நாட்டில் தானமாகப் பெறப்பட்ட உடல் உறுப்பை, வெளிநாட்டினருக்கு எப்படிக் கொடுக்கிறீர்கள்? என்று ஒரு நாயும் கேள்வி எழுப்புவதில்லையே! ஏன் சார்?

இங்கே நம்முடைய மக்களிடமிருந்து மூளைச்சாவு என்கிற பெயரில் இலவசமாகப் பெறப்படும் உடல் உறுப்புகளை, வெளிநாட்டுகாரன்களுக்கு ஐம்பது லட்சம் ரூபாய்வரை விற்கிறானுங்க சார் அயோக்கியப் பயலுவ.’’

மனித உறுப்புகளை வாங்குவதோ, விற்பதோ சட்டப்படி குற்றம் என்று இருக்கும்போது, வெளிநாட்டினருக்கு எப்படி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும்?

‘‘இங்கே உறுப்புகளைப் பெற்றுக்கொள்ள ஆள் இல்லை என்றால், அதை வெளிநாட்டினருக்குப் பொருத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளிடம் கார்ப்பரேட் மருத்துவமனைகள் கேட்டுக்கொண்டன. எனவே, கருணை அடிப்படையில் அரசு இதற்கு அனுமதி அளித்திருக்கிறது’’ என்கிறார் கார்ப்பரேட் மருத்துவமனையில் புரியும் ஒரு மருத்துவர்.

நல்ல கருணையாக இருக்கிறதே! உள்நாட்டில் அவனவன் லட்சக்கணக்கில் கெடாவருக்காக டெபாசிட் செய்துவிட்டு, வருடக்கணக்கில் காத்துக்கொண்டிருப்பானாம். அரசாங்கம் என்னடாவென்றால், அந்நியர்களுக்கு கருணை காட்டுவானாம்!

இதற்குத் தீர்வே இல்லையா?

‘‘இரண்டு விஷயங்கள்.

ஒன்று, கெடாவர் என்பது மருத்துவமனைகளையும் தாண்டி மாஃபியாக்களின் கையில் உள்ளது. மருத்துவச் சட்டத்தில் பல ஓட்டைகள் இருப்பதால் இந்த மாஃபியாக்களை ஒழிப்பது கடினம். ஒரு லட்சத்தில் முடிக்க வேண்டிய ஆபரேஷன்களை இன்றைக்கு 20 லட்சமாக்கியதும் இந்த மாஃபியா கும்பல்தான்.

இன்னொன்று நோய்க்கான காரணம். என்டோசல்ஃபான் மாதிரியான தடை செய்யப்பட்ட மருந்துகள் தாராளமாக இந்தியாவில் புழங்குகின்றன. உள்நாட்டில் கிட்னி ஃபெயிலியர், ஹார்ட் ஃபெயிலியர் உள்ளிட்ட பல்வேறு உயிர்கொல்லி நோய்களுக்கு இந்த மருந்துகள்தான் காரணம். இத்தகைய மருந்துகளின் பின்னணியில் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட அரசியல் சக்திகள், அதிகாரிகள், தனியார் முதலாளிகள் கூட்டாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

எனவே, அரசு இதற்கென ஒரு நிபுணர் குழுவை நியமித்தோ அல்லது சி.பி.ஐ வசம் ஒப்படைத்தோ ஆய்வு மேற்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் விடிவே இல்லை.’’  இதை நான் சொல்லவில்லை. கார்ப்பரேட்டில் பணிபுரியும் மனைதநேமுள்ள ஒரு மருத்துவர் சொல்கிறார்.
கெடவர் கொள்ளைக்காரர்களின் கொடூர முகத்தை தோலுரித்த மருத்துவ உலகம்:


ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவரது தந்தைக்கு கல்லீரல் பிரச்னை. மாற்றுக் கல்லீரல் பொருத்தியே ஆகவேண்டும். இந்த சூழ்நிலையில்தான் அந்தப் பத்திரிகைச் செய்தியைப் பார்க்கிறார். ஹைதராபாத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில்(இந்த மருத்துவமனை இப்போது சென்னைக்கும் வந்து வியாபாரம் செய்துகொண்டிருக்கிறது), இதுபோன்ற ஆபரேஷன்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து குளோபல் மருத்துவமனையில் தன் தந்தையை அட்மிட் செய்கிறார் ஸ்ரீனிவாசன். பரிசோதனைகளுக்கு மட்டும் 95 ஆயிரம் ரூபாய் பில் கட்டுகிறார். அப்போது, லலிதா ரகுராம் என்கிற ‘கெடாவர் கோ-ஆர்டினேட்டர்’ ஸ்ரீனிவாசனைச் சந்திக்கிறார். இவர் சென்னையைச் சேர்ந்த மோகன் பவுண்டேஷன் எனப்படும் என்.ஜி.ஓ ஊழியர். சென்னையில் ஒரு கெடாவர் இருப்பதாகவும், பத்து லட்சம் கட்டினால் அதை வாங்கித் தருவதாகவும் ஸ்ரீனிவாசனிடம் கூறுகிறார்.

இதை நம்பி, நகையை விற்று, கடனும் வாங்கி அப்பாவுக்காகப் பணத்தைக் கட்டுகிறார் ஸ்ரீனிவாசன்.

சில நாட்கள் கழித்து, கெடாவர் ரெடியாகிவிட்டதாகவும், அதைத் தனி விமானத்தில்(எவ்ளோ பெரிய பிசினஸ் பார்த்தீர்களா?) கொண்டுவர ஏழு லட்ச ரூபாய் கட்டும்படியும் கேட்கிறார் லலிதா. ஆனால், ஸ்ரீனிவாசனால் கட்ட முடியவில்லை. ஆனால், அப்பாவின் நிலைமை சீரியசாகிவிட, உடனடியாக மாற்றுக் கல்லீரல் பொருத்தியே ஆகவேண்டிய கட்டாயம்.

அப்போதுதான், ‘‘கவலையை விடுங்க. உங்க அம்மாவோட கல்லீரலை எடுத்து உங்க அப்பாவுக்குப் பொருத்திடலாம். இதுபோல நாங்க 55 ஆபரேஷன்களை வெற்றிகரமா செஞ்சிருக்கோம். ஆபரேஷன் செலவுகளை மட்டும் கட்டினால் போதும்’’ என்று மருத்துவமனையில் உறுதி கொடுக்கிறார்கள். ஸ்ரீனிவாசன் குடும்பமும் இதை ஏற்றுக்கொண்டு கையெழுத்து போட்டிருக்கிறது.

ஆனால், அடுத்து நடந்ததுதான் ஒண்ணாம் நெம்பர் ‘மனிதாபிமானம்’.

ஸ்ரீனிவாசனின் அம்மாவை ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டுபோகும் வழியில், (சமயம் பார்த்து) 23 லட்சம் கட்டச் சொல்லியிருக்கிறது ஹாஸ்பிட்டல் நிர்வாகம். இரண்டு பேரின் உயிர் என்பதால், அதையும் கட்டியிருக்கிறார் ஸ்ரீனிவாசன். வழக்கம்போல், ‘ஆபரேஷன் சக்ஸஸ்’ எனக்கூறி வெளியே வந்திருக்கிறார் மருத்துவர்.

ஆனால், அடுத்த பதினைந்து நாளில் ஸ்ரீனிவாசனின் அப்பாவுக்கு உயிர் பிரிந்துவிட்டது. கல்லீரல் தானம் கொடுத்த அம்மா கோமாவுக்குப் போய்விட்டார். தொடர்ந்து 20 மாதங்கள்வரை கோமாவிலேயே இருந்திருக்கிறார் அந்த அம்மா.

