Tuesday, January 3, 2012

அங்காடித் தெரு அனுபவங்கள் (உண்மைக் கதை)


மயிலாடுதுறை சீமாட்டி ஜவுளிக்கடையில் புதிதாக வேலைக்கு சேர்ந்தேன். எந்த செக்‌ஷனில் உனக்கு அனுபவம் அதிகம் என வழக்கமாக ஓனர்கள் கேட்கக்கூடிய கேள்வியை என் ஓனர்  கேட்டார்.(அனைத்து பிரிவிலும் நல்ல அனுபவம் இருந்தாலும் டெக்ஸ்டைல்ஸ் பிரிவில் அதாங்க புடவை, கட்பிஸ் பிரிவில் மாட்டி விடக்கூடாது என்பதற்காக) அண்ணே எனக்கு ரெடிமேடு லைனில் நல்ல அனுபவமுண்ணே எண்றேன். அதிலும் வந்தது சோதனை.

சுடிதார் செக்‌ஷனில் நின்னுக்கே அந்த செக்‌ஷனில் தான் ஆள் இல்லை என்று அதில் தள்ளி விட்டார் Free size சுடிதார் செக்‌ஷன் அதற்கு புடவை பிரிவே எவ்வளவோ மேல் அங்கு வருகிற பெண்கள் கூட்டம் இங்கும் வருவார்கள் சரி சமாளிப்போம் என்று கவுண்டருக்குள் இறங்கினேன்.

2001ல் சாரி மெட்டீரியல் வகை சுடிதார்கள் புதிய மாடலாக அறிமுகமாகிய காலகட்டம் சாரியை பிரிச்சு காட்டுகிற மாதிரியே சுடிதார்களையும் பிரித்து கையில்,கழுத்தில் என்ன டிசைன் வருகிறது என்று விளக்க வேண்டும்.

இரண்டே மாதத்தில் மயிலாடுதுறை சுற்றுவட்டார பெண்கள் எந்த வகையான மாடல் சுடிதார்கள் விரும்புகிறார்கள், அவர்களிடம் எப்படி பேச வேண்டும் எந்தவகையான சுடிதார்கள் அதிக சேல்ஸ் இப்படி அனைத்தையும் கவணித்து நல்ல சேல்ஸ்மேனாக மாறினேன். எப்படிப்பட்ட் நல்ல சேல்ஸ்மேன் என்பதற்கு ஒரு உதாரணம் தருகிறேன். அதிலே நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள்.
கல்லூரியில் படிக்கும் பெண்கள் ஒரு குரூப்பாக சுடிதார் எடுக்க வந்தார்கள். இவர்களிடம் விற்க வேண்டும் என்றால் துணியின் தரம், டிஷைன் மெட்டீரியல் இவைகளை விடிய விடிய சொன்னாலும் வேலைக்காகாது. அந்த வருடம் வந்த திரைப்படத்தின் பெயரைச் சொல்லி இந்த படத்தில் இந்த காட்சியில் அந்த நடிகை அனிந்திருந்த சுடிதார் என்று ஒரு பொய்யை அடித்து விட்டால் போதும் விழுந்தடித்து வாங்கி விட்டு போவார்கள். அன்றும் அதே கதை தான். இதை பாருங்க இது ரன் படத்தில் மீரா ஜாஸ்மீன் போட்டிருந்த சுடிதார் என்று ஆரம்பித்தேன்.

இந்த கலரில் ரன் படத்தில் ஒரு கட்டத்தில் கூட மீரா ஜாஸ்மீன் சுடிதார் போடவில்லை என்று அந்த குரூப்பில் கொஞ்சம் விவரமான பெண்ணிடமிருந்து குரல் வந்தது . அடுத்த விநாடியே யோசிக்காமல் மாதவன் கூட கையை பிடிச்சுகிட்டு ஓடிப்போகிற சீனை மறுபடிக்கும் நல்ல பாருங்க. லைட் வைலட் கலரில் இந்த கலரில் சுடிதார் போட்டு இருப்பார் என்று மடக்கி விற்று நல்ல சேல்ஸ்மேன் என்று பெயரெடுத்தேன்.

