Tuesday, October 11, 2011

பார்வையற்றோர் உலகுக்கு பார்வையற்றவர் வழங்கிய பார்வை

சொந்த வாழ்க்கையின் கசப்பான அனுபவத்தை கண் பார்வை அற்றவர்களுக்கு ஒரு அருட்கொடையாக மாற்றியவர்தான் ‘பிரெய்ல் லூயி’.


தோல் தொழிலாளியான தந்தையின் கடையில் இருந்த கத்தியை எடுத்து விளையாடும் போது எதிர்பாராவிதமாக கத்தி கண்ணில் ஊடுருவியதால் தன்னுடைய மூன்றாம் வயதிலேயே சிறுவன் பிரெயில் பார்க்கும் சக்தியை இழந்தார். பார்வைத் திறனை வெற்றிக் கொள்ளும் அறிவாற்றலைப் பெற்ற இந்தச் சிறுவரின் அதற்குப் பிறகான வாழ்க்கை ஒரு உலக மகா அதிசயமாகி விட்டது.
பிரெய்ல் லூயி
ஈரானிய திரைப்படத்தில்
பிரெல் லூயியாக நடித்த சிறுவன்

இந்த கல்விக் கூடத்தின் நிறுவனராக இருந்த வாலன்டின் ஹேய் சாதாரணமான ரோமன் டைப்பில் காகிதத்தில் உப்பி நிற்கும் ஒரு எழுத்து முறையை பார்வையற்றவர்களுக்காக உருவாக்கியிருந்த காலம் அது. கடினமானதும் வேகம் குறைந்ததுமாக இந்த முறை அமைந்திருந்தது. எனவே பார்வையற்ற மாணவர்களுக்கு எழுத்தைப் பயிற்றுவிக்க இந்த முறை பயன்படவில்லை.


தன்னைப் போன்ற பார்வையற்றவர்களுக்கு வாசிப்பதற்காக ஒரு பாட முறையை வளர்த்தெடுக்க வேண்டுமென்ற தீவிர சிந்தனை இந்த காலகட்டத்தில் பிரெய்லை ஆட்கொண்டது.

போர்க்கலங்களில் இருந்து இரவு நேரங்களில் செய்திகளை எழுதவும் வாசிக்கவும் சான்ஸ் பார்பியன் என்ற பிரெஞ்சு ராணுவக் கேப்டன் உருவாக்கிய ‘நைட் ரைட்டிங்’(இரவு எழுத்து) என்றமுறை இந்த விஷயத்தில் பிரெயிலுக்கு உதவிகரமாக அமைந்தது.

உப்பி நிற்கும் 12 புள்ளிகளை (Dots) அடிப்படையாகக் கொண்டது இந்த முறை. 15 வயது மட்டுமே உடைய பிரெய்ல் ‘நைட் ரைட்டிங்’ முறைகளைப் பற்றித் தெரிந்து கொண்டதோடு, அதை தன்னைப் போன்ற பார்வையற்றவர்களுக்குப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார்.பார்பியான்  ‘நைட் ரைட்டிங்’முறையில் தேவையான மாறுதல்களை மேற்கொண்ட பிரெய்ல் மிக வெகமாக வாசிக்க உதவும் சில புதிய முறைகளையும் அதில் இணைத்தார்.
பார்வையற்றவர்களுக்கு,தாளில் உப்பி நிற்கும் புள்ளிகளை (Dots) விரல் நுனிகளால் தொட்டுணர்ந்து வாசிக்க உதவுமாறு உருவாக்கப்பட்ட பிரெய்ல் லிபி(பிரெய்ல் கோடு)யின் வரலாறு இதுதான்.

பிரெல் லூயி எழுத்து முறையில்
ஆங்கில எழுத்துக்கள்
(அலுவலகத்திற்கு லிப்டில் ஏறும்போது அந்த பட்டனில் உள்ள நமபர்களை தடவிப் பாருங்கள் இதுவும் பிரெல் லூயியின் தொழில் நுட்பம் தான்)

பத்தாண்டுகளுக்குப் பிறகு 1829-இல்தான் பிரெய்ல் உருவாக்கிய இந்த முறை (பிரெய்ல் லிபி) வெளியாகியது.அவர் ஆசிரியராகப் பணியாற்றிய பாரிஸ் நேஷனல் இன்ஸ்டிடியூட்டில் இருந்துதான் இந்த முறையை அறிமுகப்படுத்தினார். சர்வதேச அரங்கில் இந்த முறைக்கு அங்கீகாரம் கிடைக்க பல ஆண்டுகள் தேவைப்பட்டன.

1932-இல் கூடிய சர்வதேச மாநாடுதான் பிரெய்ல் கோடுக்கு (பிரெய்ல் லிபி) அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளிக்கவும் ஆங்கிலம் பேசுபவர்களுக்கிடையில் மிகவும் தரமான ஒரு வழிமுறையாக இதை ஏற்றுக் கொள்ளவும் முடிவு செய்தது. இன்றைக்கு பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் கோடு
(பிரெய்ல் லிபி) உலகின் ஏராளமான மொழிகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது கண்கூடு. இசைக்கான கோடுகளாகவும் சில வகை சுருக்கெழுத்துக்கும் (Short Hand) மட்டுமின்றி விஞ்ஞானம் மற்றும் கணித இயலுக்கும் இந்த முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வாசிப்பு மற்றும் அறிவுலகக் கதவை திறந்து விட்ட இந்த மேதையின் வாழ்க்கை 43 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 1809 ஜனவரி நான்காம் நாள் பாரிஸ் நகருக்கு அருகில் குவ்ரே என்னுமிடத்தில் பிறந்த பிரெய்ல் காச நோயால் பாதிக்கப்பட்டு 1852 ஜனவரி ஆறாம் நாள் பாரிசில் உயிர் துறந்தார்.