முடிவில், 20 மாதங்கள் கோமா பேஷண்ட்டைப் பராமரித்ததாகக் கூறி இரண்டாம் கட்டமாக எக்ஸ்ட்ரா 45 லட்ச ரூபாய் கேட்டிருக்கிறார்கள். ஸ்ரீனிவாசன் அதையும் கட்டியிருக்கிறார். ஆனால், இரண்டாவது ஆண்டில் அந்த அம்மாவும் இறந்து போய்விட்டார்.

கெடாவர் பிசினஸ் என்றால் என்ன, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன? என்று இப்போது புரிகிறதா? இதுதான் உடல் உறுப்பு தானமும் மருத்துவமனைகளின் ‘மனிதாபிமானமும்’.

நன்றி:http://marakkanambala.blogspot.com/ 
ஆதாரம்http://www.issuesinmedicalethics.org/133cv01.html   

35 comments:

  1. நெஞ்சத்தை பதற செய்கிறது.

    ReplyDelete
  2. @VANJOOR

    http://changesdo.blogspot.com/2010/05/blog-post_15.html

    ReplyDelete
  3. இதற்கெல்லாம் ஒரு முடிவே வராதா??

    ReplyDelete
  4. விழிப்புணர்வு ஊட்டும் பதிவு!

    ReplyDelete
  5. சலாம் சகோ,
    மனித உயிர்களோடு விளையாடி பணம் சம்பாதித்து என்னதான் பண்ணப்போகிரார்களோ? படுபாதகர்கள். விழிப்புணர்வு பதிவு சகோ.

    ReplyDelete
  6. சுல்தான்January 6, 2012 at 7:43 AM

    ஸலாம்

    எனக்கு ஒரு சந்தேகம் !!

    உறுப்புகள் தானம் என்று சொல்லுகிறீர்கள் ...

    உயிரோடு இருக்கும் போது எந்தெந்த உறுப்புகளை தானம் செய்யலாம் ?

    இறப்புக்கு பிறகு எந்தெந்த உறுப்பு உயிரோடு இருக்கும் ? அதன் கால அளவு என்ன ?

    விலாக்கவும் ...

    குறிப்பு : சட்டத்தின் படி தவறா ? உயிரோடு இருக்கும் போது தானம் செய்வது ?

    ReplyDelete
  7. நம்மூர் @@@@@@பதி ஹாஸ்பிட்டல்க்குள்ள போயிட்டு திரும்பி வந்த மாதிரி இருக்கு :-( ஒவ்வொரு வரியும் படிக்கும் போதும் அப்பப்பா.... சொல்ல முடியல. கொடுமையான விஷயங்கள்.

    நல்லதொரு விழிப்புணர்வு கட்டுரை அண்ணா

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. @VANJOOR

    நானும் இந்த செய்தியை முதலில் படித்தவுடன் பதறிப் போய் விட்டேன் சகோ

    ReplyDelete
  9. @அமுதா கிருஷ்ணா

    உங்கள் ஆதங்கம் நியாயமானது

    நல்லவேளை உடம்பை அறுத்தவுடன் இரத்தம் தங்கமாக மறவில்லை

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  10. @சுல்தான்

    //உயிரோடு இருக்கும் போது எந்தெந்த உறுப்புகளை தானம் செய்யலாம் ?//

    இரட்டையாக இருக்கும் உறுப்புகளை தானம் செய்யலாம்.அதிலும் கண்களின் உள்ள கர்னியாவை (கருப்பு பகுதியை)கொடுக்க முடியாது.

    ஒற்றை உறுப்புகளில் ஈரலின் சிறு பகுதியை கொடுக்கலாம் இவை குழந்தைகளுக்கு பயன்படும் என்கிறார்கள்


    இறப்புக்கு பிறகு எந்தெந்த உறுப்பு உயிரோடு இருக்கும் ? அதன் கால அளவு என்ன ?