நல்ல விற்பனையாளர் என்று பெயரெடுக்காத பலர் அந்த கடையில் வேலை பார்த்தார்கள். அவர்களில் ஒருவர்தான் புடவை பிரிவில் இருந்த அண்ணன் காதர் அவருக்கு 65 வயதிற்கும் மேலிருக்கும். நேர்மையாக விற்பனை செய்ய நினைப்பவர் புடவையின் தரம், ரகம், முந்தியில் பாருங்க, அழகான டிசைன் இப்படித்தான் பேசுவாரே தவிர நடிகைகளை இழுக்க மாட்டார். அதனால் அவர் முதலாளியின் பார்வையில் திறமையற்ற சேல்ஸ்மேன்.

ஒரு முறை இப்படித்தான் ரொம்ப காஸ்ட்லியான வாடிக்கையான கஸ்டமர் புடவை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவரும் சளைக்காமல் இறக்கி ரகங்களை காட்டிக் கொண்டும் அதன் அருமை பெருமைகளை சொல்லிக் கொண்டிருந்தார். வந்திருந்தவர்கள் திருப்தியடையாமல் போய் விடக்கூடிய சூழலை உணர்ந்த சூப்பர்வைசர் (முதலாளியின் மச்சான்) வேகமாக என்னிடம் வந்து டேய் கஸ்டமர் போயிருவாங்க போல நீ போ என்றார். 

பழைய சேல்ஸ்மேனை நம்பாமல் நம்மை கூப்பிடுகிறார் என்றால் ம்ம்ம் நீ பெரிய ஆளுடா என்ற  அகம்பாவம் தலைக்கு ஏற உள்ளே போய் புதுசா வந்திருக்கிற சேலை ரகங்கள் உள்ளே இருக்கு. இந்தா எடுத்து தருகிறேன். மெளனம் பேசியதே திரைப்படத்தில் த்ரிஷா கட்டின சேலை இருக்கு, பாபாவில் மனீஷா கொய்ராலா கட்டுன டிசைன் சேலை இருக்கு பாருங்க என்றதும் எங்கே எங்கே காட்டுங்கள் பார்ப்போம் என்று அந்த பெண்களிடம் பரபரப்பு பற்றிக் கொண்டது. கொஞ்சம் நேரத்தில் வெற்றிகரமாக பல சேலைகளை வாங்கி செல்ல வைத்தேன்.

வாடிக்கையாளர் வெளியே போனதும் நேராக சூப்பர்வைஸர் காதர் பாயிடம் வந்து திட்ட ஆரமித்தார். அவன பாருங்க சின்ன பையன் அவனுக்கு இருக்குற புத்தி ஒங்களுக்கு ஏன் இல்லை. அவனுடைய....................வாங்கி குடிங்க என்று அசிங்கமாக ஏசியதை எதிர்த்து பேசமால் தலைகுனிந்து திட்டு வாங்கிக் கொண்டிருந்தார். அப்பதான் எனக்கு அறிவு வந்தது. ஒரு நேர்மையான பெரிய மனிதரை திட்டு வாங்க வைத்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி மனதை அறுத்தது.

தணிப்பட்ட முறையில் அவரிடம் மன்னிப்பு கேட்டேன். விடுடா நான் மனதில் எதுவும் நினைக்கவில்லை என்று சாதாரணமாக சொன்னார். அப்போது தான் அவரைப் பற்றி விசாரிக்க தோன்றியது.

அண்ணே எத்தனை வருஷமாக இங்கு வேலை பார்க்கிறீர்கள். இதற்கு முன் எங்கிருந்தீர்கள்?. அஞ்சு வருஷமாக இங்கு வேலை பார்க்கிறேன். 28 வயசுலே சவூதிக்கு போனேன் 60 வயது வரை அங்குதான் வேலை பார்த்தேன் என்றார். 

32 வருடம் சவூதியில் சம்பாதிக்கவில்லையா? பணத்தை சேர்க்கவில்லையா? ஏன்ணே 32 வருடம் உழைத்த பணத்தை வைத்து வீட்டில் பேரன் பேத்தியோடு நிம்மதியாக இருக்குறத விட்டுபுட்டு இவிய்ங்ககிட்ட வந்து திட்டு வாங்கிட்டு கெடக்குறீகளே? என்றேன்.

அதற்கவர் அடப் போடா 32 வருடம் சம்பாதித்தேன். பசங்களை நல்ல பெரிய படிப்பு படிக்க வைத்தேன். குமர்களை கட்டிக் கொடுத்தேன், வீடு கட்டினேன். அவ்வளவுதான் கையிலே சல்லி காசு இல்லே. கல்யாணம் ஆகி பசங்க வெளிநாட்டில் இருக்குற நாளே மனைவிமார்கள் அம்மா வீட்டில் இருக்க விரும்புறாங்கன்னு சொல்லி அங்கே விட்டுட்டு போயிட்டாய்ங்கே.

