Saturday, April 16, 2011

உடற்பயிற்சி செய்யும் முன் ஒரு நிமிடம் இப்பதிவை படியுங்கள்.பாகம்-2


இந்த பதிவின் முந்தைய பாகம் புதியவர்கள் இந்த பதிவை படித்து பார்த்து விட்டு தொடரவும்.


உடற்பயிற்சி செய்யும் முன் ஒரு நிமிடம் இப்பதிவை படியுங்கள்.




சரி வாங்க விஷயத்துக்குள் நுழைவோம்.  நாம் குடிக்கும் நீர் அருத்தும் உணவு
நாம் அருந்தும் குடிபானங்கள்
1. தயவுசெய்து மது அருந்தாதீர்கள் அது மூளை செல்களை சாகடித்து விடும்.

2.உடலுக்கு தேவையான சுத்தமான தண்ணீர் குடியுங்கள்.

3.முடிந்தால் தினமும் பழ ஜுஸ் குடியுங்கள் அதற்காக கடையில் டப்பாக்களில் அடைக்கப்பட்ட எசன்ஸ் ஜுஸ்களை தவிருங்கள் இரண்டு நாட்களுக்கு மேல் வைத்திருந்தால் கெட்டு போகக் கூடிய வீட்டு தயாரிப்பு ஜுஸ்களை மட்டும் குடியுங்கள்.

4.காபி,டீ குடிக்காதீர்கள். என்னது குடிக்காம இருக்க முடியாதா? அப்படிப்பட்டவர்கள் நான்கு கப் காபி குடிப்பதை இரண்டு கப் காபியாக குறைத்துக் கொள்ளுங்கள் அல்லது மாற்று வழியை ஏற்ப்படுத்திக் கொள்ளுங்கள்.கீரின் டீ குடியுங்கள் (Green tea) உடம்பு குண்டாக உள்ளவர்கள் மட்டும் குடிக்கவும் இது கொழுப்பை குறைக்கக் கூடியாது.



5.மென் பானங்களை குடிக்காதீர்கள் பெப்ஸி,கோக் போன்ற பண்ணாட்டு மற்றும் உள்நாட்டு பானங்களாக இருந்தாலும் சரி இவைகளை குடித்தால் தான் உணவு செமிக்கும் என்ற நிலையில் நீங்கள் இருந்தால் தெரிந்துக் கொள்ளுங்கள் உங்கள் உடல் கெட்டுப் போய் விட்டது உணவு செரிக்க உடற்பயிற்சியே போதுமானது.

உடற்பயிற்சியும் உணவும்

”அளவு கடந்து உண்பவனுக்கும்அறவே உண்ணாதவனுக்கும்உடல்நலமில்லை”  
.அளவோடு உண்ன வேண்டும்; அளவுக்கு அதிகமான உணவு உட்கொண்டால் அதுவே விஷமாக மாறி உடல் அழிவுக்கு அது வழிகோலும்
.டயட் இருக்கின்றேன் என்று சொல்லிக் கொண்டு பட்டினி கிடக்கக் கூடாது
.முதலில் உண்ட உணவு நன்கு செரித்த பிறகு அடுத்த வேளை உணவு உட்கொள்ள வேண்டும்.
.சைவ அசைவ உணவு வகைகள் எது வேண்டுமானலும் அவரவர் விருப்பத்தைப் பொருத்து சாப்பிடலாம் ஆனால் அது உடலுக்கு சக்தியை தரக் கூடியதாய் இருக்க வேண்டும்.
.ஜங் புட் என்று சொல்லக்கூடிய (குப்பை உணவுகளை தவிருங்கள்) 

உறக்கம்

விடிய விடிய பதிவு எழுதிவிட்டு விடிந்த பிறகு உடற்பயிற்சி செய்யாதீர்கள்.
அது உடல் நலம் பெறுவதற்கு பதிலாக உடல் நல கேட்டை உண்டு பன்னி விடும் குறைந்தது ஆறு மணி நேரமாவது தூங்க வேண்டும்.

உடற்பயிற்சியாளர்களின் ஐந்து மணிநேர தூக்கம்
உடற்பயிற்சி செய்யதவர்கள் பத்து மணி நேர தூக்கத்திற்கு சமமானது

நல்ல உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஆழ்ந்த நித்திரை வரும். இதுவே பல நோய்களை தீர்த்து விடும்

இறுதியாக சில விஷயங்கள்

அளவுக்கு அதிகமாக உண்ணுதலும், உழைத்தலும்,உறங்குதலும் கூடாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை தேவையைவிடக் குறைவாக உண்ணுதலும்,உழைத்தலும்,உறங்குதலும் குறைபடினும் உடல் கெட்டு போய் விடும்

8 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
    //விடிய விடிய பதிவு எழுதிவிட்டு விடிந்த பிறகு உடற்பயிற்சி செய்யாதீர்கள்.//--நல்ல அறிவுரைகளுடன் கூடிய உபயோகமான பதிவு சகோ.ஹைதர் அலி. நன்றி.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஹைதர்.

    மிக அருமையாக பயனுள்ள பதிவை வாறி வழ்ங்குகின்றிர்கள் வாழ்த்துக்கள்.

    உங்களின் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள ஆசை.

    ReplyDelete
  3. @முஹம்மத் ஆஷிக்
    வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    நன்றி சகோ

    ReplyDelete
  4. நல்லதோர் பகிர்வு!நன்றி.

    ReplyDelete
  5. @ராஜ நடராஜன்

    நல்ல விஷயங்களுக்கு உங்களுடைய

    தொடர்ச்சியான ஆதாரவுக்கு
    நன்றி நண்பரே

    ReplyDelete
  6. முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்April 17, 2011 at 12:25 AM

    அஸ்ஸலாமு அலைக்கும்
    GREEN TEAகுடிப்பதுபோல் சுலைமானி குடிப்பதால் கொழுப்பு குறையுமா என்பதை தெளிவுபடுத்துங்கள் சகோதரரே

    ReplyDelete
  7. @முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
    வாங்க சகோ

    //GREEN TEAகுடிப்பதுபோல் சுலைமானி குடிப்பதால் கொழுப்பு குறையுமா என்பதை தெளிவுபடுத்துங்கள் சகோதரரே//

    சுலைமானி
    (பால் கலக்காத கட்டஞ்சாய்) குடிப்பதால் கொழுப்பு குறையாது அதிகமாக குடிப்பது நல்லதல்ல.

    அப்படி சுலைமானி தான் குடிப்பேன் என்று அடம்பிடித்தால் இஞ்சியை தட்டி போட்டு குடிக்கவும்

    கீரின் டீ கொழுப்பை குறைக்கும்

    மேலும் அறிய googleல் grren tea என்று சர்ஜ் கொடுத்து பாருங்கள் நேறைய விஷயங்கள் தெரிய வரும்

    ReplyDelete