    இறப்புக்கு பிறகு உடனே இறக்காத உறுப்புகளை உடனடியாக கொடுக்கலாம் என்கிறார்கள்

    //குறிப்பு : சட்டத்தின் படி தவறா ? உயிரோடு இருக்கும் போது தானம் செய்வது ?//

    முறையோடு அதற்குரிய அனுமதியோடு செய்ய வேண்டும் இல்லையேன்றால் சட்டப்படி தவறு


    மேற்கண்ட இந்த தகவல்களை சொன்னவர்

    ரியாத் கிங் பஹத் யூனிவர்சிட்டியில் பணிபுரியும் சகோதரர் டக்டர்

    Dr.கலீல் ரஹ்மான் M.s.. அவர்கள் தொண்டியை சேர்ந்தவர் இங்கு சவூதியில் அறுவை சிகிச்சை நியுனாரக வேலை பார்க்கிறார்கள்

    ReplyDelete
  11. @ஆமினா

    நம்ம ஊர் மக்களை நினைத்தால் கவலையாக இருக்கு சகோ

    இந்த பதிவை படித்தவுடன் பகிர்ந்து விட்டேன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தங்கை

    ReplyDelete
  12. சுல்தான்January 6, 2012 at 10:34 AM

    உங்கள் பதிலுக்கு ஜசகல்லாஹ்

    ஆனால் தோராயமா தானே பதில் சொல்லி இருக்கீர்கள் ...

    இரட்டை உறுப்பு என்பது எது ஐயா ?

    கை , கால், விரல் , கண் , காது , இப்படி விவறீங்க பாய் ...

    //இறப்புக்கு பிறகு உடனே இறக்காத உறுப்புகளை உடனடியாக கொடுக்கலாம் என்கிறார்கள் //

    பாய் என்ன ஜோக் அடிகிரீன்களா !!!!

    உறுப்புகளின் பெயர் சொல்லுவே..

    அதுக்கு தானே இங்க வெயிட் பண்றோம் ,,

    உதாரணமா கண் அவ்வளவு தான் எனக்கு தெரிந்தது .. அதன் கால அளவு ???

    இப்படியெல்லாம் கேள்வி கணைகள் தொடரும் ... இது ஒரு எடுத்துக்காட்டு ...

    நாங்களும் தவ்ஹீத்வாதி வே !! வெவ்வ வெவ்வே !!!!

    ReplyDelete
  13. இதில் இவ்வளவு விஷ(ய)ம் இருப்பது நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. மேலோட்டமாக உறுப்பு தானம் என்று படிக்கும்போது, ஆஹா, எவ்வளவு நல்லவர்கள் நம் ஊரில், என்றே நினைத்து வந்திருக்கிறேன்.

    ReplyDelete
  14. @சுல்தான்

    சகோ சுல்தான் டக்டர் ஏர்போர்ட் போய்க் கொண்டிருந்தார்கள் சோ அவர்கள் கொஞ்சம் பிஸி போனில் குரைவாகத்தான் சொன்னார் அவரும் தவ்ஹீது வாதிதான் நாளை அவர் ஒய்வாக இருக்கும் போது அவரே பதில் சொல்லுவார்அவர் மெயில் ஐடியை உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன்

    அப்புறம் இரட்டை உறுப்புகள் என்றாதும் கை கால் என்று கேட்கும் அளவுக்கு நீங்க பச்ச குழந்தை என்று எனக்கு தெரியாது இதைக் கூடவே பிரித்து தெரிந்துக் கொல்ள முடியவில்லை?

    ReplyDelete
  15. @bandhu

    //ஆஹா, எவ்வளவு நல்லவர்கள் நம் ஊரில், என்றே நினைத்து வந்திருக்கிறேன்.//

    நானும் தான் அப்படி நினைத்திருக்கிறேன்

    இன்னும் நாம் எவ்வளவோ தெரிந்துக் கொள்ள வேண்டியது இருக்கிறது

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  16. ரத்தம் கொதிப்பது என்றால் என்னவென்று உணர்த்தும் பதிவு. வர வர மருத்துவத்தில் மனிதாபிமானம் என்பது ஆக்சிமொரானாகி விடும் போலும். கேள்விப் படாத பல தகவல்கள் சொல்லியுள்ளீர்கள். உதாரணமாக ஒரு மருத்துவரைக் கேட்டு எந்தெந்த உறுப்புகளை தானம் செய்யலாம் என்ற தகவல் உட்பட.