எனக்கு பணமும் அனுப்புவதில்லை. 32 வருடம் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வரும்போது சர்க்கரை வியாதி,பிளாட் பிரஷர் இப்படி பல வியாதிகளையும் கொண்டு வந்திட்டேன். மருந்துக்கே எனக்கும் என் மனைவிக்கும் மாதம் 2500 ரூபாய் வேண்டும். நான் எங்கே போவேன் அதான் இங்கு இவிய்ங்ககிட்ட திட்டு வாங்கி கொண்டு குப்ப கொட்டிக் கிட்டு இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே விரக்தியான சிரிப்பை உதிர்த்தார்.

சத்தியமாக என்னால் அந்த சிரிப்பை ரசிக்க முடியவில்லை அதற்கு பிறகு 2004ல் விசா கிடைத்து சவூதிக்கு போகிறேன் என்று அவரிடம் போனில் சொன்னபோது அடுத்த பலிஆடா என்று சிரித்தார். என்னிடமிருந்தும் விரக்தியான ஒரு சிரிப்பு அத்துமீறி வெளிப்பட்டது.

28 comments:

  1. ஹைதர் அலி, மனசு மிகவும் கனத்து போச்சு உங்க பதிவை படிச்சு. உங்க நல்ல மனசுக்கு நல்லா இருப்பீங்க. என் அன்பான வாழ்த்துக்கள்! நல்லா இருக்கு பதிவு!

    ReplyDelete
  2. இப்படி எத்தனையோ அங்காடித்தெரு அனுபவங்கள் சொல்லாமல் சுற்றித்திரிகின்றன..

    நெகிழ வைக்கும் பதிவு.

    ReplyDelete
  3. பவம் அந்த அண்ணன், பெற்றவரி பற்றி சிறிதும் கவலைபடாத பிள்ளைகள்
    இதை என்ன சொல்வதென்றே தெரியவில்லை

    நெகிழவைக்கும் பதிவு

    த.ம 4

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் ஜீ,

    இந்த உண்மை சம்பவ பதிவு உண்மையிலே மனதை கனக்க செய்த பதிவு..பொய் சொல்லாமல் வியாபாரம் செய்த அந்த பெரியவரின் நேர்மை பாராடுதலுக்குறியது..மொத்தத்தில் நல்ல பதிவு.......

    உங்கள் கட்டுரையை(தினமலர் தீக்குளித்து தற்கொலை) நானும் பதிந்துள்ளேன்.எங்க தளத்திற்கும் நீங்க வாங்க...தளத்தில் உறுபினராக ஆகுங்கள்

    www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ......
    அல்லாஹ்வின் சாபம்-தப்புமா தினமலர்?
    உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-3), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..இன்னும் பல. அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

    ReplyDelete
  5. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க..மக்கா.. வாழ்த்துக்கள்.


    http://sivaparkavi.wordpress.com/
    sivaparkavi

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

    வெளிநாட்டு வாழ்க்கையின் பலனை அந்த சகோதரரின் வார்த்தை விளக்கியது.

    தாங்கள் எங்கள் ஊரில் வேலை செய்ததை இப்போது தான் அறிகிறேன்.

    ReplyDelete
  7. பெரியவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும்;
    பெற்றோரைப் பேணிக் காக்க வேண்டும்.
    இந்த உண்மையை மறைமுகமாய் உங்கள்
    இடுகையில் பகிர்ந்துள்ளீர்கள்.
    சிந்தித்து செயல்பட உங்கள் அனுபவம்
    ஏனையோருக்கு அவசிய 'பாடம்' ஆகும்.
    மனதை நெகிழ வைத்த பதிவு.

    தொடரட்டும் உங்கள் பங்களிப்பு, இன்ஷா அல்லாஹ்!

    ReplyDelete
  8. அவரின் கடமையை அவர் செய்துவிட்டார் அதற்கான கூலி அல்லாஹ்விடத்தில் உண்டு, ஆனால் அவரின் பிள்ளைகளின் நிலைமைய நினைத்தால்தான் பாவமாக இருக்கின்றது...............இன்றைய பிள்ளைகள் நாளைய பெற்றோர்கள் என்பதை மறந்துவிட்டார்கள்................நாளைக்கு இவர்களுக்கும் இதே நிலைமை வராது என்பதில் நிச்சயமில்லை...............நல்ல ஒரு பதிவு...........