ஊரையடித்து உலையில் போட்டு பெரும் பணமுதலைகளாக மாறிய லாட்டரி சீட்டு கம்பெனி அதிபர்கள் தமிழக அரசின் தடையால் சம்பாதிக்க முடியாமல் போனதால் லாட்டரி சீட்டு மீதான தடையை விலக்க கோரி ஊர்வலம் நடத்தினார்கள். அதில் முன்வரிசையில் ரயிலில்,கடைத் தெருவில் லாட்டரி விற்றுக் கொண்டிருந்த பார்வையற்றவர்களை பொறுக்கி எடுத்து.அவர்களை எங்கே செல்லும் இந்த பாதை என்ற சினிமா பாடலை பாட வைத்து தமிழக அரசு, மற்றும் பொதுமக்களின் அனுதபத்தைப் பெற நினைத்து கேடு கெட்ட அரசியல் பண்ணினார்கள்.

பிரெய்ல் லூயி போன்றவர்கள் உலகத்திலுள்ள ஒவ்வொரு பார்வையற்றவருக்கான ஆக்கபூர்வமான கல்வி ஒளியை அளித்ததை நினைவு கூரும்போது இது போன்ற கேடு கெட்டவர்களின் செயல்களும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

சரி கண்களை மூடிக்கொண்டு கீ போர்டு எழுத்துக்களை தடவிப் பாருங்கள்
F.J. இரண்டு இடங்களில் இந்த பிரெய்ல் லூயி அவர்களின் தொழில் நுட்பத்தை அறிவீர்கள்.பேக்ஸ் மிஷினில் 5 நமபர் எழுத்திலும் மொபைலில் 2.5 இரு என்களுக்கு அருகிலும் இந்த தொழில் நுட்பத்தை அறிவீர்கள்.

12 comments:

  1. அறிந்திராத நிறைய தகவல்கள் இங்கு தெரிந்து கொண்டேன்.

    நீங்க சொன்னா மாதிரி கீபோர்டில் FJ லும், பேக்ஸ் மிஷினில் 5 lum இருக்கு

    ReplyDelete
  2. அருமையான தகவல்... ஆங்கில படமான the book of eli பாருங்கள், இன்னும் அருமையாக இருக்கும் கிளைமாக்ஸ்

    ReplyDelete
  3. @Jaleela Kamal

    நான் சொன்ன தகவல்களை செயல்ரீதியாக பார்த்து உண்மைப் படுத்தி பின்னூட்டம் இட்டதிற்கு ரொம்ப நன்றி சகோ

    ReplyDelete
  4. @suryajeeva

    தகவலுக்கு நன்றி சகோ நான் இன்னும் அந்த படம் பார்க்கவில்லை நீங்கள் சொல்லி தான் தெரியும்

    பார்க்கிறேன் சகோ நன்றி

    ReplyDelete
  5. தமிழ் எழுத்து மற்றும் எண்களுக்கான ப்ரைல் வடிவம் அறிய ஆவல். வெளியிடுவீர்களா?

    ReplyDelete
  6. அருமையான தகவல்கள்

    ReplyDelete
  7. அஸ்ஸாலாமு அலைக்கும் வரஹ்
    அன்பு சகோ., நல்ல இடுகை

    நானும் ரொம்ப நாளா செல்போன், கால்குலெட்டர் எண்ணில் ஜந்தின் நடுவே ஒரு புள்ளியை கண்டும் அதற்கு விளக்கம் அறியாமல் இருந்தேன்.,

    // சரி கண்களை மூடிக்கொண்டு கீ போர்டு எழுத்துக்களை தடவிப் பாருங்கள்
    F.J. இரண்டு இடங்களில் இந்த பிரெய்ல் லூயி அவர்களின் தொழில் நுட்பத்தை அறிவீர்கள்.பேக்ஸ் மிஷினில் 5 நமபர் எழுத்திலும் மொபைலில் 2.5 இரு என்களுக்கு அருகிலும் இந்த தொழில் நுட்பத்தை அறிவீர்கள். //

    அப்புறம், ஒரு டவுட் சகோ., இப்போது புதிதாக வந்த டெஸ் ஸ்கிரீன் ஆப்சன் உள்ள சாதனங்களை கண் பார்வையற்றவர் எப்படி பயன்படுத்துவார்கள் ???

    நல்ல இடுகை சகோ வாழ்த்துகளும் நல்ல தகவல் அறிய தந்தமைக்கு நன்றிகளும்

    ReplyDelete
  8. நல்ல தகவல்
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  9. அபு ஃபைஜுல்October 12, 2011 at 1:32 PM

    அஸ்ஸலாமு அலைகும் வரஹ் மதுல்லாஹி பரகாதஹூ.
    எனக்கு தெறியாத தகவல் நன்றி ! சகோ.

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைகும் சகோ.

    அறியாத தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  11. Good post brother !!!

    The bumps or nipples found on the F and J keys on the keyboard helps users correctly position their left and right hand on the keyboard without having to look at it. For example, without looking at the keyboard you can easily position your left index finger on the F and the right index finger on the J, which then positions all the remainder of your fingers in the correct position.

    ReplyDelete
  12. பிரெயில் லூயி அவர்களைப் பற்றிய நல்ல கட்டுரை..
    நன்றி!

    ReplyDelete