    ReplyDelete
  17. ஸலாம் சகோ.ஹைதர் அலி,
    விழிப்புணர்வூட்டும் பதிவு.

    மருத்துவமனைகள் மருத்துவர்கள் இவர்களுக்கு மட்டும் பணவெறி பிடித்து விட்டது என்றால்... அப்புறம்... உலகிலேயே ஈடிணையற்ற மிகக்கொடூர மிருகங்கள் இவர்கள்தான்..!

    'ரமணா' என்ற திரைப்படம் எல்லாம் இவர்களிடம் கால் தூசிக்கு சமானம்..!

    அப்படிப்பட்ட ஒருசில மிருகங்களை நேரில் சந்தித்துள்ளேன். வேண்டாம்... அதை கிளற வேண்டாம். (ஒரு சில உத்தமர்கள்/ மஹாத்மாக்கள் சேவை மனப்பான்மையுடன் வேலை செய்யும் இடமாகவும் அது இருக்கிறது என்பதால்..)

    என் வாழ்நாளில் நான் செல்ல விரும்பாத இடங்கள் மூன்று...

    முதலில்-மருத்துவமனை
    அடுத்து-காவல் நிலையம்
    மூன்றாவது-நீதி மன்றம்

    ReplyDelete
  18. சலாம் சகோ....
    மூளை சாவில் இரண்டுவகை உள்ளது என்பதை இப்போதுதான் அறிந்துகொண்டேன்...நன்றி...

    ReplyDelete
  19. அஸ்ஸலாமு அலைக்கும் அருமையான‌ கட்டுரை சகோ.பணத்தின் மீதுள்ள ஆசையால் மனிதர்களின் உயிர் இதுபோன்ற சில மருத்துவர்களுக்கு மயிர் போன்று தெரிகிறது போலும்.படிக்கவே இரத்தம் கொதிக்கிறது.அந்த கயவ‌ர்களை கொலை செய்தாலும் தப்பேயில்லை.இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக்கண்டால் அவர்களை கொடூரமாக‌ கொலை செய்யவேண்டுமென தோன்றுகிறது.

    ReplyDelete
  20. கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு http://adirai.in/index.php?option=com_content&view=article&id=855%3A2012-01-06-16-12-21&catid=103%3A2011-09-20-08-41- plz read this link .அஸலாம் அலைக்கும் சகோ. இன்று எனது facebook விருக்கு ஒரு லிங்க் வந்தது அதை பார்த்தால் எங்கே படித்து போல் நினைவு இருந்து .அப்புறம் தான் உங்களின் வலைப்பூவில் படித்த நினைவு வந்து ,செக் பண்ணினால் ஏற்கனவே உங்களின் வலைத்தளத்தில் வந்துள்ளது.

    ReplyDelete
  21. @ABDUL RAHMAN

    ஆமாம் என்னுடைய பதிவு போட்டோக்கள் என்னுடைய உழைப்பு ஒரு லிங்க் கொடுக்கக் கூட அவர்களுக்கு மனமில்லை இப்படி நிறைய பேர் காப்பி பண்ணி அவர்களின் பெயரை போட்டு எழுதுகிறார்கள்