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்கும் கட்டுரை அருமை சகோ குறிப்பாக பிள்ளைகளால் கண்டுகொள்ளப்படாத‌ காதர் அண்ணனைப்போல் நிறைய பேர் இருக்கின்றார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.

    ReplyDelete
  10. சுட்டியை சொடுக்கி படியுங்கள்

    ******1.
    புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. பாகம் 2. மன்னிப்போம் மறக்கமாட்டோம்.

    புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை .புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.
    பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மண்ணிப்புக் கோரினார்?……..
    ***********************************


    2. *******
    ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1

    மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம்.
    ********

    .

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    //அந்த வருடம் வந்த திரைப்படத்தின் பெயரைச் சொல்லி இந்த படத்தில் இந்த காட்சியில் அந்த நடிகை அனிந்திருந்த சுடிதார் என்று ஒரு பொய்யை அடித்து விட்டால் போதும் விழுந்தடித்து வாங்கி விட்டு போவார்கள்//

    சினிமா மோகத்தினால் வந்த விளைவுகளில் ஒன்றுதான் இதுவும் :( சமுதாயம் இனியாவது திருந்தி வாழவேண்டும்.

    //கல்யாணம் ஆகி பசங்க வெளிநாட்டில் இருக்குற நாளே மனைவிமார்கள் அம்மா வீட்டில் இருக்க விரும்புறாங்கன்னு சொல்லி அங்கே விட்டுட்டு போயிட்டாய்ங்கே.

    எனக்கு பணமும் அனுப்புவதில்லை.//

    படிக்கும்போதே ரொம்ப கஷ்டமாக உள்ளது. பிள்ளைகளை வளர்க்கும்போதே பெற்றோர்களைப் பேணக்கூடிய அவசியத்தையும், தவறினால் இறைவனிடம் கிடைக்கும் தண்டனைகளைக் குறித்தும் சொல்லி, சொல்லி வளர்க்கவேண்டும். அதற்கு மேலும் தன் கடமைத் தவறும் பிள்ளைகள் தங்களின் பின்வாழ்க்கையிலும் அனுபவிப்பதைப் பார்க்கிறோம். இறைவனிடத்திலும் குற்றவாளியாகுகிறார்கள் :(

    அப்படிப்பட்ட‌வர்களுக்கு இதுபோன்ற பதிவு நல்ல புத்திமதியாக இருக்கட்டும். பகிர்வுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  12. சலாம் சகோ ஹைதர் அலி,

    துணிக்கடையில் சேல்ஸ் மேனாக வேலை பார்த்ததை பகிரங்கமாக வெளியில் சொல்ல கொஞ்சம் தைரியம் வேண்டும் சகோ. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. அஸ்ஸலாமு அலைகும்!
    மிக அழகான பதிவு. உள்ளத்தை நெகிழச்செய்தது அந்த பெரியவரின் தெரியாத முகம்.. அது சரி சகோ , இப்பவும் அப்படியான புத்திசாலித்தனங்களை use பண்ரிங்களா

    ReplyDelete
  14. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    பதிவு கனக்கிறது

    ReplyDelete
  15. மனசு கனக்க வைத்த இடுகை ஹைதர்.
    உங்களுக்கும் பெரியவர் காதருக்கும் ஆண்டவன் துணையிருக்கட்டும்.

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  16. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

    இந்த இடுகையை படிக்கும் போது இஸ்லாமிய சமூகம் படிப்பில் எந்த அளவு பொடும்போக்காக இருக்கிறது என்பது தெளிவாகிறது. அடுத்து உலக கல்வி மட்டும் ஒருவனை உயர்த்தி விடாது. அதனோடு சேர்ந்து மார்க்க கல்வியும் இருக்க வேண்டும் என்பதை அந்த பெரியவரின் வாழ்வு நமக்கு அழகாக படம் பிடித்து காட்டுகிறது.

    ReplyDelete
  17. காவல் கோட்டம் என்ற பிரதியை முன்வைத்து உயிர்மை இன் பொருமல்
    http://vennirairavugal.blogspot.com/

    ReplyDelete
  18. மன நெகிழ்வு......

    பெரியவர் நிலை பரிதாபம்.

    நம்முடைய முதுமைக்குன்னு தனியாக சேமிப்பு எவ்ளோ அவசியமுன்னு சொல்லவும் வேணுமா!!!!

    ReplyDelete
  19. ஒரு 10 வயது பையனைத் தூக்கி கொண்டு, அம்மாவும், அப்பாவும் அடித்து, பிடித்து மருத்துவமனையில் நுழைந்தார்கள். இழப்பு. உடனடியாக மருத்துவம் பார்த்து, இயல்பு நிலைக்கு திரும்பினான்.

    அப்பா கேட்டார். இதே மாதிரி எனக்கு வயசான்னா பார்த்துக்குவியா! என!

    அதற்கு அவன் பதில் சொன்னானாம். நீங்க பார்த்த மாதிரியே என் பிள்ளையை நான் பார்த்துக்குவேன்னு சொன்னானாம்!

    - பிள்ளைகளை சுயநலத்தோடு இரு! என சொல்லி, சொல்லி வளர்க்கிறோம். பின்னாளில் சொல்லிக்கொடுத்த படி, நடந்து கொள்கிற பொழுது,வருத்தப்படுகிறோம்.

    ReplyDelete
  20. மிக அருமையான உண்மை சம்பவம்

    முதலில் இந்த கடை பார்த்ததும் எங்க டாடி ஞாபகம் தான் வருthu ,

    பானு சில்க் பேலஸ்.எங்க கடை பேரு, ரொம்ப நேர்மை, மற்றவர்கள் மனசு நோகாமல் , திறமையாக பேசி வியாபாரம் செய்வாங்க.


    கண்டிப்பாக சேமிப்பு வேனும் எனறூ பட்டவர்கள் சொல்ல கேட்கிறோம்.

    ஆனால் சூழ் நிலை அந்த நேரத்தில் சேமிக்க முடியாது போகிறது.

    இருக்கிற பிரச்சனைகளை சமாளித்தால் போதும் என ஆகிடும்.


    சினிமா பேரும், நடிகை பேரும் வைத்தால் தரத்த பார்க்காம கண்ண மூடிட்டு வாங்கிட்டு போய்விடுவார்கள் போல....

    ReplyDelete
  21. நண்பர் ஹைதர் அலி,

    எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் இந்த பதிவை பார்க்க வந்தேன். மறந்து போன நினைவுகளையெல்லாம் அள்ளிக் கொண்டுவந்து விட்டது. வீட்டைவிட்டு ஓடிப் போய் ஈரோடு பூம்புகார் சில்க்ஸில் 21 நாட்கள் நானும் பணிபுரிந்திருக்கிறேன். ஆனால் என்னால் நல்ல(!) பெயர் வாங்க முடியவில்லை.

    ReplyDelete
  22. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    கட்டுரை படிக்கும் போது என்னையும் மீறி சோகம் தொற்றிக்கொண்டது. முதுமையில் தனிமையும் நிராகரிப்பும் ரொம்ப கொடியது.

    கஷ்ட்டத்திலிருந்து முன்னேறியுள்ளீர்கள். உங்கள் அனுபவம் தான் உங்களை பக்குவப்படுத்தி நல்லமனிதனாக (எனக்கு சிறந்த சகோதரனாய்) சமூகத்தில் வலம் வரச்செய்கிறது, அல்ஹம்துலில்லாஹ்...

    இறைவன் உங்களுக்கு நல்ல வாழ்க்கையும் குழந்தைகளால் பெருமையும் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  23. சூப்பர் அண்ண.. நம்ம சவுதில எத்தன வருசம்ன இருக்கபோறோம்

    ReplyDelete
  24. @Rahim

    //நம்ம சவுதில எத்தன வருசம்ன இருக்கபோறோம்//

    தெரியலையே தம்பி அத நினைத்தால் தூக்கம் வாரது

    ஏன்? இந்த அண்ணனை கவலைப்பட வைக்கிறீங்கே

    வாங்கே தம்பி சீக்கிரமே முடிச்சுட்டு போயிருவோம் அதற்கான சேமிப்புகளை நான் தொடங்கி விட்டேன் நீங்கள்?

    ReplyDelete
  25. மிகவும் நல்ல கட்டுரை. படிக்கும்போது கண்களில் கண்ணீர் சுரந்து கன்னத்தில் வழிவதனை உணர்கின்றேன்

    ReplyDelete
  26. மனிதர்களின் மீது கருணைகாட்டாதவனுக்கு அல்லாஹ் கருணைகாட்டமாட்டான்.

    ReplyDelete
  27. நல்ல பதிவு என்று சொல்ல முடியவில்லை...மனசு வலிக்குது ..என்று தீரும் இந்த வெளிநாடு மோகம் :(

    ReplyDelete