    ReplyDelete
  22. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரர் அண்ணன் ஹைதர் அலி,
    சமூகத்தில் அதிகமதிகம் மதிப்பிற்குரியவர்களாக கருதப்படுபவர்கள் மருத்துவர்களும் ஆசிரியர்களும். மனிதநேயத்துடன் பணிபுரிவேன் என்று உறுதிமொழி எடுக்கும் மருத்துவர்களில் பலர் மனிதநேயம் என்றால் என்னவென்பதை தம் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிவிட்டு செல்கின்றனர். எனக்கு தெரிந்து பல மருத்துவர்கள் அவ்வாறு தான் இருக்கின்றனர். என்னுடைய மருத்துவ நண்பர் ஒருவர் பல ஞாயிறு பொழுதுகளை குக்கிராமங்களுக்கு சென்று இலவச கேம்ப் நடத்தி ஏழைகளுக்கு மருத்துவம் பார்த்து செலவழிப்பார். அவரிடம் பேசும்போது எனக்கு இனம் புரியாத ஒரு மரியாதையும் (என்னை விட வயது குறைந்தவர் அவர்) மருத்துவ சேவையின் மீது அளப்பரிய மரியாதையும் ஏற்படும். ஆனால் ஒரு சில மருத்துவர்கள் இந்த மாதிரி பணப்பேராசை கொண்டு மனிதநேயத்தை குழி தோண்டி புதைக்கும் காரியங்களில் ஈடுபட்டு வருவது மதிப்பிற்குரிய மருத்துவ துறைக்கே இழுக்கை ஏற்படுத்துவதாகும். இவர்களை அரசாங்கமே களையெடுக்க வேண்டும். ஆனால் இப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற நிகழ்வுகள் ஏன் மருத்துவ துறையில் அரங்கேறுகிறது என்று தற்கால சூழ்நிலைகளையும் நாம் அலச வேண்டும். அதுகுறித்த விசாலமான பார்வை கொண்ட ஒரு பதிவை ஹைதர் அலி அவர்களோ அல்லது முஹம்மத் ஆஷிக் அவர்களோ எழுத வேண்டும் என்பது என் ஆசை.

    ReplyDelete
  23. உண்மைகத்தான ஒரு பதிவினை கொடுத்து இருக்கிறீர்கள் வலைகளில் இருக்கும் சிலரேனும் இந்த சிறப்பான பார்வையை பெறட்டும் இந்த கார்பரேட் பண்பாட்டில் மனிதன் இயந்திரமக்கப்ட்டு தனித்தையாக கூறு போடப் பட்டு விற்கப் படுகிறான் இவற்றிக்கு தீர்வுகள் இல்லமால் இல்லை சிறந்த மருத்துவ முறிகள் நாம் பெற்று இருக்கிறோம் அதாது தமிஹ்சா மருத்துவம் சித்த மருத்துவம் மிக சிறந்த தீர்வை அளிக்கும் சிந்திப்போம் ...

    ReplyDelete
  24. இதுக்கு பேரு சேவை யின்னு பினாத்தல் வேறு.

    ReplyDelete
  25. அஸஸலாமு ஆலைக்கும் சகோதரா அருமையான விழிப்புணர்வு கட்டுரை, உங்கள் கட்டுரையில் பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன், நன்றி

    தனியரை ஒப்பிடுகையில் அரசு மருத்துவமனை சிறந்தது என்ன ஒன்று சுத்தம் குறைவாக இருக்கும்

    ReplyDelete
  26. @ஸ்ரீராம்.

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  27. @~முஹம்மத் ஆஷிக் citizen of world~

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    நிறைய அனுபவங்கள் உங்கள் எழுத்துக்களில் பேசுகின்றன வேண்டாம் என்று ஒதுக்க தேவையில்லை விழிப்புணர்வு எற்படும் என்றால் எழுதி விடுங்கள்

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  28. @NKS.ஹாஜா மைதீன்

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    நீண்ட நாள் கழித்து தங்களின் வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  29. @முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    ஏன்? இவ்வளவு கோபம் சகோ
    இன்ஷா அல்லாஹ் இது போன்றவர்களை தனிமைப் படுத்துவோம்

    ReplyDelete
  30. உடல் உறுப்புகளைத் தானமாத் தருவதுபோய், விற்க ஆரம்பிச்சிட்டாங்க. உயிரோட இருக்கும்போது தன் கிட்னியை விக்குறதுபோய், கொஞ்சம் உடல்சாய்ந்தாலே, உறவுகள் மற்ற உறுப்புகளைக் கூறுபோட்டு வித்துட முனையுறாங்க.

    கோமாவில் படுக்கும் பேஷண்டுகளைப் பராமரிப்பது கடினம் என்பதால், கலங்கி நிற்கும் உறவுகளை, அதற்குரிய விலைபேசி, மருத்துவத்துறையும், புரோக்கர்களும் மனதைக் கல்லாக்கிகொள்ளத் மேலும் தூண்டுகின்றனர்!! இதற்கு “தானம்” என்று பெயர்சூட்டி, பத்திரிகைச் செய்திகளில் விளம்பரமும் கிடைக்கீறது!!

    கோமாவில் வருடக்கணக்கில் கிடந்தவர்களும் பிழைத்த கதைகள் உண்டு. சில வருடம் முன்பு ஓப்ரா வின்ஃப்ரேயின் Talk Show-வில் இப்படியொருவர் சுமார் 20 வருடங்கள் கழித்து சுய நினைவு அடைந்தவர் பங்குபெற்றார்.

    கோமா பேஷண்டுகளைப் பராமரிக்கும் செலவுகளும் தாங்கமுடியாததாய் இருக்கும் அவலமும் இதற்குக் காரணம். கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமாகத் தரவேண்டிய அரசு அதைத் தராததே இவ்விழிநிலைக்குக் காரணம். என்னமோ... இந்த நிலைக்கு ஆளாகாதவாறு இறைவன் காக்கணும் என்று பிரார்த்திப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை.

    உயிரோடு இருக்கும்போதும், இறந்த பின்னும் தானம் செய்யக்கூடிய உறுப்புகளைக் குறித்து முன்பு நான் எழுதிய பதிவு: http://hussainamma.blogspot.com/2010/05/blog-post_24.html

    (பின்னூட்டத்தில் கேட்டிருக்கும் அன்பருக்கு இப்பதிவு உதவலாம்)

    ReplyDelete
  31. நண்பர்களே !பல இடங்களில் பல தவறுகள் நடக்கலாம்!அதற்காக ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் குற்றம் சாட்டுவது எந்த விஷயத்திற்கும் பொருந்தாது !நீங்களும் இதை ஏற்பீர்கள் என நம்புகிறேன்!கேடாவர் பதிவுக்குப் பல லட்சம் முன்பணம் கட்ட சட்டரீதியில் தேவையில்லை.சட்டத்துக்குப் புறம்பாக செய்பவர்களுக்கு அரசு வரிவிலக்கு எப்படி சாத்தியம்?அறுவை சிகிச்சைக்குத் தகுதியாக இருப்பவர்களுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு பதிவு செய்து காத்திருக்க வேண்டியுள்ளது .சிகிச்சை பெரும் மருத்துவமனையின் தரத்துக்கு ஏற்ப செலவுகள் இருக்கும் என்பது உண்மையே!வரிசைப்படி காத்திருந்து தானம் பெற்றதற்காக ஒரு பைசா கூட தராமல் பயன் பெற்ற குடும்பம் எங்களுடையது !சென்னை அபோல்லோவில் சிறுநீரக மாற்று அறுவை செய்து கொண்டோம்.சென்னை அரசு மருத்துவமனை,ராமச்சந்திரா,என பயன் பெற்ற நண்பர்கள் பலரும் எங்களைப்போன்றே முன்பணம் லட்சங்கள் கட்ட முடியாதவர்களேவாய் புளித்ததோ எனப்பேசவோ எழுதவோ கூடாத விஷயங்களில் இதுவும் ஒன்று!

    ReplyDelete
  32. ஹுசைனம்மா இருபதுநாள் காய்ச்சல் வந்தால் பார்க்க ஆளில்லாத வாழ்க்கை வாழ்கிறோம் !

    ReplyDelete
  33. பிரச்சனையை ஒரு மிகப் பெரும் அபாயகரமான கோணத்தில் இருந்து அணுகும் இப்பதிவு பலரை சென்று சேரவேண்டிய ஒன்று...
    முயற்சிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete